சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி Khan11

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி

3 posters

Go down

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி Empty ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி

Post by *சம்ஸ் Fri 5 Dec 2014 - 12:16

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி 10603649_343834269135914_638116721490468866_n

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி

இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது. இதனால் இரத்தம் பசைத்தன்மையடைகிறது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது. 

இவற்றை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம். அல்லது காயவைத்த பொடியை பாலில் கலந்தோ, தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும் வலுப்பெறும். கரிசலாங்கண்ணி உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் தருவதால் இதற்கு மரணமாற்று மூலிகை என்ற பெயரும் உண்டு.

கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்வை போக்கும். மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறச் செய்யும். ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய்கள் தீருவதுடன் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும். மண்ணீரல், சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் தன்மை கரிசாலைக்கு உண்டு. குழந்தைகளுக்கு உண்டாகும் மந்த நோய்களைப் போக்கும். கண்பார்வையை தெளிவுபெறச் செய்யும். கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும் கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை குணமாக்கும்.

தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும். கரிசலாங்கண்ணி இலையை நீர் விடாமல் சாறு எடுத்து அதை சோப்பு போடப்படாத வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தி, சுருட்டி திரியாக்கி சுத்தமான நெய் விளக்கில் எரித்தால் கருப்பு பொடியாக வரும். இதையே “கண் மை” ஆக நம் முன்னோர்கள் உபயோகித்தனர். 

இதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன், கண்கள் குளிர்ச்சி அடைந்து முகப்பொலிவு உண்டாகும். இது பழங்கால பாட்டி சொன்ன வைத்தியமாகும்.



நன்றி facebook
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி Empty மலட்டுத்தன்மையை போக்கும் தேனீயின் மகரந்தம்

Post by *சம்ஸ் Fri 5 Dec 2014 - 12:18

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி 10565008_343834159135925_2294578378068079021_n

மலட்டுத்தன்மையை போக்கும் தேனீயின் மகரந்தம்

தேனீயின் மகரந்தமானது உலகம் முழுவதும் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த மருந்தாகும். தேனீயின் மகரந்தமானது பெரிய தேனீக்களின் மூலம் உருவாக்கப்பட்டு இளம் தேனீக்களை வளர்க்க மகரந்தத்தை உணவாகவழங்குகிறது. இயற்கையின் மிக முக்கியமான ஊட்டமளிக்கும் உணவாக கருதப்படுகிறது. இந்த மகரந்த உணவானது மனிதனுக்கு தேவைப்படும் அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது. தேனீ சேகரிக்கும் மகரந்தத்தில் புரதம் சுமார் 40%, இலவச அமினோ அமிலங்கள், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், ஃபோலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளது. 

தேனீயின் மகரந்தம் முழுமையான இயற்கை உணவு, இதில் முழுமையாகவே விலங்கு சம்பந்தப்பட்ட சிறு பொருட்களைக் கூட கொண்டிருக்காது. மகரந்தமானது விலங்குகளின் மூல ஆதாரங்களை விட புரதங்களை அதிகம் கொண்டுள்ளது அதாவது இதில் மாட்டிறைச்சி, முட்டை, சீஸ் போன்றவற்றை விட அதிக அமினோ அமிலங்களை கொண்டுள்ளது. இதன் புரதத்தில் பாதிக்கு மேலாக அமினோ அமிலங்களை கொண்டுள்ளதால் அப்படியே பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் மகரந்தத்தை தயாரிக்க ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்தை செலவிடுகிறது. ஒரு டீஸ்பூன் மகரந்தத்தில் 2.5 பில்லியன் தானியங்கள் உள்ளது. 

ஆற்றலை வழங்கும்

தேனீயின் மகரந்தம் அதிக ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளதால் மனதனுக்கு தேவையான இயல்பான ஆற்றலை வழங்குகிறது. இதில் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் பி கொண்டுள்ளதால் உடல் உறுதியை மேம்படுத்தி சோர்வை நீக்கி நாள் முழுவதும் சுறுசுறுப்பை தருகிறது.

தோல் பராமரிப்பு

தேனீயின் மகரந்தம் தோலில் ஏற்படும் தடிப்பு, அலர்ஜி, எக்ஸிமா, பொதுவாக தோல் எரிச்சல், போன்றவற்றை சரிசெய்ய மேற்பூச்சி பொருட்களில் பயன் படுத்தப்படுகிறது. இது அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்டுள்ளதால் தோலை பாதுகாத்து செல்களின் மறு உருவாக்கத்திற்கு உதவுகிறது. 

சுவாச அமைப்பு

நுரையீரல் திசுக்களின் காரணமாக உருவாகும் ஆரம்பகட்ட ஆஸ்துமாவை தடுக்கும். ஏனெனில் ஆஸ்துமாவை தடுப்பதற்க்கு தேவையான ஆண்டியாக்ஸிடண்ட்களை அதிக அளவு கொண்டுள்ளது. இருதய அமைப்புக்கு ஆதரவு புரிகிறது. ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்களை அதிகளவு கொண்டுள்ளதால் இரத்த நாளங்கள், இரத்த ஓட்ட பிரச்சினைகள், கொழுப்பு அளவுகளை சரி செய்து இருதய அமைப்புக்கு ஆதரவு தருகிறது. மேலும் பக்கவாதம், மாரடைப்பை தடுக்கிறது. 

செரிமான அமைப்பு

இதில் ஆரோக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் ஆகியவற்றை கூடுதலாக கொண்டுள்ளதால் செரிமானத்தை சரிசெய்கிறது. ஏனெனில் தேனீயின் மகரந்தம் செரிமானத்திற்கு உதவும் என்சைம்களை கொண்டுள்ளது. என்சைம்கள் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கிடைக்க செய்கிறது. மேலும் ஒவ்வாமைகளை குணப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளது.. 

மலட்டுத்தன்மையை 

தேனீயின் மகரந்தம் கருப்பையின் செயல்பாட்டை தூண்டி முட்டைகளை மீளுருவாக்கும் செய்கிறது. எனவே கர்ப்பத்தை தூண்டுவதற்கு பெரிதும் உதவுகிறது. இது ஒரு வகையிலான ஹார்மோன் பூஸ்டர், பாலுணர்வூக்கி எனவும் அழைக்கின்றனர். புரோஸ்டேட்க்கு உதவி புரிகிறது. அதாவது புரோஸ்டேட் மிகைப்பெருக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தேனீயின் மகரந்தம் மூலம் நிவாரணம் காணலாம். மேலும் வீக்கத்தை குறைத்து சிறுநீர் கழிப்பை அதிகப்படுத்துகிறது.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி Empty உடல் நலம் காக்கும் பச்சிலை காட்டுச்சுரை

Post by *சம்ஸ் Fri 5 Dec 2014 - 12:20

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி 10592654_343833449135996_5978468159834324038_n

இதனை பேய்ச்சுரை அல்லது காட்டுசுரை எனவும் அழைப்பர். காட்டுச்சுரை (அ) பேய்ச்சுரை கசப்பாக இருக்கும். மருத்துவத்துக்கு இவற்றின் இலை, கொடி, காய், விதை என அனைத்தும் பயன்படுகிறது. இந்த பேய்ய்சுரையின் மருத்துவக் குணங்கள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

எவ்வளவு கடுமையான விஷக்கடியாக இருந்தாலும் இது விஷத்தை முறித்து துரித குணத்தை உண்டாக்கிவிடும்.

பேய்ச்சுரையின் வேரைச் சேகரித்து நன்கு அரைக்க வேண்டும். இதை விஷத் தீண்டலுக்கு உள்ளானவர்களுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு அளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். இந்த இலையை அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டிவிட வேண்டும். திடீரென ஏற்படும் பேதி, வாந்தி முதலியவற்றால் விஷத்துக்கு முறிவு ஏற்பட்டு விஷக்கடிக்கு ஆளானவரின் உயிர் மீளும்.

சிலவகைப் பாம்புகள் கடித்தால் அவற்றின் விஷ வேகம் மிகவும் துரிதமாக இரத்தத்தில் கலந்து, இருதயத்தை அடைந்து முச்சடைத்து மனிதன் இறந்துவிடுவான் , ஆனால் அவசர உணர்வோடு பேய்ச்சுரையை உபயோகித்தால் விஷத்தை முறித்துவிடலாம்.

கொடிய விஷப்பாம்பு கடித்து மனிதன் உணர்விழந்துவிட்டான் என்றால் முதலில் நாம் செய்யவேண்டியது அவனுக்கு உணர்வு ஊட்டி நினைவுண்டாக்க வேண்டியத்தான். இதற்கு பேய்ச்சுரையின் இலைகளைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து சம அளவு தும்பை இலைச்சாறு சேர்த்து மூக்கில் சில துளிகள் விட்டு ஊதிவிட வேண்டும். ஒரு தும்மலோடு விஷக்கடிக்கு ஆளானவருக்கு நினைவு திரும்பிவிடும்.

நினைவு திரும்பிய மறுகணமே பேய்ச்சுரையின் வேரை அரைத்து உள்ளுக்குக் கொடுத்துவிட வேண்டும். உடன் விஷ் முறிவு ஏற்பட்டு குணம் தெரியும். விஷக்கடிக்கு உள்ளானவரை விஷம் முறிவு ஏற்பட்டு சில நாட்கள் வரை பத்திய உணவு மேற்கொள்ளச் செய்ய வேண்டும்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி Empty எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து

Post by *சம்ஸ் Fri 5 Dec 2014 - 12:22

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி 67357_343832859136055_971979700324114033_n

எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து

எடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம். 

தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும். இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கப் தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது. ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம். 

வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டால் எடையை குறைக்க செய்யும். மேலும் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒருசிலருக்கே ஏற்றது. இதை சாப்பிட்ட பின்னர் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இது தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்புசத்துக்களை எரித்து உடல் அமைப்புகளை சுத்தப்படுத்துகிறது. மேலும் நீங்கள் ஏதேனும் சாப்பிட விரும்பினால் ஒரு தம்ளரில் எலுமிச்சை சாறு சேர்த்து மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம் அல்லது உப்பு சேர்த்துகொள்ளலாம்.. கண்டிப்பாக தேன் மற்றும் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ளகூடாது. 

வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சாறு, வினிகர் இரண்டையும் சேர்த்து விரும்பினால் மட்டுமே மாப்பிள் சிரப் சேர்த்து கொள்ளலாம். இதுவும் எடைக்குறைப்பு செயலை செய்கிறது. வீட்டு வைத்தியம் உங்கள் எடையை குறைக்கும் என்றாலும் உங்கள் உடல் அமைப்பை பொறுத்துதான் பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது.
 —
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி Empty ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் பேரீச்சை

Post by *சம்ஸ் Fri 5 Dec 2014 - 12:23

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி 10363373_343832489136092_1301563179569655411_n

ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் பேரீச்சை

அவசிய் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை அவசியம் சாப்பிட வேண்டும். 

எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. அதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு. 

பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். வைட்டமின் ஏ, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.

சிறந்த நோய் எதிர்ப்பொருள்களான லுடின்,ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.

பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது.

பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும்,உடலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது.

கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதைதடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பனுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி Empty தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால் நல்லது.

Post by *சம்ஸ் Fri 5 Dec 2014 - 12:25

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி 1484582_736882653028183_986639539871845607_n

தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால் நல்லது.

ஆனா, பச்சையா சாப்பிட்டா, முழுசா ஒன்னை சாப்பிடறதே கஷ்டம். என்ன செய்யலாம்?

கடையில தேன் நெல்லிக்காய்-ன்னு கிடைக்குது, விலை அதிகம். உண்மையான தேன்ல தான் ஊற வைக்கிறாங்களான்னா. சந்தேகம் தான். பெரும்பாலும், சர்க்கரைப்பாகுன்னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்றாங்க. அதனால அதை வாங்குறது இல்ல.அனுபவம் வாய்ந்த நண்பர்கள் உதவியோட இந்த `வெல்லம் நெல்லிக்காய்' ரெசிப்பியை உருவாக்கி பல வருசங்களா தினமும் வீட்டுல எல்லாரும் சாப்பிட்டுட்டு வர்றோம்.

சூப்பரா இருக்கு, ஹெல்த்தும், ருசியும் ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதுல பரத்தி வைங்க. வேகவைக்கத் தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊத்தி அடுப்புல ஏத்தணும். பால் கலந்த தண்ணி சூடானதும், நெல்லிக்காய் பரப்புன இட்லி தட்டுகளை வைத்து, பானையை மூடி அவிச்சு எடுங்க.
அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம்னா சுமாரா ஒரு உருண்டை. இது இனிப்பு குறைவா சேர்க்கிறவங்களுக்கு. இனிப்பு அதிகம் வேணும்னா ஒரு கிலோ வெல்லம் போடலாம்.) தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்கு போக வடிகட்டி அடுப்புல வைச்சு பாகு காச்சுங்க. ரொம்ப காச்சணும்னு இல்ல. பிசுபிசுன்னு வந்தவுடன்
இறக்கிடலாம். இதுல வெந்த நெல்லிக்காயைப் போட்டு, ஃபிரிட்ஜுல வச்சுடுங்க. ஊற ஊற, தினமும் ஒன்னு எடுத்து சாப்பிடுங்க. நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இரும்புச் சத்து, இன்னும் பல சத்துக்கள் கிடைக்கும்

நெல்லிக்காய் எல்லாம் தீர்ந்தப்புறம், மீதமிருக்கிற நீர்ப்பாகை, ஜூஸ் மாதிரி குடிச்சிருங்க. நெல்லிக்காயின் சத்துகள் இறங்கியிருக்கிறதால அதை வேஸ்ட் பண்ண வேண்டாமே .
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி Empty இரத்தத்தை சுத்திகரிக்கும் காளான்

Post by *சம்ஸ் Fri 5 Dec 2014 - 12:27

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி 10259769_343714255814582_7669615722183223492_n

இரத்தத்தை சுத்திகரிக்கும் காளான்

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான, உயிர்ச்சத்து டி காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம். உணவுக் காளான்கள் சுவையும் சத்துமிக்க சிறந்த உணவாகப் பயன்படுகின்றன.

காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.

இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். 

இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக்குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி Empty சர்க்கரை நோயைத் தடுக்கும் அத்திபழம்

Post by *சம்ஸ் Fri 5 Dec 2014 - 12:28

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி 15918_343713745814633_897620329573619400_n

சர்க்கரை நோயைத் தடுக்கும் அத்திபழம்

அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. 

அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். 

கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள். 

சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது. உயரழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி Empty Re: ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி

Post by பானுஷபானா Fri 5 Dec 2014 - 13:19

பயனுள்ள தகவல் நன்றி தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி Empty Re: ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி

Post by Nisha Fri 5 Dec 2014 - 14:38

கீரை, தேன், கருவாப்பட்டை, சுரைக்காய், பேரிச்சை, நெல்லிக்காய்,  எலுமிச்சை, அத்தி என பலவேறு வித்தியாசமானவைகளில்  பலன்கள் ஒரே பதிவில் படிக்க முடிந்ததில் மகிழ்ச்சி சம்ஸ்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி Empty Re: ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum