சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

» சோனியா அகர்வால்
by rammalar Tue 28 Jul 2020 - 13:45

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sun 26 Jul 2020 - 7:51

'என் முடிவே சரி! எனக்கு யாரும் புத்தி சொல்ல வேண்டாம்!"  Khan11

'என் முடிவே சரி! எனக்கு யாரும் புத்தி சொல்ல வேண்டாம்!"

Go down

Sticky 'என் முடிவே சரி! எனக்கு யாரும் புத்தி சொல்ல வேண்டாம்!"

Post by Nisha on Sat 11 Oct 2014 - 11:53

எந்த சூழலிலும் தலை கனம் கூடாது என்பதை சொல்லும் ஒரு சம்பவம்


சிலருக்கு தான் முடிவெடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிற எண்ணம் நிலைத்திருக்கும். தன்னைப் பற்றி அவர்கள் பெருமிதப்பட்டுக்கொள்ளும் விஷயமாகவும் அது அமைந்திருக்கும். ஆனால் சூழ்நிலைகள் அவர்களை அறியாமலேயே அவர்களை மோசமாக வழிநடத்தும் போது அந்த பெருமிதம் துணைவராது. தன் முடிவு சரியென்ற நம்பிக்கையில் செயல்பட்டுப் பின் துன்பமுறுபவர்களை நாம் பார்க்கலாம்!

இதற்கு காரணம் எல்லாம் சீராகச் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம் முடிவுகள் சரியாக இருக்கும். ஆனால் அது பற்றிய சிந்தனை நம் கண்களை மறைத்து ஒருவித கர்வத்தைக் கொடுத்துவிடும். அந்த மாயை நம் செயல்களின் மீது தெளிவு கொள்ளச் செய்யாது.பிறருடைய யோசனையைக் கேட்கவேண்டும் என்கிற எண்ணம் தோன்றாது. அத்தகைய மாய வலையில் நாம் சிக்கிக் கொண்டால் பின்னர் நம்முடைய முடிவுகளுக்கும் அதனால் விளையும் நன்மை தீமைகளுக்கும் நாமே காரணமாகி விடுகிறோம்.

அப்படி ஒரு சூழலில் தான் அன்று தர்மராஜன் யுதிஷ்ட்டிரர் இருந்தார். அந்த ஒரு நாள் பாண்டவர்களின் வாழ்வில் பல திருப்பங்களைக் கொண்டு வந்து நமக்கு கீதை கிடைக்கக் காரணமான நாள். மகாபாரத்தில் ஒரு நாள்!

ஆம், அரக்கு மாளிகை சூழ்ச்சியிலிருந்து தப்பிவந்த பாண்டவர்கள் தங்களுக்குக் கிடைத்த காண்டவ வனத்தை நாடாக மாற்றி இந்திரபிரஸ்தம் என்கிற நாட்டை உருவாக்கி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இனி நமக்கு துன்பமில்லை என்கிற மகிழ்ச்சியில் வாழ்ந்து கொண்டிருந்த தருமபுத்திரரை சூதாட அழைக்கின்றான் துரியோதனன். தர்மபுத்திரர் யுதிஷ்டிரரும் அவனது அழைப்பை ஏற்று சூதாட்டக்களத்தில் அமர்கிறார்.
மகிழ்ச்சியான வாழ்க்கை ஓட்டத்தில் சூதுவாதுகள் புரிவதில்லை. காரணம் இங்கே ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். இந்த சூதாட்ட அழைப்புக்கு முன்பாக ஒருநாள் சகுனி வெறுமனே விளையாடிக் கொண்டிருக்கையில் அவ்வழியே வந்த யுதிஷ்ட்டிரனை ஒரு ஆட்டம் போடு எனக் கூப்பிட அந்த ஒரே ஆட்டத்தில் யுதிஷ்ட்டிரன் வென்று சகுனி தோற்கிறார். அதாவது தோற்பது போல யுதிஷ்ட்டிரனிடம் நடிக்கிறார்.

காரணம் இது தான், யுதிஷ்ட்டிரன் தனது முடிவுகள் மீது நம்பிக்கை கொண்டவனாக ஏற்கனவே இருந்து வருகிறார். அவனிடம் ஒரு முறை தோற்றுக் காண்பித்தால் கண்டிப்பாக தனது முடிவுகள் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்கிற மனத்திரை பலமாக விழுந்து விடும் என்று சகுனி நம்பினார். அது பலித்தும் விட்டது.

சகுனி திட்டம் தீட்டிய அந்த நாள் வந்தது. சூதாட்டக் களத்தில் பாண்டவர்கள் ஒரு புறம் துரியோதனன் சகுனி மற்றும் கௌரவர்கள் மறு புறமும் அமர்ந்திருக்க ஆட்டம் துவங்கியது. அந்த வேளையில் துரியோதனன் வஞ்சகமாகச் சொல்கிறான் "அவையோர்களே, என் சார்பாக என் மாமா சகுனி காய்களை உருட்டி விளையாடுவார்." என்று அறிவித்தான். அனைவரும் இதனை ஏற்றுக் கொண்டனர். யுதிஷ்ட்டிரனும் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார். காரணம் ஏற்கனவே யுதிஷ்ட்டிரன் மனதில் சகுனி நம்மிடம் ஒரு முறை தோற்றவர் தானே என்றும் விளையாட்டில் நாமும் அவரை வெல்ல முடியும் என்றும் நம்பிக்கை இருந்தது. ஆனால் யுதிஷ்ட்டிரன் தான் சூழலின் மயக்கத்தில் ஆழ்ந்திருந்ததை உணரவில்லை.

ஆட்டம் துவங்கியது. தன் முடிவுகள் சரியாகத்தான் இருக்கும் என்கிற அவரது நம்பிக்கை பொடிப்பொடியானது. சகுனியின் சூதாட்டத் திறனுக்கு முன்னால் யுதிஷ்ட்டிரன் ஒரு முறை கூட ஜெயிக்க முடியவில்லை. தன் நாட்டை, செல்வங்களை, சகோதரர்களை, ஏன் தன்னையே வைத்து சூதாடி பின் தங்கள் மனைவியையும் வைத்துச் சூதாடி அனைத்தையும் இழந்து தலை குனிந்து நின்றான். சூழலின் மாயத்தோற்றத்தால் , அந்த மாயை தந்த மயக்கத்தால் யுதிஷ்ட்டிரன் தன்நிலை மறந்து தோல்வியுற்று நின்றான். தான் செய்யும் செயல்கள் அனைத்துமே சரியானதாக இருக்கும் என்றும் தன்னுடைய முடிவுகள் எப்போதும் வெற்றியையே தேடித்தரும் என்றும் பிறருடைய ஆலோசனைகள் தனக்குத் தேவைப்படாது என்றும் நினைப்பவர்களுக்கு அந்த நாள் ஒரு பாடமாக இருந்தது.

ஆட்டம் துவங்கும் முன்பாக யுதிஷ்ட்டிரன் ஒரு முறை தனக்கு உதவத் துணை வேண்டுமென்று நினைத்திருந்தால் இந்த சூழல் அப்படியே தலைகீழாக மாறியிருக்கும். துரியோதனன் தனக்குப் பதிலாக தன் மாமா சகுனி விளையாடுவார் என்று அறிவித்த அடுத்த நொடி யுதிஷ்ட்டிரனும் தனக்குப் பதிலாக தன் உறவினனும் உற்ற நண்பனுமான ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கே விளையாடுவார் என கண்ணனை அழைத்திருந்தால் அவன் நாடிழந்திருக்க மாட்டான். தன் சகோதர்களை இழந்திருக்க மாட்டான். மனைவி திரௌபதிக்கு அவமானம் தேடித்தந்திருக்க மாட்டான்.

அந்த ஒரு நாள் சூழல் மயக்கத்தால் யுதிஷ்ட்டிரர் செய்த தவறு குருக்ஷேத்திரத்திற்கு வழிவகுத்தது!

'என் முடிவே சரி! எனக்கு யாரும் புத்தி சொல்ல வேண்டாம்!" என்று உங்கள் அருகில் யாரேனும் பேசுகிறார்களா!


அவர்களிடம் சொல்லுங்கள்!
குருக்ஷேத்திரம் காத்திருக்கிறது!

படித்ததால் ரசித்து சுட்டது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: 'என் முடிவே சரி! எனக்கு யாரும் புத்தி சொல்ல வேண்டாம்!"

Post by பானுஷபானா on Sat 11 Oct 2014 - 13:00

நல்ல பகிர்வு நன்றீ நிஷா

அகம்பாவம் கொண்டவர்கள் அழியத் தான் வேணூம்.

நான் எடுக்கும் முடிவில் எனக்கு ஏதாவது சந்தேகம்னா என் தோழியிடம் தான் கேட்பேன். சரியான முடிவு அவுங்க சொல்வாங்க.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum