சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

அன்புடன் இருப்பது Khan11

அன்புடன் இருப்பது

Go down

அன்புடன் இருப்பது Empty அன்புடன் இருப்பது

Post by ahmad78 Thu 24 Jul 2014 - 11:55

WHERE THERE IS
LOVE, THERE IS LIFE
  என்றார் காந்தி. அன்பை ருசித்த ஒவ்வொருவரும் அதை உணர்ந்திருப்பார்கள். இத்தனை அத்தியாயங்களில் தம்பதியர் எப்படி வாழ வேண்டும் என்று பேசினோம். சொல்வது எளிது... ஆனால், சொன்னபடி வாழ்வது எல்லோருக்கும் சாத்தியமில்லை. நேற்று வரை வேறு  மாதிரி வாழ்ந்து பழகியவர்களை, இன்று திடீரென புத்தராகச் சொன்னால் முடியுமா?


மாற்றிக்கொண்டு வாழத் தயார் என்கிறவர்களுக்கு இதுநாள் வரை நான் சொன்ன அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழிகாட்டும். முடியாது என்று  சொல்லும் ஒரு பிரிவினரும் நம்மிடையே இருப்பார்கள். அவர்களுக்கும் வாழ்க்கையில் பிரச்னைகள் வரத்தான் செய்யும். பிரச்னைகளில் இருந்து  வெளியே வர அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் இனி வரும் அத்தியாயங்களில் பார்க்கப் போகிறோம்.

தம்பதிக்குள் பிரச்னை வரும் போது, இருவருக்குமான பேச்சுவார்த்தை பலப்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள் பலரும். கோபப்படாத,  வன்முறையில்லாத பேச்சுவார்த்தை அவசியம்தான். அது மட்டுமே பிரச்னைகளைத் தீர்த்துவிடுமா என்றால் இல்லை. பிறவியிலிருந்தே,  நமக்கெல்லாம் ஒரு குணம் உண்டு. யாராவது நம்மைத் திட்டினாலோ, தாக்கிப் பேசினாலோ, உடனே அதை எதிர்ப்போம். அவர்கள் சொல்வது சரியா,  தவறா என ஆராய்கிற மனப்பக்குவம் கூட நமக்கு இருக்காது.

இதே அணுகுமுறைதான் கணவன் - மனைவிக்கு இடையிலும் நடக்கிறது. துணை தனக்கு ஏதோ ஒரு பிரச்னை என புகார் செய்தாலோ, அழுதாலோ  இன்ஸ்டன்ட்டாக ஒரு தீர்வை முன் வைக்கிறோம். அதை அலசி, ஆராயத் தவறி விடுகிறோம். ஏதேனும் பிரச்னை வரும் போது, மிகச் சுலபமாக  பழியை அடுத்தவர் மீது போட்டு விடுவோம். அதிலும் கணவன் - மனைவிக்கிடையிலான பிரச்னைகளின் போது, எப்போதும் எதிராளியின் மீதுதான்  தவறு, நாம் செய்தது சரி என்கிற எண்ணம் அழுத்தமாகவே இருக்கும். நடந்த தவறில் நம் பங்கு என்ன என யோசிக்க மாட்டோம்.

நம்முடைய ஒவ்வொரு உரையாடலும், நமக்கு என்ன தேவை என்பதை மறைமுகமாக உணர்த்துவதாகவே இருக்கும். இப்படி பெரும்பாலும் நமது  பேச்சின் மூலம் குறைகளைக் கண்டுபிடிக்கவே செய்கிறோம் என்பதால்தான் பேச்சு, பிரச்னைகளைத் தீர்க்க உதவுவதில்லை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்புடன் இருப்பது Empty Re: அன்புடன் இருப்பது

Post by ahmad78 Thu 24 Jul 2014 - 11:55

வேறு?

அன்பு நடவடிக்கைகளில் இறங்குவதே முதல் தீர்வு. ‘அன்பாக இருங்கள்’ என்று சொன்னால், உடனே, ‘நான் அன்பாத்தான் இருக்கேன். என் கணவர்  (அ) மனைவிக்குத்தான் என்னிடம் அன்பே இல்லை’ என்பார்கள் பலரும். அன்பு நடவடிக்கைகளில் இறங்குவது எனத் தீர்மானித்து விட்டால்,  இருவருமே அப்படித்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை. அன்பை மட்டுமே கொடுப்பது என்பதில் இருவரில் ஒருவர் தீர்மானமாக  இருந்தால்கூட போதும்.

அன்பு நடவடிக்கைகள் உங்களை பக்குவமான, நல்ல நபராக மாற்றும். காந்தி தனக்கெதிராகக் கிளம்பிய எல்லா பிரச்னைகளுக்கும் அன்பைத்தான்  ஆயுதமாகப் பயன்படுத்தினார். அதனால்தான் அவர் மகாத்மாவாக கொண்டாடப்படுகிறார். அன்பில் ஆழ்ந்து பழகியவர்களுக்குத் தெரியும், அது எத்தனை  உன்னதமான ஒரு அணுகுமுறை என்பது.

‘என்ன நடந்தாலும், யார் என்ன சொன்னாலும் அன்புப் பாதைதான் என்னுடையது’ என்பதில் முதலில் மன உறுதி வேண்டும்.  கடைசியாக, அன்பு நடவடிக்கைகளுக்குப் பழகு வதை ஒரு சோதனை முயற்சியாக, புதிய அனுபவமாக நினைத்து அதில் இறங்க வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்புடன் இருப்பது Empty Re: அன்புடன் இருப்பது

Post by ahmad78 Thu 24 Jul 2014 - 11:55

அன்பு அப்படி என்னதான் செய்யும்?

அன்பாக இருந்து பழகுங்கள். அத்தனை நாள் தனிப்பட்ட நபராக உணர்ந்த நீங்கள், உலகத்துடன் நெருக்கமாகி, இணக்கமான மாதிரி உணர்வீர்கள்.அத்தனை நாள் பயத்துடன் வாழ்ந்த நீங்கள், இனி காதலுடன் வாழத் தொடங்குவீர்கள். பதற்றமும் கோபமும் ஆக்கிரமித்திருந்த உங்கள் வாழ்க்கையை  அன்பு என்கிற மென்மையான, ஆற்றல் மிக்க சக்தி ஆட்கொள்வதை உணர்வீர்கள். எப்போதும் ஆரவாரத்தில் அலைபாய்கிற உங்கள் மனதில் அமைதி  ஐக்கியமாகும்.

இதையும் தாண்டி ஏன் அன்பாக இருக்க வேண்டும்?


திருமண வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கிறதா என நிறைய பேர் கேட்பதைப் பார்க்கிறோம். வெற்றியா... தோல்வியா... லாபமா, நஷ்டமா என  கணக்குப் பார்க்க திருமண உறவு என்ன பிசினஸா? வர்த்தகத்துக்கு மட்டுமே செல்லுபடி யாகிற இந்த விதிகள், வாழ்க்கைக்கு ஒருபோதும் உதவாது.  திருமணத்தில் தொடங்குகிற அந்த பந்தமானது அன்பு, காதல், பாசம் சம்பந்தப்பட்டது. அன்பை எப்படிக் கொடுப்பது, எப்படிப் பெறுவது என்பதைப்  பொறுத்தது. அன்பைப் பகிர்வது உங்களுக்கு ஒருவழிப் பாதையாக இருக்கலாம்.

ஆரம்பத்தில் அதனால் எந்தப் பலனும் இல்லாதது போல உணரலாம். அதற்காகத் தளர்ந்துவிடாமல், தொடர்ந்து உங்கள் அன்பைக் கொடுத்துக்  கொண்டே இருங்கள். அன்பைப் பகிர்வதே அன்பளிப்பைப் பெறுவதற்கு இணையானது என்பதை அந்த அன்பே உங்களுக்கு உணர்த்தும். உங்களுக்கு  உள்ளேயும் உங்களைச் சுற்றிலும் மன அமைதி நிறையும்.- ஏற்கனவே சொன்ன மாதிரி ‘நான் மட்டும் அன்பாக இருந்து என்ன செய்ய? என்  துணைக்கும் என்மீது அதே அன்பு இருக்க வேண்டாமா’ என யோசிக்காதீர்கள். ‘நான் அன்பாகத்தான் இருப்பேன்’ என உறுதி கொள்ளுங்கள். அப்படி  முடிவெடுத்து விட்டால், நீங்கள் யாரையும் மாற்ற முயற்சிக்க வேண்டியதில்லை.

உங்களால் மிகச்சுலபமாக ஒருவரை மாற்றி விட முடியும் என்றால் அது நீங்கள்தான்.- அப்படி நீங்கள் உங்கள் துணையை மாற்ற நினைப்பது கூட  மரியாதையில்லாத செயல்தான். அப்படியே நீங்கள் மாற்றி விட்டாலும், அது தற்காலிகமானதாகவே இருக்கும்.- அன்பாக இருக்கப் போகிற உங்கள்  உறுதிமொழியில் யாருடைய வற்புறுத்தலும் கட்டாயமும் இருக்கப் போவதில்லை. அது முழுக்க முழுக்க உங்கள் விருப்பம் என்பதால், அதன்  விளைவாக உங்களுக்கும், உங்கள் துணைக்கும் இடையிலான அன்யோன்யம் அதிகரிக்கும்.- ‘இந்தப் பிரச்னையை எப்படி சரி செய்வது?’, ‘என்  தேவைகளை எப்படி அடைவது?’, ‘என் தேவைகளை எப்படி என் துணைக்கு உணர்த்துவது?’ - அன்புப் பாதையைத் தேர்ந்தெடுக்காத யாருடைய  பார்வையும் இப்படித்தான் இருக்கும்.

ஆனால், அதுவே அன்பு வழிதான் தன் வழி எனத் தீர்மானித்து விட்டவர்கள், ‘இந்தச் சூழலில் நான் என்ன செய்ய வேண்டும்?’ என்றே யோசிப்பார்கள்.  தன்னலம் மறைந்து போகும்.- ஒருவழிப் பாதையானாலும் பரவாயில்லை, அன்புதான் எனது ஆயுதம் என முடிவெடுத்துவிட்டவர்களுக்கு, அதன்  தொடர்ச்சியாக உறவுகளும் சுமுகமாகும். தேவைகளும் மாறிப் போகும்.சுருக்கமாகச் சொல்வதென்றால்...அன்பு நடவடிக்கைகளை எடுப்பதென்பது
கிட்டத்தட்ட ஒரு பரிசோதனைக்கூடத்தில் ஆய்வு நடத்துகிற மாதிரி. அங்கே உங்களுக்குப் பலவித அனுபவங்கள் கிடைக்கும். உறவுகளின் மூலம்  பல்வேறு  உணர்வுகளை சந்திக்க நேரிடும். நீங்கள் நிறைய கற்றுக் கொள்வீர்கள்.  செயல்வழிக் கற்றல் மாதிரியானது இது.

அன்புடன் இருப்பதென்பது அத்தனை சுலபமானதும் அல்ல. அன்புப் பாதையை உங்களுடையதாக்கிக் கொண்டால், யாரைப் பற்றியும் உங்களுக்கு  மதிப்பீடுகள் இருக்கக் கூடாது. துணையை அப்படியே ஏற்றுக் கொள்கிற மனோபாவம் வேண்டும். தவறு செய்தவர்களை மன்னிக்கிற மனப் பக்குவம்  வேண்டும். அந்த சோதனைச் சாலையில் கிடைக்கிற அனுபவங்கள் உங்கள் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி விடும். முற்றிலும் மாறுபட்ட வேறு  உலகத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்புடன் இருப்பது Empty Re: அன்புடன் இருப்பது

Post by ahmad78 Thu 24 Jul 2014 - 11:55

இரண்டு கதைகள...

பார்வைகள் மாறினால் உணர்வுகளும் மாறிப் போகும். அன்பென்ற உணர்வுக்கு அந்த மாபெரும் சக்தி உண்டு என்பதை உணர்த்தவே இந்த இரண்டு  கதைகள்... ஒரு பூங்கா... அப்பா தனிமையில் உட்கார்ந்திருக்க, அவரது நான்கு குழந்தைகளும் ஓடி, விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அந்தக்  குழந்தைகள் பூங்காவில் உட்கார்ந்திருக்கிற சக மனிதர்களை லட்சியமே செய்யாமல், பந்தை எடுத்து அடிப்பதும், மற்றவர்கள் மேல் எறிவதுமாக  இருக்க, அப்பாவோ எதையுமே கண்டுகொள்ளாமல் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்.

பொறுக்க முடியாத ஒரு நபர், அந்தத் தந்தையிடம் வந்து, அதைப் பற்றிக் கோபமாகவே கேட்கிறார். ‘‘பிள்ளைங்களை இப்படி விளையாட விட்டுட்டு,  உனக்கென்ன சிந்தனை? அதுங்களை அடக்கி, ஒரு இடத்துல உட்கார வைக்க முடியாதா உன்னால?’’ என்கிறார். அப்போதுதான் நிகழ்காலத்துக்குத்  திரும்புகிறார் அந்தத் தந்தை. ‘‘ஐயோ... அப்படியா? மன்னிச்சிடுங்க... எதிர்ல உள்ள ஆஸ்பத்திரியிலதான் என் மனைவியை சேர்த்திருந்தோம்.

இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால அவ இறந்துட்டா. விவரம் தெரியாத வயசுல இந்தக் குழந்தைங்களை வச்சுக்கிட்டு அதுங்களுக்குப் புரிய  வைக்கவும் முடியாம, அடுத்து என்ன செய்யறதுன்னும் தெரியாமத்தான் இங்கே வந்து உட்கார்ந்திருக்கேன்... அதுங்களுக்கு விஷயம் தெரியாது...’’ என  மறுபடி மன்னிப்பு கேட்கிறார். கோபப்பட்ட நபருக்கோ அத்தனை கோபமும் பரிதாபமாக மாற, தன் பங்குக்கு மன்னிப்பு கேட்டதோடு, ‘‘உங்களுக்கு  ஏதாவது உதவி வேணுமா? உங்க பிள்ளைங்களுக்கு ஏதாவது செய்யணுமா?’’ என வேறொரு மனிதராக மாறிப் போகிறார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்புடன் இருப்பது Empty Re: அன்புடன் இருப்பது

Post by ahmad78 Thu 24 Jul 2014 - 11:56

இன்னொரு பார்வை... இன்னொரு கதை...

வசதியான அப்பா அவர். லேட்டஸ்ட் கார் ஒன்றை வாங்கி வந்து வீட்டு வாசலில் நிறுத்துகிறார். அவரது சின்னக் குழந்தை, விளையாட்டுப் போக்கில்  அந்தக் காரில் பொம்மையை வைத்துத் தேய்த்து, கீறல் ஏற்படுத்துகிறது. புத்தம் புதிய காரில் கீறல்களைப் பார்த்த அப்பாவுக்குக் கோபம் தாங்க  முடியவில்லை. கையில் கிடைத்த எதையோ தூக்கிக் குழந்தையை அடிக்க, அதில் அந்தக் குழந்தையின் விரல் துண்டாகி விழுகிறது. இவ்வளவும்  நடந்து முடிந்த பிறகுதான் அந்த அப்பாவுக்கு ஞாபகமே வருகிறது...

அந்த கார் ஸ்க்ராட்ச்ப்ரூஃப், அதாவது, கீறல்கள் ஏற்படுத்த முடியாதது என்பது. துணி கொண்டு துடைத்ததும் கீறல் காணாமல் போகிறது.‘‘அப்பா...  உங்க கார்ல நான் உருவாக்கின கீறல் மறைஞ்சிருச்சு... என்னோட விரல் மறுபடி எப்போ வளரும்?’’ எனக் கேட்ட அந்தக் குழந்தைக்கு அவரிடம் பதில்  இல்லை. இது இப்படித்தான் என்கிற முன் தீர்மானங்களுடன் ஒவ்வொரு விஷயங்களையும் பார்க்காமல், அன்புடன் பார்க்கப் பழகினால் வாழ்க்கை  அழகாகும்.


நன்றி : தினகரன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்புடன் இருப்பது Empty Re: அன்புடன் இருப்பது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum