சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 13 Aug 2022 - 5:49

» கடவுளின் ஆசி - கற்பனைக் கதை
by rammalar Fri 12 Aug 2022 - 9:53

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 12 Aug 2022 - 6:09

» விலங்குகளின் நடை - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:41

» சின்ன மைனா - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:40

» தமிழ் - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:40

» பச்சைக்கிளி- சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:38

» படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு
by rammalar Sun 7 Aug 2022 - 13:26

» அறி(யா)முகம் – கவிதை
by rammalar Sun 7 Aug 2022 - 13:22

» வாழ்க்கையின்ரகசியம்
by rammalar Sat 6 Aug 2022 - 5:20

» காதல் என்பது தேன் கூடு அதை கட்டுவதென்றால் பெரும்பாடு...!
by rammalar Sat 6 Aug 2022 - 5:16

» சிம்பல்
by rammalar Thu 4 Aug 2022 - 16:58

» பூ மரங்கள் - புகைப்படம்
by rammalar Wed 3 Aug 2022 - 18:22

» ராஜ தந்திரம் வீணாகி விட்டதே...!
by rammalar Wed 3 Aug 2022 - 18:06

» நச்சுனு 10 கடி ஜோக்கு..!
by rammalar Wed 3 Aug 2022 - 10:52

» சாணக்கியன் சொல்
by rammalar Mon 1 Aug 2022 - 5:00

» ஆடை ஒரு போதும் சிறந்த மனிதனை உருவாக்காது!
by rammalar Mon 1 Aug 2022 - 4:57

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 1 Aug 2022 - 2:15

» வாழ்க்கைக்கு நன்று- கவிதை
by rammalar Sun 31 Jul 2022 - 17:29

» இளமையின் ரகசியம் சிரிப்பு தான்!
by rammalar Sun 31 Jul 2022 - 14:22

» இணைய தள கலாட்டா!
by rammalar Sun 31 Jul 2022 - 14:21

» ஆடி மாத தேவி பாட்டு
by rammalar Sun 31 Jul 2022 - 14:20

» தினம் ஒரு மூலிகை- கீரி பூண்டு
by rammalar Sun 31 Jul 2022 - 14:19

» குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்
by rammalar Sun 31 Jul 2022 - 14:18

» நீந்துவதால் முன்னேறுகிறேன்
by rammalar Sun 31 Jul 2022 - 14:18

» மூட்டு வலி நீக்கும் மூலிகை தைலம்
by rammalar Sun 31 Jul 2022 - 14:16

» மீன் வளர்ப்பிலும் வருமானம் பெறலாம்
by rammalar Sun 31 Jul 2022 - 14:15

» எடையைக் குறைக்க உதவும் புளி
by rammalar Sun 31 Jul 2022 - 14:14

» திறமையைக் கண்டறியுங்கள் - மீனா
by rammalar Sun 31 Jul 2022 - 14:13

» கிளீன் கிச்சனுக்கு எலுமிச்சை, சோடா இப்படி யூஸ் பண்ணுங்க!
by rammalar Sun 31 Jul 2022 - 14:12

» சினி துளிகள்!
by rammalar Sun 31 Jul 2022 - 11:08

» 'ஹீ ரோ'வாக நடிக்க பயப்படும், பார்த்திபன்!
by rammalar Sun 31 Jul 2022 - 11:07

» திருமணத்திற்கு பிறகும் எகிறி அடிக்கும், நயன்தாரா!
by rammalar Sun 31 Jul 2022 - 11:06

» ராஜ மவுலியுடன் போட்டி!
by rammalar Sun 31 Jul 2022 - 11:05

» விஜய்க்கு கல்லெறியும், கேஜிஎப் பட நாயகி!
by rammalar Sun 31 Jul 2022 - 11:04

பிஸி பிசாசை விரட்டலாம்! Khan11

பிஸி பிசாசை விரட்டலாம்!

3 posters

Go down

Sticky பிஸி பிசாசை விரட்டலாம்!

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 16:29

பிஸி பிசாசை விரட்டலாம்! Ht2924
செல்லமே

அலைபேசியில் நுரைத்துப் பாயும் குறுந்தகவல்களை விட வேகமாகி விட்டது வாழ்க்கை. ஆறு மாதக் குழந்தை அம்மா வேலை விட்டு வருவதற்கு  காத்திருக்கிறது. சாப்பிட வைக்க ஆயா... கதை, பாட்டு, பாடம், விளையாட்டு எல்லாவற்றையும் யாராவது ஒரு மிஸ்ஸிடம் இருந்துதான் கற்றுக்  கொள்ள முடியும். வாழ்க்கை இன்னும் வேகமெடுக்கும் போது வாடகைத் தாய்களின் கருவறையில் வளர்ந்து, பிறக்க வேண்டிய சூழலுக்கு அனைத்து  குழந்தைகளுமே தள்ளப்படலாம். ‘பிஸி’ என்ற வார்த்தை அன்பின் எதிரியாக வலம் வருகிறது. குழந்தைகளோடு குழந்தைகளாக மாறும் போதுதான் நம்  பால்ய பருவத்தைத் திரும்பப் பெறமுடியும். அந்த மகிழ்வை தொலைக்கத் துணியும் போது பிஞ்சு மனதின் ஏக்கம் சுமந்த கிளைகள் பூக்காமல்,  காய்க்காமல் வெட்டப்படுகின்றன. அப்புறம் எப்படி செல்லங்களின் வாழ்வில் வசந்தம் வீசும்..?

‘பிஸி’ என்ற வார்த்தையே விஷம்தான். நேரத்தை மேலாண்மை செய்வதில் சிக்கல் உள்ளவர்களே அதிகமாக ‘பிஸி’ என்ற வார்த்தையைப்  பயன்படுத்துகிறார்கள். இந்த வார்த்தையை வெல்ல முடிந்தவர்களால் எந்தச் சூழலையும் தங்களுக்கான சொர்க்கமாக மாற்றிக் கொள்ள முடியும்.  எப்போதும் ‘பிஸி’ என்கிற செல்லப் பேயுடன் மல்லுக்கட்டும் பெற்றோர், செல்லங்களுடன் நேரம் செலவிடுவதற்கான தந்திரங்களை விளக்குகிறார்  குழந்தைகள் நல ஆலோசகர் சுகன்யா. 

‘‘வேலைக்குச் செல்லும் தம்பதிகளுக்கு குழந்தைகளுடன் செலவிடும் நேரம் குறைகிறது. அதிகபட்சமாக குழந்தைக்கு 3 மாதங்கள் மட்டுமே அம்மாவின் அரவணைப்புக் கிடைக்கிறது. அதற்குப் பிறகு அம்மா வேலை முடிந்து வந்த பிறகுதான் தாய்ப்பாலே கிடைக்கும். இந்தப் பிரிவு, அம்மா  குறித்த ஏக்கத்தை குழந்தைக்கு அதிகப்படுத்தும். பணிபுரியும் பெண்கள் வீடு திரும்பிய பிறகும் வீட்டு வேலைகளில் மூழ்கி விடுகிறார்கள். எழுந்து  நடந்து, ஓடி விளையாடும் வரை குழந்தை வளர்ப்புக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்ற எண்ணம் பெரும்பான்மையான தந்தைகளுக்கு இருக்கிறது. 

மிகச்சிறு வயதில் பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காத குழந்தைகள் அழுது, அடம் பிடிக்கத் தொடங்குகிறார்கள். தாயின் அரவணைப்புக்காகவே  மெதுவாக சாப்பிடுவார்கள்... ஊட்டிவிடச்சொல்லி தொந்தரவு செய்வார்கள். பெற்றோரின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பும் அத்தனை வித்தைகளும்  இந்தச் சுட்டிகளுக்குத் தெரிந்திருக்கும். இச்சூழலில் குழந்தைகள் அடம் செய்வதாக நினைத்துக் கொண்டு அவர்களிட மிருந்து தப்பிக்க பெற்றோர் தேடும்  வழி ‘டே கேர் சென்டர்’கள்... அடுத்து கேஜி வகுப்புகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். பெற்றோரின் அன்பு தவிர்க்கப்படும் சூழலில் குறும்பும் அடமும் வகுப்பறையிலும் தொடரும். 

குழந்தைகளின் அடம் குற்றமாகப் பார்க்கப்படுகிறது. அது ஒருவிதமான கேட்டல். அடக்கி வைக்கப்பட்ட ஆவல் அணையை உடைத்துக் கொண்டு  வெளிப்படும் போது மனம் காட்டும் வேகம். பணம் சம்பாதிப்பது முக்கியம்... அதை விட முக்கியம் அவர்களுடன் நாம் செலவழிக்கும் நேரம். ஒரு  நாளைக்குக் குறைந்த பட்சம் ஒரு மணி நேரத்தையாவது குழந்தைகளுடன் செலவழிக்க வேண்டும். நேரம் ஒதுக்க வேண்டும் என்ற எண்ணம்  பெற்றோருக்குள் உருவானால் அதற்கான கதவுகள் தானாகவே திறக்கும். அதற்கு பதிலாக குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்க  பெற்றோர் தயாராக இருக்கிறார்கள். இந்தச் சூழலில் குழந்தையின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் தாராளமாகக் கிடைக்கின்றன. நேரத்தை  செலவழிக்க ஏதாவது ஒரு தகவல் தொடர்பு சாதனத்தில் விளையாட குழந்தைகள் விரும்புகின்றன. 

காலப்போக்கில் அந்த சாதனங்களுக்கு அடிமைகளாகி விடுகிறார்கள். திருடுதல், பொய் சொல்லுதல், போதைப் பழக்கத்துக்கு அடிமையாதல் என வளர்  இளம் பருவத்தில் நுழையும் போதே அனைத்து கெட்ட விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள்.  குழந்தைகளிடம்  உருவாகும் நடத்தை மாற்றம் பள்ளி, சமூகம், உறவுகள் என அனைத்து இடங்களிலும் விரும்பத்தகாத சூழலை உருவாக்குகிறது. இந்த எதிர்ச் சூழல்  படிப்பிலும் தோல்வியை உருவாக்கும். குழந்தைகளின் அன்புக்கான ஏக்கத்தை பெற்றோர் புரிந்து கொள்வதே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.  படிப்பில் பிரச்னை என்பதற்காக பள்ளியை மாற்றுதல், நடத்தையை சரி செய்ய கண்டிப்பது, தண்டிப்பது என தவறான ஆயுதங்களை கையில் எடுப்பது  என குழந்தைப் பருவத்தின் இனிமைகளை சிதைத்து விடுகிறார்கள். 

பள்ளி செல்லத் தொடங்கியவுடன் அனைத்து சிறப்பு வகுப்புகளுக்கும் குழந்தைகள் அனுப்பப்படுகிறார்கள். குழந்தை எனும் மயிலிறகை தொட்டு, வருடி,  உச்சி முகர்ந்து, வியந்து கொண்டாடத் தெரியாதவர்களாக பெற்றோர் இருப்பது மிகப்பெரிய சோகம். அந்தக் குட்டி மயிலிறகு, புத்தகம் சுமக்கிறது...  விரல் நோக எழுதுகிறது... மூளைக்குள் தேவைப்படாத விஷயங்களையெல்லாம் சேகரித்துக் கொள்கிறது... மனதில் ஏக்கம் அழுத்தும் போது ஒரு  முத்தம் தேடி தாயிடம் வருகிறது. மயிலிறகின் மெல்லிய அழுகையை கேட்பதற்கான காதுகள் எப்போதும் இருப்பதில்லை. வண்ணம் கரைந்து,  துகள்கள் உதிர்ந்து ஒரு மரக்கட்டை போல ஆகிவிடுகிறது மயிலிறகு. 

அப்பா அலுவலகத்தில் பிஸி, அம்மா சமையலறையில் பிஸி. குட்டிச் செல்லம் ஹோம் ஒர்க்குடன் மல்லுக்கட்டி, அதை முடிப்பதற்கே இரவு எட்டு  மணியாகிவிடுகிறது. எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் நேரத்திலாவது தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்க்கலாம். காலை முதல் நடந்த  விஷயங்களை சொல்வதற்கு குழந்தையை இந்த நேரத்தில் அனுமதிக்கலாம். அந்த இரவு உணவு குழந்தையின் விருப்பமாக அமைந்துவிட்டால் பெற்றோர் தனக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பதை குழந்தை உணர்ந்திருக்கிறது என்று பொருள்.  உணவுக்குப் பின் தாயோ, தந்தையோ  மடியில் படுக்க வைத்து குட்டிக் கதைகளைப் படித்துக் காட்ட லாம். குழந்தை கற்பனைச் சிறகை விரித்துப் பறப்பதற்கான சூழல் உருவாகும். 

அம்மாவின் அன்பைக் குழந்தை புரிந்து கொள்ளும். குழந்தைக்குப் புரியும் வயதில், கதைகளின் ஊடாக அம்மாவும் அப்பாவும் கடந்து வந்த  வாழ்க்கையைச் சொல்ல லாம். குடும்பம், பெற்றோரின் வாழ்க்கைச் சூழலை குழந்தை புரிந்து கொள்ளும். உறவுகளுக்குள் நல்ல பிணைப்பு உருவாகும். காலை நேரத்தில் உணவு தயாரிப்பில் தொடங்கி பல வேலைகள் அம்மாவுக்கு இருக்கின்றன. அதனால் குழந்தையை படுக்கையில் இருந்து எழுப்பும்  பொறுப்பை தந்தை எடுத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி, தேநீர் வேளை, பல் துலக்கி, குளிக்கச் செய்து, கிளம்ப வைத்தல் என பல பணிகளை  குழந்தையுடன் பகிர்ந்து கொள்வது காலை நேர டென்ஷனைக் குறைக்கும். நேர மேலாண்மையை குழந்தைக்கும் பழக்கலாம். 

எவ்வளவு பிஸியான பெற்றோராக இருந்தாலும் இந்த இரண்டு வேளையிலும் மிகச்சரியாக குழந்தைகளுக்கான நேரத்தை ஒதுக்கிவிட்டால் அவர்கள்  மனதைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும். பெற்றோரை பிரியும் ஏக்கம் மறைந்து அவர்களுடன் இருக்கும் நேரத்தின் மீதான தேடல் இனிக்கும்.  சின்னச் சின்ன புன்னகை அரும்புகள் சேர்த்துக் கட்டிய மிகப்பெரிய மலர்ச்செண்டுதானே வாழ்க்கை! நகைப்பதற்கு ஏன் தயக்கம்? உங்கள் மனதில்  இப்போது ‘பிஸி’ பேய் இருக்கிறதா? இல்லையா! அப்பாடா... உங்கள் செல்லம் தப்பித்தது.’’ 
 
 
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=2934


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பிஸி பிசாசை விரட்டலாம்!

Post by rammalar Wed 15 Oct 2014 - 17:18

ம்...ம்...பெற்றால் மட்டும் போதுமா...?
-
பயனுள்ள கட்டுரை
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 20289
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: பிஸி பிசாசை விரட்டலாம்!

Post by Nisha Wed 15 Oct 2014 - 17:26

நானெல்லாம் இதில்விதி விலக்குப்பா! பசங்க பிறக்க முன் முழு நேர வேலை. பிறந்த பின்  இருவரும் மாறி மாறி பார்த்தாலும்  ஒரு நாளில் நான்கு மணி நேரத்துக்கு மேல் வெளியே யாரிடமும் விடவில்லை. 

அதிலும் இரண்டாவது மகள் பிறந்து இரண்டு வருடம்  மகன்  கிண்டர் கார்டன் போக ஆரம்பித்தான். நல்ல வேலையிலிருந்தாலும் அதை விட்டு விட்டு  பிள்ளைகளோட இருந்தேன்.

இந்த இரண்டு வருடங்களும் மாலை நேர வேலை தேடி செய்தேன்.  பணம் வேண்டும்  தான். ஆனால் பிள்ளைகள் வாழ்க்கையோடு ஒப்பிடும் போது பணம் மட்டும் வாழ்க்கை அல்லவே!

இப்பவும் வளர்ந்த பின்னும் மதிய உணவு இரவு உணவு என  அந்தந்த நேரம் எப்படியும் வீட்டில் இருக்க முயற்சிப்பேன். என்ன  ஓடி ஓடி சம்பாதித்தாலும் இந்த வயதில் இழந்தால் அதை மீள பெற முடியாதே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பிஸி பிசாசை விரட்டலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum