Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ரசம் வகைகள்
+2
jasmin
ahmad78
6 posters
Page 1 of 1
ரசம் வகைகள்
சளிக்கு இதமாக இருக்கும் மைசூர் ரசம்
தேவையான பொருட்கள்:
மல்லி - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 100 கிராம்
புளி - 50 கிராம் (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
தக்காளி - 1-2 (நறுக்கியது)
ரசம் பொடி - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி- சிறிது
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - 2 பல் (தட்டியது)
நெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், மல்லி, மிளகு, கடலைப் பருப்பு, வரமிளகாய், பெருங்காளத் தூள் மற்றும் தேங்காய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை நன்கு கழுவிப் போட்டு, தண்ணீர் ஊற்றி, 1-2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, பின் தக்காளி மற்றும் புளிச்சாறு சேர்த்து, பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் உப்பு, வேக வைத்துள்ள துவரம் பருப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து கிளறி விட வேண்டும்.
கலவையானது சற்று கெட்டியாக இருந்தால், அதில் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, பின் அதில் ரசப் பொடி சேர்த்து கிளறி, 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
இறுதியில் மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்/நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் சிறிது பூண்டு தட்டி சேர்த்து தாளித்து, பின் ரசத்தில் ஊற்றி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், மைசூர் ரசம் ரெடி!!!
Last edited by ahmad78 on Sun 26 Oct 2014 - 9:39; edited 1 time in total
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரசம் வகைகள்
அருமையான் ரசமாக இருக்கிறது ஆனால் பயன்படுத்தும் பொருட்களின் அட்டவனை ..அய்யோ பயமுறுத்துகிறது ..
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ரசம் வகைகள்
நன்றி அண்ணா பகிர்வுக்கு..
சளி சரியாய் போக நான் மைசூர் போய் ரசம் குடிக்கனுமா....
சளி சரியாய் போக நான் மைசூர் போய் ரசம் குடிக்கனுமா....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ரசம் வகைகள்
பூண்டு ரசம்
தேவையான பொருட்கள்:
புளி - 1 சின்ன நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
பூண்டு பற்கள் - 6 ப
ச்சை மிளகாய் - 1
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 2
பூண்டு - 5 பற்கள்
தக்காளி - 1 (நறுக்கியது)
செய்முறை:
முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் புளியை 1 1/2 கப் தண்ணீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதிலும் தக்காளியை சேர்த்த பின்னர், தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், பூண்டு ரசம் ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/veg/garlic-rasam-recipe-006789.html
தேவையான பொருட்கள்:
புளி - 1 சின்ன நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
பூண்டு பற்கள் - 6 ப
ச்சை மிளகாய் - 1
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 2
பூண்டு - 5 பற்கள்
தக்காளி - 1 (நறுக்கியது)
செய்முறை:
முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் புளியை 1 1/2 கப் தண்ணீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதிலும் தக்காளியை சேர்த்த பின்னர், தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், பூண்டு ரசம் ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/veg/garlic-rasam-recipe-006789.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரசம் வகைகள்
மாங்காய் ரசம்
தேவையான பொருட்கள்:
மாங்காய் - 1 (நறுக்கியது, வேக வைத்தது)
வெல்லம் - 1 துண்டு
மிளகு - 3 டீஸ்பூன்
சீரகம் - 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2-3
தேங்காய் - 1 கப் (துருவியது)
கடுகு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
தண்ணீர் - 1 லிட்டர்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் வேக வைத்த மாங்காயில் இருந்து சாற்றினை வடிகட்டி, அதனை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து, பின் குளிர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, காய்ந்ததும் வரமிளகாய் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி, பின் இறக்கி, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்த தாளிக்க வேண்டும்.
பின் மாங்காய் நீரை ஊற்றி, அத்துடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், பவுடர் மற்றும் வெல்லத்தை சேர்த்து கலந்து கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்தால், சுவையான மாங்காய் ரசம் ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/veg/mango-rasam-recipe-005648.html

சளியைப் போக்கும் மிளகு ரசம்
தேவையான பொருட்கள்:
புளி - 1 எலுமிச்சை அளவு
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு...
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 1
வரமிளகாய் - 1
துவரம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
நெய் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
வரமிளகாய் - 2
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் புளியை 1 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
பின்பு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி கொதிக்க விட வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் தாளித்ததை கொதிக்கும் ரசத்தில் ஊற்றி மீண்டும் ஒரு கொதி விட்டு, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், மிளகு ரசம் ரெடி!!!
http://tamil.boldsky.com/recipes/veg/pepper-rasam-recipe-006739.html

பருப்பு ரசம்
[url=http://www.dinakaran.com/samayalnew/S_image/sl1224.jpg]
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு - கால் கோப்பை
தக்காளி - 2
புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
பூண்டு - 4 பல்
உப்பு - தேவையான அளவு
பொடி செய்ய
துவரம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
மல்லி - 3 தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
தாளிக்க
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
1. துவரம்பருப்பு, மல்லி, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனியே கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
2. துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
3. புளியை ஒரு கோப்பைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
4. இதனுடன் தக்காளியைச் சேர்த்து நன்கு கரைக்கவும். பின்னர் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
5. அதனுடன் பூண்டை எண்ணெயில் லேசாக வதக்கியோ அல்லது பச்சையாகவோ தட்டிப் போடவும்.
6. இது கொதித்ததும் தனியே பொடித்து வைத்த பொடியைப் போட்டு, ஒரு கொதி வந்ததும் வேகவைத்த பருப்பை நீருடன் சேர்க்கவும்.
7. அனைத்தும் கொதித்து நுரையுடன் பொங்கி வரும் போது இறக்கி வைக்கவும்.
8. தனியே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து இறக்கிவைத்துள்ள ரசத்தில் சேர்க்கவும்.
குறிப்பு
1. விருப்பமுள்ளவர்கள் தாளிக்கும்போது பெருங்காயமும் சேர்க்கலாம்.
ஆக்கம்
ச. சுதாதேவி
சென்னை - 600 050.Enlarge this imageReduce this image Click to see fullsize[/url]

கொள்ளு ரசம்
தேவையான பொருட்கள்
கொள்ளு - 50 கிராம்
தக்காளி - 1
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1/4 தேக்கரண்டி
உடைத்த உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
வரமிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
ரசப் பொடி செய்ய
துவரம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
மல்லி - 1/4 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயத் தூள் - 1/4 தேக்கரண்டி
செய்முறை
1. கொள்ளை நன்றாக ஊறவைத்து களைந்து, வேகவைத்துக் கொள்ளவும்.
2. வேக வைத்த தண்ணீரை வடித்து, அதில் சிறிதளவு மசித்த கொள்ளையும் கலந்து எடுத்துக் கொள்ளவும். (ஒரு கோப்பை அளவு)
3. புளியை 2 மேஜைக்கரண்டி அளவு தண்ணிரில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
4. புளிக்கரைசலில் தக்காளி, உப்பு போட்டு நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
5. பூண்டை ஒன்று இரண்டாக தட்டிக் கொள்ளவும்.
6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உடைத்த உளுந்து, கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும், கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளித்து, நசுக்கிய பூண்டையும், பெருங்காயத்தூளையும் சேர்த்து வதக்கவும்.
7. அதனுடன் கரைத்து வைத்துள்ள புளி-தக்காளி கரைசலையும், கொள்ளுத் தண்ணீரையும் சேர்க்கவும்.
8. அதில் சீரகம், மிளகு ஆகியவற்றை ஒன்று இரண்டாக பொடித்து சேர்க்கவும். அல்லது ரசப்பொடி 2 தேக்கரண்டி சேர்க்கவும்.
9. பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.
10. ரசம் நுரைத்து பொங்கி வரும் போது மூடி வைத்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
குறிப்பு
1. கொள்ளு ரசம் உடல் வலிமைக்கு நல்லது. சளி தொல்லையிலிருந்து நிவாரணம் கிடடக்கும்.
2. கொள்ளு பெண்கள் கருப்பைப்பையில் இருக்கும் அழுக்கை அகற்றும் சக்தி கொண்டது.
3. கொள்ளு சூடான உணவுப்பொருள் என்பதால் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்தவும்.
ஆக்கம்
ச. சுதாதேவி
சென்னை - 600 050.

ரகம் ரகமாக ரச வகைகள்! ரசனையாய் இருக்கின்றதா என ரசம் வைத்தால் தான் தெரியும் சாரே!
பகிர்வுக்கு நன்றி எங்கள் சேனையின் நள மகாராஜாவே!
பகிர்வுக்கு நன்றி எங்கள் சேனையின் நள மகாராஜாவே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ரசம் வகைகள்
நான் தேங்காய் பால் ரசம், தக்காளி ரசம், புளி ரசம், மிளகு ரசம், கொத்துமல்லி ரசம் எல்லாம் சூப்பரா வைப்பேன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ரசம் வகைகள்
வைப்பீங்க என்பதை நம்பிட்டேன்! அதை சாப்பிட முடியுமா.. அப்படி சாப்பிட்ட பின் உடலில் உயிர் தங்குமா என்பது தானே சந்தேகம்!:dance::bounce::bounce:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ரசம் வகைகள்
Nisha wrote:வைப்பீங்க என்பதை நம்பிட்டேன்! அதை சாப்பிட முடியுமா.. அப்படி சாப்பிட்ட பின் உடலில் உயிர் தங்குமா என்பது தானே சந்தேகம்!:dance::bounce::bounce:
:^
நீங்க சென்னை வரும்போது வச்சி தர்றேன். மறக்காம சாப்பிட்டுட்டு சொல்லுங்க
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ரசம் வகைகள்
சுறா wrote:Nisha wrote:வைப்பீங்க என்பதை நம்பிட்டேன்! அதை சாப்பிட முடியுமா.. அப்படி சாப்பிட்ட பின் உடலில் உயிர் தங்குமா என்பது தானே சந்தேகம்!:dance::bounce::bounce:
:^
நீங்க சென்னை வரும்போது வச்சி தர்றேன். மறக்காம சாப்பிட்டுட்டு சொல்லுங்க
திரும்பி சுவிஸ் வரணும்பா நான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ரசம் வகைகள்
நம்பிக்கைதான் வாழ்க்கை நிஷா நம்பிக்கைதான் வாழ்க்கை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரசம் வகைகள்
எதெதுக்கு நம்பிக்கையை தும்பிக்கையாய் கொள்ளணும் என்பதில்லையா!
ரசம், பிரியாணி க்கெல்லாம் நம்பிக்கை வைக்க முடியாதுப்பா!
ரசம், பிரியாணி க்கெல்லாம் நம்பிக்கை வைக்க முடியாதுப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ரசம் வகைகள்
எனக்கு நான் வைக்கிற ரசம் மட்டுமே பிடிக்கும் :)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரசம் வகைகள்
இன்று ரசமும் சாதமும் தான் நான் சாப்பிட்டேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ரசம் வகைகள்
ahmad78 wrote:மத்தவங்களுக்கு பிடிக்குமா?
நான் வைக்கிற ரசத்துக்கு ரசிகர் கூட்டமே இருக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரசம் வகைகள்
பானுஷபானா wrote:ahmad78 wrote:மத்தவங்களுக்கு பிடிக்குமா?
நான் வைக்கிற ரசத்துக்கு ரசிகர் கூட்டமே இருக்கு
ரசத்துக்கு மட்டும் தானா பானு! மத்த வெரைட்டீஸுக்கெல்லாம் இல்லையா? ரசம் மட்டும் தான் ஒழுங்கா வைப்பீர்களா பானு!^_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ரசம் வகைகள்
[size=30]வறுத்து அரைச்ச ரசம்[/size]
என்னென்ன தேவை?
துவரம் பருப்பு - 3 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
நாட்டுத் தக்காளி - 1,
புளி - 1 எலுமிச்சை அளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது.
தாளிக்க...
நெய் - 1/2 டீஸ்பூன்,
கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
துவரம் பருப்பிலிருந்து பெருங்காயத் தூள் வரைக்கும் இருக்கும் அனைத்தையும் 1/2 டீஸ்பூன் எண்ணெயில் ஒவ்வொன்றாகச் சேர்த்து வறுக்கவும். வறுத்ததை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். அத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும் போது கொத்தமல்லி சேர்க்கவும். தேவைப்பட்டால் இன்னும் சிறிது உப்பு சேர்த்து, இறக்கி, நெய்யில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும்.
http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=3014
என்னென்ன தேவை?
துவரம் பருப்பு - 3 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
நாட்டுத் தக்காளி - 1,
புளி - 1 எலுமிச்சை அளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது.
தாளிக்க...
நெய் - 1/2 டீஸ்பூன்,
கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
துவரம் பருப்பிலிருந்து பெருங்காயத் தூள் வரைக்கும் இருக்கும் அனைத்தையும் 1/2 டீஸ்பூன் எண்ணெயில் ஒவ்வொன்றாகச் சேர்த்து வறுக்கவும். வறுத்ததை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். அத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும் போது கொத்தமல்லி சேர்க்கவும். தேவைப்பட்டால் இன்னும் சிறிது உப்பு சேர்த்து, இறக்கி, நெய்யில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும்.
http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=3014
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ரசம் வகைகள்
வெங்காயம் ரசம்
என்னென்ன தேவை?
வெங்காயம்
மிளகு
சீரகத் தூள்
கடுகு
எண்ணெய்
உளுத்தம்பருப்பு
கொத்தமல்லித் தழை
எப்படிச் செய்வது?
முதலில் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். பின்பு மிளகு, சீரகத்தை பொடி செய்து கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, வர மிளகாய் போட்டு தாளிக்கவும். பின்பு வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். வதக்கிய பின் அதில் புளியை கரைத்து ஊற்றவும். பின்பு மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகு, உப்பு ஆகியவற்றை போட்டு 5நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். வெங்காய ரசம் தயார்.
http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=2926&Cat=502

Permissions in this forum:
You cannot reply to topics in this forum