சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு Khan11

அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு

4 posters

Go down

அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு Empty அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு

Post by சுறா Sat 13 Dec 2014 - 21:02

அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு Anna

தன்னால் கற்க முடியாமல்போன கல்வியைத் தமிழகத்தின் தலைமுறைகள் கற்பதற்கு வழியமைத்தவர் பெருந்தலைவர் காமராஜர். தான் கற்ற கல்வியையும் அதன் மூலம் பெற்ற அறிவையும் தமிழகத்தின் தலைமுறைகள் நலன் பெற பயன்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா.

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி முதன்முதலில் அந்த மாநிலத்தின் ஆட்சியைக் கைப்பற்றியது என்றால் அது அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம்தான். 1967ல் ஆட்சிக்கு வந்த அண்ணா, ஓராண்டு பத்து மாதங்கள் மட்டுமே முதலமைச்சராக இருந்தார்.

அந்தக் குறுகிய காலத்திற்குள் இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டினார். அதற்கு முன் சென்னை மாகாணம் என்றுதான் அழைக்கப்பட்டது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை (தமிழும் ஆங்கிலமும்) நடைமுறைப்படுத்தினார். சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட ஏற்பளிப்பு கிடைக்கச் செய்தார். இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டை முன்னின்று நடத்தினார். பேருந்துகளை அரசுடைமையாக்கினார். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய்க்கான பரிசுச்சீட்டுத் திட்டம் ஆகியவையும் அண்ணாவால் கொண்டு வரப்பட்டவையாகும்.

1969 பிப்ரவரி 3ஆம் நாள் அண்ணா மறைந்தபோது அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்குச் சாதனைமிகு எண்ணிக்கையாக அமைந்தது.

அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையார். இவர்களுக்குப் பிள்ளைகள் கிடையாது. அண்ணா தனது அக்காள் மகள் சௌந்தரியின் பிள்ளைகளான பரிமளம், இளங்கோவன், கௌதமன், ராஜேந்திரன் ஆகியோரை வளர்ப்பு மகன்களாக்கிக்கொண்டார்.

தமிழகத்தின் மிகப்பெரும் தலைவராகவும், முதல்வராகவும் இருந்த அண்ணாவுக்குச் சொந்தமான சொத்துகள் என்றால் காஞ்சிபுரத்தில் ஒரு வீடு. ஒரு ஏக்கர் நிலம். சென்னை நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் ஒரு வீடு ஆகியவையாகும். அண்ணா முதல்வரானதும் அரசு அதிகாரிகள் அவரது வீட்டில் கொண்டு வந்து வைத்த ஃப்ரிட்ஜ், சோபா செட்டுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தச் சொல்லிவிட்டார். அண்ணா மறைந்தபோது அவர் சேமித்து வைத்த தொகை என்பது நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கிக்கிளையில் 5000 ரூபாயும், மயிலாப்பூர் இந்தியன் வங்கிக் கிளையில் 5000 ரூபாயும்தான்.

தனது குடும்பத்தினருக்கு அரசியலில் பதவி எதையும் அண்ணா தரவில்லை. அவரது குடும்பத்தினர்கள் அரசியலிலோ அரசாங்கத்திலோ பொறுப்புகளை எதிர்பார்க்கவில்லை. கலைஞர், எம்.ஜி.ஆர். போன்றவர்கள் அண்ணா குடும்பத்தினருக்குப் பொறுப்புகளைக் கொடுக்க முன்வந்தபோதுகூட அண்ணாவின் வளர்ப்புப் பிள்ளைகள், அதனை இயக்கத்தில் வேறு யாருக்கேனும் கொடுங்கள் என்று சொன்ன நிகழ்வுகள் உண்டு. அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையார் சட்டமேலவை உறுப்பினராக எம்.எல்.சி.) கலைஞர் ஆட்சியின்போது இருந்திருக்கிறார். அண்ணாவின் நூல்களை செல்வி.ஜெயலலிதா அரசு நாட்டுடைமையாக்கி அவரது குடும்பத்தாருக்கு 75 லட்ச ரூபாய் வழங்கியது. அண்ணா நூற்றாண்டையொட்டி (2009) அண்ணாவின் வளர்ப்பு மகன்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கியது கலைஞர் அரசு.

அண்ணாவின் முதல் மகன் பரிமளம், மருத்துவம் பயின்றவர். டாக்டர் அண்ணா பரிமளம் என்றழைக்கப்பட்ட இவர், அரசு தோல் மருத்துவராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அண்ணா பேரவை என்ற அமைப்பை நிறுவி அண்ணாவின் படைப்புகள் அச்சில் வருவதற்கு பாடுபட்டு, வெற்றியும் கண்டார். அண்ணாவைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்வதற்காகவே www.arignaranna.info என்ற இணையதளத்தை உருவாக்கினார். தற்போதும் அந்த இணையதளம் மாதமிருமுறை பதிவேற்றம் செய்யப்படுகிறது. அண்ணாவுக்குப் பெருமை சேர்க்கும் பணிகளைச் செய்வதற்காகவே மருத்துவப்பணியைக் கைவிட்ட பரிமளம், சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.

பரிமளத்தின் மனைவி சரோஜா பரிமளம். இத்தம்பதியரின் மூத்த மகன் மலர்வண்ணன், மலர் அச்சகம் நடத்தி வருகிறார். அவருடைய துணைவியார் ஜெயஸ்ரீ பாலர் பள்ளி நடத்தி வருகிறார். இவர்களுக்கு அகிலன், ஆதித்யன் என்ற இரு மகன்கள். பள்ளியில் படித்து வருகிறார்கள். டாக்டர் பரிமளம்-சரோஜா தம்பதியரின் மகள் இளவரசி. இவரது கணவர் முத்துக்குமார் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்களுடைய மகள்கள் சுருதி, ப்ரீத்தி ஆகியோர் பள்ளியில் பயின்று வருகிறார்கள். பரிமளம்-சரோஜா தம்பதியரின் இரண்டாவது மகன் அ.ப.சௌமியன் கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது துணைவியார் பெயர் சரளா. இத்தம்பதியருக்கு அரவிந்த், அர்ஜூன் என இரு மகன்கள். இவர்கள் பள்ளிப்படிப்பு பயில்கிறார்கள்.

அண்ணாவின் இரண்டாவது மகன் சி.என்.ஏ.இளங்கோவன். இவர் அண்ணாவின் காஞ்சி பத்திரிகையில் பணியாற்றியதோடு, அச்சுத்தொழிலையும் மேற்கொண்டவர். முதியோர் இல்லத்தின் ஆலோசகராகவும் இருந்த இவர், காலமாகிவிட்டார். இவரது துணைவியார் விஜயா இளங்கோவன். இவர்களின் மகள் பெயர் கண்மணி. இவரது கணவர் ரமேஷ்பாபு, பொறியாளராக இருக்கிறார். இத்தம்பதியரின் மகள் பிரியதர்ஷினியும் பொறியாளராக உள்ளார்.

சி.என்.ஏ.கௌதமன். இவர் அண்ணா வளர்த்த மூன்றாவது மகன். நூல் வெளியீடு மற்றும் அச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது துணைவியார் துளசி கௌதமன் காலமாகிவிட்டார். இத்தம்பதியரின் மகள் சரிதா. இவரது கணவர் சிவக்குமார். இத்தம்பதியருக்கு ப்ரித்வின் என்ற மகன் உள்ளார்.

அண்ணாவின் நான்காவது மகன், பாபு என்கிற சி.என்.ஏ.ராஜேந்திரன். இவர் அரசு தகவல் தொடர்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மனைவி பெயர் சாந்தா. இத்தம்பதியரின் மகன் ஆனந்தன் பொறியாளராவார். இவர்களது மகள் ராஜாமணியின் கணவர் வெங்கடேஷும் பொறியாளர். ராஜாமணி-வெங்கடேஷ் தம்பதியருக்கு ஸ்ரீஹரிஹரன் என்ற மகன் உள்ளார்.

அரசியலில் ஆர்வம் செலுத்தாமல் அண்ணா குடும்பத்தினர் தங்களுக்கு விருப்பமான துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அண்ணாவுக்குப் பிறகு அரசியலுக்கும் ஆட்சிக்கும் வந்தவர்கள் அண்ணா குடும்பத்தினரைப் புறக்கணித்துவிட்டனர் என்றெல்லாம் அரசியல்தளங்களில் விமர்சனம் எழுகின்ற போதும், அண்ணா குடும்பத்தினர் அரசியல் இயக்கங்களிடமிருந்தோ ஆட்சியாளர்களிடமிருந்தோ எதிர்பார்ப்பதில்லை. தங்களுக்குக் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்வதிலேயே மகிழ்வும் பெருமையும் கொள்கிறார்கள்.

தகவல் உதவி: செம்பியன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு Empty Re: அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு

Post by Muthumohamed Sat 13 Dec 2014 - 21:15

இப்படி தான் இருக்கவேண்டும் பதவி ஆசை இல்லாமல் இருப்பதே சிறப்பு தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு Empty Re: அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு

Post by சுறா Sat 13 Dec 2014 - 21:23

அந்த காலம் அப்படி இருந்தது

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு Empty Re: அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு

Post by *சம்ஸ் Sat 13 Dec 2014 - 21:34

அன்று நல்ல மனசு இருந்தது அண்ணாவிற்கு இன்று  அது கேள்விக் குறியே!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு Empty Re: அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு

Post by Muthumohamed Sat 13 Dec 2014 - 21:40

இன்றும் நல்ல மனசு இருக்கு பணம் சேர்ப்பதில் மட்டுமே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு Empty Re: அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு

Post by *சம்ஸ் Sat 13 Dec 2014 - 21:57

Muthumohamed wrote:இன்றும் நல்ல மனசு இருக்கு பணம் சேர்ப்பதில் மட்டுமே
ம் உண்மைதான் முஹமட் ”திருடனாய் பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது” அனைத்துக்கும் காலம் பதில் சொல்லும் காத்திருப்போம்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு Empty Re: அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு

Post by Nisha Sun 14 Dec 2014 - 2:21

2100 பதிவுக்கு வாழ்த்துகள் சுறா சார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு Empty Re: அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு

Post by சுறா Sun 14 Dec 2014 - 19:23

Nisha wrote:2100 பதிவுக்கு வாழ்த்துகள் சுறா சார்.

நான் போட்ட 2100 பதிவை படிச்சிட்டு எனது 2100 பதிவை வாழ்த்திய உங்களுக்கு நன்றி. உங்கள் ஊக்கம் தான் என்னை பதிவுகளை வேகமாக கடந்து செல்ல வைக்கிறது.

எனது டானிக் நீங்க தான் மேடம் ஐ ஜாலி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு Empty Re: அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு

Post by Nisha Sun 14 Dec 2014 - 20:19

அப்படியா சுறா சார்? 

அப்படின்னால் இந்த வருடம் முடிவுக்குள் 3000பதிவு இட இப்பவே வாழ்த்துகள்!

உற்சாகம் எனும் டானிக்கைத்தானே  சொன்னீர்கள்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு Empty Re: அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு

Post by சுறா Sun 14 Dec 2014 - 20:23

Nisha wrote:அப்படியா சுறா சார்? 

அப்படின்னால் இந்த வருடம் முடிவுக்குள் 3000பதிவு இட இப்பவே வாழ்த்துகள்!

உற்சாகம் எனும் டானிக்கைத்தானே  சொன்னீர்கள்?

சொல்லிட்டீங்கல்ல ம் ம்

அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு Evening-Tamil-News-Paper_48072016240

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு Empty Re: அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு

Post by Nisha Sun 14 Dec 2014 - 20:26

எல்லா திரியிலும்  காமெடி படம் போடகூடாது என அறிவிச்சோமல்! 

சொல் பேச்சு கேட்பதில்லை எனும் வரம் வாங்கி வந்தீர்களா? உருட்டுக்கட்டை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு Empty Re: அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு

Post by சுறா Sun 14 Dec 2014 - 20:31

Nisha wrote:எல்லா திரியிலும்  காமெடி படம் போடகூடாது என அறிவிச்சோமல்! 

சொல் பேச்சு கேட்பதில்லை எனும் வரம் வாங்கி வந்தீர்களா? உருட்டுக்கட்டை

மன்னிச்சி விட்டுருங்க அழுகை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு Empty Re: அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு

Post by Nisha Sun 14 Dec 2014 - 20:48

சரிங்க சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு Empty Re: அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு

Post by *சம்ஸ் Tue 16 Dec 2014 - 22:06

எந்த  ஆண்டில் அண்ணாவினால் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்?
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு Empty Re: அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum