Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர் கவனத்திற்கு!
Page 1 of 1
தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர் கவனத்திற்கு!
தமிழகத்தில் வாழும் தமிழ்ப் பெற்றோர்களின் சிறப்பான கவனத்திற்கு !!
உங்கள் குழந்தைகளை நீங்கள் தனியார் பள்ளியில் சேர்ப்பதாக முடிவெடுத்த பின்னர் எத்தகைய பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று அலசிக் கொண்டிருப்பீர்கள். தமிழர் நலனில் அக்கறையுள்ள நாங்கள் உங்களுக்கு சில அறிவுரைகளை சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
அரசுப் பள்ளியில் தான் நம் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று நாம் பரிந்துரைத்தாலும் பல அரசுப் பள்ளிகளில் சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பெற்றோர்கள் தனியார் பள்ளியை நோக்கியே பயணிக்கிறார்கள். தனியார் பள்ளி தான் என்று முடிவெடுத்த பின்னர் நிச்சயம் தமிழ்வழிக் கல்வியை எந்த பெற்றோரும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்பதை நாம் ஊகித்து அறியலாம். இருப்பினும் பல தரமான தனியார் தமிழ்வழிக் கல்வி நிலையங்களும் தமிழகத்தில் பல பகுதிகளில் இயங்குகிறது என்பதை நாம் குறிப்பிட விரும்புகிறோம். தமிழ் அறிஞர்கள் தங்கள் சொந்த முயற்சியில் இப்படியான தமிழ் வழிப் பள்ளிகளை அரசு உதவியின்றி சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
இப்பள்ளிகளில் தாய் மொழிக் கல்வியை மிகச் சிறப்பாக சமூக அக்கறையுடன் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதற்கு தாய் தமிழ்ப் பள்ளிகளே சிறந்த எடுத்துக்காட்டாக நாம் கூறலாம். வெறும் பாடத்தை மட்டுமே சொல்லிக் கொடுக்காமல் தமிழையும் , தமிழர் பண்பாட்டையும், தமிழர் கலைகளையும், தமிழர் வரலாற்றையும் சிறப்பாக சொல்லிக் கொடுத்து ஒரு சிறந்த தமிழ்க் குடிமகனாக நம் குழந்தைகளை இங்கு வளர்த்தெடுக்கிறார்கள். எனினும் இத்தகைய தாய் தமிழ் பள்ளிகள் குறைவாகவே உள்ளன. இதனால் எல்லா குழந்தைகளும் இங்கு சேர வாய்ப்பில்லை. எனினும் நம் முதல் பரிந்துரை தனியார் தமிழ்வழிக் கல்வி நிலையங்களில் குழந்தைகளை சேர்ப்பது தான்.
அடுத்ததாக ஆங்கில வழிக் கல்வி நிலையங்கள் குறித்து பார்ப்போம். இப்போது தமிழக அரசே ஆங்கில வழிக் கல்வியை பள்ளிகளில் அறிமுகப்படுத்தி உள்ளது. தனியார் கட்டண கொள்ளை கல்வி நிலையங்களில் இருந்து மாணவர்களை பாதுகாக்க அரசே இப்போது ஆங்கில வழிக் கல்வியை தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ளதாக கூறியுள்ளது. அதனால் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதே முதல் தேர்வாக அமைந்துள்ளது. இருப்பினும் தனியார் கல்வி நிலையங்கள் மீதான ஒரு மோகம் தமிழ்ப் பெற்றோர்களுக்கு இருப்பதால் எது சிறந்த தனியார் பள்ளி என்ற சந்தேகம் எழுகிறது. சந்தேகத்திற்கு இடமில்லாமல் கட்டண கொள்ளை நடத்தும் தனியார் பள்ளிகளை தமிழ்ப் பெற்றோர்கள் தொடக்கத்திலேயே தவிர்த்திட வேண்டுகிறோம். இதில் நன்கொடையாக 25,000, 50,000, 1,00000 ரூபாய் வாங்கும் பள்ளிகள் நிறைய உள்ளன. மேலும் ஒவ்வொரு காலாண்டிற்கும் 10,000, 20,000 ரூபாய் கட்டணமாக இந்த பள்ளிகள் பெறுகிறது . கல்வியை முழுவதும் வியாபாரமாக்கும் இத்தகைய பள்ளிகள் எப்படியான நன்னடத்தைகளை, நற்குணங்களை நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்? பிள்ளைகளை பணம் வழங்கும் இயந்தரமாக பாவிக்கும் இந்த பள்ளிகளால் நிச்சயம் நம் குழந்தைகளுக்கு எந்த நன்மையையும் ஏற்படப் போவதில்லை . ஒரு சிறந்த மனிதனாக நம் பிள்ளைகளை இப்பள்ளிகள் மாற்றாது . மாறாக சமூகத்தில் போட்டி, பொறாமை, பேராசை கொண்ட பணவெறி பிடித்த மாக்களாக இப்பள்ளிகள் நம் பிள்ளைகளை வளர்த்தெடுக்கும். அதனால் இப்படியான பணத்தை குறிவைக்கும் தனியார் பள்ளிகளில் தயவு செய்து பிள்ளைகளை சேர்க்க வேண்டாம் என அறிவுறுத்துகிறோம்.
தனியார் பள்ளிகளில் பொது நோக்கம் கொண்ட பகட்டில்லாத சில நல்ல பள்ளிகளும் உள்ளன. இவர்கள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை மட்டுமே பெறுகிறார்கள். இந்தப் பள்ளிகள் பிள்ளைகளுக்கு நல்ல விதமாக அர்ப்பணிப்புடன் கல்வியை கற்பிக்கிறார்கள். எந்த தேவையற்ற ஆடம்பரமும் இல்லாமல் எளிமையான முறையில் கல்வியை கற்றுத் தருகிறார்கள். இப்படியான பள்ளிகளை பெற்றோர்கள் தேர்வு செய்து பிள்ளைகளை அங்கு சேர்க்க வேண்டும். பள்ளிகளை வழிநடத்தும் நபர்களின் பின்புலத்தையும் பார்க்க வேண்டுகிறோம் . அறவழி சார்ந்து சமூக அக்கறை கொண்ட நபர்கள் வழிநடத்தும் பள்ளிகளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அடுத்ததாக தாய் மொழியைத் தவிர எந்த மொழித் திணிப்பிற்கும் நம் பிள்ளைகள் ஆட்படக்கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் . சில தனியார் பள்ளிகள் தேவையே இல்லாமல் இந்தி மற்றும் பிற மொழிகளை மாணவர்களிடம் கட்டாயமாக திணிக்கிறார்கள் . இது தமிழக அரசின் சட்டத்திற்கு விரோதமானதாகும். தமிழகத்தில் வாழ்வதற்கு நம் தாய் மொழியும் தமிழகத்தை விட்டு வெளியேறி வாழ்வதற்கு சிறிது ஆங்கில அறிவும் இருந்தால் போதுமானது. இதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும் . வேற்று மொழி மாநிலத்தில் குடியேறி வாழ விரும்பினால் அந்த தருணத்தில் அந்த மாநில மொழியை நாம் ஒருசில மாதங்களில் கற்றுத் தேறலாம் . கன்னட மாநிலத்தில் வாழ கன்னடமும் , தெலுங்கு மாநிலத்தில் வாழ தெலுங்கு மொழியையும் தேவைகேற்ப அந்த காலகட்டத்தில் கற்கலாம். ஆனால் குழந்தை பருவத்திலேயே நாம் கன்னடம், தெலுங்கு , இந்தி , உருது , அரபி என பல மொழிப்பாடங்களை கட்டாயமாக கற்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படிக் கட்டாயப்படுத்தி நாம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தால் நாமே நம் பிள்ளைகளுக்கு தேவையில்லாத சுமைகளை ஏற்றுகிறோம் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். அதனால் கட்டாய வேற்று மொழித் திணிப்பு செய்யும் பள்ளிகளை பெற்றோர்கள் புறக்கணிக்க வேண்டும். அந்நிய மொழித் திணிப்பில்லாத சமச்சீர் பாடத்திட்டம் வழங்கும் பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளை சேர்க்க வேண்டும்.
அடுத்ததாக நடுவண் அரசு பள்ளிகளை பார்ப்போம். இங்கு தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கூட சொல்லித் தருவதில்லை . மேலும் நடுவண் அரசின் பாடத்திட்டத்தில் தமிழகம் சார்ந்த புவியியல், வரலாறு, சமூக அறிவியல் என எவையும் இல்லை . இந்தப் பள்ளிகளில் படிக்கும் நம் பிள்ளைகளுக்கு தமிழ் மொழி அறிவும் , தமிழர் வரலாற்று, பண்பாட்டு அறிவும் சொல்லிக் கொடுக்காத காரணத்தால் தமிழ்நாட்டில் நல்ல குடிமகனாக வாழும் தகுதியை நம் பிள்ளைகள் இழக்கிறார்கள். இந்தி பேசும் மக்களாக மாற்றப்படுகிறார்கள். நாளை மலர இருக்கும் தமிழர் ஆட்சியில் இப்பிள்ளைகளுக்கு எந்த இடமும் இல்லாமல் போக வாய்ப்பும் உள்ளது . தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத மக்களாக இந்த பிள்ளைகள் வெளிவரும் போது தமிழக அரசின் சலுகைகள் அனைத்தும் இவர்கள் இழப்பார்கள். தமிழ்ப் படித்தோருக்கே அரசு வேலை, தனியார் வேலை, சிறப்புச் சலுகை என நாம் சட்ட திருத்தம் கொண்டு வரும் வேளையில் இக்குழந்தைகள் எல்லா உரிமைகளையும் இழந்து நிற்கும் ஆபத்து உள்ளது. அதனால் தயவு செய்து நடுவண் அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வேண்டாம் என அறிவுறுத்துகிறோம். ஒருவேளை நடுவண் பள்ளிகளில் சேர்க்க நேர்ந்தால் குறைந்த பட்சம் தமிழை இரண்டாம் பாடமொழியாக பிள்ளைகள் தேர்வு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம் .
முறையே நம் தேர்வுகளை வரிசைப்படுத்துவோம்.
௧. அரசுப் பள்ளிகள் தமிழ் வழி
௨. தனியார் தமிழ் வழிப்பள்ளிகள்
௩. அரசுப் பள்ளிகள் ஆங்கில வழி .
௪. தனியார் ஆங்கில வழி (கட்டண கொள்ளை இல்லாத பள்ளிகள் )
௫. வேற்றுமொழிப் திணிப்பு இல்லாத பள்ளிகள்
௪. நடுவண் அரசுப் பள்ளிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
௬. ஒருவேளை நடுவண் பள்ளிகள் எனில் நடுவண் அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழி இரண்டாம் மொழிப்பாடமாக கட்டாயம் இருத்தல் வேண்டும்.
மேற்கூறிய பரிந்துரைப்படி நாம் குழந்தைகளை சேர்த்தால் நம் பிள்ளைகள் எதிர்காலத்தில் தமிழ்த் தேசத்தில் சிறந்த பொறுப்புள்ள குடிமக்களாகவும் , நல்ல தமிழ்க் குடும்பத்தை உருவாக்கி வழிநடத்தும் நபர்களாகவும் விளங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.
தமிழர் நலம் கருதி வெளியிடுவோர்
தமிழர் பண்பாட்டு நடுவம்
- See more at: http://newsalai.com/news1/2014/05/9306.html#sthash.ugkmXOvH.dpuf
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum