சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உலகை உறைய வைத்த விமான விபத்துக்கள்....  Khan11

உலகை உறைய வைத்த விமான விபத்துக்கள்....

3 posters

Go down

உலகை உறைய வைத்த விமான விபத்துக்கள்....  Empty உலகை உறைய வைத்த விமான விபத்துக்கள்....

Post by ahmad78 Sat 19 Jul 2014 - 12:18

லண்டன்: சாலை மற்றும் ரயில் விபத்துக்களோடு ஒப்பிடுகையில், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துபவைகளாக விமான மற்றும் கப்பல் விபத்துக்கள் காணப்படுகின்றன.

சில விபத்துக்கள் தொழில்நுட்ப கோளாறு, இயற்கைப் பேரழிவு உள்ளிட்டவைகளால் ஏற்படுகின்றன. ஆனால், மற்றவைகளுக்கோ மனித தவறுகள் மற்றும் தாக்குதல்களே முக்கியக் காரணமாகின்ரன.
உலகை உறைய வைத்த விமான விபத்துக்கள்....  18-plain-shot46778-600
அந்தவகையில், நேற்று மதியம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17, உக்ரைனில் ரஷ்ய எல்லைக்கு அருகே செல்கையில் ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுப் படை தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் விமானத்தில் பயணம் செய்த 295 பேர் பரிதாபமாகப் பலியானார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகை உறைய வைத்த விமான விபத்துக்கள்....  Empty Re: உலகை உறைய வைத்த விமான விபத்துக்கள்....

Post by ahmad78 Sat 19 Jul 2014 - 12:20

இந்நிலையில், உலகை உலுக்கிய சில விமான விபத்துக்கள் குறித்த ஒரு பார்வை....

1921ம் ஆண்டு:

கடந்த 1921ம் ஆண்டு இங்கிலாந்தில் ஹல் என்ற இடத்தில் ஏஆர் -2 என்ற விமானம் சோதனைப் பயணம் மேற்கொண்ட போது இரண்டாக வெடித்துச் சிதறியது. இதில், அந்த விமானத்தில் பயணம் செய்த 62 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

1925ம் ஆண்டு:


அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் 1925ம் ஆண்டு ஓகியோ மாகாணத்தில் நடந்த விமான விபத்தில் 14 பேர் பலியானார்கள்.

1930ம் ஆண்டு:

1930ம் ஆண்டு பிரான்சில் ஆர் 101 விமானம் விபத்துக் குள்ளானதில் 47 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

1933ம் ஆண்டு:

மீண்டும் 1933ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் நடந்த விமான விபத்தில் 73 பேர் பலியானார்கள்.

1937ம் ஆண்டு:

1937ம் ஆண்டு மே மாதம் ஜெர்மனியில் நடந்த விமான விபத்தில் 36 பேர் கொல்லப்பட்டனர்.

1945ம் ஆண்டு:

அமெரிக்காவில் 1945ம் ஆண்டு ஜூலை மாதம் பி25 விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியானார்கள்.

1953ம் ஆண்டு:


அமெரிக்க போர் விமானம் சி 124, டோக்கியோவிற்கு அருகே பறந்த போது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த விமானத்தில் பயணம் செய்த 129 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

1956ம் ஆண்டு:

டிடபிள்யூ.ஏ சூப்பர் என்ற விமானமும், அமெரிக்க விமானமும் அரிஸ் நாட்டின் வான் பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரண்டு விமானங்களிலும் பயணம் செய்த மொத்தம் 128 பேர் பலியானார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகை உறைய வைத்த விமான விபத்துக்கள்....  Empty Re: உலகை உறைய வைத்த விமான விபத்துக்கள்....

Post by ahmad78 Sat 19 Jul 2014 - 12:21

1960ம் ஆண்டு:

அமெரிக்காவின் டிசி 8 ரக விமானம் கடந்த 1960ம் ஆண்டு வானில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த 134 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

1961ம் ஆண்டு:

கடந்த 1961ம் ஆண்டு பெல்ஜியத்தில் நடந்த விமான விபத்தில் 72 பயணிகள் பலியானார்கள்.

1962ம் ஆண்டு:

1962ம் ஆண்டு மார்ச் மாதம் கேமரூனில் நடந்த விமான விபத்தில் 111 பயணிகள் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு ஜூன் மாதம் பாரீசில் நடந்த விமான விபத்தில் 130 பேரும், கிராண்ட் டிரீ தீவில் நடந்த விபத்தில் 113 பேரும் பலியானார்கள்.

1963ம் ஆண்டு:

1963ம் ஆண்டு கனட விமானம் விபத்தில் சிக்கியதில் 118 பேர் உயிரிழந்தார்கள். 1965ம் ஆண்டு : பாகிஸ்தானில் தரையிறங்கிய போது 707 என்ற விமானம் விபத்தில் சிக்கியது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகல் 124 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

1966ம் ஆண்டு:

1966ம் ஆண்டு மோண்ட் பிளாக் என்ற இடத்தில் ஏர் இந்திய விமானம் பனி காரணமாக மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 117 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு டோக்கியோவில் ஆல் நிப்பான் 727 விமானம் விபத்தில் சிக்கியதில் 133 பேரும், ஜப்பானில் நடந்த விமான விபத்தில் 124 பேரும், வியட்நாமில் நடந்த விபத்தில் 129 பேரும் பலியானார்கள்.

1967

1967ம் ஆண்டு சைப்ரசில் நடந்த விபத்தில் 126 பயணிகள் உயிரிழந்தனர்.

1970ம் ஆண்டு :

1970ம் ஆண்டு சர்வதேச அளவில் நடந்த நான்கு விபத்துக்களில் சுமார் 400க்கும் அதிகமானோர் பலியானார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகை உறைய வைத்த விமான விபத்துக்கள்....  Empty Re: உலகை உறைய வைத்த விமான விபத்துக்கள்....

Post by ahmad78 Sat 19 Jul 2014 - 12:22

1971ம் ஆண்டு :

ஜப்பானிலும், அலாஸ்காவிலும் அடுத்தடுத்து ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடந்த விமான விபத்துக்களில் 270க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

1972ம் ஆண்டு :

இந்தாண்டு நடந்த ஆறுக்கும் அதிகமான விபத்துக்களில் சிக்கி ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். ஆனால், அதிர்ஷ்டவசமாக மியாமி அருகே நடந்த விபத்தில் 75 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டனர்.

1973ம் ஆண்டு :

இந்தாண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த நான்கு பெரிய விபத்துக்களில் மொத்தம் 250க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

1974ம் ஆண்டு :

இந்தாண்டு பாரீசில் நடந்த விமான விபத்தில் 346 பயணிகள் பலியானார்கள். இதே ஆண்டு இலங்கையில் நடந்த விபத்தில் 191 பயணிகள் பரிதாபமாகப் பலியானார்கள்.

1975ம் ஆண்டு :

வியட்நாம் மற்றும் மொரோக்கோவில் நடந்த விமான விபத்துக்களில் கிட்டத்தட்ட 400 பேர் பலியானார்கள். இதில் வியட்நாம் விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

1977ம் ஆண்டு :

கனரி தீவில் ரன்வேயில் இரண்டு விமானங்கள் மோதிக் கொண்டதில் மொத்தம் 582 பேர் பலியானார்கள்.

1978ம் ஆண்டு:

இந்தியாவில் 213 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கடலில் விழுந்து மூழ்கியதில் 213 பயணிகள் பலியானார்கள்.

இதே ஆண்டு இலங்கையில் நடந்த விபத்தில் 183 பேர் உயிரிழந்தனர்.

1979ம் ஆண்டு :

சிகாகோவில் அமெரிக்க விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில் 272 பேர் பலியானார்கள். இதே ஆண்டு நியூசிலாந்து விமானம் அண்டார்ட்டிகா பகுதியில் விபத்துக்குள்ளானதில் 257 பயணிகள் உயிரிழந்தனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகை உறைய வைத்த விமான விபத்துக்கள்....  Empty Re: உலகை உறைய வைத்த விமான விபத்துக்கள்....

Post by ahmad78 Sat 19 Jul 2014 - 12:24

1981ம் ஆண்டு :

கோர்சியாவில் 80 சுற்றுலாப் பயணிகளுடன் விமானமொன்று மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த 178 பேரும் பரிதாபமாக பலியானார்கள்.

1983ம் ஆண்டு :

சைபீரியாவிற்கு அருகே உள்ள தீவில் கொரிய விமானம் ஒன்று ரஷ்ய வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த 269 பயணிகளும் பரிதாபமாகக் கொல்லப் பட்டனர்.

1985ம் ஆண்டு :

1985ம் ஆண்டு அட்லாண்டிக் கடற்பகுதியில் ஏர் இந்தியா 747 விமானம் ஒன்று தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 329 பயணிகள் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு ஜப்பானில் விமானம் மலையில் மோதிய விபத்தில் 520 பயணிகள் பரிதாபமாகப் பலியானார்கள்.

1987ம் ஆண்டு :

இந்தாண்டு போலந்து, மிசி மற்றும் பர்மா ஆகிய இடங்களில் நடந்த விபத்துக்களில் 700க்கும் அதிகமானோர் பலியானார்கள். அதிர்ஷ்டவசமாக மிசி விபத்தில் 4 வயது சிறுமி ஒருவர் மட்டும் பிழைத்துக் கொண்டார்.

1988ம் ஆண்டு :

தவறுதலாக அமெரிக்க ராணுவத்தினர் ஈரான் நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த 290க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

1991ம் ஆண்டு :

கடந்த 1991ம் ஆண்டு மோசமான வானிலை காரணமாக தாய்லாந்தில் ஆஸ்திரேலிய விமானம் விபத்துக்குள்ளானதில் 223 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதே ஆண்டு சவுதி அரேபியாவில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற கனட விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 261 பேர் பலியானார்கள்.

1994ம் ஆண்டு :

இந்தாண்டு ரஷ்யா, சீனா உள்பட பல்வேறு இடங்களில் நடந்த விபத்துக்களில் சுமார் 750க்கும் அதிகமான பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

1995ம் ஆண்டு :

கொலம்பியாவில் மலைப் பகுதியில் அமெரிக்க விமானம் விபத்துக்குள்ளானதில் 160 பயணிகள் பலியானார்கள்.

1996 ரஷ்யாவில் நடந்த விமான விபத்தில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள். 470 பேர் காயமடைந்தார்கள்.

 இதே ஆண்டு டெல்லியில், சவுதி விமானமொன்று நடுவானில் விபத்தில் சிக்கியதில் 349 பயணிகள் உயிரிழந்தார்கள்.

1997ம் ஆண்டு :

இந்தாண்டு கொரிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி காட்டிற்குள் விழுந்ததில் 228 பயணிகள் பலியானார்கள். இதே ஆண்டு இந்தோனேசியாவில் நடந்த விமான விபத்தில் 234 பேர் உயிரிழந்தனர்.

1998ம் ஆண்டு :

பிலிப்பைன்ச், இத்தாலி மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளில் இந்தாண்டு நடந்த விபத்துகளில் சுமார் 400 பேர் பலியானார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகை உறைய வைத்த விமான விபத்துக்கள்....  Empty Re: உலகை உறைய வைத்த விமான விபத்துக்கள்....

Post by ahmad78 Sat 19 Jul 2014 - 12:26

2000ம் ஆண்டு :

கென்ய விமானம் ஒன்று அட்லாண்டிக் கடற்பகுதியில் விபத்தில் சிக்கியதில் 179 பயணிகள் உயிரிழந்தனர், 10 பேர் உயிருடன் மீட்கப் பட்டனர்.

2001ம் ஆண்டு :

இந்தாண்டு தான் தாலிபன் தீவிரவாதிகளால் அமெரிக்க வர்த்தக மைய தாக்குதல் நடத்தப்பட்டது. இது தவிர வேறு சில விமான விபத்துக்களில் சிக்கி சுமார் ஐநூறுக்கும் அதிகமானோர் பலியானார்கள்.

2002ம் ஆண்டு :

2002 இல் அல்ஜிரிய விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், மேலே எழும்பிச்செல்ல முடியாமல் எரிந்து வீழ்ந்தது. இதில் 100 பேர் இறந்தார்கள். தைவானுக்கு அருகே சீன விமானம் வீழ்ந்து நொறுக்கியதில் 225 பேர் மரணமடைந்தனர். தென்கொரியாவில் சீன விமானம் மலைமீது மோதியதால் 128 பேர் மரணித்தனர்.

2003ம் ஆண்டு :


ஈரான் விமானப்படை விமானம் சிராஜ் மலைப்பகுதியில் விபத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த 276 புரட்சிப்படை வீரர்கள் மரணமடைந்தார்கள்.

2004 ரஷ்ய விமானநிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதிக் கொண்டதில் 89 பயணிகள் பலியானார்கள்.

2005ம் ஆண்டு :

இந்தாண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த வெவ்வேறு விமான விபத்துக்களில் சிக்கி சுமார் ஆயிரம் பயணிகள் பலியானார்கள்.

2006ம் ஆண்டு :

ரஷ்யாவில் அடுத்தடுத்த மாதங்களில் நடந்த விமான விபத்துக்களில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

2007ம் ஆண்டு :

இந்தோனேசிய விபத்து உள்பட இந்தாண்டு நடந்த ஆறுக்கும் அதிகமான விபத்துக்களில் சிக்கி சுமார் 600க்கும் அதிகமான பயணிகள் பலியானார்கள்.

2009ம் ஆண்டு :

கடந்த 2009ம் ஆண்டு நடந்த 9க்கும் அதிகமான விபத்துக்களில் சிக்கி 500க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

2010

2010ம் ஆண்டு ரஷ்யாவில் போலீஸ் நாட்டு அதிபர் மற்றும் அவரது மனைவி உள்பட 96 பயணிகளுடன் சென்ற விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைவருமே பலியானார்கள்.

2012ம் ஆண்டு :

கடந்த 2012ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த விமான விபத்தில் 127 பயணிகள் பலியானார்கள்.

2014 மார்ச் : கடந்த மார்ச் மாதம் 239 பயணிகளுடன் மலேசிய விமானம் ஒன்று மாயமானது. அந்த விமானம் விபத்தில் சிக்கியதாகவும், அதில் பயணித்தவர்கள் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லையெனவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமான அறிவித்தது. எனினும், இதுவரை மாயமான அந்த விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை, அவற்றைத் தேடும் பணி தொடர்கிறது.

http://tamil.oneindia.in/news/international/a-list-the-worst-aircraft-crashes-the-world-206309.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகை உறைய வைத்த விமான விபத்துக்கள்....  Empty Re: உலகை உறைய வைத்த விமான விபத்துக்கள்....

Post by பானுஷபானா Sat 19 Jul 2014 - 12:59

:(:(
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகை உறைய வைத்த விமான விபத்துக்கள்....  Empty Re: உலகை உறைய வைத்த விமான விபத்துக்கள்....

Post by நண்பன் Sun 20 Jul 2014 - 11:35

விமான விபத்துக்கள் வீதி விபத்துக்கள் போன்று முடிவில்லாத தொடராகி விட்டது
எனக்கு விமானத்தில் பயணிக்கும் போது உரிய இடத்தை சென்றடையும் வரை நின்மதி இல்லை எண்ணத்தை மாற்றுவதற்காக சில நேரம் பிலிம் அல்லது கிராத் கேட்ட வாறு பயணிப்பேன் மற்றும் படி பயம் தீராது

ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு தவக்கல்து அலல்லாஹ் என்று பறக்க வேண்டியதுதான் எல்லா வற்றுக்கும் இறைவன் துணை...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகை உறைய வைத்த விமான விபத்துக்கள்....  Empty Re: உலகை உறைய வைத்த விமான விபத்துக்கள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum