Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா …..
5 posters
Page 1 of 1
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா …..
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா …..
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும் (வாழ்ந்தாலும் ஏசும்..)
பண்பாடு இன்றி பாதகம் செய்யும்
பணத்தாசையாலே பகைத்திட நினைக்கும்
குணத்தோடு வாழும் குடும்பத்தை அழிக்கும்
குணம் மாறி நடந்தே கொடுமையை விளைக்கும் (வாழ்ந்தாலும் ஏசும்..)
வையகம் இதுதானடா …..
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும் (வாழ்ந்தாலும் ஏசும்..)
பண்பாடு இன்றி பாதகம் செய்யும்
பணத்தாசையாலே பகைத்திட நினைக்கும்
குணத்தோடு வாழும் குடும்பத்தை அழிக்கும்
குணம் மாறி நடந்தே கொடுமையை விளைக்கும் (வாழ்ந்தாலும் ஏசும்..)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா …..
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசை பார்த்துக்க நல்லபடி உன்
மனசை பார்த்துக்க நல்லபடி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...
கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால்
கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு
கோட்டுக்குத் தேவை சிலசாட்சி
குணத்துக்கு தேவை மனசாட்சி உன்
குணத்துக்கு தேவை மனசாட்சி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...
மயிலைப் பார்த்து கரடியென்பான்
மானைப் பார்த்து வேங்கையென்பான்
குயிலைப் பார்த்து ஆந்தையென்பான்
அதையும் சில பேர் உண்மையென்பார்
யானையைப் பார்த்த குருடனைப் போல்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்..சிலர்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...
கடலில் விழுந்த நண்பனுக்கு
கைகொடுத்தேன் அவன் கரையேற
கரைக்கு அவனும் வந்து விட்டான்
கடலில் நான்தான் விழுந்து விட்டேன்
சொல்லி அழுதால் தீர்ந்துவிடும்
சொல்லத்தானே வார்த்தையில்லை.. அதை
சொல்லத்தானே வார்த்தையில்லை...
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசை பார்த்துக்க நல்லபடி உன்
மனசை பார்த்துக்க நல்லபடி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...
கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால்
கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு
கோட்டுக்குத் தேவை சிலசாட்சி
குணத்துக்கு தேவை மனசாட்சி உன்
குணத்துக்கு தேவை மனசாட்சி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...
மயிலைப் பார்த்து கரடியென்பான்
மானைப் பார்த்து வேங்கையென்பான்
குயிலைப் பார்த்து ஆந்தையென்பான்
அதையும் சில பேர் உண்மையென்பார்
யானையைப் பார்த்த குருடனைப் போல்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்..சிலர்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...
கடலில் விழுந்த நண்பனுக்கு
கைகொடுத்தேன் அவன் கரையேற
கரைக்கு அவனும் வந்து விட்டான்
கடலில் நான்தான் விழுந்து விட்டேன்
சொல்லி அழுதால் தீர்ந்துவிடும்
சொல்லத்தானே வார்த்தையில்லை.. அதை
சொல்லத்தானே வார்த்தையில்லை...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா …..
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா …..
கருத்துள்ள பாடல் வரிகள் ஒருவன் ஒரு காரியம் செய்யும் போது இரண்டு பேர் பார்த்திருப்பாகள் அதில் ஒருவன் வாழ்த்துவான் இன்னொருவன் தூற்றுவான் இரண்டையும் பெற்றே ஆக வேண்டும் இதுதான் நியதி இவைகளைக் கண்டும் காணாமலும் நாம் நமது பாதையில் சென்று கொண்டே இருக்க வேண்டும்ahmad78 wrote:
முக்கியமாக எதிரிகளின்
பொறாமை அமபுகள்
உன் பக்கம் அதிகமாக
வீசப்படுகிறதா எண்ணிக்கொள்
நீ முன்னேறிக்கொண்டிருக்கிறாய்
:joint: :joint:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா …..
நண்பன் wrote:கருத்துள்ள பாடல் வரிகள் ஒருவன் ஒரு காரியம் செய்யும் போது இரண்டு பேர் பார்த்திருப்பாகள் அதில் ஒருவன் வாழ்த்துவான் இன்னொருவன் தூற்றுவான் இரண்டையும் பெற்றே ஆக வேண்டும் இதுதான் நியதி இவைகளைக் கண்டும் காணாமலும் நாம் நமது பாதையில் சென்று கொண்டே இருக்க வேண்டும்ahmad78 wrote:
முக்கியமாக எதிரிகளின்
பொறாமை அமபுகள்
உன் பக்கம் அதிகமாக
வீசப்படுகிறதா எண்ணிக்கொள்
நீ முன்னேறிக்கொண்டிருக்கிறாய்
:joint: :joint:
எனக்கான ஆறுதலாய், ஆர்வமூட்டலாய், தேறுதலாய் எடுத்துக்கொள்ளட்டுமா நண்பனே!
அத்தனையும் வைர மொழிகளாய் பொறிக்க வேண்டிய வார்த்தைகள்! இந்த நேரம் இந்த நிமிடம் எங்கள் பிசினஸில் நாங்கள் மிகபெரிய பொறாமை அம்புகளை எதிர் நோக்கி மேலும் முன் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
எத்தனைக்கெத்தனை பாராட்டுகளும், புகழ் மாலைகளும் விழுகின்றதோ.. அத்தனை விமர்சனங்களையும், எதிர் கொள்கின்றோம். ஒரு நொடி மனம் இது தேவைதானா என சோர்வு வ்ருவதென்னமோ நிஜம் ப்பா!
ஆனால் எங்கள் வளர்ச்சிக்காக முதலீடாய் அவற்றை எடுத்து முன்சென்று கொண்டிருக்கின்றோம்.
அருமையான பாடல்களுக்கும், விளக்கங்களுக்கும் நன்றிப்பா!
தொடருங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா …..
எதிர்ப்பும் விமர்சனமும் வந்தால்தான் நம்முடைய முன்னேற்றம் நன்றாக இருக்கிறது எனலாம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா …..
ahmad78 wrote:எதிர்ப்பும் விமர்சனமும் வந்தால்தான் நம்முடைய முன்னேற்றம் நன்றாக இருக்கிறது எனலாம்.
:flower:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா …..
ahmad78 wrote:எதிர்ப்பும் விமர்சனமும் வந்தால்தான் நம்முடைய முன்னேற்றம் நன்றாக இருக்கிறது எனலாம்.
ம்ம் சரிதான் முனைதீன்!
ஆனால் ஈவன்ஸ் மனேஜ்மெண்ட் அரேஞ்ச் மெண்ட் என்பது எவ்வளவு கஷ்டமான் காரியம்தெரியுமா.. வாழ்வில் ஒரு முறை வரும் விழா திருமணம் . அதை நடாத்தி தரும் பொறுப்பை இலட்சங்கள் செலவு ஆனாலும் சரிஎன நம்மை நம்மை தருவது எனில் அதற்கான எமது நம்பிக்கை நாணயம் , உத்தரவாதம் எடுக்க நாங்கள் எத்தனை சிரமபட்டிருப்போம்.
மே மாதம் முழுக்க நான் தூங்கியது தினம் 3 , 4 மணி நேரம் மட்டும் தான். இந்த ஒருவாரம்.. தவிர்த்து இனி அடுத்த ஏப்ரல் வரை ஆர்டர் புக்காகி இருக்கு.
1000 பேர் வரும் ஒரு விருந்தில் 1000 விருந்தினரையும் எங்களால் திருப்தி செய்ய முடியுமோ? ஒருவர் காரம் அதிகம் என்பார். இன்னொருவர் காரம் போதாதென்பார்... உப்பில்லை,. புளியில்லை என சொல்பவரெல்லாம் என் நேரடி இரத்த உறவில் வரும் மாமன்மச்சானூம் ஊரவராயும் இருப்பது தான் வேதனை தரும் விடயம்.
போன வாரம் --எல்லாத்தையும் மூட்டை கட்டி தூக்கி போட்டு விட்டு போகலாமா எனும் படி எனக்குள் கோபம். கட்டட சொந்தக்காரர்களுக்கு.. அந்த கட்டடம் கட்டி 3 வருடத்துக்கு நாங்கள் மட்டும் தான் அதை புக் செய்து எங்கள் கஸ்டம்ர்கள் தான் எங்கள் உணவின் சுவை தரம் உணர்ந்து 100. 150 , 200 கீலோ மீற்ரர் தூரம் அப்பாலிருந்தும் வந்து அவர்கள் வீட்டு விழாக்களை நடத்துகின்ரார்கள். அது இவர்கள் கண்களை உறுத்துகின்றது.
கஸ்டம்ர் வருகை. நாங்கள் நிரமப் சம்பாதிப்பதாக் தோன்ற வைத்து பொறாமையை அதாவது வெளி நாட்டிலிருந்து வந்து நம்மை விட மிஞ்சி போவதா எனும் எண்ணமோ என்னமோ .. சும்மா சும்மா குறைகள்.. எனன் சொல்வது.
இப்ப நான் இனி உங்கள் ஹால் எடுக்க மாட்டேன்.. நீங்கள் என்னாவது செய்யுங்கள். எனக்கு விழா மண்டபம் முக்கியமில்லை எனக்கான் ஆர்டர் எப்போதும் போல வரும் என கொஞ்சம் சத்தம் போட்டேன். இறங்கி வந்திருக்காங்க.. கோபத்தில் செப்டம்பர், நவம்பர் மாதங்களில் அந்த ஹாலை புக் செய்திருந்தவர்களுக்கும் வேற மண்டபம் பாருங்க நாங்க.. எல்லாம் செய்து தரோம்னும் சொல்லியாச்சு.
ஒரு விழாவுக்கு ஏ டூ இசட் வரை.. நடத்தணும். கஸ்டமரோடு பேசணும்.... வேலையாட்களோடு பேசணும். திட்டமிடணும். பொருள் வாங்கணும்.. விருந்தினர் சொல்லும் அளவை விட அதிகமாய் ஆட்கள் வந்தால் அதையும் கவனிக்கணும்.
இன்னும் குப்பைகளை வீசணும். டாய்லட் கிளினின்ங் சரியா செய்கின்றார்களா என கவனிக்கணும் என சில நேரம் எப்படி இத்தனை முடியுது என தோணினாலும் ஏதோகடவுள் இட்ட பிச்சையால் இது வரை ஓடிக்கொண்டிருக்கின்றோம்!
அதுக்கூள் வேலையாட்களில் சுகையீன்ம், சம்பள அதிகரிப்பு கேட்டு விலகல்னு புதிய தலைவலிகள் வேற..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா …..
உண்மையை சொன்னால் எங்கள் இந்த முயற்சி பணத்துக்கானது அல்ல.. அன்னிய நாட்டில் அக்தியாய் வந்து ஆரம்பத்தில் எத்தனை கஷ்டங்கள் பட்டிருப்போம்.
எங்களை எங்கள் திறமையை நிருபிக்க... ஒரு வாய்ப்பு.
இங்கே என் பெயர் மிகப்பிரபலம்.. எப்படி தெரியுமா.. மட்டக்களப்பை சேர்ந்த ஒரு பெண் தனித்து சாதிப்பதாயும், எம் உணவுகள் சுவையாய் இருப்பதாயும் இங்கே அறிமுகமாகி இருக்கோம்.
போன வாரம் 600 பேர் மேல் கலந்து கொண்ட ஒரு விழாவில் எங்களை மேடை ஏற்றி பரிசும் தந்தார்கள். பணத்தினை விட இந்த எம்மால் முடியும் எனும் நிருபிக்கும் சவால் தான் இன்னும் ஓட வைக்கின்றது.
எங்களை எங்கள் திறமையை நிருபிக்க... ஒரு வாய்ப்பு.
இங்கே என் பெயர் மிகப்பிரபலம்.. எப்படி தெரியுமா.. மட்டக்களப்பை சேர்ந்த ஒரு பெண் தனித்து சாதிப்பதாயும், எம் உணவுகள் சுவையாய் இருப்பதாயும் இங்கே அறிமுகமாகி இருக்கோம்.
போன வாரம் 600 பேர் மேல் கலந்து கொண்ட ஒரு விழாவில் எங்களை மேடை ஏற்றி பரிசும் தந்தார்கள். பணத்தினை விட இந்த எம்மால் முடியும் எனும் நிருபிக்கும் சவால் தான் இன்னும் ஓட வைக்கின்றது.
Last edited by Nisha on Tue 10 Jun 2014 - 16:59; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா …..
உலகம் பொல்லாதது... நீங்கள் எப்படித்தான்
வாழ்ந்தாலும் இந்த உலகம் பொல்லாதது.
மு.வ அவர்களின் கல்லோ காவியமோ...எனும்
நாவலின் துவக்க வரிகள்
இவை. எப்படி பிரமாதமாக பொருந்துகிறது
நாம் வாழ்வினில் இன்று. நல்லவனாக வாழும்போது
பொறாமைப் படுகிறார்கள். வாழும் நிலை தவறி கீழே
விழும் போது தூற்றுகிறார்கள்.
ஆக எப்படிப் பார்த்தாலும் நாம் எந்த நிலையில்
இருந்தாலும் ஒரு சாரார் குறை சொல்வதை
தங்களது கொள்கையாகவே கொண்டிருக்கின்றனர்
என்பது நிதர்சனமான உண்மை.
அதை தெரிந்து உணர்ந்து அதனை ஒரு பொருட்டாக
மதியாமல் நம் வாழ்வு நம் கையில் எனப் போவதே
நாம் வாழ்வின் வெற்றிக்கு நாம் செய்ய வேண்டிய
ஒன்றே ஒன்று.
-
-------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25249
மதிப்பீடுகள் : 1186
Re: வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா …..
இவைகளை நான் எனக்கு நானே ஆறுதலாகவும் என் அண்ணனுக்காவும் எழுதினேன் நீங்களும் உங்கள் வாழ்வில் வரும் தடைகளை படிகளாக மாற்றி ஏறிச்செல்லுங்கள் பொறாமை அம்புகள் வீசுபவர்கள் குறிகிய காலத்தில் தளர்ந்து விடுவார்கள் அந்த நேரம் உங்கள் முன்னேற்றம் சிகரம் தொட்டிருக்கும் முன்னேறிச்செல்லுங்கள் அக்காNisha wrote:நண்பன் wrote:கருத்துள்ள பாடல் வரிகள் ஒருவன் ஒரு காரியம் செய்யும் போது இரண்டு பேர் பார்த்திருப்பாகள் அதில் ஒருவன் வாழ்த்துவான் இன்னொருவன் தூற்றுவான் இரண்டையும் பெற்றே ஆக வேண்டும் இதுதான் நியதி இவைகளைக் கண்டும் காணாமலும் நாம் நமது பாதையில் சென்று கொண்டே இருக்க வேண்டும்ahmad78 wrote:
முக்கியமாக எதிரிகளின்
பொறாமை அமபுகள்
உன் பக்கம் அதிகமாக
வீசப்படுகிறதா எண்ணிக்கொள்
நீ முன்னேறிக்கொண்டிருக்கிறாய்
:joint: :joint:
எனக்கான ஆறுதலாய், ஆர்வமூட்டலாய், தேறுதலாய் எடுத்துக்கொள்ளட்டுமா நண்பனே!
அத்தனையும் வைர மொழிகளாய் பொறிக்க வேண்டிய வார்த்தைகள்! இந்த நேரம் இந்த நிமிடம் எங்கள் பிசினஸில் நாங்கள் மிகபெரிய பொறாமை அம்புகளை எதிர் நோக்கி மேலும் முன் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
எத்தனைக்கெத்தனை பாராட்டுகளும், புகழ் மாலைகளும் விழுகின்றதோ.. அத்தனை விமர்சனங்களையும், எதிர் கொள்கின்றோம். ஒரு நொடி மனம் இது தேவைதானா என சோர்வு வ்ருவதென்னமோ நிஜம் ப்பா!
ஆனால் எங்கள் வளர்ச்சிக்காக முதலீடாய் அவற்றை எடுத்து முன்சென்று கொண்டிருக்கின்றோம்.
அருமையான பாடல்களுக்கும், விளக்கங்களுக்கும் நன்றிப்பா!
தொடருங்கள்!
எதிலும் பின் வாங்காதீர்கள் நாம் எல்லாம் போராழிகள் போராடப்பிறந்தவர்கள் எந்த வகையானாலும் சரி நமது வாழ்க்கை இப்போது பல போராட்டங்களாகவே மாற்றப்படுகிறது
வாழ்வோம் சாதிப்போம்
நன்றியுள்ள நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|