சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

தாய்ப்பாலுக்கு என்ன விலை?  Khan11

தாய்ப்பாலுக்கு என்ன விலை?

2 posters

Go down

தாய்ப்பாலுக்கு என்ன விலை?  Empty தாய்ப்பாலுக்கு என்ன விலை?

Post by *சம்ஸ் Sun 20 Feb 2011 - 5:46

தாய்ப்பாலுக்கு என்ன விலை?  Mother

மார்கழி மாதம், அதிகாலைப்பொழுது நான் துள்ளி விளையாண்ட வாசல், அதைப் புள்ளிக்கோலம் அலங்கரித்து இருந்தது. அதன் நடுவே பசுமாட்டின் சாணத்தில் ஆசனம் போட்டு ஒரு பூசணிப் பூவும் பூத்திருந்தது.

வண்ண நிலவாய், தனது தாமரைமலர்க் கண்கள் சூரியனைக் காணும் முன்னே மலர்ந்து, வழிமேல் விழிவைத்து, திண்ணையிலே, வண்ண வண்ண ஆசைகளை சுமந்து கொண்டு அன்னமொன்று காத்திருந்தது. என்னை ஏற்றி வந்த சிற்றூந்து, எங்கள் வீட்டு மேல்வாசலில் சென்று நின்றது.

அத்தை! வாங்க உங்க பிள்ளை வந்திட்டாக!..... என்று வீட்டினுள் இருக்கும் என் அம்மாவிற்கு, குயிலாக குரல் கொடுத்தால் என் மனைவி. இதோ! வந்திட்டேன் அம்மா! ஆரத்தித் தட்டை எடுத்துக் கொண்டு வாசலுக்கு போ, என்று சொல்லிக்கொண்டே என் அம்மாவும் வாசலுக்கு வந்தார்கள்.

ஒவ்வொரு முறையும், ஓரிரு ஆண்டுகள் கழித்து நான் சிங்கப்பூரிலிருந்து வீட்டிற்கு போகும் போது என் அம்மாவே, ஆரத்தி எடுப்பார்கள். அப்படி ஒவ்வொரு முறையும் என் அம்மா வரவேற்கும் போதும், அவரின் முகத்தில் அப்போது தான் என்னை பெற்றெடுத்ததைப் போன்ற ஒரு மகிழ்ச்சியைக் காண்பேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பாலுக்கு என்ன விலை?  Empty Re: தாய்ப்பாலுக்கு என்ன விலை?

Post by *சம்ஸ் Sun 20 Feb 2011 - 5:47

“தாயை, உற்றுநோக்கி, கவனித்துப் பாருங்கள் அவளின் கனிவந்த அன்பு அவள் கண்களில் எப்போதுமேத் தெரியும்.”

என் கன்னங்கள் இரண்டையும், தனது இரு கைகளையும் கொண்டு பிடித்து, அமுதை பெற்றவளாய் பரவசத்தோடு கொஞ்சி, முத்தம் மிட்டு, என்னை ஆரத் தழுவி கடைசியாக மீண்டும் ஒருமுறை திருஷ்டியும் கழித்து உள்ளே அழைத்துச் செல்வார்கள்.

“அந்த அன்போடு ஒப்பிட வேறெதுவும் இவ்வுலகில் இல்லை. தாயன்பு என்ற அமுதத்தை பருகி சுவைத்து உணரவேண்டியதே, சொல்லால் விளக்க முடியாது.......”.


"அம்மா, அவள் நம்மோடு இருக்கும் வரைக்கும் தான் இது போன்ற சந்தோசங்கள் எல்லாம், முடித்தவரை நெருங்கி இருந்து அவளின் அன்பை முழுமையாக அனுபவியுங்கள். அது எங்கும், எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது.


அந்த அன்பைப் பெற வயதும் தடையாகாது........"

இம்முறை, அது மாறிவிட்டது. இல்லை, திருமண வாழ்க்கை மாற்றிவிட்டது.
கடிதங்கள் சுமந்த கனவுகளை, தன் இதயத்தில் நிரப்பி, கனத்த இதயத்தோடு, கனிந்த மனத்தோடு, கண்கள் குளமாக, விழியை மூடாது நிறுத்தி துடித்தன. ஆம், விழியை மூடாது நிறுத்தி துடித்தன அவளின் தாமரை இதழை ஒத்த இமைகள்.

அந்நேரம், அவைகள் என்னை, அன்போடு என் இதயத்தை வருடியாதாக உணர்ந்தேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பாலுக்கு என்ன விலை?  Empty Re: தாய்ப்பாலுக்கு என்ன விலை?

Post by *சம்ஸ் Sun 20 Feb 2011 - 5:47

இத்தனை நாளும், அவளின் விழிக்கு வேலியாய்! நின்ற இமைக் குழல்கள் (முடிகள்), கரு மூங்கிலாய் வளைந்து; அவைகள் கட்டியிருந்த தொட்டிலில், தவழ்ந்த ஆனந்தக் கண்ணீர்த் துளிகள், அவளின் இதயத் துடிப்பின் எதிரொலியை எனக்கு கூறின.
நெளிந்து, வளைந்தக் கருங் கூந்தல். நேர்வாகு, அதன்வழியே வழிந்தோடிய வியர்வைத் துளிகள்.

மார்கழிப் பனியின் குளிரை ஈர்த்து, நெற்றியில் உள்ள செந்தூரக் குளத்தில் குதித்து, செம்முத்து நீர்த்துளிகளை வீணை போன்ற அவளின் நுனி மூக்கின் வழியே உதிர்த்து, ஆரத்தி தட்டினுள் சங்கமித்தன.

ஆரத்தி நீரின் செந்நிறமும், கற்பூர ஒளியின் பொன்னிறமும்,
சேர்ந்து அவளின் செந்தாமரை முகத்தை மிளிரச்செய்தது.....

இத்தனையும் அரங்கேறும் நேரம், வார்த்தை மட்டும் தொண்டையில் அடைபட்டிருப்பதை அவளின் துடிக்கும் உதடு எனக்கு விளக்கிற்று.
ஆரத்தி எடுத்தாச்சு, மின்னல் வேகத்தில் அதை வாசலில் கொட்டிவிட்டு ஓடோடி வந்தவள், என் அருகே நின்று கொண்டாள். பாவம்!

இத்தனை நாள் பிரிந்து இருந்தவள் இனி ஒரு நொடிப் பொழுதும் பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்திருந்தாளோ என்னவோ?.
சரி, வாங்க இரண்டுபேரும் உள்ளே, என்று அம்மா எங்களை உள்ளே அழைத்தார்கள்.

சற்றே மறந்திருந்த! என் அம்மாவின் நினைவு மீண்டும் வர, அவரின் அருகே சென்றேன், வழக்கம் போலவே, என் அம்மா அவரின் ஏக்கம் தீர என்னைக் கொஞ்சி உள்ளே போகச் சொன்னார்கள்.

அம்மா! அப்பா எங்கே? என்றேன். பால் வாங்க பண்ணைக்கு சென்று விட்டார்கள் என்று என் அம்மா அடுப்பங்கரையில் இருந்து பதிலளித்தார்.
கனத்த இதயத்தோடு, இறுக்கமாக, இல்லை இலகி, இடதுபுறம் இருக்கும் இல்லாளை நோக்கி, இன்னும் என்ன மௌனம் என்றேன்! அவ்வளவு தான் மடைதிறந்த நீராய் கண்ணீர் பெருக்கெடுத்து கன்னங்களை நனைக்க…….. என் அருகே நின்றாள்.

"பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால் அந்தப் பெண்மையின் நிலை என்ன?...... மௌனம்"


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பாலுக்கு என்ன விலை?  Empty Re: தாய்ப்பாலுக்கு என்ன விலை?

Post by *சம்ஸ் Sun 20 Feb 2011 - 5:48

கவியரசரின் வரிகள் தான் நினைவுக்கு வந்தது.....
இனியும் இது போன்றதொருப் பிரிவு நடக்காது என்று இனிய மொழி கூறினேன்.
பிரிவும், அது தரும் துயரமும். பிரிந்து, பின்பு சேரும் போது உள்ள உணர்வும், சொல்லில் அடங்காது.

அது மிகவும் கொடியது அதுவே வலியதும் கூட. ஆம், பிரிந்திருக்கும் போது கொடியது ஆனால் வேறு தருணத்தில் பிரிவோமா? என்று நினைக்கும் போது, அதுவே உறவை உரப்படுத்த வலியது.
பதினெட்டு மாதங்கள் பிரிவுக்கு பிறகு, இந்த எல்லையில்லா சந்தோசம் அவளை நிலைகொள்ளச் செய்யவில்லை. என்னோடு இருப்பதா? அத்தைக்கு உதவியாக சமயலறையில் இருப்பதா?
என்றத் தடுமாற்றம்.

அதனை அவளின் செய்கை சொல்லிற்று. எப்படி?... ஆமாம், பலகாரத்திற்கு ஊறவைத்திருந்த அரிசியை கொதிக்கும் உலையில் போட்டால் வேறென்ன?..... சிரித்துக்கொண்டே வந்தவள் வெட்கத்தோடு நடந்ததைக் கூறி நெளிந்து நின்றாள்.

இது அத்தனையும் உண்மை. இது போன்று அனுபவம் உங்களுக்கும் இருக்கும்......

வருணனை போதும்.... விசயத்திற்கு வருவோம்……………………..

மறுநாள் காலையில் எங்கள் வீதியில் இருக்கும் மதுரா வங்கிக்கு சென்றேன்.

போகும் வழியில் நான், பார்ப்பவர்களையும், என்னை பார்த்தும் பாராதது போல், நடிப்பவர்களையும், நானே கூப்பிட்டு நலம் விசாரித்து கொண்டே சென்றேன்.

இங்கு இன்னொன்றையும் நான் கூறவேண்டும். வெளிநாடு சென்று ஊருக்கு செல்பவர்கள், இந்த விசயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதாவது, எதார்த்தமானவர்கள் நம்மைப் பார்த்தவுடனே, தம்பி வாங்க, எப்படி இருக்குரீக, அப்பா சொன்னாக, நீங்க வர்றீகன்னு.. என்று அவர்களாக நலம் விசாரித்து விடுவார்கள்.

இன்னும் சிலரோ நம்மை கண்டும் காணாதது போல் இருப்பார்கள்.

என்னென்றால் அது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவமாக கூட இருக்கலாம்.

“நாமத் தான் பாக்குறோம்ல, வெளியூரில் இருந்து வரும் நம்மாளு எல்லாம் அர்த்த ராத்திரியில கொட பிடிக்கிறத….. என்று நம்ம பாப்பையா அவர்கள் தொணியில சொல்லலாம்.....”

சரி விசயத்திற்கு வருவோம்………
வம்பு, நமக்கு எதற்கு என்று நானே வழியியக்கப் பேசிவிடுவது வழக்கம்.

அப்படித்தான், வங்கியில் ராஜகோபால் என்பவரையும் சந்தித்தேன், அவரும் என்னுடன் எப்போதும் அன்பாகவே பேசுவார். நலம் விசாரித்துக் கொண்டோம்.

அவர் என்னிடம் கூறினார், தம்பி நான் உங்களைப் பார்க்கும் போது சொல்ல வேண்டும் என்று இருந்தேன்.

தயவுசெய்து, எந்தக் காரணத்தைக் கொண்டும் அப்பா அம்மாவை மறந்திடக் கூடாது. அவர்கள் இல்லாமல் நீங்கள் இல்லை என்றார்.

நான் உடனே, என்ன அண்ணே! இதை நீங்க சொல்லனுமா? என்றேன் உங்களைப் பற்றி தெரியும். இருந்தும், சொல்லத் தோன்றியது அதனால் கூறினேன். என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பாலுக்கு என்ன விலை?  Empty Re: தாய்ப்பாலுக்கு என்ன விலை?

Post by *சம்ஸ் Sun 20 Feb 2011 - 5:48

ஏன்? இவர், இப்படிக் கூறினார் என்ற சிந்தனை எனக்குள் மேலோங்கியே இருந்தது.

இப்படித்தான் நான் முதன் முதலில் சிகப்பூருக்கு புறப்படும் போதும் இதைப் போன்ற ஒரு வார்த்தையை பக்கத்து தெரு பத்ரிநாத்தும் கூறினார்.

அப்போது எனக்குள், அவர் மீது ஒரு வருத்தம் இருந்தும். அதைக் காண்பித்துக் கொள்ளாமல் சரி நீங்கள் சொல்வது போலே நடந்து கொள்வேன் என்று கூறினேன்.

ஆனால், திடீரென்று இப்போது ராஜகோபால் அண்ணன் ஏன்? என்னிடம் இப்படிச் சொல்லவேண்டும் என்று எண்ணியவாறு வீடு திரும்பினேன்.

அந்த நேரத்தில் எனக்கு இன்னொரு விசயமும் ஞாபகம் வந்தது.

இதே போன்று இரண்டு மாதத்திற்கு முன்பு, வீட்டிற்கு போனில் பேசும் போது அப்பா கூட…….

"தம்பி நாங்க எல்லோரும் நல்லா இருக்கிறோம் நீயும் உடம்பைப் பார்த்துக் கொள். அதோடு நீ எங்களை அக்கறையோடு பார்த்துக் கொள்வதற்கு எங்க நன்றியையும் கூறிக் கொள்கிறோம் என்றார்" ????......

அப்போது எனக்கு ஒன்றும் புரியவில்லை ஏன்? இப்படி அப்பா பேசுகிறார்கள் என்று எண்ணியவாறு. அப்பா! அது என் கடமை மட்டும் அல்ல அது எனது பாக்கியமும் கூட... ஆண் பிள்ளை வேண்டும் என்று தவமாய் தவமிருந்தல்லவா என்னைப் பெற்றீர்கள்,
இனிமேல் அப்படி சொல்லாதீங்க அப்பா!... என்று நான் மறுமொழிக் கூறியதும் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.

இப்படி பல புரியாத புதிரோடு வீடு திரும்பினேன்.

வீட்டிற்கு வந்ததும், ராஜகோபால் என்பவரைப் பார்த்ததும்….. அவர் கூறியதையும்… அம்மாவிடம் கூறினேன்.

அதை ஏன்? என்னிடம், அவர் அப்படிச் சொல்லவேண்டும் என்றேன்.

அதற்கு அம்மா சிரித்துக் கொண்டே…..
ம்ம்ம்... அப்படியாச் சொன்னார். அதொன்றும் இல்லை அப்பா, அவர் உதவியால் சிங்கப்பூர் வந்து விட்டு திரும்பினானே சுதாகர், அவனைமனதில் வைத்துக் கொண்டு தான்.
அவர் உன்னிடம் அப்படிக் கூறியிருப்பார் என்றார்கள்.

ஏன்? என்னாயிற்று? அவன் என்ன செய்தான் என்றேன். அதற்கு….

அவன் ஊரிலிருந்து (சிங்கப்பூரிலிருந்து) வந்தவன், நேராக அவன் மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டானாம்.

அதன் பிறகு, இரண்டு, மூன்று நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்து அப்பா, அம்மாவையும் பார்த்து விட்டு தனக்கு வேறு ஒரு வேலைக் கிடைத்து இருப்பதாகவும் தன் மனைவியோடு தனியாக போகப் போவதாகவும்
சொல்லியிருக்கிறான்.

அதனால் என்ன, வேலை வெளியூரில் என்றால் போகத்தானே வேண்டும் என்றேன்.

இல்லையப்பா, அது இல்லை விஷயம். அவன் இனிமேல் எல்லாம் என்னால் எதுவும் தர முடியாது, எனக்கும் கல்யாணமாகிவிட்டது என்றுக் கூறியதோடு மட்டும் அல்லாமல், இதுவரை நான் உங்களுக்கு அனுப்பிய பணங்களுக்கு கணக்கு வேண்டும் என்றும்
கேட்டு இருக்கிறான்…………

என் அம்மாச் சொன்னது தான் தாமதம். எனக்கே உள்ள உச்சக் கோபத்தில்….

என்னது கணக்கு கேட்டானா? அப்படியானால் அவன் பெற்றவளுக்குத் தரவேண்டியப் பாக்கியே இன்னும் நிறைய இருக்குமே?


ஆமாம், அவன் குடித்த தாய்ப் பாலுக்கு என்ன விலைத் தருவானாம்? இந்த ஜென்மம் முழுக்க உழைத்துக் கொடுத்தாலும் அவன் பெற்றவர்களுக்கு பட்டக் கடனை அடைக்க முடியாதே? என்றேன்.....
எனது சற்று உயர்ந்த குரல், அதுவும், மாற்றார் தாய்க்கே பரிந்து பேசும்
எனது இந்த கோபம் என் மனைவி முன்பு அறிந்திடாதது..!?! ……...

அவளும் சற்று நிமிர்ந்து என்னைக் கவனித்தாள் என்பதை நானும் கவனித்தேன்.....எங்கள் இருவரையும் என் அம்மாவும் கவனித்தார்கள்...

இதைத் தான் நானும் எதிர்பார்த்தேன்! எனக்கு என் அம்மா என்றால் உயிர் என்பதை அறிந்தவள் என் மனைவி, இருந்தும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை சற்று அழுத்தம் திருத்தமாக கூறுவது தான் என் வழக்கம்.
ம்ம்....சரீரீ........... விசயத்திற்கு வருகிறேன்......

சரி, சரி, நீ சற்று பொறு, என்று வழக்கமாக என் கோபத்தை ரசிப்பவராக என் அம்மா தொடர்ந்தார்..... ......


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பாலுக்கு என்ன விலை?  Empty Re: தாய்ப்பாலுக்கு என்ன விலை?

Post by *சம்ஸ் Sun 20 Feb 2011 - 5:48

அவன் தம்பிகள் இருவரும் நன்றாகத் தானே படித்திருக் கிறார்கள்,
அவர்களையாவது, இவன் அங்கு அழைத்துச் சென்றிருக்கலாம்
அதையும் செய்யவில்லை.
இப்போது, அவர்கள் என்ன செய்வார்கள் அத்தனைக்கும் ஒரு நல்ல வழி செய்து தர வேண்டியது மூத்தவன் அவனின்
கடமை இல்லையா? என்று கூறியவர் தொடர்ந்தார்…..

அதோடு விட்டானா? என்னைப் போல பெற்றவளுக்கு
ஐந்து பவுன் சங்கிலி வாங்கித் தந்தது யார்?....
என்றும் கேட்டு இருக்கிறான்.

அதைத் தான் அவனோட அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லையாம். பாவம் அதையும், அந்த அம்மா கலட்டி அவனிடமே கொடுத்து விட்டார்களாம்.

அடப் பாவமே!, கடைசியில் என்னதான் ஆயிற்று? என்றேன்.

என்ன ஆயிற்று?, அவன் வாங்கியப் பொருள்களையும், பணத்தையும் வாங்கிக் கொண்டு சென்று விட்டான் என்றார்கள்.

இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டுத் தான் ராஜகோபால் உன்னிடம் இப்படிக் கூறியிருப்பார் என்றார்கள் என் அம்மா.

இது நடந்து இரண்டு மாதங்கள் இருக்குமா? என்றேன்; ஆமாம், என்றார் என் அம்மா.

ஓ... இப்போது புரிந்தது. அப்பா ஏன்? அன்று அப்படிப் போனில் பேசினார்கள் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.....
அன்றிரவு, இதைப் பற்றியச் சிந்தனை என் தூக்கத்தை கெடுத்தது.......................... மேலும் யோசிக்கலானேன்…………..
அவனும், அவன் தம்பிகளும் மிகவும் பவ்வியமாகத் தானே இருப்பார்கள். அதோடு, அவனுடைய அம்மா கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டார்களே!

………….ஆமாம், அவனின் அம்மா மிகவும் கண்டிப்பானவர் தான், தெருவில் நடக்கும் போது கூட, அக்கம் பக்கம் பார்க்காமல் நடக்க வேண்டும், கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு நடக்கக் கூடாது என்றெல்லாம் கூறுவார்கள்.

இப்படி நினைத்துக் கொண்டு இருக்கும் போதே என் மனம் வேறொரு நிகழ்வை நோக்கி போயிற்று....

நான் அப்போது, திருச்சி மின் ஆய்வாளர் அலுவலகம். திருச்சி மண்டலத்தில் பயிற்சி இளநிலை ஆய்வாளராக (பொறியாளராகப்) பயிற்சியில் இருந்தேன்.

அப்போது தினமும் ரயிலில் தான் சென்று வருவேன் என்னோடு ஒரு பட்டாளமே வரும் ஆமாம், அது பலவயது, பல ரசனைக் கொண்ட கூட்டம். அப்போது நடக்கும் கச்சேரிகளில் சிலர் பங்கேற்பார்கள், சிலர் பார்வையாளர்கள் மாத்திரமே..... அது நெடுங்கதை...

அது சரி..........., கூட்டம் எப்படி சேர்ந்தது?... அது வேறொன்றும் இல்லை எல்லோரின் ரசனைக்கும் தகுந்தமாதிரி கொஞ்ச விசயத்தையும் சேர்த்து பேசினால் அந்தப் பேச்சிலே ஒரு சுவாரஸ்யம் இருந்தால், கூட்டம் தானா சேரும்.

நம் வாத்தியாரின் வகுப்பறைக்கு வந்தக் கூட்டம் போல்......
எல்லாம் தானாய் சேர்ந்த கூட்டம்.

சரி கதைக்கு வருவோம்....
அப்படி அந்தப் பார்வையாளர்களில்
ஒருவன் தான், சுதாகரின் பெரிய தம்பி சுரேசும்.

திருச்சி செயின்ட் ஜோசெப் கல்லூரியில் முதுகலை கணிதம் படித்து வந்தான்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பாலுக்கு என்ன விலை?  Empty Re: தாய்ப்பாலுக்கு என்ன விலை?

Post by *சம்ஸ் Sun 20 Feb 2011 - 5:49

வழக்கம் போல்…………. நானும், சுரேசும் ரயிலில் இருந்து இறங்கி வீட்டிற்குச் சென்றோம். அப்போது அவன் என்னிடம் 50 பைசாவைக் கொடுத்தான்.

நான் எதற்கு? என்றேன்!. திருச்சி ஜங்க்சனில் டீ வாங்கிக் கொடுத்தீர்களே, அதற்காகத்தான் என்றான்.

நான் மறுக்க, அவன் திணிக்க, என் கை படாது, என் பையினுள் சென்றது 50 காசு. மேலும் கூறுவான்……

அம்மா செலவுக்குத் தந்தது, பையில் இருப்பதை பார்த்தால் திட்டுவார்கள் என்றான். எனக்கு பெரிதாகத் தெரியவில்லை, சரி இவன் அம்மா பேச்சிற்கு மதிப்பு கொடுக்கிறான் என்று நினைத்துக் கொண்டேன்.

கொஞ்ச தூரம், எங்களது மௌனங்கள் மட்டும் பேசிகொண்டன. ஊரின் முதல் வீதி வந்தது (அதாவது, எங்கள் ஊர் BHEL, NLC காலனிகளைப் போன்ற தொரு குடியிருப்பு பகுதி). முதலில் ESI மருத்துவமனையை கடந்தோம்.

முதல் வீதியை அடைந்தபோது நான் எனது பேன்ட் பாக்கெட்டிலிருந்து சீப்பை எடுத்து, கலைந்த தலையை சரிசெய்து கொண்டேன். பிறகு அதை சுரேஷிடம் தந்தேன் அவன் இல்லை பரவாயில்லை என்றான்.

நானும் விடுவதாயில்லை இல்லை சுரேஷ் கொஞ்சம் தலையை சீவிக்கொள் என்று சொன்னபோது, அவன் கூறிய வார்த்தையைக் கேட்டு உண்மையில் அதிர்ந்து போனேன்.

அப்படி என்னக் கூறினான்?

இல்லை அண்ணா!, அம்மா திட்டுவாங்க என்றான், அம்மாவிற்கு எப்படித் தெரியும் என்றேன்? அதற்கு அவன், இல்லை எப்படி தலை கலையாமல் இருக்கிறது? என்று கேட்டால் என்ன சொல்வது? என்றான்………

எனக்கு, இவன் மேல் இரக்கமோ, வருத்தமோ இல்லை.

பிறகு?..... அவன் அம்மாவின் மேலும் வருத்தமும் இல்லை. மாறாக, பாவம் அவன் அம்மா என்று தான் எனக்கு அப்போதும் தோன்றிற்று.

அந்த அம்மா அப்படி பிள்ளைகளிடம் கண்டிப்பாக நடந்து கொள்வதற்கு அவர்கள் கடந்துவந்த பாதை, ஏன்? அவர்களுக்கு சிறுவயதில் ஏற்பட்ட அனுபவமாகக் கூட இருக்கலாம் அல்லது அவனுடைய அப்பா சீட்டுக் கிளப்பிற்கு சென்று பொருட்களைத் தொலைத்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

எதுவானாலும் இப்படி அம்மா சொல்வதை அப்படியே கேட்கும் பிள்ளைகள் இருப்பது அந்தத் தாயிற்கு நல்லதில்லை, என்று தான் அன்றும், இன்றும், என்றும் எனக்குத் தோன்றும்.

அம்மாப் பேச்சை கேட்க கூடாது என்பதல்ல எனது வாதம்.

"இப்படி இம்மி அளவு பிசகாமல் தாயின் சொல்படி நடப்பவன், நாளை
தனது வாழ்க்கையில் புதிதாக அதிலும் அம்மாவைப் போல அதட்டலும்
கண்டிப்பும் இல்லாமல்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பாலுக்கு என்ன விலை?  Empty Re: தாய்ப்பாலுக்கு என்ன விலை?

Post by *சம்ஸ் Sun 20 Feb 2011 - 5:49

மாறாக அன்பும், அரவணைப்பும் கொண்டவள் வந்தபோது, அவள் கூறுவதை இம்மி அல்ல, அணு அளவு கூட பிசகாமல் கேட்ப்பான்.

அது தான் அங்கே நடந்தது. அவனின் அண்ணனும் அப்படியே செய்தான். இதை நினைத்து தான் நான் அன்றே வருந்தினேன்."

ஆக, இந்த இடத்திலே தான் நான் முதன் முதலில் சிங்கப்பூருக்கு வரும் போது, திரு பத்ரிநாத் சொன்னதற்கு பொருள் தெளிவாக விளங்கும்.

"வயதுக்கு மீறிய யோசனை, தனக்கு சரியெனப் பட்டதை தெளிவாக, மறுத்துப் பேச வழி இல்லாமல் பேசினால்………………...

அவன் மீது ஒரு சந்தேகப் பார்வை வீசும் நம் சமூகம்.

வரதட்சனை வேண்டாம் என்று கூறுங்கள், சமூகத்தை அரிக்கும் புற்றீசல் போன்ற பிரச்சனைகளைப் பற்றி பேசுங்கள், எல்லாவற்றிற்கும் புதுப் புது அர்த்தம், பட்டம் தரும் இந்த சமூகம்.
சமூகத்திற்கு ஒத்து ஊதவேண்டும். அதன் அமைப்பை சீர் படுத்தவோ, குறையை சரிசெய்ய முயல்வதோ பெருங் குற்றம். சமுதாய விருப்பங்களை வழிமொழிய வேண்டும் இல்லாவிட்டால் அவன் அருவருக்கத் தக்கவனாக ஒதுக்கப் படுவான். அதற்கு திருவள்ளுவனும், கம்பனும், பாரதியும் விதி விலக்கல்ல."

(என்ன செய்வது ஒன்பதில் இருக்கும் கேதும் இரண்டில் இருக்கும் உட்ச்ச செவ்வாயும் செய்யும் வேலை இது).

சரி உபதேசம் போதும் என்று நீங்கள் கூறுவது புரிகிறது....
எங்கள் குடும்ப நண்பர் திரு பத்ரிநாத் அவர்களின் வேண்டாதக் கவலைக்கு எனக்கு அர்த்தம் முன்பே விளங்கி இருந்தாலும், அவரின் அக்கறை இன்றும் என்னுள் நன்றியோடு நிற்கிறது........

ஆனால், இந்த நிகழ்வு, அவரின் கணக்கும், சுதாகர் அம்மாவின் கணக்கைப் போலவே தவறாகிப் போனது என்பது மட்டும் விளங்கிற்று.

என்ன, அம்மாப் பேச்சை கேட்பது தவறா?...... இல்லை!

அம்மா சொல்வதையும் கேட்க வேண்டும். அதே நேரம், அவர்கள் அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்றுக் கூறுவதை ஏன்? இப்படிக் கூறுகிறார்கள்? என்று சற்றே யோசித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.

அவர்கள் நம்மீது கொண்டுள்ள அக்கரையாயா? அவநம்பிக்கையா? பயமா? அவர்களின் அனுபவமா? இல்லை வேறு ஒரு பெண்ணின் அறிவுரையா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பாலுக்கு என்ன விலை?  Empty Re: தாய்ப்பாலுக்கு என்ன விலை?

Post by *சம்ஸ் Sun 20 Feb 2011 - 5:50

"வழக்கமாக, பெண்கள் பலரும், பலநேரங்களில், ஆண்களை நம்புவதில்லை, சில நேரம் வீட்டு வேலைக்காரி கூட நம்பிக்கைக்கு உரியவளாக அவர்களுக்குத் தோன்றும். காரணம், நல்லதே என்றாலும், ஒரு அதிகாரத் தோரணையோடு சொல்லும் ஆண் வர்கத்தின் மீது (அடிமைப் படுத்துவதாகவே உணரப் படுவதால்) எல்லாப் பெண்களுக்கே உள்ள பொதுவானக் கோபம் அது"

(இது எனது அனுபவம் மாத்திரமே! இதில் கொஞ்சமாவது உண்மை உண்டா என்று உமாவும், சுந்தரியும் தான் கூற வேண்டும்).

என்று, சீர் தூக்கிப் பார்த்து விட்டு அவர்களின் கவலைக்கு தைரியம் சொல்லிவிட்டு நாம் நினைத்ததை செய்துமுடிக்க வேண்டும்.
இப்படி நாம் செய்யும் சில காரியங்கள் வெற்றியில் முடியும் போது, அது பெற்றவர்களுக்கு நம் மீது ஒரு நம்பிக்கைப் பிறக்க செய்யும்.
மேலும், அது நமக்கு செயல் சுதந்திரத்தை அவர்களிடம் வாங்கிக் கொடுக்கும்.
கதை ரொம்ப அட்வைசுல போகுதுன்னு நினைக்கிறேன்..
இதோ மீண்டும் விசயத்திற்கு வருகிறேன்.
ராஜகோபால் அண்ணன் கூறியது முற்றிலும் உண்மைதான்.
தாய், தந்தை இல்லை என்றால் நாம் இல்லை. நாம் இல்லை என்றால் நம் பிள்ளைகள் இல்லை..... ஆலவிழுதாக தாங்கவேண்டியது தானே நல்ல மகனின் கடமை. அதைத் தானும், பார்க்கும் நம் மகனும் நமக்கு அதைத் தானே செய்வான்.
என் அப்பாவின் நன்றி உரைக்கு காரணம் என்னவாயிருக்கும்?....
சுதாகரின் செய்கையும்,அதனால் அவனின் குடும்பம் அடைந்த அவமானமும் ஊர் அரற்றலும், என் அப்பாவிற்கு என்னைப் பற்றிய ஒரு திருப்தியை தந்து இருக்கும் என நம்புகிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பாலுக்கு என்ன விலை?  Empty Re: தாய்ப்பாலுக்கு என்ன விலை?

Post by *சம்ஸ் Sun 20 Feb 2011 - 5:51

தாய் தந்தையரின் பேச்சை அப்படியே கேட்கும் பிள்ளைகள் மாத்திரமே நல்ல பிள்ளைகள் அல்ல! பறவைகள் பலவிதம் அதைப் போல..........
பிள்ளைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்.....

வேண்டும்! வேண்டாம்!! என்பதற்கும் காரணம் இருக்கும் (everything should have a logic ).

அந்தக் காரணத்தை தெளிவாக விளக்கி விட்டால்.
இது போன்றதொரு நிலை, தவறான புரிதல் இருக்க வழியில்லை.

சில நேரங்களில் தவிர்க்க முடியாது, அதற்கு நேரமும் இருக்காது, ஆனால் எல்லா நேரங்களிலும் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

நான் எனது பிள்ளையை வளர்க்கும் போது, நான் செய்த தவறுகளை அவனும் செய்யாது இருக்கச் செய்வதில் மட்டும் கவனமாக இருக்கிறேன். என் பிள்ளைகளுடன் நிறையப் பேசுகிறேன். அவர்கள் பேசுவதையும் காது கொடுத்து கேட்கிறேன்.

எதற்காகவும் அவர்களை மட்டம் தட்டிப் பேசுவதில்லை, அதிகாரம் செய்வதில்லை,

ஒழுங்கீனத்திற்கு மட்டும் சமரசம் செய்து கொள்வதில்லை.

நீங்கள் செய்யும் செயல்களில் இரண்டுவிதமான விளைவுகள் உண்டு, எந்த விளைவு வேண்டும் என்பதை நீங்களே தேர்ந்தெடுங்கள் என்று அவர்களுக்கே அந்த வாய்ப்பை கொடுத்து விடுகிறேன்.

அவர்களை என் மனைவி சீராட்டுகிறாள், நான் பாராட்டுகிறேன்,

எல்லாவற்றிற்கும் மேலாக, நான் கடந்து வந்த பாதையை மறைக்காமல், சாதனைகளோடு, சோதனைகளையும்
வெட்கப்படாமல் அவர்களிடம் கூறியும் வருகிறேன்.

கடைசியாக எங்கள் இருவரின் அந்தி கால வாழ்க்கைக்கு தனியாக சேமித்தும் வருகிறோம்.

(சுதாகரின் பெற்றோரின் வாழ்க்கை எங்களுக்கும் ஒருப்பாடம்...)

இல்லை, எனக்கு அருள் மட்டுமே சேமிக்கத் தெரியும், என் மனைவி பொருளை சேமித்து வருகிறாள். என்னை நன்கு அறிந்த என் மனைவி, அவள் எனது பாக்கியம்.
நம்ம சுப்பையா வாத்தியார் வகுப்பறையில் சொல்வது போல் ஒன்று வண்டி என்றால் இன்னொன்று தண்டவாளமாகத்தான் இருந்தாக வேண்டும்.

வாசித்த உங்கள் அனைவரோடு நானும் சேர்ந்து நம் நண்பர் ஆனந்த் அவர்களுக்கு நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.

நன்றி!
ஆலாசியம் கோவிந்தசாமி,
சிங்கப்பூர்,


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பாலுக்கு என்ன விலை?  Empty Re: தாய்ப்பாலுக்கு என்ன விலை?

Post by ஹம்னா Sun 20 Feb 2011 - 13:24

சிறப்பான கட்டுரைக்கு நன்றி ரசிகன்.


தாய்ப்பாலுக்கு என்ன விலை?  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தாய்ப்பாலுக்கு என்ன விலை?  Empty Re: தாய்ப்பாலுக்கு என்ன விலை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum