சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

'இழுக்க இழுக்க இன்பம்... வலிக்க வலிக்க மரணம்! Khan11

'இழுக்க இழுக்க இன்பம்... வலிக்க வலிக்க மரணம்!

3 posters

Go down

'இழுக்க இழுக்க இன்பம்... வலிக்க வலிக்க மரணம்! Empty 'இழுக்க இழுக்க இன்பம்... வலிக்க வலிக்க மரணம்!

Post by ahmad78 Mon 1 Sep 2014 - 10:31

'இழுக்க இழுக்க இன்பம்... வலிக்க வலிக்க மரணம்!
சிகரெட்டைப் பொசுக்குமா மத்திய அரசு?

சாலைகளில், பெட்டிக் கடைகளில், பேருந்து நிறுத்தங்களில், திரையரங்க வாசல்களில்... என எங்கும் தென்றலின் பூங்கரங்கள் தீண்டாமல், புகைதான் நம்மை சூழ்ந்திருக்கிறது என்பதை உணர்கிறீர்களா? அது சிகரெட் புகை.
 
'இழுக்க இழுக்க இன்பம்... வலிக்க வலிக்க மரணம்! P10
[size]
பெரும்பாலான மனிதர்களின் ஆறாவது விரலாக மாறியிருக்கும் சிகரெட்டை பொசுக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படத் தொடங்கியிருக்கிறது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தபோதே சிகரெட் மீது 72 சதவிகித வரியும், பான்பராக் போன்ற போதை பாக்குகள் மீது 70 சதவிகித வரியும், புகையிலை மீது 55 சதவிகித வரியும் உயர்த்தப்பட்டது. இதற்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. இப்போது புகையிலை பயன்படுத்துவோர் வயது வரம்பை 18-லிருந்து 25 ஆக உயர்த்தியதோடு, பொது இடங்களில் பீடி, சிகரெட் பிடிப்போரின் அபராதத் தொகையையும் உயர்த்துவதற்கான சட்டத்தையும் இயற்ற இருக்கிறார்கள்.
'இழுக்க இழுக்க இன்பம்... வலிக்க வலிக்க மரணம்! P10b  சிகரெட், பீடி, பான்பராக் போன்ற புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் தாக்கி இறப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் 2030-ல் புகை பிடித்தல் ஒவ்வோர் ஆண்டும் 80 லட்சம் பேரை கொல்லும்’ என்று உலக சுகாதார மையம் எச்சரித்து இருக்கிறது.
பல ஆண்டுகளாகப் புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் மருத்துவ முகாம்களை நடத்தி வரும் பேட்டர்சன் கேன்சர் சென்டரில் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் எஸ்.விஜயராகவன், ''ஒரு குழந்தை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் ஒன்றில் இருந்து மூன்று வயது வரை அம்மாவுடன்தான் இருக்கும். அடுத்த இரண்டு வருடங்கள் பெண் குழந்தையாக இருந்தால் அப்பாவையும் ஆண் குழந்தையாக இருந்தால் அம்மாவையும் பிடிக்கும். அடுத்து ஐந்து வயதில் இருந்து 13 வயது வரை பெற்றோர்களின் பழக்க வழக்கங்களை, அவர்கள் பேசுவதை உள்வாங்கி 'இழுக்க இழுக்க இன்பம்... வலிக்க வலிக்க மரணம்! P10aகவனிக்க ஆரம்பிக்கிறார்கள். பெண்கள் 13 வயதிலேயே மெச்சூரிட்டி அடைந்துவிடுவார்கள். ஆனால், ஆண்களுக்கு 18 வயது வரை ஆகும். அதனால்தான், முன்பு 18 வயது வரை எந்தப் பழக்கத்துக்கும் அடிமை ஆகாத ஆண்கள், அதன்பின் அடிமை ஆக மாட்டார்கள் என்கிறார்கள். ஆனால், அந்த வயதில்தான் கொஞ்சம் குறுகுறுப்பு பையன்களுக்கு இருக்கும். சினிமா ஸ்டாரைப் பார்த்து அதேபோல் செய்து பார்க்கும் வாய்ப்புகள் அந்த வயதில்தான் அதிகம். அந்த வயதுக்கு மேல் பக்குவப்பட்டுவிடுவான். சிகரெட், மது போன்ற போதைப் பொருட்கள் நமக்கு தேவையில்லாதது என அவனே ஒதுக்கிவிடுவான். பல வீடுகளில் அப்பா சிகரெட் பிடிப்பதால், அந்தப் புகையை அவர் மனைவியும், குழந்தையும் சுவாசித்து அவர்களுக்கும் புற்றுநோய் வருகிறது. கடந்த காலங்களில் ஒப்பிடும் வகையில் இப்போதுதான் புற்றுநோய் 100 சதவிகிதம் புகைப் பழக்கத்தால் அதிகமாகிவிட்டது. மெள்ளக் கொல்லும் இந்த விஷத்தை விட்டுவிடுங்கள். உங்களுக்கும் நல்லது; உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது'' என்றார்.
சிகரெட், மது போன்றவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் பசுமை தாயகம் அருள், ''இது வரவேற்கப்பட வேண்டியது. 25 வயதுக்கு மேலே உள்ளவர்களுக்குத்தான் மது விற்க வேண்டும் என்பது தமிழக அரசின் விதிமுறை. ஆனால், சிறுவர்கள் போய் கேட்டாலும், அவர்களுக்கும் விற்கிறார்கள். சட்டம் இயற்றியதோடு தங்கள் கடமை முடிந்தது என்று இல்லாமல், இதனை கண்காணிக்க வேண்டும். விதியை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
சிகரெட் பழக்கத்தைச் சாம்பலாக்க வேண்டியது அரசின் கடமை.
- நா.சிபிச்சக்கரவர்த்தி
 
 
விகடன்
 [/size]


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

'இழுக்க இழுக்க இன்பம்... வலிக்க வலிக்க மரணம்! Empty Re: 'இழுக்க இழுக்க இன்பம்... வலிக்க வலிக்க மரணம்!

Post by Nisha Mon 1 Sep 2014 - 10:33

நான் வரலலப்பா! 

இப்பல்லாம் மருந்து மாத்திரைன்னாலே அலர்ஜியாய் இருக்கு


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

'இழுக்க இழுக்க இன்பம்... வலிக்க வலிக்க மரணம்! Empty Re: 'இழுக்க இழுக்க இன்பம்... வலிக்க வலிக்க மரணம்!

Post by பானுஷபானா Mon 1 Sep 2014 - 11:00

பகிர்வுக்கு நன்றி

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

'இழுக்க இழுக்க இன்பம்... வலிக்க வலிக்க மரணம்! Empty Re: 'இழுக்க இழுக்க இன்பம்... வலிக்க வலிக்க மரணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum