சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன. Khan11

ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன.

5 posters

Go down

ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன. Empty ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன.

Post by Nisha Sun 29 Jun 2014 - 12:58

ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன.
எதையும் தாங்கும இதயம வேண்டும்


ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!


இந்த இரண்டு வரிகளில் ஈராயிரம் அர்த்தங்கள் உண்டு.முள்ளோடு மோதி வாழும் ரோஜா போராட வில்லையா? மலர்ந்த மலரில் வண்டுகள் ருசிபார்க்கவில்லையா? மலர்ந்தும், உதிர்ந்தும் வாடுவதில்லையா? இப்படி எத்தனையோ பேராட்டங்களுக்கு இடையே மலர்கள் சிரிக்கின்ற போது நீ ஏன் சோர்ந்து வாட வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!


இந்த வரிகள் இரவு இரவாகவே, இருட்டாகவே இருப்பதில்லை நிச்சயம், பகல் வரும் அது போல துன்ப வாழ்க்கை துன்பமாகவே தொடர்ந்து விடாது, துன்ப இருள் நீக்கி இன்ப ஒளி வரும் என்று உணர்த்துகின்றது.

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!


இலட்சிய வீரனுக்கு நம்பிக்கை என்பது மிகவும் அவசியம். அறிவியல் புயல் அப்துல் கலாம் சொல்வார்கள். உன்னால் முடியும் வரை முற்சிப்பது முயற்சி அல்ல எண்ணிய செயல் முடியும் வரை முயற்சிப்பதே முயற்சி அவ்வாறு கிடைப்பதே வெற்றி, அது போல வென்றே தீருவேன் என்ற வெறி, நெருப்புப் பொறி போன்று மனதில் இருக்க வேண்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன. Empty Re: ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன.

Post by Nisha Sun 29 Jun 2014 - 12:59

மனமே ஓ! மனமே நீ மாறிவிடு
மலையோ? அது பனியோ? நீ மோதி விடு


மனம் நமக்கு வெற்றி கிடைக்காது. நம்மால் முடியாது என்று சொல்லும் அந்த எதிர்மறை மனமே மாறி விடு. மலையாக இருந்தாலும் மோதிப் பார்க்கலாம். பனியாக இருந்தாலும் தொட்டுப் பார்க்கலாம். மன தைரியத்துடன் எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது


பல தோல்வியாளர்களிடம் காரணம் கேட்டுப் பாருங்கள் உள்ளம் உடைந்து விட்டது. என்று தான் சொல்வார்கள். என்றும் எப்போதும் உடைந்து போகக்கூடாது தோல்விக்கு துவளாத உள்ளம் வேண்டும். எப்படியும் சாதிப்பேன் என்ற உறுதி வேண்டும் என்று உணர்த்துகின்ற உணர்ச்சிமிக்க வரிகள். உள்ளம் உடைந்து விட்டால் வாழ்க்கை உடைந்து வட்டால் வாழ்க்கை உடைந்து விடும்.உள்ளம் உடையாமல் காப்பது உயர்ந்த தன்னம்பிக்கை.

என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக் கூடாது


பலர் எனக்கு வாழ்க்கை வெறுத்துப்போய்விட்டது. என்ன வாழ்க்கை இது என்று புலம்பக் கேட்டு இருக்கின்றோம். அவர்களது ரணங்களுக்கு மருந்தினை மயிலிறகால் மருந்து போடும் வைர வரிகள் இவை. வாழ்க்கையை ரசிக்க வேண்டும். வெறுப்பு வரக் கூடாது என உணர்த்துகின்றன. வாழ்க்கையை நேசியுங்கள் உங்களை நீங்களே நேசியுங்கள் என உரைத்திருக்கும் வரிகள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன. Empty Re: ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன.

Post by Nisha Sun 29 Jun 2014 - 13:02

எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்


உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனின் நெஞ்சுக்குள்ளும் காயம் உண்டு. உள்ளத்தில் காயம் இல்லாத ஒருவனும் இல்லை. நமக்கு மட்டும்தான் நெஞ்சுக்குள் காயம் என்று வருந்தாதே! என ஆறுதல் தரும் வரிகள். இக்கரைக்கு அக்கரை பச்சை: வீட்டுக்கு வீடு வாசப்படி என உணர்த்துகின்றன.


காலப்போக்கில் காயம் எல்லாம்
மறைந்துபோகும் மாயங்கள்


உள்ளத்துக் காயத்தின் மருந்து காலம் தான். காலம் செல்லச் செல்ல காயங்கள் மாயமாக போகும். மறந்து போகும் கவலை வேண்டாம். கவலையை மறந்தால் காணாமல் போகும் என்பது முற்றிலும் உண்மை.

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்


இன்று அழகிய சிலை என பாராட்டப்படும் சிலை அன்று உளியில் வலிக்கு பயந்து ஒதுங்கி இருந்தால் வெறும் கல்லாகவே இருந்திருக்கும். இன்றைய கஷ்டமான உழைப்பு நாளைய வளமான வாழ்விற்கு அடித்தளம் என உணர்த்தும் வரிகள் தீக்காயம்பட்ட மூங்கில்தான் புல்லாங்குழல் ஆகி இசை தருகின்றது. கஷ்டம், துன்பம் கண்டு வாழ்க்கை வெறுத்து விடாதே! உழைத்து முன்னேறு.

வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்


அறிஞர் அண்ணா சொல்வார்கள். எதையும் தாங்கும் இதயம் வேண்டும். வலிகளை தாங்கிக் கொண்டால் வலிகளுக்காக வருந்தாத உள்ளம் கொண்டால் வாழ்க்கை வசப்படும் எனச் சொல்லிடும் வரிகள். எதையும் இயல்பாக எடுத்துக்கொண்டு உணர்ச்சி வசப்படாமல் அறிவால் சிந்திக்க வேண்டும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன. Empty Re: ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன.

Post by rammalar Sun 29 Jun 2014 - 13:03

*_  *_ 
ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன. 800px-Luculia_gratissima
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24339
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன. Empty Re: ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன.

Post by Nisha Sun 29 Jun 2014 - 13:04

யாருக்கில்லை போரட்டம்?
கண்ணில் என்ன நீரோட்டம்.


உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் வாழ்க்கை போராட்டம் உண்டு. உனக்கு மட்டும் தான் வாழ்க்கை போராட்டமாக உள்ளது என்று எண்ணி, கண்ணீர் வடித்து காலம் கழிக்காதே என்று உணர்த்துகிறது. கண்ணீர் சிந்துவது கவலையை அதிகரிக்கும்.

ஒரு கனவு கண்டால் அதை
தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்


மாமனிதர் அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்றார். கனவு காண்பதோடு நின்று விடாமல் அந்தக் கனவை நனவாக்க தினம் முயற்சி செய்தால் இலட்சியம் நிறைவேறும் என விளக்கிடும் வரிகள்.


வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்


கவிதை என்பது மிகவும் இனிமையான ஒன்று எனவே வாழ்க்கையை கவிதையாகப் பாருங்கள். கவிதை எழுதிட சிந்திக்க வேண்டும். வானம் அளவிற்கு யோசித்து செயல்படுங்கள் எனச் சொல்லுகின்றன.

முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சுப் போல சுவாசிப்போம்


முயற்சி செய் என பலர் கூறி இருக்கிறார்கள். ஆனால் மூச்சுப்போல் சுவாசி என யாரும் சொன்னதில்லை. புதிய உவமை, மூச்சு நின்று விட்டால் உயிர் போய் விடும். முயற்சி நின்று விட்டால் வெற்றி போய் விடும் என்றும், முயற்சி என்பது மூச்சைப்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன. Empty Re: ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன.

Post by Nisha Sun 29 Jun 2014 - 13:05

இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு


நாம் கண்ட கனவுகள் அனைத்தையும் இலட்சிங்களையும், மறக்காமல் வைத்திருந்து அடைய வேண்டும் என்றும் செயல்படுத்த வேண்டும் என உணர்த்துகின்றன. கனவு நனவாகும் இலட்சியம் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு முயன்றிடுதல் வேண்டும்.

உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு
அவன் என்னை ஜெயித்து விடுவானோ? என அஞ்சி சாகாதே உன்னை எவனாலும் வெல்லமுடியாது. தன்னம்பிக்கையோடு போராடு, வெற்றி நிச்சயம் என தன்னம்பிக்கை தரும் வைர வரிகள், ஊக்கம் உன்னத வரிகள்.

மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்.


சிறிய விதைக்குள் தான் விருட்சம் உள்ளது. எனவே மனதில் விதையை ஊன்றி சாதிக்க வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற விதையை விதைத்தால் மரமாகி காய்காய்க்கும். கனி நல்கும்.

அவமானம் படுதோல்வி
எல்லாமே உரமாகும்.


யாராவது நம்மை அவமானப்படுத்தினால் அதனால் ஏற்படும் வெறியும் வெற்றிக்கு வழி வகுக்கும். தோல்விக்கு கேலி செய்து அவமானப்படுத்தியவர்களின் முன்பு நாம் வென்றாக வேண்டும் என்ற உணர்வு உரமாக அமையும் என்பது முற்றிலும் உண்மை. அலட்சியம் செய்துவிட்டு இலட்சியத்தை நோக்கி நடைபோடு


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன. Empty Re: ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன.

Post by Nisha Sun 29 Jun 2014 - 13:06

தோல்வி இன்றி வரலாறா? துக்கம் என்ன என் தோழா?

சோமநாதபுர படையெடுப்பு பற்றி கஜினி முகமது வரலாறு படித்தவர்களுக்கு தெரியும். பதினேழு முறை படையெடுத்து, எடிசன் வரலாறு படித்தவர்களுக்கு தெரியும். விளக்கை கண்டுபிடிக்க எத்தனை முறை அவர் தோற்றால்? தொடர்ந்து முயற்சி செய்தார் என்பது. அதுபோல தோல்வியை வரலாõறாக எடுத்துக் கொண்டு அடுத்த தோல்வியை தவிர்க்கப்பார். துக்கப்படுவதால் மட்டும் தோல்வி தூரம் போய் விடாது என உணர்த்துகின்றனர்.


ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்.


முடிவு எடுக்கும் முன் யோசிக்கலாம் எடுத்தபின் யோசிப்பது மடமை. குழப்பமின்றி தெளிவாக இருக்க வேண்டும். சுனிதா வில்லியம்ஜூக்கு வானம் வசப்பட்டது. வானம் செல்வேன் என்ற முடிவு இருந்தது அந்த முடிவில் தெளிவு இருந்தது. கல்பனாசாவ்லாவைப் போல நமக்கும் விபத்து நேருமோ? என ஒரு நிமிடம் அஞ்சி இருந்தாலும் இந்த சாதனை அவரால் நிகழ்த்தி இருக்க முடியாது. அவருக்கு வானம் வசப்பட்டது. அவரை உலகமே பாராட்டி மகிழ்ந்தது. பிறந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறி உள்ளத்தில் உருவாக வேண்டும். தன்னம்பிக்கை வேண்டும், வாழ்க்கையில் வெற்றி பெற துடிப்பவர்கள் ஒவ்வொரு பூக்களுமே பாடலைப்பாடி அதனை திறம்பட மனதில் உள்வாங்கிக்கொள்ளுங்கள் .

வெற்றி நிச்சயம்!
http://www.wtrfm.com/sub5.php?id=14162


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன. Empty Re: ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன.

Post by ahmad78 Sun 29 Jun 2014 - 13:56

ஒரு பாடலின் விரிவான விளக்கம் சூப்பர்  சூப்பர்  சூப்பர்  சூப்பர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன. Empty Re: ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன.

Post by ராகவா Sun 29 Jun 2014 - 14:01

ஆகா! நிஷா அக்கா...கலக்கலான பதிவு..
தொடரட்டும் உங்களுடன் நானும் வருகிறேன்..
இனிய வாழ்க்கை பயணம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன. Empty Re: ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன.

Post by நண்பன் Sun 29 Jun 2014 - 20:32

அருமையான பாடல் எந்நேரமும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அடிக்கடி நானும் இப்பாடலை முனுமுப்பேன் பல பேருக்கு நான் சொன்ன வரிகள் இந்த வரிகள்
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்.

இன்றுதான் இந்தப் பாடலுக்கான முழு அர்த்தத்தையும் அறிய முடிந்தது அருமையான பதிவு அக்கா பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன. Empty Re: ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன.

Post by ராகவா Sun 29 Jun 2014 - 20:36

நண்பன் wrote:அருமையான பாடல் எந்நேரமும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அடிக்கடி நானும் இப்பாடலை முனுமுப்பேன்   பல பேருக்கு நான் சொன்ன வரிகள் இந்த வரிகள்
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்  
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்  
அந்த வானம் வசமாகும்.

இன்றுதான் இந்தப் பாடலுக்கான முழு அர்த்தத்தையும் அறிய முடிந்தது அருமையான பதிவு அக்கா பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல...
ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன. Tamil_Daily_News_48331415654ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன. 0
என்னாலும் மறக்கமுடியாத பாடல் அண்ணா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன. Empty Re: ஒவ்வொரு் பூக்களுமே சொல்வதென்ன.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum