சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Khan11

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

+2
நண்பன்
ahmad78
6 posters

Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by Nisha Mon 3 Nov 2014 - 11:21

திரும்பிப்பார்க்கின்றேன்..!

 கடந்த வருடத்தின் இறுதி மாதத்தில்  உள்ளத்தின் ஆழத்தில் உறவுகளால் பெற்ற வலியுடன் தூக்கமில்லா ஓரிரவில் இணையத்தில் உலாவிய வேளையில்  ஏதோ ஒரு உந்துதலில் சேனைக்குள் என்னை  பதிவு செய்தேன். 

நன்றாக நினைவில் இருக்கின்றது! ஒன்று அல்லது ஒன்றுக்கும் இரண்டுக்கும் இடைப்பட்ட நள்ளிரவுப்பொழுதில்   எல்லோரும் அசந்து தூங்கிக்கொண்டிருக்க.. நான் மட்டும்  விழித்திருந்தேன்..ஒளி தரும் விளக்குகள்  இன்றி இருட்டறையில்  மெனிட்டர் வெளிச்சத்தில்  அதிகம் தட்டச்சிட முடியாத  போதும்  தப்பு தப்பாய்  தட்டச்சிட்டு முயன்று  விளையாட்டாய் பயந்து பயந்து  பதிவு செய்தேன்.  பானுஷபானா நடத்துனராயிருக்கும் தளம் என அறிந்தது மட்டுமே தைரியம் தந்தது!

பதிவு செய்து மூன்று மாதம் வரை  இந்த பக்கம் வரவோ.. என்னைக்குறித்த அறிமுகம் தரவோ  என்னுள்ளிருந்த தயக்கம் என்னை தடுத்தபடியே இருந்தது.... 

யாரோ... எவரோ... யாராயிருப்பாரோ...  இன்னும் இன்னும் என்னன்னமோ தயக்கங்கள்! 

மீண்டும் ஓரிரவு! நள்ளிரவு தான்! வீட்டின் அங்கத்தவர் எவருடனாவது பேசி இருக்கலாம். அல்லது யாரேனும் என்னுடன் பேசி இருக்கலாம். மறந்திருந்தால் நினைக்க மாட்டேன்.. நினைக்க செய்தால்  பழையவை அனைத்தும் என் நினைவில் வந்து என்னை  கொல்லும் வலி தரும்.  அப்படியான ஒரு பொழுதினில் ...

  வணக்கம் ... நான் நிஷா என.... ஒரு அறிமுகம்.. அறிமுகத்தில் கூட என்னைக்குறித்து பெரிதாக விபரிக்க தயக்கம்!  எழுத்தும் படிப்பும் என்னுள் ஊறிப்போன நிலையில்  மனதுக்கு ஏதேனும் பெரிய மாற்றம் வேண்டும்.  யோசனைகள் உடல் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைத்த நிலையில்... என்னை நானே நிதானப்படுத்த  பானு இங்கே இருக்கின்றார்... அதுவும் நடத்துனராயிருக்கின்றார் என்பதோடு இலங்கையை சேர்ந்த சிலர் இங்கே  இருப்பதும் தந்த தைரியத்தில்  வணக்க மட்டும் சொன்னேன்!

என்னை  இங்கே முதலாய் வரவேற்ற பானு .. நான் அறிந்த பானுதான் எனும் சந்தோஷமான உரையாடலுடன்... குறுகிய நாட்களே ஆனாலும்  சடுதியில் நம்பிக்கைவைத்து  எனக்குள் நம்பிக்கையை விதைத்து உயிப்பொன்றை தந்த  சம்ஸின் வரவேற்பும்...தொடர்ந்த உரையாடலும்... சேனையில் நான் கண்ட பல எழுத்துபிழைகளை சுட்டிக்காட்டியதும் அதை திருத்திய வேகமும்... தொடர்ந்த பொறுப்புக்களும். .. மாற்றங்களுமாய்.... என்னை மலையின் உச்சியில் கொண்டு போய் வைத்தது எனலாம். 

உள்ளத்தின் ஆழத்தில் உற்சாகம் ஊற்றெடுக்க..  என் மனதுக்கு நான் தேடிய மாற்றம் கிடைக்க.. புதிய தோர் உலகம் நான் காண உதவிய சேனையும் சேனை அன்பின் உறவுகளையும் என்றுமே நான் மறக்க இயலாது!

ஒவ்வொருவர் பற்றியும் சொல்லலாம்.. சொல்லணும்.

Last edited by Nisha on Mon 3 Nov 2014 - 15:50; edited 2 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by ahmad78 Mon 3 Nov 2014 - 11:39

நான் வேறொரு தளத்தில் இருந்தேன். நானும் பானு மூலமாகத்தான் இத்தளத்தில் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டேன்.

தொடருங்கள் நிஷா. படிக்கக் காத்திருக்கிறேன்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by Nisha Mon 3 Nov 2014 - 12:10

 என் வாழ்வில் எந்த விடயம் நடந்தாலும் அவை கடவுள் முன் குறித்தபடிதான் நடக்கின்றது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை என்னுள்!

கடவுள் இழுத்த இழுப்புக்குள் நான் போகின்றேனா!.. என் இழுப்புக்கு அவர் மேல் பழி போட்டு பலி ஆக்குவேனா.. நான் அறியேன்.ஆனால் என்னுள் என்னில் அனைத்தையும் நடாத்துபவன் என் இறைவனே!

துன்பங்கள் வந்தால் ஒன்றிரண்டு நாட்கள் சோர்ந்து ஒடிந்து போவதும்,, மீண்டும் துளிர்த்து சவாலாய் பிரச்சனைகளை எதிர்கொள்வதும் என்னுள் இருந்தாலும்...கடந்த  வருடத்தில் நடந்த பல காயங்களால்.. நம்பிக்கை பொய்த்து  உடன் பிறந்தோரோ, பெற்றோரோ இனி எனக்கென எவருமே வேண்டாம்.. நான் இனி என்னை அனாதை என  சொல்லி கொள்ளப்போகின்றேன் என எனை நான் ஒதுக்கி  உடைந்து  இருந்த நேரம்..... 

நீ  இது வரை இழந்ததுக்கெல்லாம் பல  நூறு மடங்காய் உனக்கு திருப்பி தருவேன்... என சொல்லியேஅன்பாய் ஆறுதலாய்.. அரவணைப்பாய்.. உரிமையாய்.. உறவாய்.. நட்பாய்... என்னுள் உயிர்ப்பாய்.. என்னை உயர்த்தி.. என்னுள்ளத்தில் தீயாய் பற்றிய  ஹாசிம்.... நண்பன்.. இருவர் அன்பும் .. லேட்டாக வந்தாலும்  மனமார்ந்த ஆர்ப்பாட்ட வரவேற்பும் தந்து என்னை  தம் பாசத்தால் மூழ்கடித்தவர்கள். 

வந்த அன்றிலிருந்து இன்று வரை அக்கா அக்காவென  அக்காவெனும் அழைப்பில் அத்தனை அன்பையும் அள்ளி தரும் தம்பியாய் நண்பன் ... இவர் குறித்து சொல்ல என்னுள் வார்த்தை இல்லை.  இன்றைய நிலையில் என்னை விட என்னவரையும் தன் அன்பால் கவர்ந்து கட்டி போட்டு வைத்திருக்கும்  தங்ககம்பி.  மனதில் ஆயிரம் கவலை இருந்தாலும் அதை வெளிக்காட்டாது  அனைவரையும் உற்சாகப்படுத்தி  உதவிடும் என் செல்லமான தும்பி!

சேனையில் நான் இன்று நிலைக்க காரணமானவை.. 
சம்ஸ் என் மேல் வைத்த நம்பிக்கைக்கு உண்மையாய் இருக்கணும் எனும் என்  உணர்வு எனில்...பற்றோடு பற்றாய் பற்றென சேனையைபற்றித்தொடர காரணமாய் என் பின் இருப்பவன்... நண்பன் தும்பி தான். ஒரு நாள் வரவிலலை என  மறு நாள் அக்கா தினம் வந்து 2 பதிவாவது இட்டு செல்.. என வேண்டலும்..  என்னை தேடவும்..  என்னை புரிந்திடவும்  நான் இருக்கேன் என தந்த நம்பிக்கையும்... இதோ இங்கே என் பத்தாயிரமாம் பதிவை நான் இட காரணமாய் இருந்தது என்பேன்!

முஹைதீனை சொல்லாமல் விட்டால் என்னை நான் கொண்ட அன்பை புரிந்துக்கலலியா சின்னப்பிள்ளை என  இவர் தான் முன்னர் மௌன சாமியார் மாதிரி  இருந்தாரா என அசர வைத்ததை  மீறி சிலித்தெழும்பினாலும் எழும்புவார்!  ஒரு வார்த்தை சொன்னால்  போதும் அதை  மீறாமல் செய்வதும்,  உதவி என சென்றால் இல்லை எனாது உதவுவதுமாய் என்னுள்ளத்தில் உயர்ந்திருப்பவர் முஹைதீன். 

ஜானி எனும் சுறாவை சொல்லாமல் நான் பத்தாயிரம் பதிவை பூர்த்தி செய்ய முடியுமோ...தம்பி என வந்தாலும்.. என் வேண்டுதலுக்காய் நட்பூக்கு மதிப்பு தந்து சுறாவாய் அவதாரமெடுத்த அன்புக்கு நன்றி சொல்ல முடியுமா?

பர்சான்..பல்கலையில் பயின்ற பச்சைக்குழந்தை.. கொஞ்சம் பிடிவாதம், கல்வி தந்த கனமுமாய் கவிதை தவிர வேறெங்கும் வரேன் என்பவர்.. 

முனாஸ்.. பொதுத்தொண்டை தன் உயிர்ப்பாய் கொண்டு சேனைக்கும் தன் பொழுதை தருபவர்.  நான் மதிக்கும் தங்க தம்பியின் அண்ணனாய் எனக்கும் தம்பியானவர்!

  கொஞ்ச நாள் வந்தாலும்  சேனையில் தஞ்சமாயான ஜலீல் சார்

பல சொதி ஸ்பெஷல் றினோஸ் அன்பும் 

ராம் மலர் ஐயா, இனியவன்,, முஹமத், ராகவன், மீனு, , ஜாஸ்மின் , துறைவன் சார், கவியரசு...இன்னும் இன்னும் நான் மறந்த என்னை மறக்காத சேனைக்கும் சேனை அன்பு உறவுகள் அனைவருக்கும் என் பத்தாயிரமாவது பதிவு சமர்ப்பணம்!)(()((

பத்து மாதம் முடியுமுன்னே பத்தாயிரம் 
பதிவை நானிட எனை ஊக்கியாக்கிய 
பத்தரை மாற்றுத்தங்கங்களே
பத்திரமாய் என்னுயிரை பொத்தி வைக்கும் 
வித்தகர் நீங்களல்லோ!
கடந்து வந்த பாதையதில் கசப்புக்களை
மறந்திருக்க.. கடுகளவும்  கவலை என்னை
சூழாத அரணானீர்.. கனவாகிபோக அன்பை 
நன்வாக்கி தந்தவர்கள்!
கல்லுக்குள் ஈரம் போல.. கசிந்து இருக்கும் 
உங்கள் அன்பில் கரைந்தே தான் நான் போனேன்!
அத்தனைக்கும் சேர்த்து நிதம் 
எத்தனை தான் நன்றி சொல்வேன்! 
நன்றி எந்தன் நட்பூக்களே!

)(( )(( என் பத்தாயிரமாய் பதிவை
 உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றேன். 
 நன்றி நன்றி! )(()((

Last edited by Nisha on Tue 4 Nov 2014 - 0:35; edited 2 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by Nisha Mon 3 Nov 2014 - 12:17

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! 10393966_532147256922116_1928908992256040897_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by நண்பன் Mon 3 Nov 2014 - 18:33

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by சுறா Mon 3 Nov 2014 - 19:30

ஜானி எனும் சுறாவை சொல்லாமல் நான் பத்தாயிரம் பதிவை பூர்த்தி செய்ய முடியுமோ...தம்பி என வந்தாலும்.. என் வேண்டுதலுக்காய் நட்பூக்கு மதிப்பு தந்து சுறாவாய் அவதாரமெடுத்த அன்புக்கு நன்றி சொல்ல முடியுமா?

உண்மையாவா சொல்றீங்க! நான் இல்லைன்னா 10000 தாண்டியிருக்க மாட்டீங்களா?

உண்மையிலும் உண்மை. உங்களுக்காகவே மு.மன்றம் வந்தேன். பிறகு இப்போது சேனை வருகிறேன். :)  - நீங்க என் ஆருயிர் தோழியாச்சே

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by Nisha Mon 3 Nov 2014 - 20:14

சுறா wrote:ஜானி எனும் சுறாவை சொல்லாமல் நான் பத்தாயிரம் பதிவை பூர்த்தி செய்ய முடியுமோ...தம்பி என வந்தாலும்.. என் வேண்டுதலுக்காய் நட்பூக்கு மதிப்பு தந்து சுறாவாய் அவதாரமெடுத்த அன்புக்கு நன்றி சொல்ல முடியுமா?

உண்மையாவா சொல்றீங்க! நான் இல்லைன்னா 10000 தாண்டியிருக்க மாட்டீங்களா?

உண்மையிலும் உண்மை. உங்களுக்காகவே மு.மன்றம் வந்தேன். பிறகு இப்போது சேனை வருகிறேன். :)  - நீங்க என் ஆருயிர் தோழியாச்சே

கடைசி இரண்டாயிரத்தை வேகமாய் இட  உங்கள் பங்களிப்பும் ஆர்வமும் ஊக்கமும்  எனக்கு உந்து சக்தி தான் ஜானி!

அதற்கு நன்றி!  சில நேரம் வேலை அதிகமாகும் போது என்னால் கலகலவென எழுத தட்டச்சிட முடியாது! நெட் வந்து படித்து செல்லுவேன்.  மூளை களைத்து போகும் நிலை. சும்மா இல்லை  ஆர்டர் பார்ட்டி என வந்தால்  24 மணி நேரம் தூக்கம் கூட இல்லாமல் சுழல்வேன். அதிலும் வியாழன்  தொடங்கி ஞாயிறு வரை ரெம்ப  ரெம்ப இறுக்கமாய் இருக்கும்.

அப்போதெல்லாம் இங்கே வரும் போது மனதுக்கு புதிய டானிக் குடித்தது போல் இருக்கும். காலை  எத்தனை மணிக்கு ஹோட்டல் போகணும் எனினும் அதற்கு ஏற்க அரைமணி நேரமாவது முன்னாடி எழும்பி இங்கே வந்து சென்றால் ஸ்ரெஸ்,  அதனால் வரும் கோபம் கம்மியாகி விடுகின்றது.  

அனைத்துக்கும் காரணம் நீங்கள் அனைவரும் தானே! மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் உங்கள அனைவருக்கும் நன்றி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by சுறா Mon 3 Nov 2014 - 20:18

நன்றி நன்றி. நீங்க சந்தோசமா இருக்கீங்கல்ல அது போதும் :)

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by Nisha Mon 3 Nov 2014 - 20:19

நண்பன் wrote:

அருமையான உள்ளம் நிறைந்த வாழ்த்துப்பாவுக்கு நன்றிப்பா!

எத்தனை ஆயிரம் காரணம் காரியங்கள் இருந்தாலும் தினம் எழும் முன் வரும் காலை வணக்கத்துக்கு முன் எதுவுமே மனசை நிறைப்பதில்லை தும்பியே! தினமும் உங்கள் அன்பு வாழ்த்தோடு நாளைத் தொடங்குதல் எத்தனை நிறைவாய் இருக்கின்றது.

என் அன்பின் உற்சாக ஊற்றாய் நீங்கள் இருக்கிங்களேப்பா! அக்கா எனும் அழைப்பில் இத்தனை சக்தி இருக்கும் என நீங்கள் அக்கா என அழைக்கும் போது தானே உணர முடிகின்றது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by Nisha Mon 3 Nov 2014 - 20:20

சுறா wrote:நன்றி நன்றி. நீங்க சந்தோசமா இருக்கீங்கல்ல அது போதும் :)

மனப்பாடம் செய்து வைத்திருக்கிங்களா இந்த வார்த்தையை!

Post by சுறா Mon 3 Nov 2014 - 20:21

Nisha wrote:
சுறா wrote:நன்றி நன்றி. நீங்க சந்தோசமா இருக்கீங்கல்ல அது போதும் :)

மனப்பாடம் செய்து வைத்திருக்கிங்களா இந்த வார்த்தையை!
இது உள்ளத்தில் இருந்து வருவதால் மனப்பாடம் தேவையில்லை ஹாஹாஹாஹ
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by Nisha Mon 3 Nov 2014 - 20:24

சுறா wrote:
Nisha wrote:
சுறா wrote:நன்றி நன்றி. நீங்க சந்தோசமா இருக்கீங்கல்ல அது போதும் :)

மனப்பாடம் செய்து வைத்திருக்கிங்களா இந்த வார்த்தையை!
இது உள்ளத்தில் இருந்து வருவதால் மனப்பாடம் தேவையில்லை ஹாஹாஹாஹ

ஓஹோ! உங்களிடமிருந்தும் ஏதோ மிஸ்ஸிங்காய் இருந்தது போன வாரம்! நிஜமாகவே வேலைப்பளுதானோ?

ஆயிரம் ஆயிரம் சம்பாதித்தாலும் மனம் நிறைந்து சிரிக்க சிந்திக்க பேச புரிதலுடன் இருக்கும் நட்புக்கும் அன்புக்கும் முன் அனைத்துமே தூசி தானே ஜானி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by சுறா Mon 3 Nov 2014 - 20:29

உண்மைதான். பணம் எல்லாவற்றையும் பெற்றுத்தராது என்று எனக்கு தெரியும்.

நாளை விடுமுறை அதனால் இப்ப ரொம்ப பிரி  ))&
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by Nisha Mon 3 Nov 2014 - 20:31

ஓ அது சரி! நாளை செவ்வாய்க்கிழமை என்ன விடுமுறையாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by சுறா Mon 3 Nov 2014 - 20:34

Nisha wrote:ஓ அது சரி! நாளை செவ்வாய்க்கிழமை என்ன விடுமுறையாம்?

நாளை மொகரம் பண்டிகை. அரசாங்க விடுமுறை  i*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by Nisha Mon 3 Nov 2014 - 20:36

ஓ பானுவுக்கும் லீவா? சரி சரி!

தும்பி சொல்லவே இல்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by சுறா Mon 3 Nov 2014 - 20:38

Nisha wrote:ஓ பானுவுக்கும் லீவா? சரி சரி!

தும்பி சொல்லவே இல்லை!
முகரம் பண்டிகை தெரியாதா?  ))& ))& ))&
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by Nisha Mon 3 Nov 2014 - 20:42

சுறா wrote:
Nisha wrote:ஓ பானுவுக்கும் லீவா? சரி சரி!

தும்பி சொல்லவே இல்லை!
முகரம் பண்டிகை தெரியாதா?  ))& ))& ))&

நான் நிரம்ப விடய்ம இப்பத்தான் அறிகின்றேன்பா! ஒரு கூட்டுக்குள் இருந்திட்டேன்! சேனை வந்த பின் நிரம்ப விடயம் ஒவ்வொருவிதங்களில் வித்தியாசமாய் அறிய புரிய முடிகின்றது.

முன்னர் இந்த விழாக்கள் விபரங்கள் குறித்து தெரியாதுப்பா. )* )* )* )* )*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by சுறா Mon 3 Nov 2014 - 20:44

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:ஓ பானுவுக்கும் லீவா? சரி சரி!

தும்பி சொல்லவே இல்லை!
முகரம் பண்டிகை தெரியாதா?  ))& ))& ))&

நான் நிரம்ப விடயம் இப்பத்தான் அறிகின்றேன்பா!  ஒரு கூட்டுக்குள் இருந்திட்டேன்! சேனை வந்த பின் நிரம்ப விடயம் ஒவ்வொருவிதங்களில் வித்தியாசமாய் அறிய புரிய முடிகின்றது.

முன்னர் இந்த  விழாக்கள் விபரங்கள் குறித்து தெரியாதுப்பா. )* )* )* )* )*

தற்போதைய ஈராக் நாட்டில் அடங்கிய கர்பாலா என்ற இடத்தில் நபிகள் நாயகம் முகமதுவின் பேரனான இமாம் ஹூசேன் (ரஜி அன்) மற்றும் அவரின் குடும்பத்தினர் இஸ்லாமிய மத கட்டளையைப் பாதுகாக்கும் பொருட்டு தங்களின் இன்னுயிரை ஈந்து தியாகம் புரிந்த நாளே முகரமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by Nisha Mon 3 Nov 2014 - 20:47

அப்படியா? தகவலுக்கு நன்றி ஜானி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by முனாஸ் சுலைமான் Mon 3 Nov 2014 - 22:53

உங்கள் நினைவுகள் படித்துக்கொண்டிருந்தேன் என் நினைவுகளை மறந்து விட்டேன் அக்கா....
உண்மைதான் நினைவுகள்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு படிப்பினையை கொடுக்கிறது..
சேனையின் ஆரம்பம் ஒரு நினைவாக சுட்டிக்காட்டியிருக்கும் நீங்கள்
அனைவரையும் பெயர் விடாமல் கூறியிருப்பதும்
உங்கள் அன்பான தன்மையைக்காட்டுகிறது..
வாழ்த்துக்கள் நிஷாக்கா சேனையின் உறவுகள் என்றும் சேனையின் சொந்தங்களாக சந்தோசமாக  இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்..
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by Nisha Tue 4 Nov 2014 - 10:03

முனாஸ் சுலைமான் wrote:உங்கள் நினைவுகள் படித்துக்கொண்டிருந்தேன் என் நினைவுகளை மறந்து விட்டேன் அக்கா....
உண்மைதான் நினைவுகள்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு படிப்பினையை கொடுக்கிறது..
சேனையின் ஆரம்பம் ஒரு நினைவாக சுட்டிக்காட்டியிருக்கும் நீங்கள்
அனைவரையும் பெயர் விடாமல் கூறியிருப்பதும்
உங்கள் அன்பான தன்மையைக்காட்டுகிறது..
வாழ்த்துக்கள் நிஷாக்கா சேனையின் உறவுகள் என்றும் சேனையின் சொந்தங்களாக சந்தோசமாக  இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்..

ரெம்ப நன்றி முனாஸ்! 

உங்கள் அனைவரின் அன்புக்கும் முன் நான் எம்மாத்திரம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by Nisha Sat 8 Nov 2014 - 0:07

இன்னும் எவ்வளவோ எழுதணும் என நினைத்து தான் இந்த திரியை ஆரம்பித்தேன்! 

நமக்கு சில நேரம் சிலரை  பார்த்தவும் பிடிக்கும். சிலரை  பிடிக்காது!  சில நேரம் பார்க்காமல்  அவர்கள் வார்த்தைகள் கொண்டே நம் மனதைக்கவர்பவர்களும் உண்டு.  வார்த்தைகள் இன்றியே  மனதுக்கு பிடிக்காமல்   போனவர்களும் உண்டு. 

பழகிய பின் அவர் தம்  சுபாவங்கள் குணங்கள் அறிந்து வெறுக்க நினைத்தாலும் வெறுக்க முடியாமல் மனதோடு ஒன்றியவர்களும் உண்டு.  வெறுக்ககூடாது என மனசை அடக்கினாலும் நேசிக்க முடியாதவர்களாயும் பலர் உண்டு.

என் வாழ்விலும் அனைத்தும் உண்டு. கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என நோக்கின ...  கடந்த காலம் என்பது எதிர்காலத்துக்கான பாடமாய்  நாம் எடுத்து கொள்ள வேண்டி ஒன்றாய் இருப்பதை மறக்க முடியாது! 

 கடந்து போன  2009  ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையான இணைய வாழ்வில்... நான் பெற்றதும் கற்றதும் நல்லதாகவே இருந்தது.  நல்லதாய் இருந்தது என்பதை விட நல்லதை மட்டும் தேடி தெரிந்து கொண்டேன். 

நல்லதல்லவை என தோன்றிய இடத்தையோ நல்லவராயிராதிருப்பார் என என் உணர்வில் உணர்த்தப்பட்டோரையோ என் நட்பிலோ அறிமுகத்திலோ கூட சேர்த்ததில்லை. முகதாட்சன்யம் இன்றி  மறுத்து விலகி விடுதலே என் இயல்பு. 

ஆனாலும் நான் ரெம்ப பழகி நேசித்தோரை விரல் விட்டு எண்ணி விடலாம். 

நேசித்தோரை இறுதிவரை வெறுக்காது நேசித்திடத்தான்  இறைவனிடம் பொறுமை கொடு இறையே என வேண்டுகின்றேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by Nisha Sat 8 Nov 2014 - 0:38

இங்கே நண்பன் எனும் முஸம்மிலில் அன்பைக்குறித்து  நினைத்து பார்க்கின்றேன்.. 

நான் சேனை வந்து முதல் இரு மாதம்  யாரென்றே இவரை தெரியாது.  ஆரம்பத்தில் நெருங்கவும் இல்லை.  விலகி நின்ற ஒருவர்... என்னை என் வரவை பிடிக்காது ஒதுங்கிக்கொண்டாரோ என நான் நினைத்து கலங்கிய ஒரு உறவு இவர். 

ஏனெனில் அப்படி நான் வந்த நேரம் வந்தோர் எல்லாம் நண்பன் எங்கே நண்பன் எங்கே என கேட்கும் போது எனக்குள் சிறு பொறாமை உணர்வு வந்து கோபத்தை தந்ததென்னமோ உண்மை! 

நாங்கள் இத்தனை பேர் இருக்க வீம்பு பிடித்து  வராமல் இருப்பவரை குறித்து பேசிட்டிருக்காங்களே என நினைத்திருக்கேன். ஆனால் ஆனால் அப்படி நினைத்த நானே நண்பன் இல்லாத  அல்லது நண்பன் வராத சேனையை நினைத்து கூட பார்க்க முடியாமல் இருக்கின்றேன். 

நண்பனால் மட்டும் எப்படி இப்படி சாத்தியமாகின்றது.  மன்ம் திறப்போம் அகம் நிறைவோம் திரியின் கேள்வியில் சேனை உறவில் யாரை சந்திக்க ஆசைப்படுகின்றீர்கள் என கேட்டால் ஒட்டு மொத்த பதிலும் நண்பனை சந்திக்கணும் என சொல்வதேன் என என்றாவது யோசித்திருக்கின்றோமா..! 

நண்பன் என்பவனும் நம்மைபோல் சாதாரண  இரத்தமும் சதையுமான மனிதன் தானே? அவனால் மட்டும் எப்படி இப்படி அனைவரையும் நேசித்து அனைவராலும் நேசிக்கப்படுபவனாய் இருக்க முடிகின்றது என யோசித்திருக்கின்றோமா? 

அப்படி நாம் யோசித்திருந்தால்... நம்முடன்  நண்பன் என்பவன் பழகும் முறை ,ஒவ்வொருவரையும்  அவர் தம் மன்ம் கோணாது  கவர்ந்திடும் காரணம் என்னவென புரிந்திருப்போம்.! 

நான் யோசித்து பார்த்தேன்!.. தன் மனதில் ஆயிரம் கவலைகள் கஷ்டங்கள் இருந்தாலும்.  என் ஒரு வரியில் மனமுணர்பவனாய், என்னாச்சு? ஏதாச்சு?  உடல் நிலை சரியில்லையா? வேலை அதிகமா?  ஏன் வரவில்லை என ஆயிரமாயிரம் அன்பும் அக்கறையும் நிறைந்த இவன் கேள்விக்கு  பதில் சொல்லாமல் இருக்க முடியாத படி கட்டிபோடும் அன்பை  கொண்டவன்! 

இவன் அன்பும் அக்கறையும் பாசமும் கிடைத்தமைக்காக கடவுளுக்கும்  கிடைக்க செய்தமைக்காக சேனைக்கும்  நன்றி சொல்கின்றேன். 

இந்த தம்பியிடம் எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்த விடயம்.. நாம் ஒரு விடயமாய் அவனுக்கு மெயிலிட்டாலோ.. கேள்வி கேட்டு தனி மடலிட்டாலோ... நாம் கேட்ட எந்த விபரத்தையும் தவிர்க்காது  கவனித்து விளக்கம் தருவதும் நன்றி சொல்வதும். 

ஒருவர் இடும் மடலுக்கு மேசேஜுக்கு அவாய்ட் செய்யாது நாம் பதிலிடுவதன் மூலம் நாம் அவர்கள் மதிப்புக்குரியவர்களாய் அவர்கள் மனதில் சிம்மாசனமிடப்பட்டு அமர்த்திவைக்கப்படுகின்றோம் எனும் வாழ்க்கைப்பாடம் அறிந்தவன் இவன். 

சூழலில் கேட்கும் அனைத்துக்கும் பதில் தர முடியாவிட்டாலும் மடல் கண்டேன் விப்ரமாய் பதில் தருவேன். பொறுத்திருங்கள்,எனும் விபரம் சொல்வதும்,, சொன்ன படி  பதில் தருவதிலாகட்டும் எனக்கு  ரெமப் பிடித்த குணம் இது. 

இக்குணத்தின. நான் ஹாசிம்,  முஹைதீன்,  ஜானி, பானு,முனாஸ், பர்சான், போன்றோரிடமும்  கண்டிருக்கின்றேன். அதனால் தானோ என்னமோ இவர்கள் அனைவருமோ என் நேசிப்புக்குரியவர்களாய் ஆனார்கள். 

தம் தேவைக்கு மனித அன்பை வசப்படுத்தி பயன் படுத்தி பழகிவிட்டு விலகிசெல்லும் இவ்வுலகில் நண்பன் போல் ஒரு அன்புறவு கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ? 

என்னை மட்டுமா? என்னவரையும்  தன் அன்பால் கட்டிப்போட்டு.. உன் தம்பி, என் மைத்துனர் என உரிமையாய் பேச வைக்கும்  படி எங்களில் ஒருவனாய் மாறிய நண்பனை தந்த சேனைக்கு நன்றி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by பானுஷபானா Sat 8 Nov 2014 - 9:30

அப்பாடா எவ்ளோ விசயம் உன்னிப்பா கவனிச்சிருக்கிங்க. உங்களுக்கு நாங்க தான் நன்றி சொல்லனும் நிஷா.

ஆரம்பத்தில் சேனைப் பற்றீ நீங்க விசாரித்ததும் எனக்கு பயமாகிடுச்சு. எங்கே வராம போயிடுவிங்களோன்னு.

விவரம் சொன்னது சொல் பேச்சு கேட்கும் சின்னக் குழந்தையாய் இங்கே வந்து அனைவரின் அன்பை பெற்றூ வீறு நடை போட்டுக் கொண்டிருக்கும் நிஷா வாழ்க.

எங்களுக்குமே குறீப்பாக எனக்கு நீங்க சேனை வரவில்லையென்றால் ரொம்ப கவலையா போயிடும்.

உங்க அன்பால் அக்கறையால் எங்களை கட்டிப் போட்டு வச்சிருக்கிங்க...சிறந்த வழிகாட்டியாகவும் எங்களுக்கு இருக்கிங்க.

இந்தப் பதிவு படித்ததும் பெருமையாவும் மனநிறைவாகவும் இருக்கு.

தொடர்ந்து இணைந்திருந்திருக்க வேண்டுகிறேன்.

அன்புடன் பானு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு!  நிஷா! Empty Re: திரும்பிப்பார்க்கின்றேன்! என் பத்தாயிரமாம் பதிவு! நிஷா!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum