சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எதிர்மறை எண்ணங்களை ஒழிப்பது எப்படி? Khan11

எதிர்மறை எண்ணங்களை ஒழிப்பது எப்படி?

2 posters

Go down

எதிர்மறை எண்ணங்களை ஒழிப்பது எப்படி? Empty எதிர்மறை எண்ணங்களை ஒழிப்பது எப்படி?

Post by ahmad78 Wed 8 Oct 2014 - 15:02

எதிர்மறை எண்ணங்களை ஒழிப்பது எப்படி? Tamil_News_327949166298
எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி என்பது தெரிந்தும், அதை ஓழிக்கும் வழி தெரியாமல் பலரும் திண்டாடுகிறோம். அந்த நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டால், வாழ்வில் நமக்கு தோல்வி என்பதே கிடையாது.

ஒரு எதிர்மறை சிந்தனையாளர், எப்போதும் பிறரிடம் குறைகளையே காண்பார். ஒரு ஆரோக்கிய மனிதரைக் கண்டால், அவர் நோயுற்றிருந்தால் என்ன ஆகும் என்ற வகையில் யோசனை செய்வார். அவர்கள் தங்களின் முழு வாழ்வையும், பிற விஷயங்களில் குறை கண்டுபிடித்தே வீணாக்குவார்கள்.

அதே சமயத்தில் நேர்மறை சிந்தனையாளர் என்பவர் உலகிலுள்ள அனைத்து விஷயங்களிலுமே அதே எண்ணத்துடன் இருக்க முடியாது. ஒரு சில விஷயங்களில் அவர் எதிர்மறையாகத்தான் செயல்பட வேண்டியிருக்கும். அந்த விஷயங்கள் அந்தக் குறிப்பிட்ட நபருக்கோ அல்லது சமூகத்திற்கோ தீங்கு ஏற்படுத்துவதாக இருக்கலாம்.

ஒருவருக்கு வாழ்வில் எதாவது ஒரு சூழலில் அல்லது சூழல்களில் எதிர்மறை எண்ணங்களை வந்தே தீரும். உதாரணமாக, தேர்வை சரியாக எழுதாததால் அதில் தோல்வியடைந்து விடுவோமா? என்று நினைப்பது அதில் ஒருவகை. ஆனால் இதுபோன்ற எண்ணங்களிலிருந்து விடுபடும் வழிகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகள் சில இங்கே காண்போம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

எதிர்மறை எண்ணங்களை ஒழிப்பது எப்படி? Empty Re: எதிர்மறை எண்ணங்களை ஒழிப்பது எப்படி?

Post by ahmad78 Wed 8 Oct 2014 - 15:03

* கவலைப்படுவதை நிறுத்துங்கள். கவலைகள் உங்களை சூழ்ந்திருக்கும்போது ஏதாவது நல்ல விஷயங்களைப் பற்றி நினையுங்கள்.

* கவலை தரும் கலந்துரையாடலில் கலந்து கொள்வதைத் தவிருங்கள். இது எப்போதும் உங்களைப் பாதிக்கும். ஒருவேளை அதுபோன்ற சூழலில் சிக்கிக்கொள்ள நேர்ந்தால், நேர்மறையான விஷயங்களை நீங்களே முதலில் பேச ஆரம்பிக்கவும். எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டு, தங்களின் தோல்விக்கு மற்றவர்களை குறைகூறும் நபர்கள் நிறைய உள்ளனர். அந்தமாதிரி மனிதர்கள் இந்த நாட்டின் பல அமைப்பு முறைகளை, கல்வித் திட்டம், நிர்வாக அமைப்பு போன்றவற்றை குறைகூறுபவர்களாக இருப்பார்கள். அத்தகைய நபர்கள், ஒரு செய்தித்தாளை படித்தாலும்கூட, அதில் எதிர்மறை விஷயங்களையே தேடி எடுத்துப் படிப்பார்கள். அதுபோன்ற நபர்களிடம் பழகுவதை நீங்கள் தவிர்த்துவிட வேண்டும்.

* இந்த உலகைப் பற்றி நேர்மறை எண்ணம் கொண்டவர்களிடம் நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

* மற்றவர்கள் கவலையிலிருந்து விடுபட அவர்களுக்கு உதவி செய்யுங்கள். இதன்மூலம் உங்களின் தன்னம்பிக்கை மேம்படும்.

* இந்த உலகம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்ற எண்ணம் வேண்டும். அதேசமயம் தூய்மையான கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு, அந்த நம்பிக்கையும் துணைபுரியும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

எதிர்மறை எண்ணங்களை ஒழிப்பது எப்படி? Empty Re: எதிர்மறை எண்ணங்களை ஒழிப்பது எப்படி?

Post by ahmad78 Wed 8 Oct 2014 - 15:03

நேர்மறையாக சிந்தித்தல்:

* உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களின் சக்தி மீது நம்பிக்கையின்றி உங்களால் எதிலும் வெற்றியடைய இயலாது.

* மன அமைதி என்பது ஒரு மனிதனின் வெற்றிக்கும், நிம்மதியான வாழ்வுக்கும் தேவையான அடிப்படைத் தகுதியாகும். பிரச்னைகளை நம்முடன் தேக்கி வைத்திருப்பது அல்லது அதை நினைத்துக்கொண்டே இருப்பதால் எதையும் செய்யவிடாது. எதிர்மறை எண்ணங்கள் நம்மை நிம்மதியாக வாழ விடாது. நாம் நினைத்த காரியத்தில் வெற்றியடைய தேவையான சக்தியை நாம்தான் உற்பத்தி செய்துகொள்ள வேண்டும்.

* எதிர்மறை சிந்தனையின் வெளிப்பாடுதான் கோபம். எனவே கோபமும், கவலையும் எப்போதும் இருக்கக்கூடாது. ஏனெனில், பலவீனமான மனிதர்களிடமிருந்து வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்க இந்த உலகில் பலர் காத்துக் கொண்டுள்ளனர். எதிர்மறை எண்ணங்கள் உங்களை பலகீனமானவர்களாக காட்டும். கோபம் மற்றும் கவலை போன்றவை எதிர்மறை எண்ணங்களின் தொடக்கப் புள்ளிகளாக உள்ளன. எனவே அவற்றை தவிர்க்க வேண்டும். இதன்மூலமே, நேர்மறை எண்ணத்தின் முதல் படியை நீங்கள் அடைகிறீர்கள்.

* வாழ்வின் மோசமான பகுதியை கடந்துவிட்டோம், இனிமேல் நமக்கு வசந்தம்தான் என்று நினைக்க ஆரம்பித்தால், எதிர்மறை எண்ணங்களையும் களைய முடியும்.

* நம் வாழ்வை உற்சாகமாக்கும் மாற்றம் நமக்கு வேண்டும். புதிய சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் நமது எண்ணங்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டக்கூடியவை. எனவே, எப்போதுமே புதிய எண்ணங்களுக்கு உற்சாகம் அளிக்க வேண்டும்.

* மருத்துவ அறிவியலில் நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை என்னவெனில், ஒரு நோயாளி என்னதான் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், தனது உடல்நலம் விரைவில் தேறிவிடும், தான் பூரண குணமடைந்து விடுவோம், நமக்கு எந்த சிக்கலும் இல்லை என்று நினைத்தால், அவரின் அந்த எண்ணமும், அவர் குணமடைவதில் குறிப்பிட்ட பங்கை வகிக்கிறது. அதேசமயம், ஒரு நோயாளி, தான் எளிதாக குணமடையப் போவதில்லை, எல்லாம் முடிந்தது, இனி ஒன்றுமில்லை என்று நினைத்தால் அவரின் முடிவுக்கு அந்த எதிர்மறை எண்ணமும் ஒரு முக்கிய காரணமாகிறது.

* மிகவும் மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட பலர், தங்களது அபார நம்பிக்கையால் மீண்டு வந்த வரலாறுகள் ஏராளம். சாதாரண விஷயங்களுக்கே, புல்தடுக்கி இறந்தவர்களும் ஏராளம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

எதிர்மறை எண்ணங்களை ஒழிப்பது எப்படி? Empty Re: எதிர்மறை எண்ணங்களை ஒழிப்பது எப்படி?

Post by ahmad78 Wed 8 Oct 2014 - 15:03

நமது பலம்:

* இந்த உலகில் ஒவ்வொருவருமே, ஒரு தனித்திறமையுடன் பிறக்கின்றனர். ஒருவருக்கு நல்ல நினைவுத்திறன் இருக்கலாம், ஒருவருக்கு விளையாட்டுத் திறன் இருக்கலாம், ஒருவருக்கு குரல் வளம் இருக்கலாம், ஒருவருக்கு சிறந்த ஆராய்ச்சித் திறன் இருக்கலாம், ஒருவருக்கு நல்ல தோற்றப் பொலிவு இருக்கலாம். தனது தனித்திறமையை இளமையிலேயே கண்டுகொண்ட ஒருவர், வாழ்வில் நல்ல உயரத்தை எட்டுகிறார். ஆனால், இதுபோன்றவர்கள் குறைவாகவே உள்ளனர்.

* தோல்வியடைந்தவர்கள், தங்களின் குறைகளையும், தங்களின் சுற்றத்தையும் குறைகூறிக் கொண்டே இருந்து விடுவார்கள்.

* சச்சின் டெண்டுல்கரை உதாரணமாக எடுத்துக்கொண்டால், அவர் சராசரியைவிட குறைவான உயரம் கொண்டவர், ஆனாலும் தனது பேட்டிங் திறமையை சரியான நேரத்தில் அவர் அடையாளம் கண்டதால், அவர் இன்று இந்தளவிற்கு பிரபலமாகியுள்ளார்.

* நாம் கண்ட மற்றும் காணும் பல பிரபலங்கள் தன்னகத்தே பல குறைகளை உடையவர்கள். ஆனாலும் குறைகளை ஒதுக்கித்தள்ளி, நிறைகளைக் கண்டு, அவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியதால் இன்று பெரிய மனிதர்களாக வந்துள்ளனர்.
எனவே குறைகளை மறப்போம்! நிறைகளை மட்டுமே நினைப்போம்! வாழ்வில் வெற்றியடைவோம்! 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=112645


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

எதிர்மறை எண்ணங்களை ஒழிப்பது எப்படி? Empty Re: எதிர்மறை எண்ணங்களை ஒழிப்பது எப்படி?

Post by Nisha Wed 8 Oct 2014 - 15:06

எதிர்மறை எண்ணங்கள் தருவதும் எதிர் வினைகளை த்தான்! நல்ல பதிவு சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எதிர்மறை எண்ணங்களை ஒழிப்பது எப்படி? Empty Re: எதிர்மறை எண்ணங்களை ஒழிப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum