Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆடி அமாவாசை..
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
ஆடி அமாவாசை..
சூரியனுடைய ஒளிக்கிரகணங்கள் ஒவ்வொன்றுக்கும்,
தனித்தனி பெயர் உண்டு. இதில், ‘அமா’ என்ற பெயர்
கொண்ட கிரகணத்தில், சந்திரன் வந்து தங்கும்
காலத்தையே, அமாவாசை என்பர்.
-
மாதம்தோறும் அமாவாசை வந்தாலும், அவற்றில்
தை மற்றும் ஆடி அமாவாசைகள் தான் உயர்ந்தவை.
-
ஆடி முதல் மார்கழி வரை, தேவர்களின் உறக்க
காலமாகக் கருதப்படுகின்றது. இச்சமயத்தில், நம்
முன்னோர்கள் பிதுர்லோகத்தில் இருந்து நம்மைப்
பாதுகாக்க பூமிக்கு வருகின்றனர். நாம் அவர்களுக்கு
தர்ப்பணம், சிரார்த்தம் செய்து, திருப்திப்படுத்த
வேண்டும்.
-
இதில், நம்மில் சிலருக்கு ஒரு சந்தேகம் எழுகிறது.
நம் முன்னோர்களில் பலர் பிறப்பற்ற நிலையடைந்து,
கைலாயத்திலோ, வைகுண்டத்திலோ வசிக்கலாம்.
அப்படியிருக்க அவர்களுக்கு பசி தாகமே இருக்காது.
இந்நிலையில், நாம் அவர்களுக்கு வீட்டில் படையல்
மற்றும் பிண்டம் கரைத்து, அவர்களுக்கு தர்ப்பணம்
செய்ய வேண்டுமா என்று!
-
இந்த சந்தேகம் நமக்கு மட்டுமல்ல, ராமாயண
காலத்தில் ஜாபாலி என்ற முனிவருக்கே ஏற்பட்டுள்ளது.
அவர் தன் சந்தேகத்தை, ராமனிடம் கேட்டார்…
-
‘ராமா… மறைந்த பெற்றோருக்கு, இங்கே கொடுக்கிற
பிண்டப் பிரதானம் அங்கே போய்ச் சேர்கிறதாம்… இ
தெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது? அதை
இங்கிருந்து அங்கு கொண்டு போய் சேர்ப்பது யார்?’
என்று, ஏளனமாக கேட்க, ராமனுக்கு கடுமையான
கோபம் வந்து விட்டது.
-
ராமர், தன் வாழ்வில் எதற்குமே கோபப்பட்டதில்லை.
தன் மனைவியைக் கடத்திய ராவணன் மீது கூட,
அவர் அந்தளவு கோபமடையவில்லை என்பது,
‘இன்று போய் நாளை வா’ என, அவனுக்கு கருணை
காட்டியதிலிருந்து புரிகிறது.
-
ஆனால், ஜாபாலி இவ்வாறு கேட்டதும், அவருக்கு
கோபம் வந்து, ‘மகா தபஸ்வியான நீர் இப்படி கேட்கலாமா?
முன்னோருக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம், பித்ரு
தேவதைகளைப் போய் சேரும் என்பதை, வேதங்களே
ஒப்புக்கொள்கின்றன. வேதமே நமக்கு பிரமாணம்;
அதுவே சத்தியம். வேதம் சொல்வதில் உமக்கு நம்பிக்கை
இல்லாமல் போய் விட்டதா?’ என்று, கேட்டார்.
-
ஆக, ராமபிரானாலேயே வலியுறுத்தப்பட்டது பிதுர்
கடன் செய்வது. அமாவாசையன்று பிதுர்தேவதைகள்
மூலம், நாம் அன்புடனும், பக்தியுடனும்,
நம்பிக்கையுடனும் அளிக்கும் பிண்டம், நம்
முன்னோர்களை போய்ச் சேர்கிறது. இவ்வாறு உணவு
பெறும் நம் முன்னோர், ‘நாம் நல்ல பிள்ளையைப்
பெற்றோம்; நம் வம்சத்தவன் வேதங்களும்,
சாஸ்திரங்களும் சொல்வதைக் கேட்டு, தர்மத்தைக்
கடைபிடிக்கிறான்’ என, நம்மை வாழ்த்துவர்.
-
அந்த வாழ்த்து, நம் குலத்தை, வாழையடி வாழையாகத்
தழைக்கச் செய்யும். நமக்கு ஆபத்து வரும் காலத்தில்,
அரண்போல் நின்று காப்பாற்றும். இவ்வுலக வாழ்வுக்கு
வேண்டிய செல்வத்தைத் தரும்.
-
அது மட்டுமல்ல… பிதுர் தேவதைகளை ஆராதித்தால்,
விஷ்ணுவையே ஆராதிப்பதற்கு சமம் என்ற கருத்தும்
உண்டு. இதனால், அந்த லட்சுமி நாராயணனின் திவ்ய
அருள் நமக்கு பூரணமாக கிடைக்கும்.
-
ஆடி அமாவாசையன்று, புண்ணிய தீர்த்தங்களில் நீராடி,
முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, அவர்கள் ஆசியைப்
பெறுங்கள்.
-
–தி.செல்லப்பா (வாரமலர்)

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum