சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஜாமீன் Khan11

ஜாமீன்

Go down

ஜாமீன் Empty ஜாமீன்

Post by ahmad78 Thu 9 Oct 2014 - 14:39

ஜாமீன் Ld2768
சட்டம் உன் கையில்! 

நம் அனைவருக்குமே அமைதியான சமுதாய அமைப்புதான் மனதுக்கு ஏற்புடையதாக இருக்கும். அவ்வாறு அமைதி நிலவ வேண்டுமென்றால், சமுதாயத்தில் குற்றங்களே நடைபெறாமல் இருக்க வேண்டும். அந்த நிலை கனவிலும் ஏற்படுமா என்பது ஐயமே. ஓரளவு குற்றமற்ற சமுதாயம் அமைய வேண்டுமென்றால், குற்றங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். குற்றம் புரிபவர்கள் யாராக இருந்தாலும் உடனுக்குடன் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டியதும் அவசியம். 

உலக மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கும் நிலையிலும், அவ்வாறு குற்றம் புரியும் கயவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரும் சதவிகிதம் மிகவும் குறைவு. அது மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் என்றே கூறலாம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மட்டுமல்ல... எந்த வகை குற்றமாக இருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படும் ஒரு நபர் ஜாமீன் கோருவதும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலையில் முன் ஜாமீன் கோருவதும் சட்டம் அவர்களுக்கு கொடுத்திருக்கும் ஒரு வழிவகையே.

ஜாமீன் (Bail),   முன் ஜாமீன் (Anticipatory Bail)  ஆகியவை அடிக்கடி பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளாக விளங்கும் இன்றைய நிலையிலும், அதன் உண்மையான சட்டரீதியான விளக்கத்தையோ, அதன் செயல்பாட்டையோ அறியாமலேயே பயன்பாடு உள்ளது. ஒரு திரைப்படத்தில் ‘ஜாமீன் என்பது ஒருவகை மீன்’ என்றும் ‘அது எந்தக் கடையில் கிடைக்கிறது என்றே தெரியவில்லை’ என்றும் வேடிக்கையாக ஒரு காட்சி அமைப்பு உள்ளது! குற்றங்கள் பொதுவாக ஜாமீன் கொடுக்கக்கூடியவை (Bailable), ஜாமீன் கொடுக்க இயலாதவை (Non  bailable)  என்றே பிரித்துப் பார்க்கப்படுகிறது. 

நம் நாட்டின் பல சட்டங்கள் ஆங்கிலேயரால் இயற்றப்பட்டு சில சட்ட திருத்தங்களுடன் நடைமுறையில் உள்ளவையே. இந்திய தண்டனை சட்டத்துக்கும் இது பொருந்தும். சமுதாயத்துக்கு எதிரான குற்றங்களையும் அதற்கான தண்டனைகளையும் குறிப்பிடும் சட்டமே இந்திய தண்டனை சட்டம். இதில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் முதல் ஷெட்யூலின் கீழ், ஜாமீன் கொடுக்கக்கூடிய அல்லது ஜாமீன் கொடுக்க இயலாத குற்றங்களாக வகையறுக்கப்பட்டுள்ளன.  குற்றம் இழைத்தவனுக்கு, அது சட்டத்தின் முன் சாட்சியத்தின் அடிப்படையில் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தண்டனை என்பது நிச்சயமாக உண்டு. எந்தவொரு சமுதாயத்திலும் குற்றங்களை தடுப்பதிலும் அதனை குறைப்பதிலும் பெரும்பங்கு வகிப்பது காவல் துறையே. 

குற்றம் நடைபெற்றவுடன் அந்த இடத்தில் காவல் துறையினரின் சேவை அவசியம் தேவை. குற்றவாளியை யாரென கண்டுபிடித்து, தேவையிருப்பின் அவர்களை கைது செய்வது, குற்றம் பற்றிய விசாரணை மேற்கொண்டு துப்பு துலக்குவது... இப்படி...

சட்டத்தின் முன் குற்றவாளியான ஒரு நபருக்கு, ஜாமீன் வழங்கக்கூடிய அதிகாரம் - அதிலும் குறிப்பிட்ட சில குற்றங்களுக்கு மட்டுமே ஜாமீன் கொடுப்பதற்கு - ஒரு காவல் நிலையத்தின் பொறுப்பிலிருக்கும் தலைமைக் காவலருக்கு உள்ளது.  ஜாமீன் கொடுக்கும் அதிகாரம் ஒரு குற்றவி யல் நடுவர் நீதிபதிக்கு இணையானது.   சட்டத்தின் முன் ஜாமீன் கொடுக்கக்கூடிய குற்றம், ஜாமீன் கொடுக்க இயலாத குற்றம் - இவை இரண்டுக்கும் ஜாமீன் வழங்கும் அதிகாரம் இருப்பினும், ஜாமீன் வழங்கக்கூடிய வழக்குகளுக்கு மட்டுமே காவல் துறையினர் ஜாமீன் வழங்கி வருகிறார்கள்.

மரண தண்டனை பெறக்கூடிய குற்றத்துக்கு காவல் துறையினர் ஜாமீன் வழங்காதிருப்பது நலம். முன் ஜாமீன் வழங்குவதற்கு நீதிமன்றங்களுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல் துறைக்கு அந்த அதிகாரம் இல்லை. ஜாமீன் வழங்கக்கூடிய வழக்குக்கு காவல் துறையினர் மூலமோ, குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் மூலமோ, ஜாமீன் அல்லது ஜாமீன் கையெழுத்து போட வருபவர்   (Sureties)   மூலமோ ஜாமீன் வழங்குவது சட்டத்தின் பரிந்துரை. அவ்வாறு கொடுக்கப்படும் நிபந்தனை ஜாமீன் பெறுபவர் நிபந்தனைகளை சரிவர பின்பற்றவில்லையென்றால், அதனை ரத்து செய்யவும் அதிகாரம் உண்டு.  நடைமுறையில் பெரும்பாலான ஜாமீன்கள் நீதிமன்றக் கட்டளைகளின் மூலமாகவே பெறப்படுகின்றன. 

ஜாமீன் கொடுப்பது என்பது சட்டத்தின் வழிமுறை. ஜாமீனை மறுப்பது என்பது ஒரு விதிவிலக்கே. அவ்வாறு ஜாமீன் கொடுப்பதற்கு காவல் துறையோ, நீதிமன்றமோ மறுக்கும் பட்சத்தில் அவ்வாறு மறுப்பதற்கான காரணத்தை பதிவு செய்ய வேண்டும். பொதுவாக... ஒரு வழக்கின் தன்மை, அதன் வீரியம்...குற்றம் சாட்டப்பட்டவரின் எதிராக இருக்கும் சாட்சியம்...குற்றவாளி சாட்சியத்தை அழிக்கக்கூடிய அல்லது கலைக்கக்கூடிய வாய்ப்பு...குற்றவாளியால் சமுதாய அமைப்புக்கு பங்கம் ஏற்படக்கூடிய ஒரு நிலை...குற்றவாளியின் சுதந்திரம் மேலும் குற்றம் புரிய வாய்ப்பாக அமைதல்...இவற்றையெல்லாம் மனதில் இருத்தியே ஜாமீன் வழங்கப்படுகிறது. 

குற்றவாளிகள் ஜாமீன் கிடைக்கப் பெற்றவுடன், ஏதோ குற்றத்திலிருந்தே விடுதலை அடைந்தவர் போல நடந்து கொள்ளும் சில நேரங்களில், கொடுக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதற்கோ, மீண்டும் ஜாமீன் கொடுக்காமல் இருப்பதற்கோ வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. மேலும்...ஜாமீனிலிருக்கும் போது அதே குற்றத்தையோ, புதிய குற்றத்தையோ புரிதல்...விசாரணைக்கு குந்தகம் விளைவித்தல்.சாட்சிகளை கலைப்பது அல்லது பொய் சாட்சி தயாரிப்பது...ஜாமீன் கையொப்பமிட்டவரின் பாதுகாப்பிலிருந்து தப்பிப்பது...காவல் துறையினரின் மீதோ, அரசு தரப்பு சாட்சியின் மீதோ, வழக்குக்கான புகார் கொடுத்தவரின் மீதோ தாக்குதல் நடத்துவது...

காயம் பட்டவரின் உடல்நிலை மாற்றத்தால் ‘ஜாமீன் மறுப்பு குற்றம்’ ஆக மாறக்கூடிய வாய்ப்பு... அதனால் ஜாமீன் மறுப்பு...கீழமை நீதிமன்றம் தவறான ஜாமீன் 
அளித்திருப்பின்...தவறான நபர்களின் ஜாமீன் கையெழுத்து..முன் ஜாமீன்பெரும்பாலான வேளைகளில் குற்றம் சாட்டப் பட்டிருக்கும் நபர் கைது செய்யப்படக்கூடிய வாய்ப்பிருக்கும் ஒரு நிலையில் அதனை தவிர்க்க நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறும் முயற்சியில் ஈடுபடுவது அவர்களை பாதுகாத்துக் கொள்வதற்கே. முன் ஜாமீன் என்பது ஏதோ எளிமையாக கிடைக்கக்கூடிய ஒரு விஷயம் அல்ல. 

குற்றத்தின் தன்மை, குற்றம் சாட்டப்பட்டவரின் நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டே முன் ஜாமீன் வழங்கப்படும். மேலும்...ஜாமீன் மறுக்கக்கூடிய (Non  bailable) வழக்கில்தான் முன் ஜாமீன் கொடுக்கப்படும் செஷன்ஸ் அல்லது உயர் நீதிமன்றத்துக்கு மட்டுமே முன் ஜாமீன் கொடுக்கக்கூடிய அதிகாரம் உண்டு.நீதிமன்றத்தில் கொடுக்கப்படும் முன் ஜாமீன் ஆணையில் ‘ஒருவேளை கைது செய்யக்கூடிய நிலையில் ஜாமீன் தர வல்லதே’ என்று இருக்கும். முன் ஜாமீன் உத்தரவில் அதற்கான கட்டளையும் பிறப்பிக்கப்பட்டிருக்கும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துவரும் இன்றைய நிலையில், சமூக ஆர்வலர்கள் வாயிலாகவோ, ஊடகங்களின் உதவியாலோ குரல் எழுப்பப்பட்ட குற்றங்களே வழக்காக பதிவாகி, விரைவு தீர்வை நோக்கி செல்லக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருப்பதை காண்கிறோம். இவ்வாறான முயற்சி இல்லாமலே எல்லா வகை குற்றங்களும் ஒரே நோக்கில் கையாளப்பட்டால் விரைவான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடத்திலே பிறக்கும்.  சமீபத்தில் பரபரப்பான பாலியல் பலாத்கார வழக்கில் பண பலம், அதிகார பலம் கொண்டவருக்குக்கூட ஜாமீன் மறுக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட்ட செய்திகள் நிச்சயம் பெண்களுக்கு ஒரு நம்பிக்கை கீற்றை கொடுத்திருக்கும். 

எனினும் சாமானியனுக்கும் சட்டத்தின் உதவிக் கரம் நீட்டப்படும் என்பது இன்றளவும் ஒரு எட்டாக் கனியாகவேதான் இருக்கிறது. பொதுவாக பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் தாக்கல் செய்யப்படும் ஜாமீன் மனுக்களின் மீது, காவல் துறையும் நீதித்துறையும் விழிப்புடன் செயல்பட்டு முடிவெடுக்க வேண்டியது அவசியம்.   சமுதாயத்தின் நன்மைக்காக ஒரு தனி மனிதனின் உரிமை பறிக்கப்படும் போது சட்டம் தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறது என்பது திண்ணம். பெரும்பாலும் பெண்களுக்கு எதிராக குற்றம் புரிபவர்களுக்கு, அந்த குற்றத்தின் தன்மையை பொருத்தே ஜாமீன் மறுக்கப்படுகிறது. 

பெண்களுக்கு எதிராக குற்றம் புரிந்து விட்டு ஒரு நபர் முன் ஜாமீனோ, ஜாமீனோ பெற்றுக்கொண்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் எண்ணம் ஈடேறுவது மிகவும் கடினம். ஒரு நல்ல சமுதாயம் அமைதியை விரும்பும் சமுதாயமாக திகழ பெண்மையைப் போற்றி அவர்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்குப் பாடுபட வேண்டும்.    

எந்த வகை குற்றமாக இருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படும் ஒரு நபர் ஜாமீன் கோருவதும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலையில் முன் ஜாமீன் கோருவதும் சட்டம் அவர்களுக்கு கொடுத்திருக்கும் வழிவகையே.


http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=2770&Cat=501


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum