சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்! Khan11

புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்!

5 posters

Go down

புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்! Empty புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்!

Post by ahmad78 Tue 4 Nov 2014 - 10:24

புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்! Ht2976
எச்சரிக்கை

தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்ட புகையிலை எச்சரிக்கை விளம்பரப் படத்தில் தோன்றிய முகேஷை தெரியாதவர்களே இருக்க முடியாது. புகையிலைப் பொருளை பயன்படுத்தியதால் வாய் புற்றுநோய்க்கு ஆளாகி இருப்பதாக வாக்குமூலம் அளிக்கும் முகேஷின் விளம்பரப் படம் அனைத்து திரையரங்குகளிலும் ஓராண்டுக்கு மேல் ஓடியது.. புகையிலைப் பழக்கத்தை திரைப்படங்கள் தூண்டுகின்றன என்பதற்காக, இது போன்ற விழிப்புணர்வு விளம்பரங்களையும், புகைக்கும் காட்சிக்குக் கீழே ‘புகையிலை உயிரைப் பறிக்கும் என்கிற எச்சரிக்கை வாசகத்தையும் வெளியிட வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு விளம்பரங்கள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு பதில், முகேஷ் விளம்பரம் திரையிட்டபோதெல்லாம் மக்கள் கைதட்டி, விசிலடித்து ஆர்ப்பரித்தனர். சமீபத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படத்தின் டீஸரில் கூட அந்த விளம்பரத்தை கிண்டலடித்திருந்தனர். இதுபோன்ற நடவடிக்கைகளினால் புகையிலை பயன்பாட்டை எந்த அளவுக்கு கட்டுப்படுத்திவிட முடியும்? புகையிலையைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை என்ன? புகையிலையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? போன்ற கேள்விகளுக்கு விடை தேடினோம்... அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் சுரேந்திரன் பேசுகிறார்...

‘‘உலக அளவில் ஆண்டுக்கு 60 லட்சம் பேரும், இந்தியாவில் 8 முதல் 9 லட்சம் பேரும் புகையிலைப் பழக்கத்தால் உயிரிழக்கின்றனர். புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உயிரிழப்பு, மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் வேகமாக உயருகின்றது. இந்தியாவில் 56.4 சதவிகித ஆண்களுக்கும், 44.9 சதவிகித பெண்களுக்கும் புகையிலை பழக்கத்தால் புற்று நோய் ஏற்பட்டிருக்கிறது. ‘Diagnostic and statistical mental disorders’ என்ற அமைப்பு புகைப்பழக்கத்தை ஒரு மனப் பிரச்னை என்று அறிவித்துள்ளது. அடையாறு புற்று நோய் மருத்துவமனை புகையிலையின் விளைவுகள் குறித்து பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

திங்கள் முதல் சனிக்கிழமை வரை புகைப்பழக்கத்திலிருந்து மீள நினைப்பவர்களுக்கு இலவசமாக கவுன்சலிங் கொடுத்து வருகிறோம். ‘நிகோடின்‘ என்கிற ரசாயனம் தான் ஒருவரை புகைக்கு அடிமையாக்குகிறது. புகைபிடிக்கும்போது நிகோடினுடன் சேர்த்து தார், கார்பன் மோனாக்சைடு, பெயின்ட், நாப்தலின் பால், எறும்பு பொடி, சயனைடு போன்ற 4 ஆயிரம் வகையான நச்சுப்பொருட்கள் உடலுக்குள் சென்று விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதில் புற்றுநோயை உண்டு பண்ணக்கூடிய சிகிஸிசிமிளிழிளிநிணிழிஷி எனப்படும் ரசாயனம் அதிகளவில் இருக்கிறது. புகைப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாதவர்களுக்காக, தேவையான நிகோடினை மட்டும் பெற்றுக்கொள்ள நிகோடின் மாத்திரைகளும் சூயிங்கங்களும் விற்கப்பட்டு வருகின்றன. அவர்கள் இதனை மாற்றாக பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்றவர் புகையிலையின் விளைவுகள் குறித்து பட்டியலிட்டார்...

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்! Empty Re: புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்!

Post by ahmad78 Tue 4 Nov 2014 - 10:24

மெல்லும் புகையிலைப் பொருட்களில் 3 ஆயிரம் வகையான நச்சுப்பொருட்கள் இருக்கின்றன.

நுரையீரல், வாய், தொண்டை, வயிறு, மூச்சுக்குழல் ஆகிய  இடங்களில் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு பெரிதளவில் இருக்கிறது. உலகிலேயே புகையிலைப் பழக்கத்தால் வாய்ப் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளவர்கள் இந்தியாவில்தான் அதிகமாக உள்ளனர்.

200 சிகரெட் குடிக்கும்போது 7 - 8 கிராம் வரையிலும் நுரையீரலில் தார் படிகிறது.

இதயம் மற்றும் ரத்தக்குழாய் நோய்கள், ரத்த அழுத்தம், மாரடைப்பு, மார்புவலி, இதயக்கோளாறுகளால் ஏற்படும் திடீர் மரணம், மூளைத்தாக்கு நோய், கால்களில் ஏற்படும் காங்கரின் எனப்படும் தசை அழிப்பு நோய் ஆகியவற்றுக்கு புகையிலைப் பயன்பாடே முக்கியக் காரணமாக இருக்கிறது.

சிகரெட் அல்லது பீடிகளை அதிகளவு புகைப்பவர்களுக்கு, டியூபர்குளோஸிஸ் எனப்படும் காசநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

உடல் முழுவதும் ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனி எனும் ரத்தக்குழாய் சுவர்களை புகையிலை சேதப் 
படுத்துகிறது.

புகைப்பழக்கம் இல்லாதவர்கள் கூட புகைப்பவருடன் இருக்கும்போது இரண்டாம் நிலைப் புகை தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

புகையிலை பயன்பாடு இல்லாதவர்களைக் காட்டிலும் புகையிலையை பயன்படுத்துவோருக்கு இதயநோய் 
மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 2 முதல் 3 மடங்கு அதிகமாக உள்ளது.

ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பதையும் குறைக்கிறது.

புகைக்கும் பெண்கள், கர்ப்பத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது, மூளைத்தாக்கு நோய் ஏற்பட அதிகளவில் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. 

கர்ப்பிணிகள் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தும்போது கரு கலைவதற்கும், குறைப்பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கும், பிறந்த குழந்தை திடீரென இறப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளது. 

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்! Empty Re: புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்!

Post by ahmad78 Tue 4 Nov 2014 - 10:24

புகையிலை கட்டுப்பாட்டுக்காக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன?

மாநில புகையிலை கட்டுப்பாட்டு அலுவலர் வடிவேலனிடம் கேட்டோம். ‘‘எந்த ஒரு புகையிலைப் பொருளையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பரம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு புகையிலைப் பொருட்களின் மீதும் புகையிலை ஏற்படுத்தும் தீங்கு குறித்த படங்கள் 40 சதவிகித அளவுக்கு அச்சிட வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களுக்கு அருகே 300 அடி சுற்றளவுக்கு புகையிலையை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டிருக்கிறது. பொது இடங்களில் புகைப்பிடிப்பது சட்டப்படி குற்றமாக்கப்பட்டிருக்கிறது. 

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இந்தியாவிலேயே அதிகமாக நம் தமிழ்நாட்டில்தான் பொது இடங்களில் புகைப்பிடித்தோரிடம் 1.10 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. புகையிலையால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஒவ்வொரு பள்ளி யிலும் முகாம் நடத்தப்பட்டு மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்குக் கீழானவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்கக்கூடாது என்றும் புகையிலை குறித்த வியாபாரிகள் சங்கங்களிடத்திலும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன’’ என்றார்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக இன்று பெட்டிக்கடைகளில் கூட கிடைக்கின்றன. இந்த கள்ளச் சந்தைக்கு வணிகர்கள் துணை நிற்கிறார்களே?தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் த.வெள்ளையனிடம் கேட்டபோது, ‘‘பள்ளிக்கு அருகே நூறு மீட்டர் சுற்றளவில் எங்கும் புகையிலைப் பொருட்கள் விற்கக்கூடாது என்பதை நாங்களே நேரடியாகச் சென்றும் வலியுறுத்தி வருகிறோம். ‘கொக்ககோலா, பெப்சி விற்காதீர்கள்’ என்று நீண்ட காலத்துக்கு முன்பே நாங்கள் வணிகர்களிடம் சொன்னபோது, ‘மக்கள் கேட்பதைத்தானே நாங்கள் விற்க முடியும்’ என்று எங்களைத் திருப்பிக்கேட்டார்கள். 

புகையிலைப் பொருட்கள் விற்பனையும் இந்த அடிப்படையிலானதுதான். புகையிலை கட்டுப்பாடு குறித்து அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களுக்கான தடைச்சட்டம் போடப்பட்டிருக்கிறது. இருந்தும் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டுவது மட்டுமே இதற்கான தீர்வு’’ என்றார்.புகையிலை கட்டுப்பாட்டுக்கான முறையான நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும்?புகையிலை கட்டுப்பாட்டிற்கான தமிழக மக்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் சிரில் அலெக்ஸாண்டரிடம் கேட்டோம்..

‘‘ஐ.நா.சபையின் உலக சுகாதார நிறுவனம் அறிவித்த சர்வதேச புகையிலை தடுப்புச் சட்டத்தில் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்துவதாக இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கை படங்கள் போட வலியுறுத்தல், பொது இடங்களில் புகைப்பிடித்தலை சட்டப்படி குற்றமாக்கல், புகையிலை பொருட்கள் தொடர்பான நேரடி அல்லது மறைமுக விளம்பரங்களுக்குத் தடை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும் புகையிலை நிறுவனங்கள் மறைமுகமாக தங்களது விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றன. புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கை படம் போடுவதாலும், திரையரங்கங்களில் விளம்பரம் திரையிடுவதாலும் யாரும் புகைப்பழக்கத்தை கைவிட்டு விடவில்லை. புகையிலைப் பொருட்களின் உற்பத்தியை தடுத்து நிறுத்தி முற்றிலுமாக ஒழிப்பதுதான் ஒரே தீர்வு.

நமது இந்திய அரசிடம் மிகப்பெரிய முரண்பாடு என்னவெனில் இங்கு புகையிலை கட்டுப்பாட்டு வாரியமும் இருக்கிறது, புகையிலை வளர்ச்சி வாரியமும் இருக்கிறது. ஒரு புறம் புகையிலைப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இன்னொரு புறம், புகையிலை உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கான பணிகளும் நடந்து வருகின்றன. புகையிலை வளர்ச்சி வாரியத்தை மூட வேண்டும். தமிழகத்தின் பல இடங்களில் புகையிலை பெருமளவில் விளைவிக்கப்படுகிறது. இந்த உற்பத்தியை தடுக்கும் வகையில் புகையிலைக்கு மாற்றாக அந்தந்த மண் வகைகளுக்கேற்ற மாற்றுப்பயிர்களை விளைவிக்க அரசு உத்தரவிட வேண்டும். பீடி சுற்றும் தொழிலை நம்பி தமிழ்நாட்டில் 6 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடைகளில் சென்று பறிமுதல் செய்வதைக் காட்டிலும் உற்பத்தியாகிற இடத்திலேயே முடக்கி விட வேண்டும்.’’ என்றார்.
 
http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=2986&Cat=500

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்! Empty Re: புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்!

Post by rammalar Tue 4 Nov 2014 - 13:44

பீடி சுற்றும் தொழிலை நம்பி தமிழ்நாட்டில் 6 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
-
இவர்களுக்கு மாற்று வேலை என்பதெல்லாம் நடக்காத காரியம்
-

இப்பவே வேலையில்லாமதான்,
அயல் நாடுகளுக்கு பிழைப்பை
தேடி போகிறார்கள் தமிழர்கள்...
-
புகையிலை உடலுக்கு தீங்கு என
புகையிலை பொருட்களில் வாசகம்
பொறிப்பதே போதுமானது...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்! Empty Re: புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்!

Post by நண்பன் Tue 4 Nov 2014 - 15:19

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடைகளில் சென்று பறிமுதல் செய்வதைக் காட்டிலும் உற்பத்தியாகிற இடத்திலேயே முடக்கி விட வேண்டும். !_ !_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்! Empty Re: புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்!

Post by Nisha Tue 4 Nov 2014 - 15:26

rammalar wrote:பீடி சுற்றும் தொழிலை நம்பி தமிழ்நாட்டில் 6 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
-
இவர்களுக்கு மாற்று வேலை என்பதெல்லாம் நடக்காத காரியம்
-

இப்பவே வேலையில்லாமதான்,
அயல் நாடுகளுக்கு பிழைப்பை
தேடி போகிறார்கள் தமிழர்கள்...
-
புகையிலை உடலுக்கு தீங்கு என
புகையிலை பொருட்களில் வாசகம்
பொறிப்பதே போதுமானது...
-

வாழ வழி இல்லை எனில் விசத்தை குடிக்க கொடு என்பது போல இருக்கு இந்த வழி முறை! _* _*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்! Empty Re: புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்!

Post by நண்பன் Tue 4 Nov 2014 - 15:35

Nisha wrote:

கோடி கோடியாய் கொள்ளைடிக்கும் அம்மாக்கள் என்ன செய்வார்கள் பாவம்  !*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்! Empty Re: புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்!

Post by rammalar Tue 4 Nov 2014 - 16:51

தமிழ் நாட்டில் விவசாயம் பொய்த்து விட்டது
-
மாற்று வேலை தேடி பிழைப்புக்காக கேரளா
சென்ற தமிழர்கள் அநேகம்...அங்கு தேங்காய்
நார் கயிறு திரிக்கும் வேலை...
-
ஹந்தி படிக்காதே என்று சொன்ன அரசியல்
வாதிகளால் வடக்கே சென்றும் பிழைக்க
முடியாத நிலை...
-
நாடு சுதந்திரம் அடையும் முன்னரே
இலங்கைக்கு தேயிலைத் தோட்ட
தொழிலாளர்களாகவும்,
பர்மாவிற்கும், மலேசியாவிற்கும் சென்றவர்கள்
அங்கேயே செட்டிலாகி அவதிப்பட்டு
வருகின்றனர்...என்பதையும் கருத்தில்
கொள்ள வேண்டும்...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்! Empty Re: புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்!

Post by சுறா Tue 4 Nov 2014 - 17:51

இந்தி படிக்காதே என்று சொன்னதாக தெரியவில்லை. இந்தி திணிப்பை தான் எதிர்த்ததாக தெரிகிறது ஐயா. சரிதானே.

தமிழ்தெரியாத பல வடநாட்டு இளைஞர்கள் இன்று சென்னையில் பிழைக்கிறார்கள். பிறகு இரண்டு மாதங்களில் தமிழை கற்றுக்கொள்கிறார்கள்.

அதுபோல எந்தமொழியானாலும் எந்த மனிதரும் கற்றுக்கொள்வார்கள். இவரால் தான் நாம் கெட்டோம் என்று நினைப்பது நமது சிறுமை.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்! Empty Re: புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்!

Post by Nisha Tue 4 Nov 2014 - 18:09

சுறா wrote:இந்தி படிக்காதே என்று சொன்னதாக தெரியவில்லை. இந்தி திணிப்பை தான் எதிர்த்ததாக தெரிகிறது ஐயா. சரிதானே.

தமிழ்தெரியாத பல வடநாட்டு இளைஞர்கள் இன்று சென்னையில் பிழைக்கிறார்கள். பிறகு இரண்டு மாதங்களில் தமிழை கற்றுக்கொள்கிறார்கள்.

அதுபோல எந்தமொழியானாலும் எந்த மனிதரும் கற்றுக்கொள்வார்கள். இவரால் தான் நாம் கெட்டோம் என்று நினைப்பது நமது சிறுமை.

*_ *_ *_
ஜேர்மனும், இத்தாலியும் பிரெஞ்சும் கற்றுக்கொண்டா நாங்கள் புலம் பெயர்ந்தோம்! மொழியால் தான் அனைத்தும் எனில் நாங்கள் அழிந்தா போனோம்!

மொழித்திணிப்பையும் மொழிஅறிவையும் சரியாக புரிந்திடாமல் படிக்காமல் பாமரர் போல் தங்கள் அரசியல் இலாபத்துக்காக அரசியல் வாதிகள் கூச்சலிட்டால் அதை கேட்டவர்கள் புத்தி எங்கே போகுமாம்?

விவசாயம் பொய்த்தது பொய்த்தது என்கின்றோம். ஏன் பொய்த்ததும் யாரால் பொய்த்தது என யோசிப்பதில்லை. நோகாமல் நொள்ளாமல் அமர்ந்திருந்து வாழ விரும்புகின்றோம். உடலை வளைத்து உழைக்க யாரும் தயாராய் இல்லை.

வட இந்தியாவில் இருப்பவன் பிழைப்புக்கு இங்கே வந்து கட்டட தொழில் செய்து பிழைக்கும் போது இங்கே இருப்பவர்களுக்கு என்னானதாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்! Empty Re: புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்!

Post by சுறா Tue 4 Nov 2014 - 20:09

புகை நமக்கு பகை. உலகில் நல்லது கெட்டது என இரண்டும் தான் இருக்கு. யார் யாருக்கு எதுவேண்டுமோ அதை நாடுகின்றார்கள். நல்வழிபடுத்த வேண்டியவர்கள் இன்று குறைந்திருப்பதே இதற்கு காரணம்
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்! Empty Re: புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்!

Post by நண்பன் Wed 5 Nov 2014 - 16:11

Nisha wrote:
சுறா wrote:இந்தி படிக்காதே என்று சொன்னதாக தெரியவில்லை. இந்தி திணிப்பை தான் எதிர்த்ததாக தெரிகிறது ஐயா. சரிதானே.

தமிழ்தெரியாத பல வடநாட்டு இளைஞர்கள் இன்று சென்னையில் பிழைக்கிறார்கள். பிறகு இரண்டு மாதங்களில் தமிழை கற்றுக்கொள்கிறார்கள்.

அதுபோல எந்தமொழியானாலும் எந்த மனிதரும் கற்றுக்கொள்வார்கள். இவரால் தான் நாம் கெட்டோம் என்று நினைப்பது நமது சிறுமை.

*_ *_ *_
ஜேர்மனும், இத்தாலியும் பிரெஞ்சும் கற்றுக்கொண்டா நாங்கள் புலம் பெயர்ந்தோம்! மொழியால் தான் அனைத்தும் எனில் நாங்கள் அழிந்தா போனோம்!

மொழித்திணிப்பையும்  மொழிஅறிவையும்  சரியாக புரிந்திடாமல்  படிக்காமல் பாமரர் போல் தங்கள் அரசியல் இலாபத்துக்காக அரசியல் வாதிகள் கூச்சலிட்டால் அதை கேட்டவர்கள் புத்தி எங்கே போகுமாம்?

விவசாயம் பொய்த்தது  பொய்த்தது என்கின்றோம். ஏன் பொய்த்ததும் யாரால் பொய்த்தது என யோசிப்பதில்லை.  நோகாமல் நொள்ளாமல்  அமர்ந்திருந்து   வாழ விரும்புகின்றோம்.  உடலை வளைத்து  உழைக்க யாரும் தயாராய் இல்லை.  

வட இந்தியாவில் இருப்பவன் பிழைப்புக்கு இங்கே வந்து கட்டட தொழில் செய்து பிழைக்கும் போது இங்கே இருப்பவர்களுக்கு என்னானதாம்?
அருமையான கருத்துரைத்தீர்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்! Empty Re: புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum