சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO) Khan11

ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO)

3 posters

Go down

ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO) Empty ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO)

Post by சுறா Sat 10 Jan 2015 - 21:30

ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO) Donbosco+31

த்தாலி நாட்டில்'மேல்மோன்பெராத்தா' என்னும் பகுதியில் உள்ள 'பெக்கி' என்னும் சிற்றூரில் பிரான்சிஸ் லூயி போஸ்கோ - மார்கரீத் ஒக்கியேனா தம்பதிக்கு 1815-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் நாள் தொன் போஸ்கோ பிறந்தார்.அவரது இயற்பெயர் ஜான் போஸ்கோ. ( இத்தாலி மொழியில் 'தொன்' என்பதற்கு 'குரு' என்று பொருள். பின்னாளில் அவர் பாதிரியார் ஆன பிறகு 'தொன் போஸ்கோ' என்று அழைக்கப்பட்டார்)

    தொன் போஸ்கோவுக்கு ஜோசப் என்ற உடன் பிறந்த அண்ணனும், தந்தையின் முதல் தாரத்திற்குப் பிறந்த அந்தோணி என்ற மூத்த அண்ணனும் உண்டு. தமது இரண்டாவது வயதிலேயே தந்தையை இழந்த போஸ்கோவை, அவரது அன்னை மிகுந்த சிரமங்களுக்கிடையில் தெய்வ பக்தியில் பழக்கி வளர்த்தார். 

          ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த போஸ்கோவுக்கு கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. ஆனாலும், கொடிய வறுமையை பொருட்படுத்தாமல் ஆடு, மாடு மேய்த்தும், கிடைத்த சிறு சிறு வேலைகளை செய்து, அதன் மூலம் கிடைத்த சொற்ப வருவாயைக் கொண்டும் கல்வி பயின்றார். அவருடைய லட்சியம் பாதிரியாராகி, ஏழைகளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதாகும். அதன்படியே,1841-ம் ஆண்டு ஜுன் மாதம் 5-ம் நாள் குரு பட்டம் பெற்று பாதிரியாரானார். அதே ஆண்டு டிசம்பர் 6-ம் நாள் அவருடைய துறவற வாழ்க்கையில் திருப்புமுனை நிகழ்ந்தது. அன்று அவர் தேவாலயத்தில் திருப்பலி பூசை நிறைவேற்ற தயாராகி கொண்டிருந்தபோது, 'பார்த்தலோமே காரெல்லி' என்ற அனாதைச் சிறுவனை கோயில் கணக்கர் அடித்துக்கொண்டிருந்தார். அவரைத் தடுத்து, அந்த சிறுவனை தனியே அழைத்து வந்து, அவனைப் பற்றி விசாரித்து தெரிந்துக்கொண்டார். தெருவில் அனாதையாக திரிந்துக்கொண்டிருந்த அந்த சிறுவன் தான், அவர் தொடங்கிய கல்வி மற்றும் சமுதாயப்பணியின் அடிக்கல். 

       அதன் பின்னர் தான் அவர், 'ஆரட்டரி' (இளைஞர் மன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, படுக்க நிழலின்றி வீதிகள்தோறும் சுற்றித் திரிந்த அனாதை சிறுவர்களையும், இளைஞர்களையும் கூட்டி உணவு, உறைவிடம், உடை போன்றவற்றை அந்த இளைஞர்களுக்கு அளித்து, கல்வி, கைத்தொழில் ஆகியவற்றை கற்பித்து சமூத்திற்கு நல்ல குடிமக்களை உருவாக்கும் பணியை சிறப்பாகச் செய்யத் தொடங்கினார். 

      தான் தொடங்கிய பணி, தன்னோடு முற்றுப் பெற்றுவிடக் கூடாது என்று டான் போஸ்கோ விரும்பினார். அவரது அனாதை ஆசிரமத்தில் பயின்ற சில இளைஞர்கள் அவரைப் போலவே சேவை செய்ய ஆர்வம் கொண்டு பாதிரியாரானார்கள். அவர்களை கொண்டு, 1874-ம் ஆண்டு போப்பாண்டவரின் அனுமதியோடு 'சலேசிய சபை' என்ற அமைப்பை நிறுவினார்.தொன்போஸ்கோ ஏற்படுத்திய துறவற சபையைச் சேர்ந்த பாதிரியார்களும், கன்னியாஸ்தீரிகளும் உலகம் முழுவதும் இன்றுவரை அவருடைய கல்வியுடன் கூடிய சமுதாயப் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். 

       இளைஞர்களுக்காகவே தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த தொன்போஸ்கோ, 1888-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி தமது 72-வது வயதில்இவ்வுலகிலிருந்து விடைபெற்றுகொண்டார். 1934-ம் ஆண்டு போப் 11-ம் பத்திநாதர்தொன் போஸ்கோவுக்கு 'புனிதர்' (செயிண்ட்) பட்டம் வழங்கினார். 

ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO) Donbosco+1
        தொன்போஸ்கோ மறைந்து , 123 ஆண்டுகளாகியும் அவரது வலது கரம்இன்னும் அழியாமல் உள்ளது. அவரது வலது கரம் ஒருபேழையில் வைக்கப்பட்டு,  மெழுகு உடலின் நெஞ்சுப்பகுதியில் பொருத்தப்பட்டது. 

       வரும் 2015-ம் ஆண்டு தொன் போஸ்கோவுக்கு 200-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தொன் போஸ்கோவின் புனித கரம் வைக்கப்பட்டுள்ள மெழுகு வடிவ சிலை உலகம் முழுவதும் புனித பயணம் மேற்கொண்டு 130 நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.கடந்த ஆண்டுதமிழகம் உள்பட இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.   ஏராளமான மக்கள், அவரது உடலை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினர்.

          சிறுவர்களை முன்னேற்ற கல்வியால் மட்டுமே முடியும் என்பதை அறிந்த தொன் போஸ்கோ முறை சாரா கல்வி முறையை கொண்டு வந்தார். இம்முறையில் கல்வி பெற்ற இளைஞர்கள் தகுதியான வேலை வாய்ப்பு பெற்று சமுதாயத்தில் உயர்வு பெற வழி வகை செய்தார். தொன் போஸ்கோவின் கல்வி முறையை 130 நாடுகளில் முறையான கல்வியாகவும், முறைசாரா கல்வியாகவும் பின்பற்றப்படுகின்றது. 
THANKS
thaaligai.blogspot

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO) Empty Re: ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO)

Post by சுறா Sat 10 Jan 2015 - 21:34

போன ஏப்ரல் மாதம் இவர் பிறந்த பெக்கி என்னும் இத்தாலிய கிராமத்திற்கு நான் சென்று வந்தேன். அழகிய பசுமையான ஒரு சின்ன ஊர்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO) Empty Re: ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO)

Post by Nisha Sun 11 Jan 2015 - 18:59

இது உங்கள் ஸ்கூலில் தந்தை வரலாறு அல்லவா? 

ஏழைக்குழந்தைகள் படிக்கணும் என ஆரம்பித்தது இன்று ஏழைகள் மழைக்கு கூட ஒதுங்க முடியாதபடி செல்வந்தர் வீட்டு பிள்ளைகளின் பள்ளியானதெப்படி!?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO) Empty Re: ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO)

Post by சுறா Mon 12 Jan 2015 - 12:47

Nisha wrote:இது உங்கள் ஸ்கூலில் தந்தை வரலாறு அல்லவா? 

ஏழைக்குழந்தைகள் படிக்கணும் என ஆரம்பித்தது இன்று ஏழைகள் மழைக்கு கூட ஒதுங்க முடியாதபடி செல்வந்தர் வீட்டு பிள்ளைகளின் பள்ளியானதெப்படி!?

நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான். இன்று எங்கள் பள்ளியில் 75000 க்கும் குறைவான மாத சம்பளம் வாங்கும் பசங்க உள்ள காலை கூட வைக்க முடியாது. இது ஏன் என்றால்?

எங்கள் ஒரு பள்ளியின் வருமானத்தால் தான் வட தமிழகத்தில் உள்ள 75 பள்ளிகள் (வட தமிழகத்திற்கு டான்போஸ்கோ தஞ்சாவூர் பள்ளியில் இருந்து உதவிகள் பெறப்படுகிறது) 
ஏழை மாணவர்கள் படிக்கும் தமிழ் ஆங்கிலம் மீடியம் பள்ளிகள், 
அனாதை மாணவர்கள் படிக்கும் தங்கும் சிறப்பு பள்ளிகள்
விதவைகள் தையல் பயில சிறப்பு வகுப்புகள் கொண்ட பள்ளிகள்
தொழுநோயாளிகள் வாழ அவர்களுக்கு வேலை வாய்ப்பு வசதிகள் செய்ய போப் ஜான் கார்டன் எனும் இடத்தில் அவர்களுக்கு விளைநிலங்களும், அவர்கள் பிள்ளைகளுக்கு படிக்க வியாசர்பாடியில் பெரிய மேல்நிலை பள்ளியும், இரவு வகுப்புகளும் நடக்கிறது.
எயிட்ஸ்சால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிக்க சிறப்பு பள்ளிகள் திருப்பத்தூரில் உள்ளது
தாழ்த்தப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து படிக்க தூய இருதய ஆண்டவர் கலை கல்லூரியும் திருப்பத்தூரில் உள்ளது

இப்படியாக நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். தட்டச்சு செய்ய முடியாததால் கீழே உள்ள வெப்சைட்டில் பாருங்கள் நிறைய பார்க்கலாம்.

மேலதிக தகவல்களுக்கு
www.donboscochennai.org

இதில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மொத்தம் 11 மட்டுமே (75 பள்ளிகளில் வெறும் 11 க்கு தான் அரசு, ஆசிரியர்களுக்கு சம்பளம் மட்டும் தருகிறது) பள்ளி கட்டடம் மற்றும் இதர வசிதிகளை யார் செய்வதாம்.

அதனால் எங்கள் பள்ளியின் மொத்த வருமானமும் சம்பளம் மற்றும் இதர செலவுகள் போக மீதி அனைத்தும் இதுபோன்ற நற்காரியங்களுக்கே செலவிடப்படுகிறது.

இப்ப சொல்லுங்க எங்க பள்ளியில் பணக்கார மாணவர்கள் படிப்பது தவறா?

www.facebook.com/doboda 

இதையும் பாருங்க வருடம் ஒரு முறை நடன நிகழ்ச்சி நடத்தி இதுவரை 4 ஆண்டுகள் நான்கு பள்ளிகளுக்கு ஆய்வகங்கள் கட்டவும், கணினி அறை வசதி செய்யவும், சுனாமி குடியிருப்புகள் மற்றும் ஏழை கிராமங்களில் விளையாட்டு திடல்கள் மற்றும் நூலகங்கள் அமைக்கவும் செலவிடப்படுகிறது.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO) Empty Re: ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO)

Post by பானுஷபானா Mon 12 Jan 2015 - 13:29

சூப்பர் அண்ணா...

இவரின் படத்தைப் போட்டு பிராட்வேயில் உள்ள டான்பாஸ்கோ பள்ளிச் சுவற்றில் ஒரு வாசகம் இருக்கும் அதைப் படிக்கும் போதெல்லாம் எஅன்க்கு அர்த்தம் புரிவதில்லை. அதுக்கு என்ன அர்த்தம்னு சொல்றிங்களா?

அந்த வாசகம்
நீ இளைஞன் அது போதும் உன்னை அன்பு செய்ய.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO) Empty Re: ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO)

Post by சுறா Mon 12 Jan 2015 - 13:44

பானுஷபானா wrote:சூப்பர் அண்ணா...

இவரின் படத்தைப் போட்டு பிராட்வேயில் உள்ள டான்பாஸ்கோ பள்ளிச் சுவற்றில் ஒரு வாசகம் இருக்கும் அதைப் படிக்கும் போதெல்லாம் எஅன்க்கு அர்த்தம் புரிவதில்லை. அதுக்கு என்ன அர்த்தம்னு சொல்றிங்களா?

அந்த வாசகம்
நீ இளைஞன் அது போதும் உன்னை அன்பு செய்ய.

இளைஞர்கள் படிக்காமலும் வாய்ப்புகள் கிடைக்காமலும் தவறான பாதைகளில் சென்ற காலத்தில் தான் டான்போஸ்கோ பிறந்தார் வளர்ந்தார். அவரால் அதை பார்த்து சும்மா இருக்க முடியவில்லை, அதனால் தான் அவர்களை எல்லாம் ஒன்றினைத்து (தெருவோர சிறுவர்கள்) ஆரட்டரி என்ற அமைப்பை நிறுவினார்.

அதற்கு அது தான் அர்த்தம். நீ இளைஞன் அது போதும் உன்னை அன்பு செய்ய, நீ யார் என்ன செய்கிறார் என்பது எனக்கு வேன்டாம். உனக்காகவே நான் படித்தேன் நான் குருவானேன் என்று சொல்லுவார்.

அந்த காலத்தில் இத்தாலியில் இதுபோன்ற தெருவோர சிறுவர்களை யாரும் அன்பு செய்யாமல் விரட்டியடித்தனர். அதனால் அவர்கள் அடாவடிகளில் ஈடுபட்டு சமூக விரோதிகளாக மாறினர். அவர்களை முதன் முதலில் அன்பு செய்து அரவணைத்தவர் தான் டான்போஸ்கோ.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO) Empty Re: ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO)

Post by பானுஷபானா Mon 12 Jan 2015 - 14:18

சுறா wrote:
பானுஷபானா wrote:சூப்பர் அண்ணா...

இவரின் படத்தைப் போட்டு பிராட்வேயில் உள்ள டான்பாஸ்கோ பள்ளிச் சுவற்றில் ஒரு வாசகம் இருக்கும் அதைப் படிக்கும் போதெல்லாம் எஅன்க்கு அர்த்தம் புரிவதில்லை. அதுக்கு என்ன அர்த்தம்னு சொல்றிங்களா?

அந்த வாசகம்
நீ இளைஞன் அது போதும் உன்னை அன்பு செய்ய.

இளைஞர்கள் படிக்காமலும் வாய்ப்புகள் கிடைக்காமலும் தவறான பாதைகளில் சென்ற காலத்தில் தான் டான்போஸ்கோ பிறந்தார் வளர்ந்தார். அவரால் அதை பார்த்து சும்மா இருக்க முடியவில்லை, அதனால் தான் அவர்களை எல்லாம் ஒன்றினைத்து (தெருவோர சிறுவர்கள்) ஆரட்டரி என்ற அமைப்பை நிறுவினார்.

அதற்கு அது தான் அர்த்தம். நீ இளைஞன் அது போதும் உன்னை அன்பு செய்ய, நீ யார் என்ன செய்கிறார் என்பது எனக்கு வேன்டாம். உனக்காகவே நான் படித்தேன் நான் குருவானேன் என்று சொல்லுவார்.

அந்த காலத்தில் இத்தாலியில் இதுபோன்ற தெருவோர சிறுவர்களை யாரும் அன்பு செய்யாமல் விரட்டியடித்தனர். அதனால் அவர்கள் அடாவடிகளில் ஈடுபட்டு சமூக விரோதிகளாக மாறினர். அவர்களை முதன் முதலில் அன்பு செய்து அரவணைத்தவர் தான் டான்போஸ்கோ.

விளக்கத்திற்கு நன்றி அண்ணா...

2007 லிருந்து இந்த வாசகத்தை போகும்போதும் வரும்போதும் படிப்பேன். ஆனா விளக்கம் யாரிடம் கேட்பதுனு தெரியாம இருந்தேன்.

உங்களால் இன்னைக்கு புரிந்துகொண்டேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO) Empty Re: ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO)

Post by Nisha Mon 12 Jan 2015 - 14:22

பணக்காரபசங்க ஸ்கூல் ஆகக்கூடாது என சொல்லவில்லை ஆனது எப்படி எனகேட்டேன். உங்கள் விளக்கம் அருமை. நிரம்ப விடயம் அறிய முடிந்தது . ரெம்ப நன்றி சுறா சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO) Empty Re: ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum