Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தானத்தில் சிறந்தது அன்னதானம்
3 posters
Page 1 of 1
தானத்தில் சிறந்தது அன்னதானம்
-
மனிதர்கள் அனைவருமே ஒருவாய் சோற்றுக்குத்
தான், எல்லா சிரமங்களையும் அனுபவிக்கின்றனர்.
-
சித்த புருஷர்களிலேயே, முதல்வராகக் கருதப்படும்
பட்டினத்தாரே, ‘அன்ன விசாரம் அதுவே விசாரம்…’
எனப் பாடியிருக்கிறார் என்றால் நாம் எந்த மூலை?
-
இதை, நமக்கு அறிவுறுத்தவே, கடவுள் வழிபாட்டில்
அன்னதானம் முக்கிய இடத்தை வகிக்கிறது.
அடுத்தவர் பசித்திருக்கப் பார்க்காததும், அடுத்தவர்
பசியைப் போக்குவதுமே ஆன்மிகம்.
-
ஏழாம் நூற்றாண்டில், திருஞானசம்பந்தரும்,
திருநாவுக்கரசரும் அஞ்ஞான இருளை போக்கி,
மக்களிடம் ஞான மார்க்கத்தை புகுத்திக்
கொண்டிருந்தனர்.
-
அவர்கள் இருவரும், திருவீழிமிழலை எனும் திருத்
தலத்தில் தங்கி, நேத்ரார்ப்பணேஸ்வரர் கோவிலில்,
சிவபெருமானை, வழிபட்டுக் கொண்டிருந்த வேளை—
-
அந்த ஊரில் மழையில்லாததாலும், நதிகளில்
நீர்ப்பெருக்கு குறைந்ததாலும், பஞ்சம் ஏற்பட்டது.
மக்கள் மிகுந்த பசித் துன்பம் அடைந்தனர்.
-
அப்போது சிவபெருமான், ‘நீங்கள் இந்தக் காலபேதத்தால்
மனத்துயர் அடைய வேண்டாம். உங்களுக்காக
தினமும் படிக்காசு தருகிறோம். அவற்றை வைத்து
மக்களின் பசித் துன்பத்தை தீருங்கள்…’என்று கூறி,
கோவிலின் கிழக்கு வாசல் படியிலும், மேற்கு வாசல்
படியிலும், தினந்தோறும் படிக்காசு – பொற்காசு
வைத்தருளினார்.
-
அந்த இரு காசுகளையும், திருஞான சம்பந்தரும்,
திருநாவுக்கரசரும் எடுத்து, அதன் மூலம் பண்டங்களை
வாங்கி, உணவு தயாரித்து, ‘அடியார்கள் எல்லாரும்
அமுது உண்ண வாருங்கள்…’ என, பறைசாற்றித்
தெரிவித்து, அன்னமிட்டனர்.
-
இந்தச் செயல், பஞ்சம் தீரும் வரை தொடர்ந்தது.
-
‘அன்னத்தை இகழாதே; அன்னத்தை உற்பத்தி செய்…’
என, மறைகளும் முழங்குகின்றன. அதனால், எந்த
விதத்திலும், ஒரு பிடி அன்னமாக இருந்தாலும்,
ஒரு பருக்கை அன்னமாக இருந்தாலும் அன்னத்தை
வீணாக்கக் கூடாது.
-
இதிகாசங்கள், புராணங்கள், மறைகள், வழிபாட்டு
முறைகள் என, எல்லாவற்றிலும் புகழப்படும் அன்ன
தானத்தை, முடிந்த வரை செய்வோம்!
-
———————————
>பி.என்.பரசுராமன் (வாரமலர்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: தானத்தில் சிறந்தது அன்னதானம்
அருமையான கருத்துப் பதிவு....
நாமும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ....
மகத்தான நெறி முறையாகும்...
அன்னத்தை இகழாதே; அன்னத்தை உற்பத்தி செய்…’
என, மறைகளும் முழங்குகின்றன. அதனால், எந்த
விதத்திலும், ஒரு பிடி அன்னமாக இருந்தாலும்,
ஒரு பருக்கை அன்னமாக இருந்தாலும் அன்னத்தை
வீணாக்கக் கூடாது.
நாமும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ....
மகத்தான நெறி முறையாகும்...
அன்னத்தை இகழாதே; அன்னத்தை உற்பத்தி செய்…’
என, மறைகளும் முழங்குகின்றன. அதனால், எந்த
விதத்திலும், ஒரு பிடி அன்னமாக இருந்தாலும்,
ஒரு பருக்கை அன்னமாக இருந்தாலும் அன்னத்தை
வீணாக்கக் கூடாது.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தானத்தில் சிறந்தது அன்னதானம்
உலகில் அதிகமாக உணவு தானியங்களை கடலில் கொட்டும் நாடு அமெரிக்கா ....தயாரிக்கப்பட்ட உணவுகளை அதிகமாக வீணடிக்கும் நாடுகள் வளைகுடா நாடுகள் .....அன்னதானம் நாமும் செய்வோம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தானத்தில் சிறந்தது அன்னதானம்
jasmin wrote:உலகில் அதிகமாக உணவு தானியங்களை கடலில் கொட்டும் நாடு அமெரிக்கா ....தயாரிக்கப்பட்ட உணவுகளை அதிகமாக வீணடிக்கும் நாடுகள் வளைகுடா நாடுகள் .....அன்னதானம் நாமும் செய்வோம்
அன்னதானத்துடன்.....
இரத்த தானம் செய்வதையே....
பெறுமதியாய் எண்ணியதுமுண்டு நான்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum