Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மழை கால மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்
Page 1 of 1
மழை கால மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்
மழை கால மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்
[url=/index.php?view=article&catid=36%3Amytown&id=8184%3A2014-08-26-12-11-43&format=pdf&option=com_content&Itemid=76][/url]மழை காலங்களில் பாதுகாப்பான மின்சாரம் வழங்கிட மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை பொது மக்கள் கடைப்பிடிக்க தமிழக மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருப்பதால், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம் மின் விபத்துக்களை தடுப்பதற்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. எனவே மழை காலங்களில் மின் விபத்து ஏற்படமால் தடுப்பதற்க்கு கீழ்கண்ட மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை தவறாது கடைபிடித்து ஒத்துழைப்பு அளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.
* மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செய்யுங்கள்.
* ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்துங்கள்.
* மின்சார பிளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ‘ஆப்’ செய்து விடுங்கள்.
* ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு, நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுங்கள்.
* ஈ.எல்.சி.பி. (மின் கசிவு தடுப்பான்)யை பயனீட்டாளரின் இல்லங்களில் உள்ள மெயின் ஸ்விட்சு போர்டில் பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் மின்விபத்தை தவிர்த்திடுவீர்.
* உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விடுங்கள். பழுதுபட்ட மின்சார சாதனங்களை உபயோகிக்கதீர்கள்.
* டி.வி. ஆண்டனாவை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கட்டாதீர்கள். டி.வி. ஆண்டனாவின் ஸ்டே வயரை மின் கம்பத்தில் கட்டாதீர்கள். கேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லாதீர்கள்.
* ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போடுவதுடன் அதனைக் குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்கவும்.
* சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை, குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமையுங்கள்.
* ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் வீட்டின் ஒயரிங்குகளை சோதனை செய்து தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளுங்கள்.
* மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள stay wire -ன் மீது அல்லது மின் கம்பத்தின்மீது கொடி கயிறு கட்டி துணி காயவைக்கும் செயலைத் தவிர்க்கவும்.
* குளியலறையிலும் கழிப்பறையிலும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளைப் பொருத்தாதீர்கள்.
* சுவற்றின் உள் பகுதியில் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் வயர்களுடன் கூடிய பி.வி.சி. பைப்புகள் பதிக்கப்பட்டிருந்தால் அப்பகுதிகளில் ஆணி அடிப்பதை தவிர்க்கவும்.
* மின் இணைப்பிற்கு extension cord–கள் உபயோகிக்கும் போது அவைகளில் பழுதுகள் ஏதும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
* மின் கம்பத்திலோ அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்டாதீர்கள்.
* மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக்கூடாது. அதன் மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது.
* மழைகாலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வுப் பெட்டிகள், stay வயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லாதீர்கள்.
* மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல் நிலை மின்சார கம்பி அருகே செல்லாதீர்கள், அது குறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாகத் தகவல் அளியுங்கள்.
* மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை போதுமான இடைவெளி விட்டு கட்டவேண்டும். மேலும் விபரங்களுக்கு மின்சார வாரியம் மற்றும் மின்சார ஆய்வுத்துறை அலுவலர்களை அணுகவும்.
* தமிழ்நாடு மின்வாரிய மின் மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையத்திற்காக போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்க செல்லாதீர்.
* மின் வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அலுவலர்களை அணுகவும்.
* அவசர நேரங்களில் மின் இணைப்பினை விரைந்து துண்டிக்கும் வகையில் மின் கருவிகளின் சுவிட்சுகள் இருப்பிடம் அமைய வேண்டும்.
* மின் சாதனங்கள் உபயோகத்தில் இல்லாத பட்சத்தில், சுவிட்சை ஆப் செய்து வைக்கவும்.
* மின்சார தீவிபத்துக்களுக்குண்டான தீயணைப்பான்களை மட்டுமே மின்சாதனங்களில் தீவிபத்து ஏற்படும்போது பயன்படுத்தவேண்டும். உலர்ந்த மணல், கம்பளிப் போர்வை, உலர்ந்த ரசாயணப் பொடி (DCP)அல்லது கரியமில வாயு (Co2) ஆகிய தீயணைப்பான்களைப் பயன்படுத்தவும். மின்சாரத்தினால் ஏற்பட்ட தீயினை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம்.
* தீ விபத்து மின்சாரத்தினால் ஏற்பட்டதெனில், உடனே மெயின் ஸ்விட்சை நிறுத்திவிட வேண்டும்.
* எந்த மின் சர்க்யுட்டையும் அளவுக்கு மீறி பளு ஏற்றக் கூடாது. ஸ்விட்ச் மற்றும் பியூஸ் போன்றவைகளை மாற்றும் போது சரியான அதே அளவு திறன் கொண்டவைகளையே பொருத்தவேண்டும்.
* இடி அல்லது மின்னலின்போது வெட்டவெளியில் இருக்காதீர்கள். இடி அல்லது மின்னலின்போது உடனடியாக கான்கிரிட் கூரையிலான பெரிய கட்டிடம் வீடு போன்ற பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சமடையுங்கள். இடி அல்லது மின்னலின்போது குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ, தஞ்சம் புகாதீர்கள்.
* இடி அல்லது மின்னலின்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு அகலுங்கள்.
* இடி அல்லது மின்னலின்போது தஞ்சம் அடைய அருகில் எதுவும் இல்லாதபட்சத்தில், மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுங்கள்.
* இடி அல்லது மின்னலின்போது டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள்.
* இடி அல்லது மின்னலின்போது திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்கள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum