Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வாழ்ந்து காட்டுவோம்!
3 posters
Page 1 of 1
வாழ்ந்து காட்டுவோம்!
-
"அரிது அரிது மானிடராயப் பிறத்தல் அரிது' என்றார் அவ்வையார். அரியதொரு மானிடப் பிறவியை எடுத்த நாம், குடும்ப வாழ்க்கையில் நாளும் நாளும் மகிழ்ச்சியை அனுபவிக்கிறோமா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
சமூகம் என்பது பெரிய குடும்பம்; குடும்பம் என்பது சிறிய சமூகம். வாழ்க்கையில் வெற்றி பெற படிப்பு, பதவி, பணம், நண்பர்கள் தொடர்பு என இவை மட்டுமே முக்கியம் என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால், தன் குடும்பத்தைச் சிறப்பாக நிர்வகிக்கத் தெரிந்தவர்களே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.
-
நல்லதொரு குடும்பமே பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது. குடும்பத்தின் அடித்தளம் திருமண வாழ்க்கையாகும். அன்பின் முகவரியாய் திருமண வாழ்க்கை அமைந்துவிட்டால், அங்கே மகிழ்ச்சித் தென்றல் எப்போதும் வீசும்.
மண வாழ்வில் இன்பம் - திருமணம் என்பது ஆண் பெண் இருவரின் எண்ணங்களின் சங்கமமாய் மிளிர வேண்டும்.
"அடக்கம், பொறுமை, தியாகம், இரக்கம், அழகு, ஒப்புரவு, தொண்டு முதலியன அமைந்த ஒன்று பெண்மை' என்றார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.
-
பெண்மையின் சிறப்பினை உணராமல் "மனைவிக்கு என்ன தெரியும்...?' என்று ஒரு கணவன் தாழ்வாக மதிப்பிடக் கூடாது. வாழ்க்கை என்னும் பாதையில், இல்லறம் என்னும் வண்டி இனிதே ஓட, கணவனும் மனைவியும் இரு சக்கரங்கள் என்பதை எவரும் மறந்திட இயலாது.
-
கணவனின் நிலையை மனைவியும், மனைவியின் நிலையைக் கணவனும் உணர்ந்த சூழலில் அங்கே அன்பு வளரும்; பாசம் மலரும்; மகிழ்ச்சி நிறையும்.
-
குடும்ப வாழ்வின் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்து, சாதனை புரியும் ஆற்றலை ஓர் ஆண் பெற்றிருக்க வேண்டும். அத்தகைய ஆணையே உயிராகப் போற்றிப் பாதுகாக்கும் பணியை ஒரு பெண் பெறுவாள். இதனைச் சங்க இலக்கியமான "குறுந்தொகை' "வினையே ஆடவர்க்கு உயிரே; மனையுறை மகளிருக்கு ஆடவர் உயிர்' எனப் பெருமையாகக் கூறுகிறது.
-
"காதல் ஒருவனைக் கைப்பிடித்தே, அவன் காரியம் யாவினும் கைகொடுத்தே' என மகாகவி பாரதியும் பெண்ணின் கடமையினைப் பாடுகிறார்.
-
ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தம் வாழ்வில் மூன்று நிலைகளைச் சந்தித்தாக வேண்டும். அவையாவன...
-
* குடும்ப வாழ்வில் ஓர் ஆணும் பெண்ணும் இணைவது என்பது முதல் நிலையாகும்.
=
* குழந்தை பிறந்து அவர்களைப் பெரியவர்களாக்கும் வரை தொடரும் உறவு இரண்டாவது நிலையாகும்.
-
* கணவனும் மனைவியும் தங்கள் உணர்ச்சிகளைத் துறந்து உள்ளக் காதலை வளர்த்துக் கொள்ளும் நிலை மூன்றாவது கட்டமாகும். இதுவே முதியோர் காதலாகும்.
-
குழந்தைகளைப் பேணுதல் - திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை தந்த பரிசு என்று கூறினால், குழந்தை என்பது திருமண வாழ்க்கை தந்த பரிசு என்று கூறலாம். குழந்தைகளின் வளர்ச்சியே ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியாகும். பெற்றோர்களே ஒரு குழந்தைக்கு முதல் ஆசிரியர்கள் ஆவர். குழந்தைக்குப் பண்புள்ள ஒரு தாய் கிடைத்துவிட்டால், அது குழந்தைப் பருவத்திலேயே தூய்மையான அன்பைப் புரிந்து கொள்கிறது. சுயநலத்தைத் தவிர்த்து, நல்ல குணங்களுடன் வளர்கின்றது.
-
தாயின் அன்பும், தந்தையின் அரவணைப்பும் குழந்தையின் எதிர்கால வாழ்வைச் சிறந்த முறையில் அமைக்க அடித்தளமாக உள்ளன.
-
குழந்தைகளுக்கு எதிரே பெற்றோர் தீய சொற்களைப் பேசுவது, ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வது, தங்கள் மனக்கசப்பை வெளிப்படுத்துவது போன்றவற்றைச் செய்தல் கூடாது.
-
சிறுவயதில் குழந்தைகள் நெஞ்சில் படியும் தீய எண்ணங்கள், அவர்கள் எதிர்கால வாழ்க்கையைப் பாதிக்கும். குழந்தைகளுக்கு வழிகாட்ட பெற்றோர் பல்வேறு நீதிகளை விளக்கமாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். அவர்களே நல்ல எடுத்துக்காட்டு மனிதர்களாக வாழ்ந்தால் போதும். குடும்ப வாழ்வின் இன்பமும் வெற்றியும் பிள்ளைகளுக்கு தானே வந்து சேரும்.
-
"இன்பம் சூழ்ந்த குடும்பம் இப்பிறவியிலேயே காணும் சுவர்க்கமாகும்' என்றார் பெüரிங் என்ற மேனாட்டு அறிஞர். எனவே, குடும்ப வாழ்க்கை சுவர்க்கமாக அமைந்திட அன்பு, பொறுமை, சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுக்கும் தன்மை போன்ற நல்ல பண்புகளை வளர்ப்போம். மகிழ்ச்சியாக வாழ்வோம்.
-
-------------------------------------
குடந்தை பாலு, சென்னை.
நன்றி: தினமணி
_________________
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: வாழ்ந்து காட்டுவோம்!
நிச்சயம் வாழ்ந்து காட்டுவோம்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» குழந்தைகளிடம் அன்பு காட்டுவோம் ******************************************************.
» குழந்தைகளிடம் அன்பு காட்டுவோம்
» ஜனவர்-28 சிறை நிரப்பும் போராட்டம்.இறையருளால் வென்று காட்டுவோம்.
» வாழ்ந்து பார்க்கும் ஆசை...!
» உலகில் வாழ்ந்து பயனில்லை
» குழந்தைகளிடம் அன்பு காட்டுவோம்
» ஜனவர்-28 சிறை நிரப்பும் போராட்டம்.இறையருளால் வென்று காட்டுவோம்.
» வாழ்ந்து பார்க்கும் ஆசை...!
» உலகில் வாழ்ந்து பயனில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum