Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அலர்ஜி[
3 posters
Page 1 of 1
அலர்ஜி[
அலர்ஜி
நாம் எல்லோருமே அலர்ஜி பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம்
அலர்ஜி அல்லது ஒவ்வாமை என்ற நோயினால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வருகின்றனர்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அலர்ஜி இருக்கும்.
அலர்ஜி ஓவ்வொருவருக்கும் பல வித வேறுபாடான காரணங்களால் ஏற்படும்.
சிலருக்கு மீன், மாமிசம் போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
வேறு சிலருக்கு முட்டை, பால் போன்ற உணவுப் பொருட்களும்
கத்தரிக்காய், தக்காளி போன்ற காய்கறி வகைகளும், காபி, தேனீர் போன்றவைகளும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
பெரும்பாலானோருக்கு குறிப்பிட்ட மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதாலும், ஊசி போட்டுக் கொள்வதாலும் ஒவ்வாமை ஏற்படும்.
இது இதனால் என்பதெல்லம் அலர்ஜிக்கு கிடையாது. .. அதிலும் தோலில் ஏற்படும் அலர்ஜி மிகவும் சிரமத்தைக்கொடுக்கும்.
ஒவ்வாமை இயல்புடைய ஒருவருக்கும் குறிப்பாக,
எந்தப் பொருள் ஒவ்வாமை அறிகுறிகளை அல்லது ஒவ்வாமை நோய்களை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல!
பொதுவாக தும்மல் நோய், விஷக்கடி போன்ற பல்வேறு ஒவ்வாமை நோய்களைக் கொண்ட ஒவ்வாமை தன்மையுடையோருக்கும்,
அதிலும் குறிப்பாக ஒவ்வாமையினால் ஆஸ்துமா இழுப்பு வரக்கூடியவர்களுக்கும்,
அவர்களுக்கான ஒவ்வாப் பொருட்களைக் கண்டறிய,தோலின் மேலோட்டமாகச் செய்யப்படும் பரிசோதனையே ஒவ்வாமைத் தோல் பரிசோதனை என்பதாகும்.இதுதான் அனைவராலும் அலர்ஜி டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.
இந்த முக்கியமான பரிசோதனையைச் செய்வதற்காக, நாம் சாதாரணமாக அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளக் கூடிய பல வகையான சந்தேகிக்கப்படும் ஒவ்வாமையை உண்டாக்கக்கூடிய பொருட்களின் கிருமி நீக்கம் செய்யப்பட்ட, சுத்தமான கரைசல்களை (Diagnostic Allergens) ஒவ்வாமை நிபுணர்கள் தயாராக வைத்திருப்பார்கள். இவற்றுள் முக்கியமானவை பல்வேறு தாவரங்களின் மகரந்தங்கள், காளான்கள், தூசிகள், மர வகைகள், பார்த்தீனியம் போன்ற தாவரங்கள், இலைகள், பூச்சிகள், செல்லப் பிராணிகளின் எச்சங்கள், ரோமங்கள், சிறகுகள் மற்றும் சைவ, அசைவ உணவுப் பொருட்கள், பழ வகைகள் போன்றவையாகும். இதிலும் மிக முக்கியமானது, வீட்டுத்தூசி உண்ணி (House Dust Mite) அல்லது பூச்சியின் கழிவுப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிறப்புக் கரைசல்களை தோலின் மேல் துளிதுளியாக விட்டு சோதனை செய்து ஓவ்வாமை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அதற்குரிய சிகிச்சைகளை தொடர வேண்டும்.
தொடர்ந்த தும்மல் ,கண்களில் நீர் வடிதல் சுவாசிப்பதில் பிரச்சனை , உடலில் தடிப்பு ஏற்படுதல் போன்றவித்தியாசமான மாறுதல்கள் உங்கள் குழந்தைகளுக்கு இருந்தால் உடனடியாக தகுந்த வைத்தியரிடம் சென்று அலர்ஜி டெஸ்ட் செய்து கொள்ளுங்கள் . உடனடியாக தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் ஆரம்பித்த அரைமணி நேரத்திற்குள் உயிர் இழப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான நோய் இது. சுவாசத்துடன் சம்பந்தப்பட்டது.. உங்கள் குழந்தைகள் மைதானங்களில் விளையாடி விட்டு வரும் போது தொடர்ந்து தும்மினாலோ உடம்பில் தொடர்ந்து அரிப்பு ஏற்படுவதாய் சொன்னாலோ அல்லது உடமபில் சிறு சிறு தடிப்புக்கள் ஏற்பட்டாலோ உடனடி சிகிச்சை தேவை
மு மன்றத்தில் 2009 ஆம் ஆண்டில் நான் பதிந்த தொடர் பதிவு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அலர்ஜி[
அலர்ஜியினால் ஏற்படக்கூடிய நோய்கள்
அலர்ஜியின் அறிகுறி ஒருவருக்கொருவர் மாறுபடும். ஒரு சிலருக்கு தும்மல்,மூக்கடைப்பு, ஜலதோஷம், நமைச்சல், வீக்கம் ,அரிப்பு, மூச்சடைப்பு,மூச்சுத்திண்றல் வாந்தி, குமட்டல். வயிற்றுப்போக்கு போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.
இப்படிப்பட்ட அலர்ஜியினால் சுவாசப்பாதை , உணவுப்பாதை பாதிக்கப்பட்டால் மிகவும் சிரமப்பட வேண்டும்
உடல் அங்கங்கு சிவந்து தடித்தல், ஒத்துக்கொள்ளாத பொருட்களால் தோலில் ஏற்படும் தொடுதோல்அழற்சி நோய், எக்சிமா என்னும் தோல் நோய்,தொடர் வலிகளால் ஏர்படும் மன அழுத்தச்சோர்வு நோய், தசைவலிகள், மூட்டு வீக்கம் மற்றும் வலிகள், கண்களில் அரிப்பு, நீர் வடிதல், சிவத்தல், காதடைப்பு போன்றனவும், அலர்ஜியின் அசாதாரண அறிகுறிகளாக வெளிப்படும்பல் வேறு நோய்களாகும்.
இவ்வாறான அறிகுறிகள் இருந்தாலும் வைத்தியரிடம் சென்று அலர்ஜி டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
மேற்கொள்ளப்பட்ட தோல் அலர்ஜி டெஸ்டுகளின் மூலம் கண்டறியப்பட்டஉடலுக்கு ஒத்துக் கொள்ளாத பொருட்கள முறையாகப் பட்டியலிட்டுத் தவிர்க்க முடிந்தவற்றத்தவிர்த்து முடியாத பலவகை மகரந்தத்துகள்கள், காளான், முடடைகள், வீட்டுத் தூசி, சாலைத் தூசி, கரப்பான், பாச்சான், வீட்டுத்தூசி பூச்சி போன்றவற்றிற்கு முறையாக அலர்ஜித் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளவேண்டும்.
இவ்வகையான தடுப்பூசி சிகிச்சை முறை, அலர்ஜியினால் வரும் அனைத்துவகைத் தும்மல் நோய்களைமுழுமையாகக் குணப்படுத்வடன் மற்ற அலர்ஜிகளால் வரும் ஒவ்வாமை ஆஸ்துமா, ஆண்டு முழுவதும் ஆட்டிப்படைக்கும் அர்டிகேரியாநோய்களும் வராமல் தடுக்கப் பெரிதும் உதவுகின்றது.
உங்கள் வீட்டுக்குழந்தைகளுக்கு அலர்ஜி இருப்பது கண்டறியப்பட்டால் எந்தப்பொருட்கள் மற்றும் காரணிகள் அவர்களுக்கு அலர்ஜியைத் தோற்றுவிக்கிறது எனக்கண்டு அவைகளைத் தவிர்க்க முயலுங்கள்.

இதோ அலர்ஜி நோயால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு சகோதரியின் அனுபவம்...
இன்றைக்கும் நம்மில் அனேகர் அலர்ஜியைக்குறித்து தெரிந்து கொள்ளாமலே இருக்கிறார்கள்.
அலங்கோலமாக்கிய அலர்ஜி -இளம்பெண்ணின் கண்ணீர் கதை.
அலர்ஜியினால் பாதிக்கப்பட முன்னாலும் , பாதிக்கப்பட்ட பின்னும பிரியா
அலர்ஜி வந்தால் ஆளே அசிங்கமாகி, கால்கள் செயலிழந்து, மூச்சுவிட முடியாமல் மரணத்தை நோக்கிக் காத்திருப்பீர்களா? நிச்சயமாக! அது உங்கள் மருத்துவரைப் பொறுத்தது. சாதாரண 'டஸ்ட் அலர்ஜி' அழகான இளம்பெண் ஒருவரை அநியாயத்திற்கு அலங்கோலமாக்கி வாழ்வையே நாசமாகிவிட்ட கதை இது.
பிரியா ஒரு பி.ஏ. பட்டதாரி, வயது இப்போது முப்பதைத் தாண்டுகிறது. எல்லாப் பெண்களைப் போலவே இளமையாய், கனவுகளோடு நெய்வேலி அனல்மின் நிலையக் குடியிருப்பில் தன் அப்பா செல்வராஜ், தாய் எப்சி மற்றும் தம்பி தங்கையுடன் வசித்து வந்தார்.
அப்படியரு கோலத்தில் பிரியாவைப் பார்த்தபோது மனசுக்கு ரொம்பவே சங்கடமாய் இருந்தது. முதல் நாள் பெய்த மழையால், தெருக்களில் தேங்கி நின்ற தண்ணீர் சாக்கடையாய் மாறியிருந்தது. தவழ்ந்து வந்ததால் பிரியாவின் உடைகளும் சேரும் சகதியுமாய் காட்சியளித்தது. ஊணமுற்றவர்களிலேயே இப்படிப்பட்டவர்கள் ரொம்பவே பாவப்பட்டவர்கள்.
''தம்பி, தங்கச்சி பேரைப் போட்றாதீங்க. நான் இன்னைக்கோ, நாளைக்கோ... சாவப்போற கட்டை! என்னால அதுங்களுக்கு அசிங்கம் வரக்கூடாதில்ல... அதான்'' என்றபடி புன்னகை தவழ ஒரு போட்டோவை எடுத்து நீட்டினார்.
''யாருங்க இது?'' என்றேன். ''நான்தான் சார்! நல்லா இருக்கேனா? பி.ஏ. படிக்கும் போது எடுத்தது'' சிரித்தபடியே ஆரம்பித்தவரின் முகம் அடுத்த கணமே சுறுங்கிவிட்டது. அனிச்சையாய் கண்களில் கண்ணீர். ''என் கோலத்தை பாத்தீங்களா? கருப்பா, அசிங்கமா, உடம்பும் பெருத்து, நடக்கவும் முடியாம! எதுக்கு நான் உயிரோடு இருக்கணும்? என்னைப் போல நிலமை வேறெந்தப் பொண்ணுக்கும் வரக்கூடாது சார்'' என்படி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, தன் கதையச் சொல்ல ஆரம்பித்தார்.
''அப்போ எனக்கு இருபது வயசு. எப்பப் பாத்தாலும் தும்மல் வந்துக்கிட்டே இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா மூச்சுவிடவே கஷ்டமாயிருச்சி. நெய்வேலி, நிலக்கரி நகரம் இல்லையா? ஒரே... தூசு மண்டலமா இருக்கும். அதான் ஒத்துக்கலைன்னு சொல்லி என்.எல்.சி ஆஸ்பிட்டல்ல போய்ப் பார்த்தேன். ஊசி, மாத்திரைலாம் போட்டு அனுப்பினாங்க. கொஞ்ச நாள் நல்லா இருக்கும், அப்புறம் வீசிங் வர ஆரம்பிச்சிடும். திருப்பி ஆஸ்பிட்டல், திருப்பியும் ஊசி. இப்படியே போட்டதுல உடம்பு கொஞ்சம் கொஞ்சமா ஊதி பெருசாயிட்டுது. என்.எல்.சி.யில் கேட்டப்போ, மெட்ராஸ்ல பிரைவேட் ஆஸ்பிட்டலுக்கு அனுப்பி வைக்கிறோம். எல்லாம் சரியா போய்டும்னு சொன்னாங்க.
அதே மாதிரி ராமச்சந்திரா ஆஸ்பிட்டல்ல ஒரு மாசம் ஐ.சி யூனிட்ல வச்சிருந்துட்டு, 'பொண்ணுக்கு ஸ்டீராய்டு அதிகமாயிருச்சி. குணப்படுத்தறது கஷ்டம்'னு சொல்லிட்டாங்க. அங்கிருந்து என்.எல்.சி. மூலமா அப்பல்லோவுல சேர்த்தாங்க. அங்க ஒரு டாக்டர் போட்ட ஊசியால காலெல்லாம் வீங்கி உடம்பெல்லாம் எரிய ஆரம்பிச்சிட்டது.
2000-ல அப்பா ரிட்டைராயிட்டார். அதனால, பிரைவேட் ஆஸ்பிட்டல்ல இருந்து என்.எல்.சி.க்கு வரவேண்டியதாப் போச்சு. அவங்க, 'கிட்னி ஃபெயிலியர் ஆகியிருக்கும் போல தெரியுது. இனிமே நீங்க சொந்தக் காசுலதான் பாத்துக்கணும்'னு அனுப்பி வச்சுட்டாங்க. அதுக்கப்புறம் அண்ணாமலை யூனிவர்சிட்டி ஆஸ்பிட்டலுக்கு நடையா நடந்ததுல முகமெல்லாம் கறுத்து, உடம்பு ஓவரா குண்டாயிருச்சி. திடீர்னு ரெண்டு காலும் செயலிழந்து நடக்கவே முடியாமப் போயிடுச்சு. இப்போ வெளியே போகனும்னா, ரெண்டு பலகைங்களை வச்சுக்கிட்டு தவழ்ந்து, தவழ்ந்து ஆமை மாதிரி போற நிலமைக்கு வந்துட்டேன். அப்போதான் ஒரு யோசனை வந்தது. இனி உயிரோட இருந்து பிரயோஜனம் இல்ல. செத்த பிறகாவது நாலுபேருக்கு உதவட்டுமேன்னு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு என் உடம்பை தானமா எழுதி வச்சிட்டேன்.
டாக்டருங்க கடவுளுக்குச் சமம்னு சொல்வாங்க. ஆனா பாருங்க! என்னை ஸ்டூடண்ட்ஸ் முன்னாடி உக்கார வச்சிட்டு, 'இவங்க தான் ஸ்டீராய்ட் பேஷண்ட். ஸ்டீராய்ட் அதிகமானா இப்படித்தான் ஸ்கின் கருப்பாயிடும். இது அபூர்வமான கேஸ்'னு சொல்லி போட்டோ எடுத்தாங்க. என்னோட விரல், கை, கால், முதுகெல்லாம் அக்குவேறு ஆணிவேறா பாத்துப் பாத்து குறிப்பெடுத்தாங்க. எனக்கு அழுகை தாங்க முடியலை. வீட்டுக்கு வந்துட்டேன்.
நாலு வருஷத்துக்கு முன்னாடி தம்பியும், தங்கச்சியும் கல்யாணமாகி அவங்கவங்க மாமியார் வீட்டோட (மந்தாரக்குப்பம்) செட்டிலாகிட்டாங்க. சுமாமி வந்தப்போ பாண்டிச்சேரிக்கு போன எங்கப்பா இதுவரைக்கும் திரும்பி வரலை. அப்போ கடலூர் கலெக்டராக இருந்தாரே! ககன்தீப்சிங் பேடி. லயன்ஸ் கிளப் மூலமா அவர் கொடுத்த அஞ்சாயிரத்தை வச்சு நானும் எங்கம்மாவும் வடலூர்ல குடியேறினோம். ஆறுமாசம் எங்கூட இருந்த அம்மா, நடக்க முடியாதவளாச்சேன்னுகூட பாக்காம என்னைத் தனியா விட்டுட்டு, அவங்க மட்டும் தம்பி வீட்லயே போய் தங்கிட்டாங்க.
தனியா இருந்த எனக்கு எங்கப்பாவோட ஃபிரண்ட் ஒருத்தர்தான் வீட்டு வாடகை முதற்கொண்டு எல்லா உதவியும் செஞ்சார். பாவம்! அவரும் எவ்வளவுதான் செலவு பண்ணுவார்? மீண்டும் கலெக்டர்கிட்ட போய் உதவி கேட்கலாம்னு போனேன். இது நடந்து மூணு மாசம் இருக்கும். புது கலெக்டர் வந்திருக்கிறதா சொன்னாங்க. வாசல்ல பெறுக்கி கூட்டிக்கிட்டிருந்த ஒரு அம்மா, 'இந்தா! கலெக்டருக்கு இன்னா சம்பாரிச்சா போட்டுக்கிற. இப்டியே அநாதைன்னு சொல்லிக்கினு வந்துடுவாளுங்க'ன்னு அசிங்கமா பேசினாங்க. அங்க இருந்த பியூன் ஒருத்தர், 'மூச்சுவிட சிரமமா இருக்குதுன்றியே! கொஞ்சூண்டு விஷத்தை குடிச்சினா, ஒரேயடியா பிரச்சினை முடிஞ்சிடும்'ன்னார். கலெக்டர் பி.ஏ. என்னைப் பாத்துட்டு 'உன்னைப் பாத்தா எய்ட்ஸ் நோயாளி மாதிரி தெரியுது. முதல்ல வெளியே போ!'ன்னு விரட்டியடிச்சிட்டார்.
அம்மாவும் என்னை வந்து எட்டிப்பாக்குறது இல்ல. வீட்டு வாடகை கட்டாததுனால, ஹவுஸ் ஓனர் காலி பண்ணச் சொல்லிட்டார். இதோ... இன்னைக்கோ, நாளைக்கோ! எப்ப வேணாலும் செத்துப் போய்டுவேன். அதுக்கு முன்னாடி எனக்கு நடந்த கொடுமைகள இந்த உலகத்துக்குச் சொல்லணும். அதான், உயிரைக் கையில புடிச்சிக்கிட்டு உங்ககிட்ட சொல்றேன். ஆண்டவன்னு ஒருத்தன் இருந்தா அவனை அங்க போய் பாத்துக்கிறேன். என்னை மாதிரி நிலமை, உலகத்துல வேற எந்தப் பொண்ணுக்கும் வரக்கூடாது சார். ம்... முக்கியமா ஒண்ணு! யாராவது டாக்டருங்களைப் பாத்தா, நான் செத்த பிறகு என் உடம்பை என்ன வேணா பண்ணிக்கச் சொல்லுங்க''
-ஒட்டுமொத்த துயரங்களையும் என் மீது சுமத்திவிட்டு அமைதியானார் பிரியா. இப்பொழுதெல்லாம் ஒரு சின்ன தும்மல் வந்தால்கூட... போட்டோவில் லட்சணமாய்ப் பார்த்த பிரியாவும், நேரில் பார்த்த பிரியாவும் மாறி, மாறி என் மனதை வாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
தெரிந்து கொள்ளுங்கள்:
பிரியா தான் எடுத்துக் கொண்ட மருந்துகளாக Ranitin, Deriphyllin, Solumedrol 125, Dexamethasone phospate (Decdan) ஆகியவற்றைக் குறிப்பிட்டிருந்தார். இது சம்பந்தமாக கல்பாக்கம் மக்கள் மருத்துவரான புகழேந்தியிடம் கேட்டபோது, ''ஸ்டீராய்ட் என்பது எந்த ஒரு வியாதிக்குமான மருந்து. இயல்பு நிலைக்கு மாறாக உடல் கடின சூழலுக்கு ஆளாகும்போது தன்னிச்சையாக உடம்பில் ஸ்டீராய்ட் உற்பத்தியாகும். இந்த நிலையில், ஊசி மூலமாகவும் ஸ்டீராய்ட் செலுத்தப்பட்டால் உடலில் உப்புச்சத்து அதிகமாகி தேவையில்லாத சதைவிழ ஆரம்பிக்கும். பிக்மெண்டேஷன் எனப்படும் கருப்பு நிறமிகள் உருவாகி உடல் கறுத்துப் போகும். மேலும் கால்சியம் வெளியேறி எலும்புகள் உருக ஆரம்பிப்பதால் Proximal Myopathy ஏற்பட்டு தொடையில் உள்ள தசைகள் செயலிழந்து நடக்க இயலாமல் போயிருக்கும். கண்பார்வை, மூளை ஆகியவற்றை மங்கச்செய்து தொடர்ந்து ஸ்டீராய்ட் எடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கும். பிரியா எடுத்துக் கொண்ட மருந்தில் ஸ்டீராய்டான Decdan மட்டுமே தீவிரமான பின்விளைவுகளை உண்டாக்கக்கூடியது'' என்கிறார்.
''எமர்ஜென்சியின் போது மட்டுமே ஸ்டீராய்ட் உபயோகப்படுத்தப்பட வேண்டும். அலர்ஜியினால் பாதிக்கப்படுபவர்கள் பொது மருத்துவர்களை நாடாமல் அதற்கென்று உள்ள ஸ்பெஷலிஸ்டுகளை அணுகி சிகிச்சை பெறுவதுதான் நல்லது'' என்கிறார் சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் அலர்ஜி ஸ்பெஷலிஸ்டான பஷீர் அகமது.
Labels: annamalai university hospital, appollo, decdan, doctors, dr.pugazhendi, dust, indian medical, neyveli, nlc, priya, proximal myopathy, ramachandra hospital

நிறைய படித்திருப்பார்கள் . ஆனால் வியாதிகளைக்குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நம் உடலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நோய்களின் அறிகுறிகளை
கண்டும் காணாது இருந்து விட்டு நோய்களின் பின் விளைவுகள் அதிகரிக்கும் போது அவஸ்தைப்படுவதுடன் பணத்தையும் செலவழித்து கஷ்டப்படுவார்கள்.
எந்த நோயையுமே நாம் முன்னாலேயே இனம் கண்டு அதற்குரிய சிகிச்சையை மேற்கொண்டால் ஓரளவுக்கு நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளமுடியும்.
அலர்ஜி தானே என நாம் அலட்சியமாக இருக்கும் வியாதி எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எல்லோரும் அறிய வேண்டும் எனும் நோக்கிலேயே இதை வெளியிட்டேன். இதற்கு மேல் பகுதியில் அலர்ஜியின் அறிகுறிகளையும் தொகுத்துள்ளேன் படித்துப்பாருங்கள் . கவனமாய் இருங்கள். எதையும் வர முன் காப்போம் .
இன்னும் தொடரும்.
கண்டும் காணாது இருந்து விட்டு நோய்களின் பின் விளைவுகள் அதிகரிக்கும் போது அவஸ்தைப்படுவதுடன் பணத்தையும் செலவழித்து கஷ்டப்படுவார்கள்.
எந்த நோயையுமே நாம் முன்னாலேயே இனம் கண்டு அதற்குரிய சிகிச்சையை மேற்கொண்டால் ஓரளவுக்கு நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளமுடியும்.
அலர்ஜி தானே என நாம் அலட்சியமாக இருக்கும் வியாதி எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எல்லோரும் அறிய வேண்டும் எனும் நோக்கிலேயே இதை வெளியிட்டேன். இதற்கு மேல் பகுதியில் அலர்ஜியின் அறிகுறிகளையும் தொகுத்துள்ளேன் படித்துப்பாருங்கள் . கவனமாய் இருங்கள். எதையும் வர முன் காப்போம் .
இன்னும் தொடரும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அலர்ஜி[
நான் அலர்ஜியால் பாதிக்கப்பட்டவுடன் இணையத்தில் உள்ள அனைத்து அலர்ஜி தொடர்பான தகவல்களையும் படித்துவிட்டேன். பிறகு இங்கு வந்து பார்த்தால் உங்கள் பதிவும் இருக்கிறது. மிகவும் பயனுள்ள பதிவு.
மிக்க நன்றி நிஷா
மிக்க நன்றி நிஷா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum