சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Khan11

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

5 posters

Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by Nisha Tue 16 Dec 2014 - 20:22

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி: 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான பள்ளிக்கூடத்தை குறிவைத்து தாலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியானதாக அதிகாரபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டான் பத்திரிக்கை 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியானதாக செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்தத் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கை முடிவுக்கு வந்தது. பள்ளியில் நுழைந்து தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் பள்ளி வளாகத்தில் குண்டுகள் எதுவும் வைக்கப்பட்டுள்ளதா என்ற சோதனையும் நடைபெற்று வருவதோடு, ரத்தக்கறை படிந்த இடங்களில் சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்ததாக அரசு நடத்தும் மீட்பு அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. 

ராணுவ பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்த 6 தீவிரவாதிகள் சரமாரியாக நடத்திய தாக்குதலில் மொத்தம் 141 பேர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக ராணுவ பள்ளியில் 6 தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்களை சிறைபிடித்து வைத்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் பிறகு மாணவர்கள் மீது அந்தக் கும்பல் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. பள்ளிக்குள் 15 முறை குண்டுகள் வெடித்த சத்தமும் கேட்டதாகக் கூறப்பட்டது 

சம்பவ இடத்தில் இருந்த ராய்டர்ஸ் செய்தி நிறுவன பத்திரிகையாளர் ஒருவர் காலையில் கூறும்போது, "தாலிபன் தீவிரவாதிகள் பள்ளி வளாகத்தில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி வளாகத்திலிருந்து துப்பாக்கிச் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது. காயமடைந்த மாணவர்களை மீட்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளே சென்றன” என்றார்.

சம்பவ பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து பிரதமர் நவாஸ் ஷெரிப் பெஷாவர் விரைந்தார்.

பெஷாவர் கிளம்பும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சம்பவ பகுதியில் மீட்பு நடவடிக்கைகளை நேரடியாக காண்பதற்குச் செல்கிறேன். அங்கே சிக்கியுள்ள குழந்தைகள் என் குழந்தைகளைப் போன்றவர்கள்" என்றார்.

பாகிஸ்தானில் நிறைய ராணுவப் பள்ளிக் கூடங்கள் உள்ளன. இந்த குறிப்பிட்ட பள்ளியில் சுமார் 500 பேர் படித்து வந்தனர். ராணுவ வீரர்களின் குழந்தைகள் என்றல்ல மற்ற குழந்தைகளும் இத்தகைய பள்ளிகூடங்களில் படித்து வருகின்றனர். கொல்லப்பட்ட மாணவர்கள் 16 வயதுக்கும் குறைவானவர்கள். மாணவர்கள் தப்பிக்கவே பல வழிமுறைகளைச் சாதுரியமாகக் கையாண்டனர். ஒருவர் இறந்தவர் போல் நடித்து தப்பியுள்ளார்.

பலர் வகுப்பறைகளில் உள்ள டெஸ்கின் அடியில் ஒளிந்து கொண்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். காப்பற்றப்பட்ட மாணவர்கள் பயத்தில் உறைந்திருந்தனர். சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் அபாயக் கட்டத்தைத் தாண்டவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பலருக்கு தலையில் தோட்டாக்கள் பாய்ந்துள்ளன. 

பாகிஸ்தானில் பெண் சிறுமிகளின் கல்விக்காக போராடி வரும் நோபல் வென்ற மலாலா கூறும்போது, “இந்த மூர்க்கமான தாக்குதல்களினால் என் இருதயம் சுக்கு நூறாக உடைந்துள்ளது. உலகில் உள்ள லட்சக்கணக்கானோருடன் நானும் உயிரிழந்த, காயமடைந்த குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்காக கண்ணீர் விடுகிறேன். நாம் தோற்கடிக்கப்படவில்லை” என்றார். 

தெஹ்ரிக் இ தாலிபான் பொறுப்பேற்பு:

தாக்குதல் சம்பவத்துக்கு தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. "பெஷாவர் ராணுவப் பள்ளியில் எங்கள் தற்கொலைப் படையினரே தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகளை குறிவைக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறோம். எங்கள் இலக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் மட்டுமே" என அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகமது உமர் கொரஸானி ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்திருக்கிறார்.

ராணுவ பள்ளியை குறிவைத்தது ஏன்?

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவப் பள்ளியை குறிவைத்து நடத்தப்பட்டுவரும் தாக்குதலுக்கு காரணம் கற்பித்துள்ளது தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பு.

"வடக்கு வாசாரிஸ்தானில் ராணுவத்தினர் நடத்தும் தாக்குதலுக்கு பழி வாங்கும் விதத்திலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராணுவத்தினர் எங்கள் குடும்பத்தினர் குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். பதிலுக்கு நாங்கள் அவர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியை குறிவைத்திருக்கிறோம்.

வேதனையை ராணுவத்தினர் உணரவே இதைச் செய்துள்ளோம்" என தீவிரவாதிகள் தரப்பு தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ராணுவ உடையில் தீவிரவாதிகள் ஊடுருவல்:

தீவிரவாதிகள் ராணுவ உடையில் ஊடுருவினர் என்றும், பள்ளியின் அருகே இருந்த மயானத்தின் வழியாகவே அவர்கள் ஊடுருவி இருக்க வேண்டும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி இந்து.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty Re: பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by நேசமுடன் ஹாசிம் Tue 16 Dec 2014 - 20:26

ஆம் அக்கா இந்த செய்தி மிகவும் வருத்தத்தினைத் தருகிறது ஈவிரக்கமற்ற மனிதர்கள் இவர்களை இறைவனும் மன்னிக்க மாட்டான் 

பழிவாங்கல் இப்படிச்செய்வதா மனிதாபிமானமற்ற செயல்

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty Re: பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by Nisha Tue 16 Dec 2014 - 20:32

இன்று சிட்னி செய்தி, பாகிஸ்தான் செய்தி தான் இங்கேயே செய்தி சானல்களில் டாபிக்!

இப்ப பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமா இருக்கு.  வழமையா வரும் நேரத்துக்கு பத்து நிமிடம்பிந்திட்டாலும்  மனசு பதறித்துடிக்குது. 

சுவிஸிலும் தாக்குதல்  நோக்கோடு வந்த ஈரானை சேர்ந்த சிலரை கைது செய்திருங்காங்க.. 

அதிலும் நாங்கள் இருக்கும் இடம் அமைதிப்பூங்கா என்போம்.  சுவிஸிலேயே அழகும், அமைதியும்,  ஆன ஒரு இடம்.. உலகில்  நில மதிப்பு எங்கள் இடத்தில் தான் அதிகம்.. ரெம்ப சந்தோஷப்ட்டோம்.. 

இப்ப இங்கும் பயம் தான்.  இரு வாரம் முன்னால்  எங்கள் இடமிருந்து  500 மீற்றர்  அப்பால் இருக்கும் மூன்று மாடி வீட்டில்  ஒரு வீடு நிறைய ஆயுதங்கள், ராக்கெட்கள், கைப்பற்றி இருக்காங்க..  ஏன் எதுக்கு என சுவிஸ் பொலிஸ் செய்தி வெளியிடவில்லை. 

நிஜமாகவே உலகம் போகும் போக்கை நினைத்தால் பயமும் கவலையும் தான் அதிகரிக்கின்றது.

Last edited by Nisha on Tue 16 Dec 2014 - 20:38; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty Re: பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by Nisha Tue 16 Dec 2014 - 20:35

சின்னக்குழந்தைகள் என்னப்பா செய்தார்கள் இவர்களுக்கு? உரிமைக்காக் போராடும் போது  உயிரின் மதிப்பை உணரக்கூடாது என இருக்கின்றதாமோ?

 தங்களுக்கும் தங்களை அழிப்பதனால்  அடையபோவது என்ன?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty Re: பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by நேசமுடன் ஹாசிம் Tue 16 Dec 2014 - 20:35

நிச்சயமாக அக்கா எதற்கு என்று தெரியாமலே தான் நினைத்த போக்கில் அழிவுச்செயலில் ஈடுபடுகிறார்கள்

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty Re: பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by Nisha Tue 16 Dec 2014 - 20:36

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவப் பள்ளியை குறிவைத்து நடத்தப்பட்டுவரும் தாக்குதலுக்கு காரணம் கற்பித்துள்ளது தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பு.
"வடக்கு வாசாரிஸ்தானில் ராணுவத்தினர் நடத்தும் தாக்குதலுக்கு பழி வாங்கும் விதத்திலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராணுவத்தினர் எங்கள் குடும்பத்தினர் குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். பதிலுக்கு நாங்கள் அவர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியை குறிவைத்திருக்கிறோம்.

வேதனையை ராணுவத்தினர் உணரவே இதைச் செய்துள்ளோம்" என தீவிரவாதிகள் தரப்பு தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty Re: பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by Nisha Tue 16 Dec 2014 - 23:11

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி 697626-fa8cee00-8514-11e4-917d-bf0f063a4996

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty Re: பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by Nisha Tue 16 Dec 2014 - 23:12

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி 645080-aa954086-8506-11e4-917d-bf0f063a4996

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty Re: பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by Nisha Tue 16 Dec 2014 - 23:12

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி 792413-c3cb9208-8542-11e4-9f59-4e93e361b697

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty Re: பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by Nisha Tue 16 Dec 2014 - 23:12

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி 713504-ad00a2f2-8506-11e4-917d-bf0f063a4996

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty Re: பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by Nisha Tue 16 Dec 2014 - 23:12

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி 736474-4d9a846c-851b-11e4-917d-bf0f063a4996

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty Re: பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by Nisha Tue 16 Dec 2014 - 23:13

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி 697678-7ef03ce8-8514-11e4-917d-bf0f063a4996

Heartbreaking ... The bodies of those killed are already being retrieved from hospitals. AP/Mohammad Sajjad

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty Re: பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by Nisha Tue 16 Dec 2014 - 23:13

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி 775687-634387dc-851b-11e4-917d-bf0f063a4996

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty Re: பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by Nisha Tue 16 Dec 2014 - 23:14

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி 632330-af4da21c-8506-11e4-917d-bf0f063a4996

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty Re: பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by Nisha Tue 16 Dec 2014 - 23:14

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி 680748-af81bf22-850e-11e4-917d-bf0f063a4996

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty Re: பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by Nisha Tue 16 Dec 2014 - 23:15

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி 792441-a174c512-8542-11e4-9f59-4e93e361b697

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty Re: பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by Nisha Tue 16 Dec 2014 - 23:16

மனம் கனக்கின்றது. அழுகை

பெரியவர்களின்  மமதைக்கும் மதம் கொண்ட மனசுக்கும்  ஏன் சின்ன சிறுவர்களை  ஒன்றும் அறியா பாலகர்களை பலியாக்கு கின்றார்கள்? 

அடுத்தவர் வந்து அழித்தால் நீதி நியாயம் என பேசலாம். தன் இனமே தன்னை அழித்தால் எவரிடம் போய் நீதியை நியாயத்தினை கேட்பதாம்?

http://www.dailytelegraph.com.au/news/world/taliban-storm-school-in-pakistan-in-revenge-attack/story-fni0xs63-1227158633485?nk=896214e5cf5d91ab6e7d778572c6c4e1

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty Re: பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by பானுஷபானா Wed 17 Dec 2014 - 10:11

பஸ்ஸில் வரும்போத் இந்த செய்தி கடையில் தொங்கிக் கொண்டு இருந்தது. மனம் பதைத்தது.படுபாவிகள் குழந்தைகளிடம் வீரத்தை காட்டி இருக்கிறார்களே.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty Re: பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by Nisha Thu 18 Dec 2014 - 9:12

பாகிஸ்தானின் பெஷாவர் நகர் மீளாத்துயரில் ஆழ்ந்துள்ளது. பள்ளிக் குழந்தைகள் மீதான தீவிரவாதிகளின் வெறித்தாக்கு தலால் 132 இளம்பிஞ்சுகள் உட்பட 148 பேர் பலியாயினர்.  

நேற்று பெஷாவர் நகரில் எந்தத் தெருவில் பார்த்தாலும் இறுதி ஊர்வலம் நடந்தது. குழந்தைகளை இழந்தவர்கள், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என அனைவரின் கதறல் அந்நகரத்தையே உலுக்கியது. கண்ணீரை அடக்க முடியாமல் சவப்பெட்டிகளை மக்கள் சுமந்து சென்ற காட்சி பார்ப்பவர்களின் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது.

பெஷாவர் நகர் அமைந்துள்ள கைபர் பக்துன்கவா மாகாணத் தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், எந்தவொரு அரசு நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. சோகம் கவிழ்ந்த அந்நகரில் நேற்று எங்கு பார்த்தாலும் சவ ஊர்வலங்களாக காட்சியளித்தன. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

பிள்ளைகளைப் பறி கொடுத்த பெற்றோர்கள், பலவாறாக புலம்பியது கேட் போரின் நெஞ்சை கரையச் செய்யும் வகையில் இருந்தது. தனது மகனை இழந்த தந்தையொருவர் கூறும்போது, “தலைவலிக்கிறது, பள்ளிக்குப் போகமாட்டேன் என்று அடம்பிடித்த எனது மகனை, கட்டாயப்படுத்தி அனுப்பிவைத்தேன். இப்போது தீவிரவாதிகளின் தாக்குதலில் எனது மகனை இழந்து தவிக்கிறேன்.

இப்படியெல்லாம் நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? வழக்கமாக மாலையில் பள்ளியிலிருந்து மகனை வீட்டுக்கு அழைத்து வருவேன். ஆனால், அன்று முழுவதும் அவனது சடலம் கூட கிடைக்காமல், தேடி அலைந்து கொண்டிருந்தேன்” என்று கண்ணீர்மல்கக் கூறினார்.

மற்றொரு குழந்தையின் பெற்றோர், “காலையில் மகிழ்ச்சி பொங்க சீருடையில் அனுப்பிவைத்தோம். மாலையில், அவனை சவப்பெட்டியில்தான் பார்த்தோம்” என்று தலையிலடித்துக்கொண்டு கதறி அழுதனர்.

நேற்றுமுன்தினம் காலை குழந்தைகளை தயார்படுத்தி பள்ளிக்கு அனுப்பிவைத்த பெற்றோர்கள். நேற்று காலை அவர்களின் சவப்பெட்டியை சுமந்து கொண்டு அடக்கம் செய்யச் சென்றனர்.

தீவிரவாதத்தின் கோரமுகத்தை விளக்குவதற்கு இதைவிட தெளிவான சாட்சியம் வேறு எதுவும் இல்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty Re: பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by ஜுபைர் அல்புகாரி Thu 18 Dec 2014 - 13:03

பல வண்ண கனவுகளுடன் 
பள்ளிக்கு சென்ற குழந்தைகள்

தேர்வு எழுதிகொண்டிருந்த 
தருணங்கள் !!

எதிர்கால கனவுகளை எல்லாம் 
வெற்றுக் கனாவாக்க ஒரு கூட்டம் 
ஆயுதங்களுடன் உட்புகுந்திட..... ,
இராணுவ ஒத்திகையோ என்றெண்ணிய 
குழந்தைகளை 
சரமாரியாக சுட்டு வீழ்த்திட.... .
இது இராணுவ வீரர்கள் அல்ல 
இராட்ச மிருகங்கள் என்பதை 
அறிந்த குழந்தைகள் 
பதறி ஓடி ஒழிந்திட ....
அறைகளுக்குள் ஓடி ஒழிந்த 
குழந்தைகளை 
தேடிபிடித்து சுட்டு கொன்றிட ......
நம் நெஞ்சமெல்லாம் 
பதறும் நிகழ்வு நடந்தேறியது .
அதிரடியாக புகுத்த இராணுவ 
வீரர்கள் அந்த கயவர்களை 
சுட்டு வீழ்த்திட ....
சற்று நேரத்தில் பள்ளி கூடம் 
பினக்கூடமானது !!!!
திரும்பும் இடமெல்லாம் 
பெற்றோரின் கதறல்கள் !!!
அழுகை ஓலங்கள் ....
கல்வி கூடமோ 
அந்த தருணத்தில் 
பெற்றோரின்
கண்ணீரால் குளமானது !!!
தன் பிள்ளைகள் 
என்னவெல்லாம் 
ஆகவேண்டும் என்று 
ஆசை பட்டார்களோ ???
கடைசியில் பினங்கலானது 
.
என் இறைவா இதுபோன்ற செயலை 
செய்யும் கயவர்களை அழித்தொழித்திடுவாயாக !!!!
வருத்தங்களுடன் 
முகமத் ஜுபைர் அல்புஹாரி
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 146
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty Re: பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by ஜுபைர் அல்புகாரி Thu 18 Dec 2014 - 13:18

இவர்கள் மதம் படித்தவர்கள் அல்ல

மதம் பிடித்தவர்கள்
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 146
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty Re: பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by Nisha Thu 18 Dec 2014 - 14:32

ஒரு சிலர் செய்யும் செயலாய் மொத்த சமூகமுமே பாதிப்புக்குள்ளாகும் சூழலை உருவாக்கிட முனைகின்றார்கள். 

இதற்குள் பாக்கிஸ்தான் அட்டாக் குறித்து ஆப்கானிஸ்தான் தலிபான் கண்டனம் தெரிவித்திருக்கின்றதாம்!  இப்படி ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு  தம் இஷ்டப்படி நடக்க ஆரம்பித்தால்  என்னாகும்?

குழந்தைகளை அழிக்க  நினைக்கும் முன் இவர்கள் கடவ்ள் நம்பிக்கையும் பயமும் எங்கே போயிருக்கும்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty Re: பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by கவிப்புயல் இனியவன் Thu 1 Jan 2015 - 5:12

வேண்டாமப்பா வேண்டாம் இது வேண்டாம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி Empty Re: பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum