சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! - Page 2 Khan11

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

+4
jasmin
rammalar
நண்பன்
Nisha
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! - Page 2 Empty வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Nisha Mon 30 Jun 2014 - 1:53

First topic message reminder :


இந்த திரிக்கு வந்த அன்புறவுகளே இதை மு்ழுமையாக படியுங்கள், சிந்தியுங்கள்!

வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்!


வாழ்வின் படிகள்


மிக மிக நல்ல நாள் --- இன்று
மிகப்பெரிய வெகுமதி---மன்னிப்பு
மிகவும் வேண்டியது-- பணிவு
மிகப்பெரிய தேவை ---சமயோஜித புத்தி
மிகப்பெரிய கொடிய நோய்-- பேராசை
மிகவும் சுலபமானது---குற்றம் காணல்
மிகவும் கீழ்த்தரமானது---பொறாமை
நம்பக்கூடாதது---வதந்தி
ஆபத்தை விளைவிப்பது---அதிக பேச்சு
செய்ய வேண்டியது ---உதவி
விலக்க வேண்டியது.--விவாதம்
உயர்வுக்கு வழி --- உழைப்பு
நழுவ விடக்கூடாதது --- வாய்ப்பு
பிரியக்கூடாதது---நட்பு
மறக்கக்கூடாதது---நன்றி


Last edited by Nisha on Mon 30 Jun 2014 - 2:39; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! - Page 2 Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by ahmad78 Mon 30 Jun 2014 - 10:42

நல்ல பதிவு.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! - Page 2 Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Nisha Tue 1 Jul 2014 - 20:53

நண்பன் wrote:
Nisha wrote:நாம் சந்திக்கும் ஒவ்வொருவருவருடனும் அவரிடம் ஆழ்ந்த புன்னகையுடன் முழு ஈடுபாட்டுடன்
தன் முழு அன்பையும் அவர் மீது கொட்டி உற்சாகமாக உரையாட வேண்டும் !

ஒரு நாள் பழகிய அந்த நட்பு, ஒரு மணி நேரம் பேசிய அந்தப் பேச்சு, வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதபடி நினைவில் நிற்பதாக இருக்க வேண்டும்.இப்படி ஆழ்ந்து செயலாற்றும்போது நாம் அவருக்கு பிரியமானவர் ஆகிறோம் !

"நல்லதோர் வீணை செய்தே- அதை
நலன் கெட புழுதியில் எறிவதுண்டோ?”
- பாரதி


ஆம், நம்முடைய வாழ்க்கையே நல்லதொரு வீணையாக இனிய இசையைக்கொடுப்பதாக இருக்கவேண்டுமானால்
கடந்து போன காலங்கள் எத்தனைதான் சிறப்பானதாக இருந்தாலும் அவைகள் செத்துப் போனவை.
அவைகளுக்கு இன்றைய நினைவுகளால் உயிர் கொடுக்க முயலக் கூடாது..!

இன்று தான் நம்மிடம் இருக்கும் பெரிய வெகுமதி.
அதை உணர்ந்து நாளை என்பதை கடவுளிடம் ஒப்புக்கொடுத்து இன்றைய தினத்தை நம்பிக்கையோடு உற்சாகமாக ஓடுவோம்!


வாழ்க்கையை ஜெயிப்போம்.!

என்னைப் பொறுத்த வரை கடந்து போன வாழ்க்கை திரும்பாதவைதான் ஆனால் செத்துப்போனவையாக என்னால் ஏற்க முடியாது  அந்த நினைவுகளுக்கு அப்பப்போ உயிர் கொடுக்கிறேன்  அப்பப்போ வந்து என் மனதுக்கு பசுமையான நினைவுகளைத் தந்து கொண்டுதான் இருக்கிறது பள்ளி வாழ்க்கை பழகிய நட்புகள் பள்ளிப்பருவ காதல்  காதலிக்கும் போது முனுமுனுத்த பாடல் இப்படி  நிறையவே மறக்க முடியாது

சில நினைவுகள் மனதுக்கு இனிமையாகவும் சில நினைவுகள் மனதிற்கு ஆறுதலாகவும் சில நினைவுகள் கொடூரமானதாகவும் அமைந்துள்ளது அது என்னவோ தெரியல அவைகளை செத்துப்போனதாக எண்ணி உயிர் கொடுக்காமல் இருக்க முடிய வில்லை அதனால்தான் என்னவோ என் வாழ்வில் இன்னும் வெற்றிப் படியை நான் எட்ட வில்லை ..!

அருமையான பதிவு அக்கா இன்னும் தொடருங்கள்...

கடந்து போனதை நினைத்து கலங்கி நாம் முடங்கி விடகூடாது எனும் அர்த்தத்தில் தான் மேலே சொன்னேன்பா.. கடந்ததை நினைக்காதிருக்க நாம் என ரோபோவா.. இல்லை கணணியா.. எடிட் என்றதும் எல்லாம் அழிந்து போகுமா?

நினைவுகள் நம் நிழல் போல் என்றும் தொடரத்தான் செய்யும். சில நினைவுகள் என்னை அலைக்கழித்து தூங்கத்தை பாழாக்கும் போது நமக்கிருக்கும் உணர்வின் வலிகள் தேடல்கள் எப்படி மற்றவர்களுக்கு இல்லாமல் போகும் என நான் நினைப்பதுண்டு.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! - Page 2 Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Nisha Tue 1 Jul 2014 - 20:55

ஒவ்வொரு பதிவாக உணர்ந்து படித்து பின்னூட்ட்ம இட்டிருக்கும் உங்களுக்கு எத்தனை நன்றி எனும் மதிப்பீட்டை தருவது என புரியவில்லை.

அனைத்து பின்னூட்டத்துக்கும் நன்றிப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! - Page 2 Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Nisha Wed 10 Sep 2014 - 23:41

ஒரு ஊருக்கு ஒரு முனிவர் வந்தார்...

அவரிடம் மக்கள் எல்லாம் தங்களின் குறைகளைக் கூறி முறை யிட்டனர்.. அந்த ஊரில் நீண்ட காலமாக மழை வரவில்லை என்றும் தங்களின் குடும்பங்கள் மிகுந்த வறுமையில் இருப்பதாகவும் நீங்கள் தான் ஏதேனும் ஒரு வழி கூற வேண்டும் அந்த ஊரில் உள்ள அனைவரும் அவரிடம் கதறினர்...

சற்று நேரம் தியானத்தில் இருந்து விட்டு விழித்த முனிவர், "இன்றிலிருந்து ஒன்பதாம் நாள் உங்களின் தலைக்கு மேல் ஒரு சொர்க்கப் பறவை ஒன்று பறக்கும்.. அது விரைவாக பறக்கும் தன்மை உடையது.. அதை நீங்கள் பிடித்துவிட்டால்.. அது உங்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கும்" என்று கூறிவிட்டு சென்று விட்டார்..

முனிவர் சென்றவுடன் சிலர் அவரை நம்பாமல்... தங்களுடைய பணி களுக்கு சென்றுவிட்டனர்... சிலர் அந்த பறவையின் வரவிற்காக காத்துக் கொண்டு இருந்தனர்...
ஆனால்... ஒருவன் மட்டும் காற்றில் அந்தப் பறவை பறப்பதாக நினைத்துக் கொண்டு தவ்வி தவ்வி அதை பிடிப்பது போல் முயற்சி செய்து கெண்டே இருந்தான்...
ஊரில் உள்ள அனைவரும் அவனைப் பார்த்து சிரித்தனர்... என்றோ வரப் போகும் பறவையை இன்றைக்கு பிடிப்பது போல் பாசாங்கு செய்ததை... அவனது முட்டாள்த்தனம் என நினைத்து அவனை கிண்டல் செய்தனர்..

ஆனால்... அவற்றை எல்லாம் காதில் வாங்காமல் ... ஒரு பைத்தியக்காரனைப் போல்... இல்லாத பறவையை விரட்டி விரட்டி பிடித்துக் கொண்டு இருந்தான்..
சாமியார் கூறிய அந்த பறவை வரும் நாள் வந்தது... அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உட்கார்ந்திருந்தனர்,.. திடீரென.. அந்த பறவை மிகுந்த வேகத்தில் பறந்து வந்தது.. அதனைக் கண்ட அனைவரும் அதை பிடிக்க முயற்சி செய்தனர்.. ஆனால் அவர்களால் பிடிக்க முடியவில்லை,.
.
ஆனால்... ஊர் மக்கள் கிண்டல் செய்த அந்த ஒருவன் மட்டும் அதை பிடித்துவிட்டான்... மக்களுக்கெல்லாம் சந்தோஷம் கலந்த ஆச்சரியம்...

"உன்னால் மட்டும் எப்படி பிடிக்க முடிந்தது?" என அவனிடம் கேட்டனர்...

அதற்கு அவன், "நீங்கள் எல்லோரும் பறவை வந்த பிறகு தான் அதை பிடிக்க முயற்சி செய்தீர்கள்.. ஆனால்.. நானோ... பறவை வருவதற்கு முன்பிருந்தே அதை பிடிக்க முயற்சி செய்தேன்...

எந்த விஷயத்திலும் வெற்றி பெற வேண்டுமானால்... அந்த சூழ்நிலை வந்த பிறகு அதை செய்ய தயாராவதை விட... அதற்கு முன்பே.. நாம் நம்மை தயாராக வைத்துக் கொண்டால்... வெற்றி நமக்கே உரியதாக இருக்கும்" என்று கூறினான்..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! - Page 2 Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by ahmad78 Thu 11 Sep 2014 - 9:54

எந்த விஷயத்திலும் வெற்றி பெற வேண்டுமானால்... அந்த சூழ்நிலை வந்த பிறகு அதை செய்ய தயாராவதை விட... அதற்கு முன்பே.. நாம் நம்மை தயாராக வைத்துக் கொண்டால்... வெற்றி நமக்கே உரியதாக இருக்கும்"
நல்ல கருத்து


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! - Page 2 Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Nisha Fri 12 Sep 2014 - 2:21

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான்தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம்முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னைமனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளைஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களைவைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும்ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள்இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில்புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால்பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும்நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள்இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல,எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறைமுடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டுவெளிப்படையாக ஒருவருடன்
விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய்பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான்துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத்தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாகஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும்தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாதுவெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன்பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக்கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்தவேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான்சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான்கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால்எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச்செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச்சிந்திக்க வைக்கிறது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! - Page 2 Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by கவிப்புயல் இனியவன் Fri 12 Sep 2014 - 5:58

தகவல் பகிர்வுக்கு நன்றி 
பயனுள்ள தகவல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! - Page 2 Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Nisha Mon 26 Jan 2015 - 1:29

அமெரிக்க பாராளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரைநிகழ்த்தும்போது, அவரை மட்டம்தட்டும் நோக்கில் எதிர் தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து,


ஆப்ரஹாம் ... ...உங்கள் தந்தை தைத்துக்கொடுத்த செருப்பு இன்னும் என் காலை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது என்றாராம் ....அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் சொன்னாராம்,

" நண்பரே என் தந்தை இறந்து பலவருடங்கள் ஆகிவிட்டது, இருப்பினும் அவர் தைத்து கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாக தைக்கப்பட்டுள்ளது இருப்பினும் அவர் தைத்த இடத்தில் ஏதேனும் பழுது எர்ப்பட்டிருந்தால் அதை என்னிடம் கொடுங்கள் நான் அதை உங்களுக்கு சரி செய்து தருகிறேன்

எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும் ..... நாட்டை ஆளவும் தெரியும் என்று பதிலுரைத்தாராம் ... ... !!!


தன்னம்பிக்கை விடாமுயற்சி இவைகளில் இருந்து பெற்ற ஏழ்மையின் அனுபவ அறிவுக்கு நிகராக வேறெதுவும் போட்டியிட முடியாது பதவியில் இருக்கும் போதும் அவமான படுத்திய நபர் மீது கோபம் கொள்ளாமல், தன் அதிகாரத்தையும் காட்டாமல் புத்திசாலி தனமாக பணிவோடு பதில் அளித்தே அவமான படுத்தியவரின் மூக்கை உடைத்திருக்கிறார் லிங்கன். இந்த பக்குவமான மனதாலும் விடாமுயற்சியாலும் தான் பல தோல்விகளுக்குப் பின்னர் அமெரிக்காவின் ஜனாதிபதியாகி அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்.


இதைத் தான் கண்ணதாசனும் " நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்" என்றார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! - Page 2 Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by சுறா Mon 26 Jan 2015 - 7:18

அபிரகாம் லிங்கன் அடக்கம் அறிவு விவேகம் நிறைந்த தலைவர். அருமையான பதிவு


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! - Page 2 Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by காயத்ரி வைத்தியநாதன் Mon 26 Jan 2015 - 12:39

நல்ல பகிர்வு நிஷா...நன்றி..
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை! - Page 2 Empty Re: வாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum