சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஒளவியம் பேசேல்! Khan11

ஒளவியம் பேசேல்!

4 posters

Go down

ஒளவியம் பேசேல்! Empty ஒளவியம் பேசேல்!

Post by Nisha Thu 13 Nov 2014 - 4:46

ஒளவியம்: பொறாமை 

இந்த ஒளவியம் என்ற சொல்லை இதற்கு முன் ஓரிரு முறை கேட்டிருந்தாலும் இதற்கு என்ன பொருள் என்று மனதில் ஏற்றிக் கொள்ளவில்லை போலும். இன்று ஒரு வலைப்பதிவு போடுவதற்காக ஒள என்று தொடங்கும் வார்த்தைகளை கூகுளில் தேடியபோது இந்தச் சொல் அகப்பட்டது. மேலும் தேடிய போது கூகிளாண்டவரால் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மூன்றினைத் தான் தர முடிந்தது. 

1. ஒளவியம் பேசேல் - ஒளவையாரின் ஆத்திச்சூடியில் வருவது இது. ஓரிடத்தில் இதற்கு 'பொறாமையுடன் கூடிய சொற்களைப் பேசாதீர்கள்' என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள். இன்னோரிடத்தில் ஒளவியம் என்பதற்குப் 'பொறாமை, தீவினை' என்ற பொருள் தரப்பட்டிருக்கிறது. 

2. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு - இதுவும் ஒளவையார் சொன்னதே. கொன்றை வேந்தனில். இங்கும் பொறாமை என்ற பொருளே ஒளவியம் என்ற சொல்லிற்குத் தரப்பட்டுள்ளது. 

3. மூன்றாவது சுட்டி சண்முகக் கவசத்தைத் தந்தது. 
ஒளவியம் உளர், ஊன் உண்போர்
அசடர், பேய், அரக்கர், புல்லர்,
தெவ்வர்கள் எவரா னாலும்
திடமுடன் எனை மல் கட்டத்
தவ்வியே வருவார் ஆயின்
சராசரம் எலாம் புரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன்
கைஅயில் காக்க காக்க 


பொறாமை உள்ளோர், உயிர்வதை செய்து ஊன் உண்போர், அசடர், பேய், அரக்கர், புல்லர், பகைவர்கள் எவரானாலும் என்னுடன் மல்லாட (சண்டையிட) தாவியே (தவ்வியே) வருவார்கள் ஆயின் உலகத்தில் அசையும் அசையாப் பொருட்கள் யாவும் காக்கும் பெருமையுடைய சூரனை எதிர்த்தவன் கையில் இருக்கும் வேல் காக்கட்டும். 

(தெவ்வர் - பகைவர்.
சராசரம் - சரம் + அசரம். அசையும் பொருட்கள் சரம். அசையாப் பொருட்கள் அசரம்.
புரத்தல் - காத்தல்.
கவ்வு - பெருமை.
அயில் - வேல்)

ஒளவில் தொடங்கும் சொற்கள் மிகக் குறைவாகத் தான் இருக்கின்றன. இந்த 'ஒளவியம்' என்ற சொல் அழகான சொல்லாக இருக்கிறது. நாமும் பொறாமை என்ற சொல்லைப் பல இடங்களில் புழங்குகிறோம். ஓரிரு முறை பொறாமை என்று சொல்லாமல் ஒளவியம் என்றுச் சொல்லத் தொடங்குவோமானால் இந்தச் சொல் மீண்டும் புழக்கத்திற்கு வரும். 

உங்களுக்குத் தெரிந்த வேறு ஏதாவது சொல் 'ஒள' என்று தொடங்குகிறதா? உடனே எல்லோருக்கும் நினைவிற்கு வருவது 'ஒளவை'யும் 'ஒளடதமு'ம் தான். வேறு ஏதாவது சொல்? 

நன்றி கூடல் காம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒளவியம் பேசேல்! Empty Re: ஒளவியம் பேசேல்!

Post by சுறா Thu 13 Nov 2014 - 6:00

ஔதடம் என்ற சொல்லும் உண்டு.  

ஔவியம் விளக்கம் அருமை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஒளவியம் பேசேல்! Empty Re: ஒளவியம் பேசேல்!

Post by சுறா Thu 13 Nov 2014 - 6:02

ஒள - அநந்தன் என்னும் பாம்பு; நிலம்; விளித்தல், அழைத்தல், வியப்பு, தடை இவற்றைக் காட்டும் ஓர் உபசருக்கம்; கடிதல்; ஒளவென்னேவல்.
ஒளகம் - இடைப்பாட்டு.
ஒளகாரம் - ஒள என்னும் எழுத்து.
ஒளகி - இடைப்பாட்டுக் கூத்தி.
ஒளசரம் - கோடாங்கல்.
ஒளசனம் - உப புராணம் பதினெட்டனுள் ஒன்று. (அதென்ன உப புராணம்?)
ஒளசித்தியம் - தகுதி.
ஒளஷதம், ஒளடதம் - மருந்து.
ஒளடவம் - ஒளடவராகம்.
ஒளடனம் - மிளகு ரசம்.
ஒளதசியம் - பால், பழம், அமிழ்து; கீரம்.
ஒளதா - அம்பாரி; யானை மேற்பீடம்.
ஒளதாரியம் - உதாரம்; மிகுகொடை; உதாரகுணம்; பெருந்தன்மை.
ஒளபசாரிகம் - ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது.
ஒளபசானம் - காலை மாலைகளில் இல்லறத்தோர் வேள்வித் தீ வளர்த்தல்.
ஒளரசன், ஒளரதன் - உரிமை மகன்; கணவனுக்குப் பிறந்த மகன்.
ஒளரப்பிரகம் - ஆட்டுமந்தை.
ஒளருவவிரதி - நீரொன்றையே உட்கொண்டு தவஞ்செய்பவன்.
ஒளலியா - பக்தர்கள்.
ஒளவித்தல் - பொறாமைப்படுதல்.
ஒளவியம் - பொறாமை; தீவினை.
ஒளவை - தவப்பெண்; தாய்; ஆரியாங்கனை; ஒளவையார்.
ஒளவைநோன்பு - செவ்வாய் நோன்பு.
ஒளனம் - மிளகுரசம்; காயரசம்; மிளகுநீர்

இவையனைத்தும் இணையத்தில் கிடைத்தவை, ஆனாலும் இதில் நிறைய வடமொழி சொற்கள் உள்ளது.

ஔஷதம், ஔபாசனம் (ஔபசானம் அல்ல) இவையிரண்டும் சுத்த சமஸ்க்ருத வார்த்தைகள்.
 
ஔபாசனம் - இந்தக் காலத்தில் கூட, ஐயர்- ஐயங்கார் திருமணங்களில், திருமணத்தன்று காலை இவ்வேள்வி செய்யப்படுகின்றது.  (அதாவது, நான் என்ன சொல்ல வருகிறேனென்றால்  ஔபாசனம் என்ற சொல் இன்றும், நடைமுறையில் பழக்கத்தில் உள்ளது.  


வை பற்றி ஒரு ஆராய்சி செய்தால் முனைவர் பட்டம் பெறும் அளவிற்கு பெரிய விசயம் இது. நன்றி நிசா
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஒளவியம் பேசேல்! Empty Re: ஒளவியம் பேசேல்!

Post by Nisha Thu 13 Nov 2014 - 9:14

வாவ்! பிரமாதம்! 

ஆராய்ச்சி செய்யலாம் சுறா!  நிரமப் புதிய சொற்கள் அறிந்தேன்!

 நன்று, நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒளவியம் பேசேல்! Empty Re: ஒளவியம் பேசேல்!

Post by சுறா Thu 13 Nov 2014 - 11:26

Nisha wrote:வாவ்! பிரமாதம்! 

ஆராய்ச்சி செய்யலாம் சுறா!  நிரமப் புதிய சொற்கள் அறிந்தேன்!

 நன்று, நன்றி!

இனி சேனையில் இது தானே நம்ம வேலை

முனைவர் நிஸா
முனைவர் சுறா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஒளவியம் பேசேல்! Empty Re: ஒளவியம் பேசேல்!

Post by Nisha Thu 13 Nov 2014 - 11:49

சுறா wrote:
Nisha wrote:வாவ்! பிரமாதம்! 

ஆராய்ச்சி செய்யலாம் சுறா!  நிரமப் புதிய சொற்கள் அறிந்தேன்!

 நன்று, நன்றி!

இனி சேனையில் இது தானே நம்ம வேலை

முனைவர் நிஸா
முனைவர் சுறா

அட! முனைவர் பட்டம் இப்படி எல்லாம் ஆராய்ச்சி செய்தால் கிடைக்குமாமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒளவியம் பேசேல்! Empty Re: ஒளவியம் பேசேல்!

Post by சுறா Thu 13 Nov 2014 - 11:53

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:வாவ்! பிரமாதம்! 

ஆராய்ச்சி செய்யலாம் சுறா!  நிரமப் புதிய சொற்கள் அறிந்தேன்!

 நன்று, நன்றி!

இனி சேனையில் இது தானே நம்ம வேலை

முனைவர் நிஸா
முனைவர் சுறா

அட! முனைவர் பட்டம் இப்படி எல்லாம் ஆராய்ச்சி செய்தால் கிடைக்குமாமா?

ஆம் நீங்க முனைவர் பட்டம் பெறனும்னா ஆன்லைனில் உள்ள பல்கலைகழகத்தில் உங்கள் விவரங்களை பதிவு செய்துக்கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபடவேன்டும். பிறகு இவையனைத்தையும் கோப்புகள் வடிவில் சமர்ப்பிக்கவேன்டும். சான்றோர்களால் சரிபார்க்கப்பட்ட பின் உங்களுக்கு முனைவர் பட்டம் தரப்படும்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஒளவியம் பேசேல்! Empty Re: ஒளவியம் பேசேல்!

Post by பானுஷபானா Fri 14 Nov 2014 - 12:03

முனைவர் நிஷா , சுறாண்ணா வாழ்க வாழ்க!!!!
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒளவியம் பேசேல்! Empty Re: ஒளவியம் பேசேல்!

Post by சுறா Sun 16 Nov 2014 - 20:14

பானுஷபானா wrote:முனைவர் நிஷா , சுறாண்ணா வாழ்க வாழ்க!!!!

மிஸ்டர் சுறானந்தான்னு சொல்லுங்க )*


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஒளவியம் பேசேல்! Empty Re: ஒளவியம் பேசேல்!

Post by Nisha Mon 17 Nov 2014 - 0:44

ஆச்சிரமம் ஆரம்பிக்க போகின்றீர்களா ஜானி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒளவியம் பேசேல்! Empty Re: ஒளவியம் பேசேல்!

Post by சுறா Mon 17 Nov 2014 - 9:27

Nisha wrote:ஆச்சிரமம் ஆரம்பிக்க போகின்றீர்களா ஜானி!

பெண் சீடர்கள் மட்டும் உள்ள ஒரு ஆசிரமம் அமைக்கலாம் என்று யோசனை உள்ளது. அப்ப தான் நல்லாயிருக்கும்  *# *#


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஒளவியம் பேசேல்! Empty Re: ஒளவியம் பேசேல்!

Post by கவிப்புயல் இனியவன் Tue 18 Nov 2014 - 4:39

பகிர்வுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஒளவியம் பேசேல்! Empty Re: ஒளவியம் பேசேல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum