சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! Khan11

கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!!

2 posters

Go down

கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! Empty கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!!

Post by ahmad78 Tue 22 Jul 2014 - 11:39

தமிழ்நாட்டில் சாம்பார் என்று சொன்னாலே உடனடியாக கத்தரிக்காயின் மணம்தான் வீசும். ஹோட்டல்களிலும் சரி, திருமணப் பந்திகளிலும் சரி, வீடுகளிலும் சரி... சாம்பார் என்றாலே அது மறைமுகமாகக் கத்தரிக்காய் சாம்பார் என்று தான் பொருள். இது தவிர, கத்தரிக்காய் அவியல், கத்தரிக்காய் பொரியல், கத்தரிக்காய் மசியல், கத்தரிக்காய் பச்சடி என்று தமிழர் சமையல்களில் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது இந்தக் காய்கறி.

இந்தியாவில் தொன்றுதொட்டு கத்தரிக்காயைப் பயன்படுத்தியதற்கான புராணகாலத்துச் சான்றுகள் உள்ளன. ஆனாலும் சீனாவில் தான் முதல் முதலாக கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் பயிரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அது ஆப்பிரிக்கா, ஐரோப்பா என்று பல பகுதிகளிலும் அறிமுகமாகி, பல நூற்றாண்டுகளுக்குப் பின் உலகம் முழுவதும் பரவலாகப் பயிரிடப்பட்டது.

தற்போது, கத்தரிக்காய் உற்பத்தியில் இத்தாலி, துருக்கி, எகிப்து, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தான் முன்னணியில் உள்ளன. இந்தியாவில் மட்டுமின்றி, சீனா, இத்தாலி, மத்திய கிழக்கு மற்றும் மொராக்கோ நாடுகளிலும் கத்தரிக்காயை விதவிதமான டிஷ்ஷாகப் பயன்படுத்துகிறார்கள்.

கத்தரிக்காயின் தாவரவியல் பெயர் சொலானம் மெலோஞ்சினா என்பதாகும். சொலானாசியே என்ற குடும்ப வகையைச் சேர்ந்த கத்தரிக்காய், முட்டை செடி மற்றும் ஆபர்ஜீன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் கத்தரிக்காய் கிடைத்தாலும், முட்டை வடிவம் அல்லது நீளமாக இருக்கும் கத்தரிக்காய்கள் தான் அதிகம் பயிரிடப்படுகின்றன.

கத்தரிக்காயின் தோல்கள் மிகவும் பளபளப்பாக இருக்கும். அதன் உள்பகுதி பஞ்சு போன்று மிருதுவாக இருக்கும். உள்ளே, அதன் விதைகள் அடுக்கி வைக்கப்பட்டது போல அடர்ந்து வரிசையாகக் காணப்படும். இத்தகைய கத்தரிக்காய் நம் உடல் நலத்திற்கு எந்த அளவிற்குப் பயன்படுகிறது என்பது குறித்து இப்போது நாம் பார்க்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! Empty Re: கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!!

Post by ahmad78 Tue 22 Jul 2014 - 11:41

டைப் 2 சர்க்கரை வியாதிக்கு...
கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! 22-1406007035-1-bitter1
கத்தரிக்காயில் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து இல்லாததால், இரத்தத்தில் குளூகோஸ் அளவைக் குறைக்கிறது. இதில் உள்ள பீனால்கள் மற்றும் குறைவான க்ளைசீமிக் இன்டெக்ஸ் ஆகியவை குளூகோஸ் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. எனவே இது டைப் 2 சர்க்கரை வியாதி நோயாளிகளுக்கு அருமருந்தாகும்.
--------------------
இதய நலனுக்கு...
கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! 22-1406007042-2-heart2
கத்தரிக்காயில் உள்ள ஃபோலேட், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி3, வைட்டமின் பி6, ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் மற்றும் பீட்டா கரோட்டீன்கள் ஆகியவை நெஞ்சு வலி ஏற்படுவதைத் தவிர்க்க உதவுகின்றன. இதில் உள்ள ஃபைட்டோ நியூட்ரியண்ட்டுகள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைத்து இரத்த ஓட்டம் இதயத்தில் சீராகப் பாய உதவுகின்றன.
----------------------
மூளைக்கு...

கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! 22-1406007048-3-brainpicssess3
கத்தரிக்காயில் உள்ள ஃபைட்டோநியூட்ரியெண்ட்ஸ், மூளையில் உள்ள நரம்பு மண்டலங்களைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும், ஞாபக சக்தியை கூர்மையாக வைத்திருக்கவும் கத்தரிக்காய் உதவுகிறது. அதிக மன அழுத்தம் ஏற்படாமல் இருக்கவும் கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் பி-காம்ப்ளக்ஸுகள் உதவுகின்றன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! Empty Re: கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!!

Post by ahmad78 Tue 22 Jul 2014 - 11:43

இரும்புச்சத்து
கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! 22-1406007055-4-brinjal
இரும்புச்சத்து அளவுக்கு அதிகமாக இருந்தால் உடலுக்குக் கெடுதிதான். கத்தரிக்காயில் உள்ள நாசுனின் என்ற வேதிப் பொருள் உடலில் உள்ள அளவுக்கு அதிகமான இரும்புச்சத்தை நீக்க உதவுகிறது.
------------
உடல் எடை குறைய
கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! 22-1406007062-5-weightloss
கத்தரிக்காயில் நீர்ச்சத்து மிகவும் அதிகம். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை அடித்து வெளியேற்ற உதவுகிறது. இதில் உள்ள மெட்டபாலிசம் ஸ்பைக் கலோரிகளை எரிக்க வல்லது. இப்படிப்பட்ட கத்தரிக்காயை நிறைய சாப்பிட்டால் உடல் எடை தானாகவே குறையும்.
------------------
செரிமானத்திற்கு...
கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! 22-1406007069-6-nausea6
தக்காளி மற்றும் கத்தரிக்காயினால் தயாரிக்கப்பட்ட சூப், செரிமானத்திற்கு நன்றாக உதவுகிறது. எரிச்சல், வாயு, ஹெமொராய்டுகள், கொலிட்டிஸ், பேதி உள்ளிட்ட பல விதமான வயிற்றுப் பிரச்சனைகளைத் தீர்ப்பதால், செரிமானத்திற்கு கத்தரிக்காய் ஒரு அருமையான மருந்துதான்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! Empty Re: கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!!

Post by ahmad78 Tue 22 Jul 2014 - 11:44

பாக்டீரியா எதிர்ப்பான்
கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! 22-1406007075-7-brinjal7
கத்தரிக்காயில் வைட்டமின் சி குறைவாக இருப்பதால், அது ஒரு சிறந்த வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பானாக செயல்படுகிறது.
----------------
சருமத்திற்கு...
கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! 22-1406007083-8-skin8
கத்தரிக்காயில் மினரல்கள், வைட்டமின்கள், சில நார்ச்சத்துக்கள் மற்றும் நீர்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், அவை நம்முடைய தோலை ஈரப்பதமாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகின்றன. தோல்களில் தோன்றும் மருக்கள் உள்ளிட்டவற்றைப் போக்கவும் கத்தரிக்காய் பயன்படுகிறது.
------------------
கேசத்திற்கு...
கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! 22-1406007088-9-hair9
கத்தரிக்காயில் உள்ள மினரல்கள், வைட்டமின்கள், மற்றும் அதிகமான நீர்ச்சத்து ஆகியவை தலை முடியின் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவியாக உள்ளது. தலை முடி நீண்டு, அடர்ந்து, வலிமையாக வளர இவை உதவுகின்றன. மேலும், மயிர்க் கால்களின் வளர்ச்சிக்கும், தலைமுடியின் பளபளப்புக்கும் இதில் உள்ள என்சைம்கள் துணைபுரிகின்றன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! Empty Re: கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!!

Post by ahmad78 Tue 22 Jul 2014 - 11:45

சளிக்கு...
கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! 22-1406007095-10-cough
நேரடியாக நெருப்பில் வாட்டப்பட்ட கத்தரிக்காயின் மேல் உப்பை நன்றாகத் தடவி சாப்பிட்டால் சளி பறந்து போகுமாம்!
------------------
மலேரியா காய்ச்சல்
கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! 22-1406007100-11-fever
மலேரியா காய்ச்சலால் அவதிப்படுபவர்கள், வெறும் வயிற்றில் சர்க்கரை கலந்த சுட்ட கத்தரிக்காயை காலையில் சாப்பிட்டால் அது மண்ணீரலுக்கு நல்லது.
-----------
தூக்கமின்மை
கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! 22-1406007107-12-sleep

தூக்கமின்மை இருந்தால், தினமும் மாலையில் சுட்ட கத்தரிக்காயை சாப்பிட்டு வந்தால், இரவில் நன்றாகத் தூங்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! Empty Re: கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!!

Post by ahmad78 Tue 22 Jul 2014 - 11:47

மூல வியாதிக்கு...

பைல்ஸ் என்னும் மூல வியாதிகளைப் போக்குவதற்கு கத்தரிக்காயின் பச்சைக் காம்புகள் அந்தக் காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
---------------
வலி, வீக்கத்திற்கு...
கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! 22-1406007119-14-kneepain
கத்தரிக்காய்களைப் பாதிப் பாதியாக வெட்டி, மஞ்சள் கலந்து நன்றாக சுட வைத்து, அதை வீக்கம் மற்றும் வலு உள்ள இடங்களில் மருந்தாகக் கட்டுவது நல்லது.
-------------
உடல் நாற்றத்தைப் போக்க...
கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! 22-1406007126-15-sweating
கத்தரிக்காய் ஜூஸை உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் தடவி வந்தால் உடலில் ஏற்படும் துர்நாற்றம் விலகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! Empty Re: கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!!

Post by ahmad78 Tue 22 Jul 2014 - 11:48

மாற்று மருந்து
கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! 22-1406007132-16-brinjal16
காளான் விஷத்தை முறிக்க மாற்று மருந்தாகக் கத்தரிக்காய் பயன்படுத்தப்படுகிறது.
-----------
தோல் வெடிப்புகளுக்கு...
கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! 22-1406007139-17-dry-skin
மஞ்சள் கத்தரியுடன் பெட்ரோலியம் ஜெல்லியை சேர்த்து பாதம் மற்றும் விரல்களில் ஏற்படும் வெடிப்புகளுக்கு மருந்தாகத் தடவினால், அந்த வெடிப்புகள் மறையும்.
----------------
குடல் புற்றுநோய்க்கு...
கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! 22-1406007145-18-coloncancer
கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து மற்றும் பலவிதமான வேதிப் பொருட்கள், பெருங்குடல் புற்றுநோயைத் தீர்க்க வல்லவையாக உள்ளன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! Empty Re: கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!!

Post by ராகவா Tue 22 Jul 2014 - 11:48

நான் தினமும் உண்கிறேன்..
வித விதமாக குழம்பு,அவியல்,பொறியல்,துவையல் என்று என் ஆராய்ச்சி போகும்..
நான் கத்தரிக்காய் விரும்பு உண்பேன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! Empty Re: கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!!

Post by ahmad78 Tue 22 Jul 2014 - 11:50

புகைப் பழக்கத்தை ஒழிக்க...
கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! 22-1406007152-19-smoking
கத்தரிக்காயில் சிறிதளவு நிக்கோட்டின் இருப்பதால், புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதிலிருந்து மெல்ல விடுபடலாம்.
---------
இரத்த அழுத்தத்திற்கு...
கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! 22-1406007158-20-bp
கத்தரிக்காயில் சோடியம் மிகமிகக் குறைவு என்பதால், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் மற்றும் நெஞ்சுவலி ஆகியவற்றிலிருந்து தப்பிப் பிழைக்கலாம்.
-------------
வேதிப் பொருள்கள்
கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! 22-1406007164-21-eggplant
கத்தரிக்காயில் புரதம், வைட்டமின் சி, இரும்புச்சத்து ஆகியவை போதுமான அளவில் உள்ளன. மேலும், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம், மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவையும் உள்ளன.
-----------------
ஆஸ்துமா
கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! 22-1406007172-22-asthma
ஆஸ்துமா, கல்லடைப்பு, பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு கத்தரிக்காய் அருமருந்தாக உள்ளது.


http://tamil.boldsky.com/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!! Empty Re: கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum