Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன்
Page 1 of 1

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்: தண்டனையையும் நிறுத்தி வைப்பு!
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை..
ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு டிசம்பர் 18 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், தண்டனையையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர்.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்து முடிக்க 3 மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தாமதப்படுத்தக் கூடாது என்றும், 3 மாதத்தில் விசாரித்து முடிக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் வழக்கை கருத்தில் கொள்ளும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், 2 மாதத்திற்குள் கோப்புகளை சரிபார்த்து கர்நாடக நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டும் என்றும், வழக்கை தாமதப்படுத்தும் எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன்
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜெயலலிதாவ உள்ளிட்டோரின் 4 ஆண்டு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு 18.12.2014 வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இழுத்தடிக்கக் கூடாது.
கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் 18.12.2014க்குள் மேல்முறையீட்டு வழக்கின் அனைத்து ஆவணங்களையும் அது 35,000 பக்கமோ 40,000 பக்கமோ தாக்கல் செய்தாக வேண்டும்.
18.12.2014ம் தேதிக்குப் பின்னர் ஒருநாள் கூட கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது. மேல்முறையீட்டு வழக்குக்காக ஆவணங்களைத் தாக்கல் செய்வதோடு மட்டுமல்லாமல் தலைமை நீதிபதியிடம் சென்று வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வலியுறுத்தி மனு ஒன்றையும் அளிக்க வேண்டும்.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கின் விசாரணையை கர்நாடகா உயர் நீதிமன்றம் மூன்றே மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
நீதிபதி குன்ஹா கன்னடர் என்பதால் தீர்ப்பளித்துவிட்டதாக எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்கக் கூடாது. நீதிபதி குன்ஹா மட்டுமல்ல நானும் (தத்து) ஒரு கன்னடர்தான்.
நீதிபதிகள் மீதோ, சுப்பிரமணியன் சுவாமி மீதோ எந்த ஒரு விமர்சனத்தையும் அதிமுகவினர் முன்வைக்கக் கூடாது.
தமிழகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களும் சகிக்க முடியாதவை. வன்முறை சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்று அதிமுகவினருக்கு ஜெயலலிதா உத்தரவிடவேண்டும்.
இதற்கு மேலும் நீதிபதிகளை விமர்சிப்பது, சுப்பிரமணியன் சுவாமியை விமர்சிப்பது, மிரட்டுவது, வன்முறைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது அப்படி விமர்சனங்களை முன்வைப்பது அல்லது வன்முறைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதியதாக ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டால் நாங்கள் ஜாமீன் பற்றி மறுபரிசீலனை செய்ய நேரிடும்.
பாலி நாரிமன் மூத்த வழக்கறிஞர் என்பதால் அவரது உறுதிமொழிகளை நம்பி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.

ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியிருந்தும், இன்றே அவர் சிறையில் இருந்து விடுதலையாக முடியாமல் போனது துரதிருஷ்டமே.
ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா தரப்பு தனது வாதத்தை முன் வைத்தது. குறிப்பாக, ஜெயலலிதாவின் உடல் நிலையை காரணம் காண்பித்து, அவரை ஜாமீனில் வெளியே விட வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வக்கீல் பாலி நாரிமன் கேட்டார்.
ஏற்கனவே பரப்பனஅக்ரஹாராசிறை மருத்துவர்களிடமிருந்து தேவைப்படும் மருத்துவ ஆவணங்களை ஜெயலலிதாவின் வக்கீல்கள் பெற்றதால், அந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்
அரசு வக்கீல் இல்லாமலேயே விசாரணையை எதிர்கொண்ட இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. ஆனால் அந்த தீர்ப்பின் பிரதி, சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். சிறப்பு நீதிமன்றம் அதை பரிசீலித்து ஜாமீனுக்கு தேவையான பிணையை பெற்ற பிறகு, பெங்களூர் மத்திய சிறைச்சாலைக்கு ஆர்டர் அனுப்ப வேண்டும். அந்த ஆர்டர் மத்திய சிறை அதிகாரிகளின் கைகளுக்கு சேர்ந்த பிறகே ஜெயலலிதாவை விடுதலை செய்ய முடியும்.
எனவே சிறப்பு நீதிமன்றம், அங்கிருந்து சிறை என இந்த அலைச்சலுக்கு கால அவகாசம் தேவைப்படும். இன்றே அந்த பணிகளை முடிப்பது சிரமம்தான் என்றாலும் சிறை அதிகாரி ஜெய்சிம்ஹா தான் ஆர்டர் வந்ததும் ஜெயலலிதாவை விடுதலை செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்துவிட்டதாக பேட்டி அளித்தார்.
எனவே சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் நடைமுறையை முடித்துவிட்டால் ஜெயலலிதாவை விடுதலை செய்யலாம் என்று அதிமுக தரப்பு குஷியாக இருந்தது.
பிணை கொடுப்பதற்காக தமிழகத்தில் இருந்து வக்கீல்கள் வந்து சிறப்பு நீதிமன்றம் அமைந்துள்ள பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் காத்திருந்தனர். ஆனால் சுப்ரீம் கோர்ட் ஆர்டர் சிறப்பு நீதிமன்றத்துக்கு வராததால் வக்கீல்கள் நகத்தை கடித்தபடி அமர்ந்திருந்தனர். சிட்டி சிவில் கோர்ட் ரிஜிஸ்டார் சந்திரசேகர் மார்கூரை சென்று அவ்வப்போது பார்த்து, ஆர்டர் வந்துவிட்டதா, ஆர்டர் வந்து விட்டதா என்று கேட்டபடி இருந்தனர். சுமார் ஐந்து முறை இவ்வாறு அவர்கள் கேட்டனர். ஆனால் ரிஜிஸ்டரோ, இன்னும் பேக்ஸ் மூலமாக கூட வரவில்லை. நீங்கள் வேண்டுமானால் பேக்ஸ்சை செக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.
இதனிடையே டெல்லி சென்றிருந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா, மதியத்துக்கு மேலே பெங்களூர் திரும்பினார். அவரும் சிவில் கோர்ட்டுக்கு வந்து அலுவல்களில் மூழ்கியிருந்தார். மாலை 5.30 மணியானதும் கோர்ட் நேரம் முடிந்தது. குன்ஹாவும் கிளம்பி சென்றுவிட்டார்.
ஆனால் அதுவரை சுப்ரீம் கோர்ட் ஆர்டர் வராததால் ஜெயலலிதாவை இன்று ரிலீஸ் செய்ய முடியாது என்பது உறுதியாகிவிட்டது. ஆர்டர் காப்பி வந்த பிறகு ஜெயலலிதா நாளைக்குத்தான் ரிலீஸ் ஆகும் வாய்ப்பு உள்ளது. எனவே சிறையில் அடைக்கப்பட்டு 22வது நாள்தான் ரிலீஸ் ஆக உள்ளார் ஜெயலலிதா.
oneindia

Permissions in this forum:
You cannot reply to topics in this forum