சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Yesterday at 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:38

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

» நெகட்டிவ் ரிசல்ட்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» பக்கத்து வீட்டுக்காரிகிட்டே கடன் வாங்க வேண்டியிருக்கு…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் போட்டிருக்கிறாரே…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» நான் படித்த(எனக்கு பிடித்த)நகைச்சுவை துணுக்குகள்
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» கடி ஜோக்ஸ்
by rammalar Sun 13 Sep 2020 - 7:48

» பி.டி.மாஸ்டருக்கு சூதாட்டப் பழக்கம் இருக்கு..!
by rammalar Sun 13 Sep 2020 - 7:47

» பணத்தில் சுகத்தை வாங்க முடியாது..!
by rammalar Sat 12 Sep 2020 - 16:52

நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோமா? Khan11

நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோமா?

Go down

Sticky நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோமா?

Post by Nisha on Thu 24 Jul 2014 - 22:16

கடைசி நாட்களின் முக்கிய சம்பவங்கள்

ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.” (மத்தேயு 24:7)

 கடந்த நூற்றாண்டில் கோடிக்கணக்கான மக்கள் போர்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் சரித்திராசிரியர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “சரித்திரத்திலேயே மிக அதிகமாக இரத்த வெள்ளம் புரண்டோடிய நூற்றாண்டு 20-ம் நூற்றாண்டாகும்.…அந்த நூற்றாண்டில், போர்கள் விடாமல் நடந்து கொண்டிருந்தன எனச் சொல்லலாம்; கொஞ்சக் காலத்திற்கு பெரிய போர்கள் நடக்காதிருந்த போதிலும், அவ்வப்போது ஏதோவொரு இடத்தில் அவை நடந்து கொண்டுதான் இருந்தன.”

உவர்ல்டுவாட்ச் இன்ஸ்டிட்யூட் இவ்வாறு அறிவிக்கிறது: “கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து 1899 வரை நடந்த எல்லாப் போர்களிலும் பலியானவர்களைவிட இந்த [20-ம்] நூற்றாண்டில் நடந்த போர்களில் மூன்று மடங்கு அதிகமான ஆட்கள் பலியானார்கள்.

” 1914-லிருந்து நடந்த போர்களில் 10 கோடிக்கும் அதிகமானோர் உயிர் இழந்திருக்கிறார்கள். போரில் பிரியமான ஒருவர் மரித்தாலே அந்தச் சோகம் எப்படியிருக்குமென்று நமக்குத் தெரியும், அப்படியானால் லட்சக்கணக்கானோரின் மரணத்தால் அவர்களுடைய அன்பானவர்கள் பட்ட வேதனையையும் தவிப்பையும் என்னவென்று சொல்வது?


Last edited by Nisha on Thu 24 Jul 2014 - 22:46; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோமா?

Post by Nisha on Thu 24 Jul 2014 - 22:17

‘பஞ்சங்கள் உண்டாகும்.’ (மத்தேயு 24:7)

கடந்த 30 ஆண்டுகளில் உணவு உற்பத்தி பெருமளவு அதிகரித்திருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். என்றாலும், உணவுப் பற்றாக்குறை தொடர்ந்து காணப்படுகிறது;

அதற்குக் காரணம் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு ஜனங்களிடம் போதுமான பணம் இல்லை அல்லது பயிர்செய்ய அவர்களுக்கு நிலம் இல்லை. வளரும் நாடுகளில், பல லட்சக்கணக்கான ஜனங்கள் கடுமையான பட்டினியில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் ஐம்பது லட்சம் பிள்ளைகள் சாவதற்கு முக்கிய காரணம் ஊட்டக் குறைவுதான் என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டிருக்கிறது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோமா?

Post by Nisha on Thu 24 Jul 2014 - 22:18

‘பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகள் உண்டாகும்.’  (லூக்கா 21:11)

அமெரிக்க மண்ணியல் ஆராய்ச்சித் துறையின்படி, 1990-லிருந்து மட்டுமே சராசரியாக ஒரு வருடத்திற்கு 17 பூமியதிர்ச்சிகள் ஏற்பட்டிருக்கின்றன;

கட்டிடங்களைச் சேதப்படுத்தி, நிலத்தைப் பிளக்கும் அளவுக்கு அவை மிக வலிமை வாய்ந்தவையாக இருந்திருக்கின்றன. சராசரியாகப் பார்த்தால், கட்டிடங்களைத் தரைமட்டமாக்கிப் போடுமளவுக்குப் பயங்கரமான பூமியதிர்ச்சிகள் ஆண்டுதோறும் நிகழ்ந்திருக்கின்றன. இதைக் குறித்து ஒரு செய்தித்தாள் இவ்வாறு அறிவிக்கிறது:

 “கடந்த நூறு ஆண்டுகளில், பூமியதிர்ச்சி லட்சோப லட்ச உயிர்களைச் சூறையாடியிருக்கிறது; தொழில்நுட்ப வளர்ச்சியால் சாவு எண்ணிக்கையைச் சிறிதளவே குறைக்க முடிந்திருக்கிறது.”


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோமா?

Post by Nisha on Thu 24 Jul 2014 - 22:19

‘கொள்ளைநோய்கள் உண்டாகும்.’ (லூக்கா 21:11)

மருத்துவத் துறையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டும்கூட, பழைய நோய்களும் புதிய நோய்களும் மனிதகுலத்தைச் சீரழிக்கின்றன.

டிபி, மலேரியா, காலரா உட்பட 20 பெரிய பெரிய நோய்கள் சமீப பத்தாண்டுகளில் மிக அதிகமாகத் தாக்கியிருக்கின்றன;

 அவற்றில் சில நோய்களை மருந்து மாத்திரைகளால் குணப்படுத்துவது மிகவும் கடினமாகி வருகிறது. அத்துடன், குறைந்தது 30 புதிய நோய்கள் தலைதூக்கியிருக்கின்றன. சிலவற்றிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, அத்தகைய நோய்களில் சில உயிரைக் குடிக்குமளவுக்கு ஆபத்தானவை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோமா?

Post by Nisha on Thu 24 Jul 2014 - 22:20

2 தீமோத்தேயு 3:1-5-ல், “கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக” எனச் சொல்லிவிட்டு, அந்நாட்களில் பொதுவாக எப்படிப்பட்ட ஜனங்கள் இருப்பார்கள் என்று அப்போஸ்தலன் பவுல் விவரித்தார்.

 அதன் ஒரு பகுதி பின்வருமாறு சொல்கிறது:


 • தற்பிரியர்கள்
 • பணப்பிரியர்கள்
 • தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்கள்
 • நன்றியில்லாதவர்கள்
 • சுபாவ அன்பில்லாதவர்கள்
 • இச்சையடக்கம் இல்லாதவர்கள்
 • கொடுமையுள்ளவர்கள்
 • தேவப்பிரியராக இல்லாமல் சுகபோகப்பிரியராக இருப்பவர்கள்
 • தேவபக்தியின் வேஷத்தைப் போட்டுக்கொண்டு ஏமாற்றுபவர்கள்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோமா?

Post by Nisha on Thu 24 Jul 2014 - 22:21


 • கடைசி நாட்களில் போர்களும், பஞ்சங்களும், பூமியதிர்ச்சிகளும், கொள்ளைநோய்களும் அதிகமாக உண்டாகும்.—மத்தேயு 24:7; லூக்கா 21:11.
 • கடைசி நாட்களில், ஏராளமானோர் தேவப்பிரியராக இல்லாமல் தற்பிரியராயும், பணப்பிரியராயும், சுகபோகப்பிரியராயும் இருப்பார்கள்.— 2 தீமோத்தேயு 3:1-5.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோமா?

Post by Nisha on Thu 24 Jul 2014 - 22:27

 
நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதை உலகத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து தெரிந்துகொள்ளலாம் என்று இயேசு சொன்னார்.

“ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும். பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்” என்று அவர் சொன்னார். (லூக்கா 21:10, 11)


அதேசமயம், “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” என்றும் சொன்னார். (மத்தேயு 24:14)

இயேசு குறிப்பிட்ட போர்கள், பூமியதிர்ச்சிகள், பஞ்சங்கள், கொள்ளைநோய்கள் ஆகியவை ஒன்றும் புதிதல்ல. இவை ஆண்டாண்டு காலமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

 ஆனால், இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இவை அனைத்தும் ஒரே சமயத்தில் நடைபெறும் என்பதே.


‘இயேசு சொன்ன அந்த அடையாளத்தின் அனைத்து அம்சங்களும் எந்தச் சகாப்தத்தில் சம்பவித்திருக்கின்றன?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

1914-ல் இருந்து கொடூரமான உலகப் போர்கள்; சுனாமி போன்ற பெரும் அழிவை ஏற்படுத்தும் பயங்கரமான பூமி அதிர்ச்சிகள்; உலகத்தையே உலுக்கிய மலேரியா, ஸ்பானிய காய்ச்சல், எய்ட்ஸ் போன்ற கொள்ளைநோய்கள்; லட்சக்கணக்கான மக்கள் பசிப்பட்டினிக்கு இரையாதல்; லட்சோபலட்ச உயிர்களைக் குடிக்கும் திறன்மிக்க அணு ஆயுத கருவிகளாலும் தீவிரவாதத்தாலும் உலகெங்கும் பரவியுள்ள திகில்; கடவுளுடைய பரலோக அரசாங்கத்தைப் பற்றிய அருமையான செய்தியை யெகோவாவின் சாட்சிகள் உலகமுழுவதும் அறிவித்தல் ஆகிய அனைத்தையுமே நாம் பார்த்திருக்கிறோம். இயேசு சொன்ன விதமாகவே இவைகளெல்லாம் நடந்திருக்கின்றன.


‘கடைசி நாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.

எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும்,   வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்’ என்று அப்போஸ்தலன் பவுல் எழுதியதையும் நினைவில் வையுங்கள். (2 தீமோத்தேயு 3:1–5)

‘கொடிய காலங்களில்’ திரும்பும் திசையெல்லாம் அக்கிரமக்காரர்கள், கடவுள்பக்தி இல்லாதவர்கள், கொடூர இருதயமுள்ளவர்கள், சுயநலத்தால் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்கிறவர்கள் போன்றவர்களே இருப்பார்கள்.*

 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோமா?

Post by Nisha on Thu 24 Jul 2014 - 22:33

கடைசி நாட்களில் மனுஷர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற ஒரு அருமையான தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டுள்ளது.

இப்போதுதான் அந்தக் கடைசி நாட்கள் என்று அனைவருமே ஒப்புக்கொள்கிறார்கள். ஆனாலும் யாரும் இப்படி இருக்கலாகாது என்று உலகத்துக்காக பிராத்திக்கிறார்கள்.

கடைசி நாளில் மனுஷர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது தேவ சித்தம். ஆகவே அப்படித்தான் இருப்பார்கள். இதை மாற்ற எவராலும் முடியாது.

ஆயினும் இப்படியெல்லாம் நடக்கக்கூடாது என்று வேண்டுவது பிதாவின் சித்தத்துக்கு விரோதமானது. "உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக" என்று ஜெபிப்பதே உத்தமம் !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோமா?

Post by நண்பன் on Sat 26 Jul 2014 - 9:14

ஆயினும் இப்படியெல்லாம் நடக்கக்கூடாது என்று வேண்டுவது பிதாவின் சித்தத்துக்கு விரோதமானது. "உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக" என்று ஜெபிப்பதே உத்தமம் !

கடைசி நாளில் மனிதர்களுக்கு இப்படித்தான் நடக்கும் என்று நாம் நம்பி இருந்தாலும் இறைவனை நம்பிய நாம் அவனிடம் கேட்பது நமது கடமைதான் அக்கா நீங்கள் சொல்வதும் மிக மிக சரி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோமா?

Post by Nisha on Sat 26 Jul 2014 - 10:24

வேண்டாமல் இருப்போமா தும்பி! மனம் கசந்து ஏன் எதற்கு இந்த நிலை என வேண்டத்தான் செய்கின்றோம்!

ஆனாலும் கடவுளே கடவுளே என சொல்லி கடவுள் சந்தியில் நிற்கும் போதும் இந்த மனிதர் மனம் திரும்பாதவராய் போலித்தனமாய் இருக்கின்றார்களே!

இதெல்லாம் நடக்காவிட்டால் முன்னறிவித்த இரைவன் வாக்கு பொய்யாகும். நடப்பதோ மனதை ரணமாக்குகின்றது!

கடைசியிலெ எவருமே விட்டு விடாது அனைவருமே நல்லவராய் கடவுளிடம் வருபவராய் அவரால் தெரிந்து கொள்ளபட்டவராய் இருக்க வேண்டும் எனத்தான் பிராத்திக்க முடிகின்றது!

பின்னூட்டத்துக்கு நன்றிப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோமா?

Post by நண்பன் on Sat 26 Jul 2014 - 12:27

Nisha wrote:வேண்டாமல் இருப்போமா தும்பி!  மனம் கசந்து ஏன் எதற்கு இந்த நிலை என வேண்டத்தான் செய்கின்றோம்!

ஆனாலும் கடவுளே கடவுளே என சொல்லி  கடவுள் சந்தியில் நிற்கும் போதும்  இந்த மனிதர்  மனம் திரும்பாதவராய் போலித்தனமாய் இருக்கின்றார்களே!

இதெல்லாம் நடக்காவிட்டால் முன்னறிவித்த இரைவன் வாக்கு பொய்யாகும்.  நடப்பதோ மனதை ரணமாக்குகின்றது!

கடைசியிலெ எவருமே விட்டு விடாது அனைவருமே  நல்லவராய்  கடவுளிடம் வருபவராய்  அவரால் தெரிந்து கொள்ளபட்டவராய் இருக்க வேண்டும் எனத்தான் பிராத்திக்க முடிகின்றது!

பின்னூட்டத்துக்கு நன்றிப்பா!
மிக்க நன்றி அக்கா இதெல்லாம் நடக்காவிட்டால் முன்னறிவித்த இரைவன் வாக்கு பொய்யாகும்.  நடப்பதோ மனதை ரணமாக்குகின்றது!  )*  )* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum