சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

சைவம் என்பது சைவமே அல்ல! Khan11

சைவம் என்பது சைவமே அல்ல!

5 posters

Go down

சைவம் என்பது சைவமே அல்ல! Empty சைவம் என்பது சைவமே அல்ல!

Post by ahmad78 Tue 11 Nov 2014 - 12:44

சைவம் என்பது சைவமே அல்ல! Ht3018
ஷாக் ரிப்போர்ட்

‘எல்லாவற்றையும் சந்தேகி’ என்றார் கார்ல் மார்க்ஸ். நம் ஆரோக்கியத்தைப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டுமானால், எல்லாவற்றையும் சந்தேகிப்பதில் தவறில்லை என்பதையே இன்றைய கலப்பட உலகம் தினமும் உணர்த்திக் கொண்டிருக்கிறது. அன்றாட உணவுகளில் கலப்படம் சாதாரணமாகிக் கொண்டிருப்பது ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் சைவ உணவுகளில் அதற்கு முற்றிலும் எதிரான மாமிசத்தைக் கலக்கும் வேலைகளும் அமோகமாக நடந்து வருகின்றன. சுத்தமான சைவ உணவுகளை விரும்புகிறவர்களையும் மிருகவதைக்கு எதிரானவர்களையும், அசைவ உணவு ஏற்றுக்கொள்ளாத உடல்நிலை கொண்டவர்களையும் இது அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. 

‘‘சைவ உணவுகளில் அசைவம் கலப்பதால் என்ன ஆகிவிடப் போகிறது என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இறைச்சி, மீன், முட்டை, பால் மற்றும் பால் பொருட்களில் இருக்கும் அதிகமான புரதம், கொழுப்பு போன்றவை மனிதர்களுக்குப் பலவிதமான நோய்களை ஏற்படுத்துபவை’’ - அச்சுறுத்தும் தகவலுடன் ஆரம்பிக்கிறார் ‘வீகன் டயட்’ என்ற பால் இல்லாத உணவுமுறையைப் பிரபலப்படுத்தி வரும் மருத்துவர் சரவணன்.

‘‘இன்று நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்னைகள் ஏற்படுவதற்கு அசைவ உணவுகள், பால் பொருட்கள் காரணமாக இருப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கூட காலின் காம்பெல்லின் என்ற மருத்துவர் ‘த சைனா ஸ்டடி’ என்ற நூலில் இது குறித்து விரிவாக
விளக்கியிருக்கிறார். 

டாக்டர் மெலனி ஜாயின் என்பவர், ‘இயல்பிலேயே மனித உடல் அமைப்பும் உடல் இயக்கமும் அசைவ உணவுகளுக்கு ஏற்றதில்லை. மாமிசம் உண்ணும் விலங்குகளைப் போல கூர்மையான பற்களோ, நகங்களோ, தாடை அமைப்போ மனிதர்களுக்கு இல்லை. அதோடு மனித இரைப்பையின் அளவு, அமிலத் தன்மை, சிறுகுடலின் நீளம் ஆகியவையும் அசைவ உணவுகளை ஏற்பதற்கு ஏதுவாக அமைக்கப்படவில்லை. நம் உமிழ்நீரில் காணப்படும் காரத்தன்மையும் அசைவ உணவை ஜீரணிப்பதற்கு ஏற்றதல்ல. மனோதத்துவரீதியாகப் பார்த்தாலும் அசைவ உணவுகள் நமக்கு ஏற்றதல்ல. 

இது தவிர, உணவுக்காக விலங்குகளோ, பறவைகளோ கொல்லப்படுவதை பார்த்துப் பதற்றமடையாதவர்கள் அரிதாகத்தான் இருப்பார்கள். பழக்கத்தினால் மட்டுமே மனிதர்கள் அசைவ உணவை உண்டு வருகின்றனர்’ என்று கூறியிருக்கிறார்’’ என்கிற சரவணன், வீகன் டயட் பற்றியும் கூறுகிறார். ‘‘இறைச்சி, மீன், முட்டை ஆகியவற்றோடு மிருகங்களிடமிருந்து பெறப்படும் பால், நெய், வெண்ணெய், தயிர், மோர், பாலாடைக்கட்டி, தேன் போன்ற  எந்தவித உணவையும் தவிர்ப்பதே வீகன் டயட். தாவரங்களிலிருந்து பெறப்படும் உணவுகளையே அடிப்படையாகக் கொண்டது இது. 

பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானியங்கள், பயறு மற்றும் பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் எண்ணெய் வித்துகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. வீகன் டயட்டில் மாவுச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புகள், வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள், பைட்டோ நியூட்ரியன்ட் சத்துகள் போன்றவை நிறைந் துள்ளன. இந்த உணவு முறையைப் பின்பற்றி எளிதாக பருமனைக் குறைக்கலாம். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சில வகை புற்றுநோய்களை இந்த உணவு முறையின் மூலம் தவிர்க்க முடியும். ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தாலும் பாதிப்பிலிருந்தும் மீண்டு வர முடியும். இதை பல ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. 

மேலைநாடுகளில் பலரும் இந்த உணவு முறையைப் பின்பற்றி வருகின்றனர். ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்களும் விளையாட்டு வீரர்களும் கூட வீகன் டயட்டை விரும்பிப் பின்பற்றுகின்றனர். நடிகை அமலாவும் வீகன் டயட் பின்பற்று பவர்தான்...’’ என்கிறவர், அடுத்து சொல்கிற தகவல்கள், 101 சதவிகித சைவம் என பெருமை பேசுபவர்களுக்கான ஷாக் நியூஸ்!‘‘சைவம் என்கிற பச்சைக் குறியீட்டுடன் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில்தான் அசைவ வகைகளை அதிகம் கலப்படம் செய்கிறார்கள். சிப்ஸ், நூடுல்ஸ், ஐஸ்க்ரீம், பேக்கரி உணவுகளில் அசைவம் கலக்கப்படுகிறது. சில இனிப்புமிட்டாய்கள் மற்றும் ஜெல்லி வகைகளிலும் மிருகங்களிடமிருந்து பெறப்படும் ஜெலட்டின் போன்ற அசைவப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. 

மாட்டின் குடலில் இருந்து எடுக்கப்படும் மாமிசத்தைத்தான் வெள்ளித்தாள் (Silver Varakh ) என்ற பெயரில் இனிப்புகளின் மேல் பூசுவதற்குப் பல இடங்களில் பயன்படுத்துகிறார்கள். ஆன்டி கேக்கிங் ஏஜென்ட்டான கால்சியம், ஸ்டியரேட், போன் பாஸ்பேட் போன்றவை வெள்ளை சர்க்கரை, உடனடி பவுடர்கள் ஆகியவற்றில் கலக்கப்படலாம். ஏ-120 என்றழைக்கப்படும் கார்மைன் எனும் சாயம் ஒரு வகைப் பூச்சி இனத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த சாயம் குளிர்பானங்களில் நிறமூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. வெனிலா நறுமணத்துக்காக காஸ்டோரியம் என்ற அசைவப் பொருள் துரித உணவுகளில் சேர்க்கப்படுகிறது. மிரிஸ்டிக் ஆசிட், லார்ட் போன்றவை பேக்கரி உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. 

முட்டையின் மஞ்சள் கருவிலிருந்து தயாரிக்கப்படும் லூட்டின், சில ரெடிமேட் உணவுகளில் நிறமூட்டியாக பயன்படுத்தப்படுகிறது. மீன், இறைச்சியிலிருந்து தயாரிக்கப்படும் ஈ-631 சுவையூட்டியாகவும், கேஸின், லாக்டோஸ், வே புரோட்டீன் போன்றவை உடனடி சத்துபானங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. லேக்டிக் ஆசிட்டை ஊறுகாய் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள்...’’


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சைவம் என்பது சைவமே அல்ல! Empty Re: சைவம் என்பது சைவமே அல்ல!

Post by ahmad78 Tue 11 Nov 2014 - 12:44

சைவ உணவுகளில் அசைவம் கலந்திருப்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?

‘‘பொதுவாக அசைவக் கலப்பினை லேபிள்களில் வாசித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், பல அசைவப் பொருட்கள் மறைமுகமாகவே கலக்கப்படுவதால் குறிப்பிடப்படுவதில்லை. இதனால், வெளிப்படையாகக் கண்டுபிடிப்பது சிரமம்தான். பாக்கெட் உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் துரித உணவுகளையும் தவிர்த்துவிடுவதே சிறந்த வழி. இவ்வகை உணவுகளில்தான் அசைவக் கலப்படம் அதிகம். ஆரோக்கியம் தரும் பழங்கள், கீரைகள், முழுதானியங்கள், பயறு வகைகள், பருப்பு வகைகள் போன்றவற்றை உண்பது இன்னும் சிறந்த வழி!’’

உணவியல் நிபுணர் புவனேஸ்வரி ஷங்கர் என்ன சொல்கிறார்?

‘‘சைவ உணவுகளில் அதிகம் கலக்கப்படுவது முட்டைதான். குறிப்பாக பேக்கரி உணவுகளில் அதிகம் கலக்க வாய்ப்பு இருக்கிறது. கேக் வாங்கினாலும் சரி, புட்டிங் வாங்கினாலும் சரி... ‘ப்யூர் வெஜிடேரியனா’ என்று கேட்டுத்தான் வாங்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லோருக்கும் கொடுப்பது போல கொடுப்பார்கள். சூப் வகைகளில் கூட ஸ்டாக் (Stock) என்று சொல்கிற எலும்புகள், கோழி இறைச்சியை வேக வைத்த தண்ணீர் கலக்கப்படுகிறது. இதை சுவைக்காக சேர்ப்பார்கள். சூப் சாப்பிடும்போதும் வெஜிடேரியன் சூப் என்று கேட்டு வாங்கி சாப்பிட்டால்தான் உண்டு. அசைவக் கலப்பு உடல்ரீதியாக சிலருக்கு ஏற்றுக் கொள்ளாது. 

விரதம் இருக்கிறவரோ, அசைவத்தை விரும்பாதவரோ சாப்பிட்ட பிறகு அது அசைவம் என்பது தெரிந்தால் மனரீதியாக வருத்தப்படுவார்கள். சுத்தமான சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களால் இதுபோல் அசைவக் கலப்பு ஏதும் இருந்தால் அந்த வித்தியாசத்தை ஓரளவு கண்டுபிடித்துவிட முடியும். ஆனாலும், கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது நம்முடைய கடமைதான்...’’


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சைவம் என்பது சைவமே அல்ல! Empty Re: சைவம் என்பது சைவமே அல்ல!

Post by ahmad78 Tue 11 Nov 2014 - 12:45

அசைவக் கலப்பைக் கண்டிபிடிப்பது எப்படி?

மறைமுகமாக அசைவம் கலப்பதைக் கண்டுபிடிக்க வழியில்லை. அதிகாரப்பூர்வமாகக் கலப்படம் செய்யும் சில நிறுவனங்கள் அதை மறைமுகமாக ணி Numbers என்ற குறியீடாகக் குறிப்பிட்டிருப்பார்கள். இந்த எண்களை வைத்து ஓரளவு கண்டுபிடித்து தவிர்க்க முடியும். 

120 - காக்கினியல் என்ற பூச்சியினத்திலிருந்து தயாரிக்கப்படும் சிவப்பு நிறமூட்டி இது. குளிர்பானங்கள், ஜாம், சீஸ் போன்றவற்றில் கலக்கப்படுகிறது. 

153 - கார்பன் ப்ளாக் என்றழைக்கப்படும் இது, விலங்கிலிருந்து பெறப்படும் நிறமூட்டி. 

161ஜி - காந்தாக்ஸாந்தின் என்பது மீன் மற்றும் முதுகெலும்பற்ற விலங்குகளிடமிருந்து பெறப்படுகிறது. இதுவும் நிறத்துக்காகப் பயன்படுகிறது.

252 - பொட்டாசியம் நைட்ரேட் என்பது விலங்குகளின் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்டு உணவுப் பதப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. பால் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் லாக்டிக் ஆசிட் 325, 326, 327 என்று குறிப்பிடப்படுகிறது. இவை ஆன்டி ஆக்சிடன்டுகளாக குளிர்பானங்களிலும் டின் உணவுகளிலும் கலக்கப்படுகிறது. 

322 - லெஸிதின்ஸ் என்பது மஞ்சள் கருவிலிருந்து எடுக்கப்பட்டு உணவு குழைவாகச் சேர்க்கப்படுகிறது. 

422 - க்ளிசரால் என்பது விலங்குகளின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்பட்டு, இனிப்புக்காக சேர்க்கப்படுகிறது.

430 முதல் 436 வரை குறிப்பிடப்படும் பாலி ஆக்ஸி எத்திலீன், விலங்குகளிலிருந்து பெறப்பட்டு உணவுப் பொருட்களைக் குழைவாக்கவும் ஒரே வடிவத்தில் வைத்திருக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

441 - விலங்குகளின் தோல் மற்றும் குளம்புகளிலிருந்து தயாரிக்கப்படும் ஜெலட்டின், பால் உணவுப்பொருட்களிலும் இனிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது. 

442 - விலங்கு கொழுப்பிலிருந்து வரும் அம்மோனியம் பாஸ்பேட்டிடைட்ஸ் குழைவாக்கப் பயன்படுகிறது. 

470 ஏ மற்றும் 470 பி - சோடியம், பொட்டாசியம், கால்சியம் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கும் இதுவும் விலங்குகளிடமிருந்து பெறப்படுபவையே. இவை கேக் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

471 - உணவுப் பொருட்களை குழைவாக்குவதற்காக விலங்குகளின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் மோனோ அண்ட் டைகிளிசிரைட்ஸ். இதே போல் உணவுப்பொருட்களைக் குழைவாக்குவதற்காகப் பயன்படும் 472ஏ முதல் 472எஃப் வரையும், 473, 474, 475, 476, 477, 478, 479 பி மற்றும் 481, 482, 483 ஆகியவையும் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்பட்டு உணவுப் பொருட்களைக் குழைவாக்கப் பயன்படுகின்றன.

491, 492, 493, 494, 495 - விலங்குகளிடமிருந்து தயாரிக்கப்பட்டு புளிப்பூட்ட ஸ்டீரிக் அமிலமாக மாறுகிறது.

542 - போன் பாஸ்பேட் கேக் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

570 மற்றும் 572 - இதுவும் புளிக்க வைக்கப் பயன்படுத்தப்படும் ஸ்டீரிக் வகை அமிலம்தான்.

585 - பால் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் நிறமூட்டி இது. 

631, 635, 640 - சுவையூட்டியாகப் பயன்படும் சோடியம் வகையைச் சேர்ந்த பொருட்கள். இந்தப் பொருட்கள் மீன், விலங்குகள், ஜெலட்டின் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.

901, 904 - உணவுப் பொருட்களை அலங்கரிக்கப் பயன்படுபவை. பூச்சியினங்களிலிருந்து இவை
தயாரிக்கப்படுகின்றன.

910, 920, 921 - விலங்குகளின் முடிகளில் இருந்து தயாரிக்கப்பட்டு சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. எல் சிஸ்டின் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

966 - லாஸிட்டோல் என்ற பால் பொருள், இனிப்பு சேர்க்கப் பயன்படுகிறது.


ஐஸ்க்ரீமில் மாட்டுக் கொழுப்பு?

மாட்டு இறைச்சி விற்பவர்கள் கறியோடு விற்பது போக ஜவ்வு, கால் குளம்பு, எலும்புகளை சேகரித்து எலும்பு பவுடர் தயாரிப் பவர்களிடம் விற்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே இதுபோல இருபதுக்கும் அதிக தொழிற்சாலைகள் இயங்குவதாகக் கூறுகிறார்கள். இவர்கள் இந்த இறைச்சி பொருட்களைப் பதப்படுத்தி பவுடராக்கி, கேக் வகைகள், குளிர்பானங்கள், புத்துணர்ச்சி தருவதாகச் சொல்லப்படும் பவுடர்களில் கலந்துவிடுகிறார்கள். கால்சியம் சத்து கொண்ட உணவு, புரதம் கொண்ட உணவு வகைகள் எல்லாம் இப்படி வருபவைதான். கோழி, ஆடு, பன்றி இறைச்சிகளும் இதுபோல கலக்கப்படுவது சாதாரணமாம். 

இதை வெளிப்படையாக சொன்னால் அசைவ விரும்பிகள் கூட அருவெறுப்பு அடைவார்கள், விற்பனை பாதிக்கப்படும் என்பதாலேயே வியாபாரிகள் சொல்வதில்லை. இந்த மிருகங்களின் கொழுப்புகள் மாத்திரைகள், சிரப்புகளையும் விட்டு வைக்காமல் கலந்துவிடுகின்றன. மாத்திரைகளில் பயன்படுத்தப்படும் இறைச்சிகளிலிருந்து தயாரிக்கப்படும் ஜெலட்டின்கள்தான் மாத்திரைகளில் உறையாக இருக்கின்றன. சில நாடுகள் இந்த வகை மாத்திரைகளுக்குத் தடைவிதித்துள்ளன.

http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=3028&Cat=500


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சைவம் என்பது சைவமே அல்ல! Empty Re: சைவம் என்பது சைவமே அல்ல!

Post by சுறா Tue 11 Nov 2014 - 14:12

ஜெல்லிகளில் இந்த எலும்பு பவுடர் கலக்கப்படுகிறது உண்மை தான்.

சைவம் என்றால் வெறும் புல்லைதான் மேயவேன்டும் ஹாஹா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சைவம் என்பது சைவமே அல்ல! Empty Re: சைவம் என்பது சைவமே அல்ல!

Post by kalainilaa Tue 11 Nov 2014 - 14:15

எனக்கு பிடித்தது சைவம் ..பிடிக்காதது அசைவம் இப்படி தான் இந்த உலகத்தின் நீதி
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சைவம் என்பது சைவமே அல்ல! Empty Re: சைவம் என்பது சைவமே அல்ல!

Post by பானுஷபானா Wed 12 Nov 2014 - 12:45

சுறா wrote:ஜெல்லிகளில் இந்த எலும்பு பவுடர் கலக்கப்படுகிறது உண்மை தான்.

சைவம் என்றால் வெறும் புல்லைதான் மேயவேன்டும் ஹாஹா

நல்லவேளை நாம் அசைவமா போயிட்டோம் இல்லன்னா???????????????
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சைவம் என்பது சைவமே அல்ல! Empty Re: சைவம் என்பது சைவமே அல்ல!

Post by Nisha Wed 12 Nov 2014 - 13:06

பொதுவாக உணவுகள் குறித்து ஆராய்ந்தால் நாம் எதையுமே உண்ண முடியாது போகும். ரெம்ப ஆய்வுகள் செய்யாமல் இருப்பது நல்லது. 

முட்டையும் , மீனும் சைவம் எனத்தான் இங்கே சொல்வார்கள்.  முட்டை அசைவம் என கொண்டால் பசும் பாலும்  அசைவம் தான்.  சைவ உணவு உண்போர் பால்,  சேர்ந்த உணவும் உண்ண முடியாது போகும். 

ஆராய்ந்து கொண்டே போனால் தாயின் பாலும் அசைவம் எனத்தான் சொல்ல வேண்டி வரும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சைவம் என்பது சைவமே அல்ல! Empty Re: சைவம் என்பது சைவமே அல்ல!

Post by சுறா Thu 13 Nov 2014 - 5:53

Nisha wrote:பொதுவாக உணவுகள் குறித்து ஆராய்ந்தால் நாம் எதையுமே உண்ண முடியாது போகும். ரெம்ப ஆய்வுகள் செய்யாமல் இருப்பது நல்லது. 

முட்டையும் , மீனும் சைவம் எனத்தான் இங்கே சொல்வார்கள்.  முட்டை அசைவம் என கொண்டால் பசும் பாலும்  அசைவம் தான்.  சைவ உணவு உண்போர் பால்,  சேர்ந்த உணவும் உண்ண முடியாது போகும். 

ஆராய்ந்து கொண்டே போனால் தாயின் பாலும் அசைவம் எனத்தான் சொல்ல வேண்டி வரும்.

எதற்கு இவ்வளவு சொல்றீங்க! தண்ணீர் குடிக்கும் முன். ஒரு நுண்ணோக்கியை எடுத்து பார்த்துவிட்டு குடிக்க சொல்லுங்க அம்புடுதேன். ஹிஹி

சைவம் என்பது சைவமே அல்ல! Fecal_coliform_200
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சைவம் என்பது சைவமே அல்ல! Empty Re: சைவம் என்பது சைவமே அல்ல!

Post by Nisha Thu 13 Nov 2014 - 9:03

நீங்க எதையும்  சாப்பிடாதிங்க! எதையும் குடிக்காதிங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சைவம் என்பது சைவமே அல்ல! Empty Re: சைவம் என்பது சைவமே அல்ல!

Post by பானுஷபானா Thu 13 Nov 2014 - 11:13

சுறா wrote:
Nisha wrote:பொதுவாக உணவுகள் குறித்து ஆராய்ந்தால் நாம் எதையுமே உண்ண முடியாது போகும். ரெம்ப ஆய்வுகள் செய்யாமல் இருப்பது நல்லது. 

முட்டையும் , மீனும் சைவம் எனத்தான் இங்கே சொல்வார்கள்.  முட்டை அசைவம் என கொண்டால் பசும் பாலும்  அசைவம் தான்.  சைவ உணவு உண்போர் பால்,  சேர்ந்த உணவும் உண்ண முடியாது போகும். 

ஆராய்ந்து கொண்டே போனால் தாயின் பாலும் அசைவம் எனத்தான் சொல்ல வேண்டி வரும்.

எதற்கு இவ்வளவு சொல்றீங்க! தண்ணீர் குடிக்கும் முன். ஒரு நுண்ணோக்கியை எடுத்து பார்த்துவிட்டு குடிக்க சொல்லுங்க அம்புடுதேன். ஹிஹி

சைவம் என்பது சைவமே அல்ல! Fecal_coliform_200

இதையெல்லாம் பார்த்தா எதுவுமே சாப்பிட முடியாது )*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சைவம் என்பது சைவமே அல்ல! Empty Re: சைவம் என்பது சைவமே அல்ல!

Post by சுறா Thu 13 Nov 2014 - 12:03

சரி சரி எல்லாரும் பழைய படி எல்லாத்தையும் பயம் இல்லாம சாப்பிடுங்க ஹிஹி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சைவம் என்பது சைவமே அல்ல! Empty Re: சைவம் என்பது சைவமே அல்ல!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum