Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
மக்கள் வளர்க்கும் மரக் குழந்தைகள்!
2 posters
Page 1 of 1
மக்கள் வளர்க்கும் மரக் குழந்தைகள்!
-
-
திருச்சி மாவட்டம் கே.கே. நகரிலிருந்து ஐந்து கி.மீ.
தொலைவில் சற்றே உள்ளடங்கியுள்ள கிராமம் ஓலையூர்,
இந்தக் கிராமத்தில் திரும்புகிற பக்கமெல்லாம் ஐந்தடி,
ஆறடி உயரத்துக்கும் மேலாகப் பசுமையாக வளர்ந்து
நிற்கின்றன பலவகை மரங்கள்.
-
இவை அனைத்தும் எங்கிருந்தோ மரக்கன்றுகளாகப்
பெறப்பட்டவை அல்ல, அவ்வூர் மக்கள் தாங்களே
மரங்களைக் குழந்தைகளாக நினைத்து நட்டு வளர்த்து
வருகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் அதன் நோக்கத்தை
அறிய விரைந்தோம்.
-
முந்நூறு வீடுகள், மக்கள் தொகை 1200 பேர்களைக் கொண்டது
ஓலையூர் கிராமம். ஊரைச் சுற்றிலும் கருவேல மரங்கள்
ஆக்கிரமித்து வறண்டிருந்தது ஊர். வேறு வகையான
மரங்களையும் நட்டு வளர்த்தால்தான் கிராமத்தின் சற்றுச்
சூழலுக்கு உறுதுணை, ஊரும் பசுமையாக விளங்கும் என்று
நினைத்தார் ஓலையூர் கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் பாஸ்கரன்.
-
தம் திட்டத்தை ஓலையூர் கிராமத்துகட்பட்ட முடிகண்டம்
ஊராட்சி மன்றத் தலைவர் வேலுச்சாமியிடம் தெரிவித்தார்.
அவர் ஊர் மக்களிடம் தெரிவிக்க, மக்களே தங்கள் ஊரைத்
தத்தெடுத்து மரக் குழந்தைகளை விதைத்து வருகிறார்கள்.
-
“ஒரு வருடம் முன்பாக திருச்சியில் மரங்கள் வளர்ப்பு
குறித்தான பயிற்சிப் பட்டறையை ஈஷா யோகா மையத்துடன்
பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து நடத்தியது.
அந்தப் பயிற்சியில் நானும், என்னுடைய பள்ளி மாணவர்கள்
இருவரும் பங்கேற்றோம். ஒரே நாள் பயிற்சியில் மிகவும்
நிறையவே சொல்லித் தந்தார்கள். நாங்கள் கிளம்பும்போது
என்னிடம் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மர விதைகள்
தந்தார்கள்.
-
இயல்வகை, தூங்குவகை, இலை புரசு, காட்டுத்தீ, மஞ்சள்
கொன்றை, நீர் மருது, சொர்க்கம், குமிழ் தேக்கு, பூவரசு ஆகிய
ஒன்பது வகை மரங்களின் விதைகள் என்னிடம் தந்தார்கள்.
-
பள்ளிக்குக் கொண்டு வந்தேன். தலைமை ஆசிரியர் மற்றும்
இதர ஆசிரியர்களிடம் இது குறித்து கூறினேன். மாணவ -
மாணவியரைக் கொண்டே அந்த விதைகளை பகுதி பகுதியாக
மரக்கன்று நாற்றுகளாக வளர்த்தோம்.
ஒவ்வொரு மாணவ-மாணவியர்க்கும் மூன்று மரக்
கன்றுகளைத் தந்து, அவரவர் வீடுகளில் நட்டு வளர்க்கச்
செய்யலாம் எனத் திட்டமிட்டோம். அந்த விழாவுக்கு ஊராட்சித்
தலைவரை அழைத்திருந்தோம். அந்தச் சம்பவம்தான் தற்போது
ஊர் முழுவதும் வளர்ந்து நிற்கும்… வளர்ந்து கொண்டிருக்கும்
மரங்களுக்கான அடித்தளம் ஆகிப் போனது’ என்றார் அறிவியல்
ஆசிரியர் பாஸ்கரன்.
-
“பள்ளி விழாவுக்கு வந்து போன பிறகு தான், மீதமுள்ள
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நம்ம ஊர் மக்களைக்
கொண்டே நட்டு வைத்து வளர்த்தால் என்ன என்று தோன்றியது.
ஊர் மக்களிடம் மரம் வளர்ப்புக் கறித்துப் பேசினோம். நூறுநாள்
வேலைத் திட்டத்துக்கு வருபவர்களை பகுதி நேரமாக இதற்கும்
பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொன்னார்கள்.
-
ஊரைச் சுற்றிலும் சதுர வடிவில் பாதுகாப்பு வேலி கட்டினோம்.
மரக் கன்றுகளுக்கு நான்கைந்து மாதங்கள் ஊர் மக்களே
தினசரி தண்ணீர் விட்டார்கள். பிறகென்ன? தற்போது அந்த
மரக்கன்றுகள் ஒவ்வொன்றும் ஐந்தடி ஆறடி உயரத்துக்கு
வளர்ந்து விட்டன. ஊரும் பார்க்க அருமையாக இருக்கிறது’
எனறார் ஊராட்சி மன்றத் தலைவர் வேலுச்சாமி.
-
“காட்டுத்தீ என்கிற மரம் அறுபது-எழுபது அடி உயரத்துக்கும்
மேலே வளரக்கூடியது. பரவலாகக் கிளைகள் பரப்பி, பெரிது
பெரிதாகச் சிவப்புப் பூக்கள் பூத்துக் குலுங்கும். வெளிநாட்டுப்
பறவைகள் அந்தச் சிவப்புப் பூக்களைப் பார்த்தவுடன் அந்த
மரங்களில் தங்கிவிடுமாம். தூங்குவாகை மரம் நன்கு மழை
தரக்கூடியது.
ஓரிடத்தில் முப்பதடி இடைவெளி விட்டு பரவலாக ஐந்தாறு
தூங்குவாகை மரங்களை நட்டுவைத்து வளர்த்துவிட்டால்
போதும். மேகங்கள் திரண்டு வருகையில் நீர் மேகங்களை
இழுத்து மழை பொழிய வைத்து விடுமாம் தூங்குவாகை
மரங்கள்’ எனச் சொல்கிறார் பாஸ்கரன்.
-
———————————————————————————-
– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
நன்றி: கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186
Re: மக்கள் வளர்க்கும் மரக் குழந்தைகள்!
அந்த காட்டுத்தீ மரத்தின் விதை எங்கு கிடைக்கும்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|