Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிரிப்பு வருது.. சிரிப்பு வருது..’ –நடிகைகளின் ‘நம்பிக்கைகள்’
3 posters
Page 1 of 1
சிரிப்பு வருது.. சிரிப்பு வருது..’ –நடிகைகளின் ‘நம்பிக்கைகள்’
-
இந்தி நடிகர், நடிகைகள் மூட நம்பிக்கையில் மூழ்கிப்போயிருக்கிறார்கள். அதை அவர்களே ஒத்துக்கொள்ளவும் செய்கிறார்கள்.
-
பிபாசா பாசு:
-
இவர் தனது புதிய பட வெளியீட்டு விழா ஒன்றுக்கு வந்த அனைவருக்கும் எலுமிச்சை பழமும், மிளகாயும் கொடுத்தார். ஏன் என்று கேட்டதற்கு, ‘இது திருஷ்டி பரிகாரம். மற்றவர்களின் பொறாமையை போக்குவதற்கு’ என்று விளக்கமளித்தார்.
அந்த விளக்கத்தை கேட்டு சிலர் கிண்டலாக சிரிக்க, ‘இது எங்கள் குடும்ப வழக்கம். அம்மாதான் எனக்கு இதை சொல்லிக்கொடுத்தார். புதிதாக எந்த விஷயம் செய்தாலும் எலுமிச்சை பழம், மிளகாய் இல்லாமல் செய்ய மாட்டோம். அதோ பாருங்கள் என் காரை..’ என்று சுட்டிக்காட்டினார். அவர் காரின் முன்னால் எலுமிச்சை பழங்களுடன், மிளகாய் கொத்தாக தொங்கிக்கொண்டிருந்தது.
ஒரு நடிகை அதை பார்த்துவிட்டு கிண்டலடிக்கும் விதத்தில், ‘அந்த காரைவிட நீ அழகாக இருக்கிறாய். அதனால் காருக்கு கட்டி தொங்கவிட்டிருப்பதுபோல் உன் கழுத்திலும் எலுமிச்சை, மிளகாயை கட்டி தொங்கவிட்டுக்கொள்’ என்றார்.
-
அந்த பட விழாவில் எல்லோரும் எலுமிச்சம் பழத்தையும், மிளகாயையும் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றே தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தது கண் கொள்ளாக்காட்சி.
-
------------------------------------------
-
ஈஷா குப்தா:
-
நடிகை ஈஷா குப்தா கைகளில் வித்தியாசமான தாயத்துகளை கட்டிக் கொண்டு, அவர் நடித்த படம் ஒன்றின் வெளியீட்டு விழாவிற்கு வந்தார். அதை பார்த்துவிட்டு பலரும் விசாரித்தபோது, ‘படத்தின் வெற்றிக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட தாயத்து’ என்று தெரிவித்தார். ஒரு படத்தின் வெற்றி ஒரு சிறிய தாயத்துக்குள் இருப்பது அப்போதுதான் எல்லோருக்கும் தெரிய வந்தது.
-
-
ஏக்தா கபூர்:
-
வெற்றிப்படத் தயாரிப்பாளரான ஏக்தா கபூர் ஏகத்திற்கு மூட நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார். ‘டர்ட்டி பிக்சர்’ பட வெற்றிக்கு, பட ரிலீசுக்கு முன் சில புனித ஸ்தலங்களுக்கு தான் சென்று வந்ததுதான் காரணம் என்று அடித்து சொல்கிறார்.
-
அடுத்து அவர் தயாரித்த இரண்டு படங்கள் வெளிவர இருக்கின்றன. அதற்காக மீண்டும் ஒரு புனித ஸ்தல பயணத்திற்கு ரெடியாகிக்கொண்டிருக் கிறார். ‘டர்ட்டி பிக்சர்’ போன்ற கவர்ச்சி படங்களை தயாரித்து பணத்தை குவிக்க, ஆன்மிகம் எப்படி கைகொடுக்கும்?’ என்று ஆவேசப்படுகிறார்கள், ஆன்மிகவாதிகள்.
-
இவர், குறிப்பிட்ட நாடு ஒன்றில் நடக்கும் பட விழாவிற்கு தன் படங்களை அனுப்புவதில்லை. அங்கு திரையிடும் படங்கள் தோல்வி அடைந்து விடும் என்பது அவர் கருத்து. அதுபோல் தனது படங்களுக்கு பெயர் வைப்பதிலும் சில ‘நம்பிக்கைகளை’ கொண்டிருக்கிறார். தான் அதிர்ஷ்டமாக நம்பும் எழுத்துக்கள் வரும்படி பெயர் சூட்டுகிறார்.
-
-----------------------
-
கரீனா கபூர்:
-
கரீனா கபூருக்கு ஒரு விசித்திரமான நம்பிக்கை. தான் எந்தப் படத்தில் நீச்சல் உடை அணிந்து நடித்தாலும் அந்தப் படம் நிச்சயம் தோல்வியடைந்துவிடும் என்று நம்புகிறார். அதனால் அவர் தற்போது எந்த படத்திலும் ‘பிக்னி’ அணிவதில்லை. ‘ஹீரோயின்’ படத்தின் டைட்டில் பாட்டிற்காக 22 விதமான ஆடைகள் தயாரிக்கப்பட்டன. அதில் பிக்னியும் ஒன்று.
-
எல்லா ஆடைகளையும் அணிந்து நடித்தவர் பிக்னியை மட்டும் தீர்மானமாக மறுத்துவிட்டார். படக்குழுவினர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் சம்மதிக்கவில்லை. தோல்வி பயம்தான் அவரை பிக்னி அணியவிடாமல் தடுக்கிறது. ‘படத்தின் வெற்றிக்கும்–பிக்னிக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்பதை அவருக்கு யார் சொல்லி புரியவைப்பது?!
-
----------------------------
-
பரேஷ் ராவல்:
-
‘ஓ மை காட்’ படத்தில் நாத்திகராக நடித்த இவர் நிஜ வாழ்க்கையில் முரட்டுத்தனமான மூட நம்பிக்கை கொண்டவர். அதில் ஒரு சாம்பிள்..
-
படப்பிடிப்பு நடக்கும் எந்த ஒரு இடத்தையும், படப்பிடிப்பு முன்பு சென்று பார்க்கமாட்டார். அப்படிப் போய் பார்த்த படங்கள் எல்லாம் தோல்வியடைந்து விட்டது என்கிறார். அதனால் பரேஷ் ராவலை எல்லோரும் ‘லொகேஷன் ராவல்’ என்று கிண்டலடிக்கிறார்கள்.
-
---------------------------
-
கோவிந்தா:
-
மகளையே மூட நம்பிக்கையால் நடிகையாக்காமல் இருப்பவர் இவர். இவருடைய மகள் நர்தாவிற்கு சினிமாவில் நடிக்க கொள்ளை ஆசை. சல்மான்கானுடன் ஜோடியாக நடிக்க ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால் கோவிந்தா தன்னுடைய ஜோசியக்காரர் சொன்ன தேதியில் தான் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளவேண்டும் என்று அடம்பிடித்தார்.
-
விளைவு ‘‘தபாங்’’ படத்திற்கு உடனடியாக சோனாக்ஷி சின்காவை ஒப்பந்தம் செய்து, குறித்த தேதியில் படப்பிடிப்பை ஆரம்பித்தனர். அதைவிட வயிற்றெரிச்சலான விஷயம் அந்தப் படம் அமோக வெற்றி பெற்றதுதான். பாவம் அந்த அழகுப் பெண்ணுக்கு கிடைக்கவேண்டிய அற்புதமான வாய்ப்பை ஜோசியக்காரர் தட்டிப் பறித்துவிட்டார்.
-
------------------------------
-
அபிஷேக் பச்சன்:
-
இவர் விளையாட்டு மைதானத்திற்கு போய் உற்சாகமாக கிரிக்கெட் பார்க்கும் வழக்க முடையவர். ஒருமுறை வீட்டிலேயே இருந்து டி.வி.யில் கிரிக்கெட் பார்த்தார். அன்று இந்தியா வென்றுவிட்டது. அன்றிலிருந்து கிரிக்கெட்டை டி.வி. யிலேயே பார்க்கிறார். தான் மைதானத்திற்கு போனால் இந்தியா தோற்றுவிடும் என்று நம்புகிறார்.
-
------------------
பர்ஹான் அக்தர்: (சினிமா டைரக்டர்)
-
இவர் கிரிக்கெட் பார்க்கும் போது, ஒரு டம்ளர் தண்ணீர் எதிரில் டீப்பாய் மீது இருந்துகொண்டே இருக்கும். அப்படியிருந்தால்தான் இந்தியா ஜெயிக்கும் என்பது இவர் நம்பிக்கை. அந்த கப் தவறி விழுந்து தண்ணீர் சிந்திவிட்டாலோ, யாராவது எடுத்துக் குடித்துவிட்டாலோ ‘போச்சு.. போச்சு எல்லாமே போச்சு இன்னைக்கு மேட்ச் அவ்வளவு தான்’ என்பார்.
-
அது மட்டுமல்ல, உடனிருந்து கிரிக்கெட் பார்க்கும் யாராவது எழுந்து சமையலறைக்கு போகும்போது விக்கெட் விழுந்துவிட்டால் அவ்வளவுதான். அவர்கள் மேட்ச் முடியும் வரை சமையலறையிலேயே தான் இருக்க வேண்டும். திரும்பிவர அனுமதிக்கமாட்டார். இப்படி ஒரு டைரக்டர்.
-
இதுபோன்ற ‘நம்பிக்கைகள்’ பற்றி முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜீ தெரிவித்த கருத்து:
-
‘‘இது போன்ற நம்பிக்கைகள் பொறுப்பற்றவை. ஒரு பக்கம் விஞ்ஞானம், தொழில்நுட்பம் வளர்ந்துக் கொண்டே போகிறது. மறுபக்கம் இதுபோன்ற மூட நம்பிக்கைகளும் வளர்ந்து கொண்டிருக்கிறது. மனிதர்களுடைய அறிவு மழுங்கி ஏதேனும் ஒரு இடத்தில் வந்து சிக்கிக் கொள்கிறது. நம் ஆழ்மனதில் பதிவு செய்யும் விஷயங்கள் நம்மைச் சுற்றி இயங்கும்போது, அதை நாம் நிஜம் என்று நினைத்துவிடுகிறோம்.
-
தவறான விஷயங்களை ஆழ் மனதிலிருந்து நீக்கி விட்டோமேயானால் மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடலாம். மீடியாக்கள் மக்களுக்கு மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடும் வழிமுறைகளைக் கற்றுத் தரவேண்டும். அதை விட்டுவிட்டு அதை வளர்க்க நினைப்பது சமூக குற்றம். மக்கள் அறியாமையை பணமாக்க நினைக்கக்கூடாது’’ என்கிறார்
==========
நன்றி – தினத்தந்தி
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சிரிப்பு வருது.. சிரிப்பு வருது..’ –நடிகைகளின் ‘நம்பிக்கைகள்’
விவேக் சொல்லும் காமெடி போல இருக்கு...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிரிப்பு வருது.. சிரிப்பு வருது..’ –நடிகைகளின் ‘நம்பிக்கைகள்’
முட்டாள்தனமான சிந்தனைகள்.
இதற்கு மீடியாவும் ஒரு காரணமாக இருக்கின்றன.
இதற்கு மீடியாவும் ஒரு காரணமாக இருக்கின்றன.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» இந்த சிரிப்புல பாருங்க, எத்தனை வகை சிரிப்பு இருக்குன்னு. நமக்கு அதை நெனச்சாலெ சிரிப்பு வருது.
» சிரிப்பு வருது......
» சிரிப்பு வருது
» சிரிப்பு வருது..
» பார்க்க பார்க்க சிரிப்பு வருது மாமு!
» சிரிப்பு வருது......
» சிரிப்பு வருது
» சிரிப்பு வருது..
» பார்க்க பார்க்க சிரிப்பு வருது மாமு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum