Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மூளைச்சாவு வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: சேலம் வாலிபருக்கு கல்லீரல் பொருத்தப்பட்டது
2 posters
Page 1 of 1
மூளைச்சாவு வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: சேலம் வாலிபருக்கு கல்லீரல் பொருத்தப்பட்டது
சென்னை: மூளைச்சாவு வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் வாயிலாக, ஏழு பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக, கல்லீரல்,
விமானத்தில் கோவைக்கு பறந்தது.
சென்னை கோட்டூர் கார்டனைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மகன் கிறிஸ்டோ சுகந்த், 27; தனியார் நிறுவன ஊழியர். இவர், சுதந்திர தினத்தன்று, டூவீலரில், ஜெமினி மேம்பாலம் வழியாக வந்தபோது, விபத்தில் சிக்கினார்.
தீவிர சிகிச்சை:
பலத்த காயமடைந்த அவர், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், காப்பாற்ற முடியாமல், நேற்று அதிகாலை, மூளைச்சாவு நிலையை அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, உறவினர்கள் முன் வந்தனர்.இதையடுத்து, நேற்று மதியம், வாலிபருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் இதய வால்வும் அகற்றப்பட்டன. இதயம், கல்லீரல் மற்றும் இதய வால்வு தனியார் மருத்துவமனைகளுக்கு தரப்பட்டன.இரண்டு சிறுநீரகங்கள், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கும், கண்கள், எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கும் தரப்பட்டன. இதன் மூலம், ஏழு பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. வாலிபரிடம் இருந்து அகற்றப்பட்ட, கல்லீரல் விமானம் மூலம், கோவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சேலத்தைச் சேர்ந்த, ௩௧ வயது இளைஞருக்கு பொருத்தப்பட்டது.
பயன் தரட்டும்:
கிறிஸ்டோ சுகந்தின் அண்ணன் ஜான் கூறுகையில், ''என் தம்பியைத்தான் காப்பாற்ற முடியவில்லை. அவனது உடல் உறுப்புகளாவது, மற்றவர்களுக்கு பயன் தரட்டும். அவர்கள் மூலமாக, என் தம்பி வாழட்டும் என்றே, உடல் உறுப்புகளை தானம் செய்தோம்,'' என்றார்.
-தினமலர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மூளைச்சாவு வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: சேலம் வாலிபருக்கு கல்லீரல் பொருத்தப்பட்டது
மரித்தும் வாழும் மகாத்மாக்கள் என இவர்களைத்தான் சொல்வார்கள் போலும்!
ஓருயிர் போக ஏழு உயிர் பயன் பெறுகின்றது!
மரித்துபோனவனை நினைத்து வருந்துவதா பயன் பெறுவோரை நினைத்து மகிழ்வதா?
ஓருயிர் போக ஏழு உயிர் பயன் பெறுகின்றது!
மரித்துபோனவனை நினைத்து வருந்துவதா பயன் பெறுவோரை நினைத்து மகிழ்வதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum