Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம்
2 posters
Page 1 of 1
இளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம்
இளைஞர்களுக்கு சிகரெட் பழக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சினிமாதான் என்பது சமீபத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. சினிமாக்கள் மூலம் சிகரெட், புகையிலை கம்பெனிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.
தீவிரமாக நடக்கும் விழிப்புணர்வு பிரசாரங்களையும் மீறி, புகைப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புகை பிடிக்கும் பழக்கம் ஏன் உண்டாகிறது என்பது குறித்து அரசு சாரா அமைப்புகள், இந்திய தேசிய புகையிலை ஒழிப்பு நிறுவனம் (நோட்), மற்றும் கோவா தன்னார்வ சுகாதார சங்கம் இணைந்து ஆய்வு மற்றும் கருத்துக் கணிப்பு நடத்தின. இந்த ஆய்வில் தெரியவந்த தகவல்கள்: உலகம் முழுவதும் புகைப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பேர் இப்பழக்கத்தில் விழுகின்றனர்.
இவர்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் திடீரென எப்படி வந்தது என்று சர்வேயில் கேட்கப்பட்டது. இதில் பலர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 54 சதவீத இளைஞர்களும் 30 சதவீத பொதுமக்களும் ‘சினிமா பார்த்து புகை பிடிக்க ஆரம்பித்தோம்’ என்று கூறியிருக்கின்றனர்.
சிகரெட், புகையிலை கம்பெனிகளுக்கு சினிமாக்களால் ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. உலக அளவில் இந்தியா, சீனாவில் மட்டுமே புகையிலை பழக்கத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகம். இப்பழக்கத்தால் உலகம் முழுவதும் சராசரியாக தினமும் ஒரு மணி நேரத்தில் 114 பேர் இறக்கின்றனர்.
மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய உலக சினிமா, வியாபார நோக்கில் செய்து வரும் தவறுகளால் மக்கள் பல்வேறு தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. புகை பழக்கத்துக்கு அடிமையாகி நுரையீரல் மற்றும் உறுப்புகள் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடுபவர்களை பார்த்தால், சினிமாவில் எந்த நடிகரும் சிகரெட் பிடிக்க மாட்டார்.
தொடர் விழிப்புணர்ச்சிகள் மூலம் கோவா, பஞ்சாப் மாநிலங்களில் புகை பிடிப்போர் எண்ணிக்கை குறைந்து தற்போது முறையே 9, 15 என்ற சதவீதமாக உள்ளது. 30 வயதுக்கு குறைந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். புகை பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விடுபடவும் புகைப் பழக்கம் இல்லாத சமுதாயம் உருவாகவும் நடிகர்கள், மீடியாக்களின் ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தினகரன்-
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம்
-
சாத்தான் வேதம் ஓதிகிறது என்பார்கள்..!
-
அரசே மது விற்பனை செய்கிறது..!
ஆனால் மது குடித்தால் தீமையாம்..!!
-
சிகரெட் குடித்தால் உடல் நலத்துக்கு கேடு
என்று அந்த சிகரெட் பெட்டியில் போட வேண்டும்..
அவ்வளவுதான்...!
-
விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி விட்டோம் என்று
திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியதுதான்..!!!
-
சாத்தான் வேதம் ஓதிகிறது என்பார்கள்..!
-
அரசே மது விற்பனை செய்கிறது..!
ஆனால் மது குடித்தால் தீமையாம்..!!
-
சிகரெட் குடித்தால் உடல் நலத்துக்கு கேடு
என்று அந்த சிகரெட் பெட்டியில் போட வேண்டும்..
அவ்வளவுதான்...!
-
விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி விட்டோம் என்று
திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியதுதான்..!!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம்
சிகிரெட் பிடிப்பதை நாகரீகம் என்றும் ,சினிமாவின் இடையில் விளம்பரமும்,புகைப்பிடிக்கும் போது ஸ்கோரிங் இருக்கும் ஆனால் இவர்கள் நிறுத்தமாட்டார்கள்...பணத்திற்கு படம் எடுப்பார்கள் புகைக்காமல் எடுத்தால் என்ன ? பல மனங்களில் காயம் நீங்கள் கொடுக்கும் செய்தியில் மனிதன் செயல் இழக்கிறான்..
அதை நவ நாகரிக ஸ்டைல் என்றும் தனக்கு இருந்த நடிப்பு திறமையால் மூளைச் சலவை செய்து பல இளைஞர்களின் வாழ்கையை சிதைத்த பெருமை அந்த பிரபல நடிகரையே சேரும்...
பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை சிகிரெட் விற்பதை நிறுத்த அரசு நடவடிக்கை எடுத்தல் அவசியம்..
பின் முதுமையில் அவர் உடல் ஒத்துழைக்காமல் அப்பழக்கத்தை விட்ட பின், இளைஞர்களின் நலன் கருதியே அவர் திரையில் அவ்வாரு தோன்றுவதில்லை என்று தம்பட்டம் அடித்ததும் அந்த நடிகரின் ரசிகர்களையே சேரும்...
இறைவா!என்று விழித்துக் கொள்ளும் என் தேசம்...
அதை நவ நாகரிக ஸ்டைல் என்றும் தனக்கு இருந்த நடிப்பு திறமையால் மூளைச் சலவை செய்து பல இளைஞர்களின் வாழ்கையை சிதைத்த பெருமை அந்த பிரபல நடிகரையே சேரும்...
பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை சிகிரெட் விற்பதை நிறுத்த அரசு நடவடிக்கை எடுத்தல் அவசியம்..
பின் முதுமையில் அவர் உடல் ஒத்துழைக்காமல் அப்பழக்கத்தை விட்ட பின், இளைஞர்களின் நலன் கருதியே அவர் திரையில் அவ்வாரு தோன்றுவதில்லை என்று தம்பட்டம் அடித்ததும் அந்த நடிகரின் ரசிகர்களையே சேரும்...
இறைவா!என்று விழித்துக் கொள்ளும் என் தேசம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம்
பயனுள்ள பதிவு..
-
தவிர்ப்போம் புகையிலை ! நீட்டிப்போம் ஆயுளை !!
-
-
தவிர்ப்போம் புகையிலை ! நீட்டிப்போம் ஆயுளை !!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம்
நாளைய குழந்தைகளின் வாழ்வில் இன்றைய நம்மில் உள்ளது..நேற்றே நம் முன்னோர்கள் தவிர்த்திருந்தால் நாம் மனம் நோக வாய்ப்பு குறைவு..rammalar wrote:பயனுள்ள பதிவு..
-
தவிர்ப்போம் புகையிலை ! நீட்டிப்போம் ஆயுளை !!
-
புகைப்பிடிப்பனை பார்த்து எங்கே திருந்தபோகுது என்று செல்லாமல் ..எடுத்து சொல்வோம்..அவரை மீண்டும் புது வாழ்வு எடுக்க உதவுவோம்..
புகைப்பிடிப்பவரை விட புகைக்கும்போது அருகில் இருப்பவரே அதிகம் சாகின்றனர்..அதனால் நாமே அதற்கு பொறுப்பு எடுப்போம்.....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» நிலாச்சோறு என்ற பழக்கம் உருவான காரணம்!
» காபி குடிக்கும் பழக்கம் தீவிரமடைவதற்கு மரபணுவே காரணம்
» விவாகரத்து ஏற்பட முக்கிய காரணம் "பேஸ்புக்
» நடிகை சோனா தன் பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் பெற முக்கிய காரணம்
» சினிமாதான் எனக்கு வகுப்பறை: சரிகா கமல்
» காபி குடிக்கும் பழக்கம் தீவிரமடைவதற்கு மரபணுவே காரணம்
» விவாகரத்து ஏற்பட முக்கிய காரணம் "பேஸ்புக்
» நடிகை சோனா தன் பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் பெற முக்கிய காரணம்
» சினிமாதான் எனக்கு வகுப்பறை: சரிகா கமல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum