சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Today at 8:21

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

ஆரம்ப நிலை நீரிழிவு Khan11

ஆரம்ப நிலை நீரிழிவு

Go down

ஆரம்ப நிலை நீரிழிவு Empty ஆரம்ப நிலை நீரிழிவு

Post by ahmad78 Mon 19 Jan 2015 - 10:40

[size=30]ஆரம்ப நிலை நீரிழிவு ஓர் ஆரஞ்சு விளக்கு முன்னெச்சரிக்கை![/size]
[size=30]ஆரம்ப நிலை நீரிழிவு Ht3194[/size]
[size=30]நமது நாடு, கொஞ்சம் கொஞ்சமாக நீரிழிவின் தலைமையிடமாக மாறிக்கொண்டிருக்கிறது. இங்கு நீரிழிவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 6.5 கோடி. நீரிழிவுக்கு முந்தைய நிலையினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 7.72 கோடி என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

‘நீரிழிவுக்கு முந்தைய நிலை’ என்றால் என்ன?


‘யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே...’ என்பதுபோல, யானை போன்ற மிகப்பெரிய நோயாகக் கருதப்படும் நீரிழிவு வரும் முன்னே, ‘நீரிழிவுக்கு முந்தைய நிலை’ மணியோசைபோல முந்திக்கொண்டு,முன்னெச்சரிக்கை மணியை உடலில் அடிக்கத் தொடங்கி விடுகிறது. இதைத்தான் prediabetes என்று அழைக்கிறார்கள். உடல் அடிக்கும் இந்த மணியோசை சத்தம் சிலருக்கு மட்டும் கேட்கிறது. சிலருக்குக் கேட்பதில்லை. தங்களின் உடல்நலம் குறித்து அறிந்துகொள்ள மருத்துவர்களை நாடி ஆலோசனை பெறுபவர்களுக்கு, இந்த ஓசை prediabetes என்ற உச்சரிப்பாகக் கேட்கத் தொடங்கிவிடுகிறது.‘அட, வரும்போது பார்த்துக்கொள்ளலாம்... எனக்குத்தான் ஒரு தொந்தரவும் இல்லையே’ என்று அலட்சியமாக இருப்பவர்களுக்கு ஓசை கேட்காது.

‘நீரிழிவு’ என்று எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்? ஒருவருக்கு நீரிழிவு உள்ளது என்பதை ஆய்வுக்கூடப் பரிசோதனை மூலம் எப்படித் தெரிந்து கொள்ளலாம்?


காலையில் வெறும் வயிற்றில் எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (8 மணி நேர இடைவெளி) ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு 126 மில்லி கிராம்/டெசி லிட்டர் என்ற அளவிலோ, அதற்கு மேல் இருந்தாலோ... உணவு சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (75 கிராம் குளுக்கோஸ் வாய் வழியாகக் கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்து), ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு 200 மில்லி கிராம் / டெசி லிட்டர் என்ற அளவிலோ, அதற்கு மேல் இருந்தாலோ... ரத்தச் சிவப்பணு குளுக்கோஸ் அளவு (HbA1C) 6.5 சதவிகிதம் அளவு அல்லது அதற்கு மேலோ இருந்தாலோ... நீரிழிவு நோய் உள்ளது என்று கூறிவிடலாம்.  
[/size]


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆரம்ப நிலை நீரிழிவு Empty Re: ஆரம்ப நிலை நீரிழிவு

Post by ahmad78 Mon 19 Jan 2015 - 10:41

நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கான ரத்த குளுக்கோஸ் அளவுகள் ஒருவருக்கு நீரிழிவு நோய் இல்லை என்று உறுதியாகச் சொல்வதற்கு ரத்த குளுக்கோஸ் எந்த அளவில் இருக்க வேண்டும்?

காலையில் வெறும் வயிற்றில் எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (8 மணி நேரஇடைவெளி) ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு 100 மில்லி கிராம்/டெசி லிட்டர் என்ற அளவுக்குக் குறைவாக இருந்தாலோ... 

உணவு சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (75 கிராம் குளுக்கோஸ் வாய் வழியாகக் கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்து), ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு 140 மில்லி கிராம்/ டெசி லிட்டர் என்ற அளவுக்குக் குறைவாக இருந்தாலோ... 

ரத்தச் சிவப்பணு குளுக்கோஸ் அளவு (HbA1C) 5.6 சதவிகிதம் என்ற அளவுக்குக் குறைவாக இருந்தாலோ நீரிழிவு நோய் இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.


நீரிழிவுக்கு முந்தைய நிலையில் ரத்த குளுக்கோஸ் அளவுகள் 

இப்போது, நாம் முன்பு பார்த்த நீரிழிவுக்கு முந்தைய நிலைக்கு வருவோம். இது இரண்டும்கெட்டான் நிலை. இவர்களுக்கு நீரிழிவு இல்லை என்றும் சொல்ல முடியாது... இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. ஆரம்ப நிலையைக் கவனிக்காமல், கண்டு பிடிக்காமல் போனால், விரைவில் இவர்கள் அனைவரும் நீரிழிவாளர்களாகி விடுவார்கள் என்பதை மட்டும் தெளிவாகச் சொல்லலாம். 

காலையில் வெறும் வயிற்றில் எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (8 மணி நேர இடைவெளி) ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு 100 மில்லிகிராம்/டெசி லிட்டர் என்ற அளவில் இருந்து 125 மில்லி கிராம் / டெசி லிட்டர் வரை இருந்தாலோ...

உணவு சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து எடுக்கும் ரத்தப் பரிசோதனையில் (75 கிராம் குளுக்கோஸ் வாய் வழியாகக் கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்து), ரத்த நீர்ம குளுக்கோஸ் அளவு 140 மில்லி கிராம்/ டெசி லிட்டர் என்ற அளவில் இருந்து 199 மில்லிகிராம்/டெசி லிட்டர் என்ற அளவு வரை இருந்தாலோ...

ரத்தச் சிவப்பணு குளுக்கோஸ் அளவு (HbA1C) 5.7 சதவீதம் முதல் 6.4 சதவீதம் என்ற அளவு வரை இருந்தாலோ... நீரிழிவு முந்தைய நிலையில் இருக்கிறார்கள் என்று சொல்லிவிடலாம்.  இந்த நிலை உள்ளவர்களுக்குப் பெரும்பாலும் நோய் அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை. அதனால், இவர்கள் தங்களுக்கு நீரிழிவு இல்லையென நினைத்துக் கொண்டிருப்பார்கள். இந்தியனாகப் பிறந்த நம் ஒவ்வொருவருக்குமே இந்த நோய் வர அதிக வாய்ப்பு உள்ளது. இருந்தபோதிலும், குறிப்பாகச் சில பிரிவினருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது மிகவும் அவசியம். 


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆரம்ப நிலை நீரிழிவு Empty Re: ஆரம்ப நிலை நீரிழிவு

Post by ahmad78 Mon 19 Jan 2015 - 10:41

யார் இந்த குறிப்பிட்ட பிரிவினர்?

45 வயதுக்கு மேற்பட்டவர்கள்
45 வயதுக்குக் குறைவாக இருந்தாலும், பருமன் உள்ளவர்கள் (BMI: 25 AA/e2 என்ற அளவுக்குள் இல்லாதவர்கள்)
உடற்பயிற்சி இல்லாமல், சோம்பலாக இருப்பவர்கள்
தாய், தந்தை மற்றும் உடன்பிறந்தயாருக்காவது நீரிழிவு நோய் இருப்பின்...


மிகுந்த ரத்த அழுத்தம் உடையவர்கள்
ரத்த கொலஸ்ட்ரால் மிகுந்தவர்கள்
பல்வேறு நோய்த்தொற்று, தோல் பாதிப்புகள் உள்ளவர்கள்
இதய நோய் / மூளைத் தாக்கம் / ரத்த நாள நோய்கள் உள்ளவர்கள்
பெண்களைப் பொறுத்த வரை, பருமன் உள்ளவர்கள்
கர்ப்பக் காலத்தில் நீரிழிவுக்குச் சிகிச்சை பெற்றவர்கள்
அதிக எடை (4 கிலோவுக்கு மேல்) உள்ள குழந்தை பெற்றவர்கள்
கருவணுவகத்தில் நீர்க்கட்டி நோய் உள்ள பெண்கள் (PCOS  Polycystic Ovary Syndrome)

இவர்கள், நீரிழிவுக்கு முந்தைய நிலை பாதிப்பு இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்வது மிகவும் அவசியம். இவர்கள் அனைவரும், இந்த நிலை இல்லை என்ற போதிலும் ஆண்டுக்கு ஒருமுறை ரத்தப்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 

நீரிழிவுக்கு முந்தைய நிலை கண்டு பிடிக்கப்பட்டவர்களின் கவனத்துக்கு...

சீனி (சர்க்கரை), வெல்லம், கருப்பட்டி, பனைவெல்லம் போன்ற நேரடி சர்க்கரைப் பொருட்களை தவிர்க்க வேண்டும். இனிப்பு வகைகள், க்ரீம், குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகள் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். நெய், வெண்ணெய், டால்டா, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு ஆகிய கொழுப்பு உணவுகளையும் தவிர்க்க வேண்டும். உணவில் அதிக அளவு நார்ச்சத்து மிகுந்த தானியங்கள், சிறு தானியங்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், மீன், முட்டை வெள்ளைக் கரு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எடை, வேலை செய்யும் திறன் ஆகியவற்றைப் பொறுத்து, தேவைப்படும் கலோரியை கணக்கிட்டு (மருத்துவர் மற்றும் உணவியல் நிபுணர்), அந்த அளவு சக்தி தரும் உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும். மது, புகைப்பழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்திவிட வேண்டும். தினமும், குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். போதிய நேரம் உறங்குவதுடன், கவலை, மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவற்றுக்கு இடம் கொடுக்காமல் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள பழக வேண்டும்.  
இப்படிச் சில ஆரோக்கிய நடைமுறைப் பழக்க வழக்கங்களை முறையாக மேற்கொண்டாலே, உடலுக்குள் நீரிழிவு முகாமிடாமல் முந்தைய நிலையிலேயே கண்டறிந்து முறியடிக்கலாம்!

(கட்டுப்படுவோம்...கட்டுப்படுத்துவோம்!)


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3204


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆரம்ப நிலை நீரிழிவு Empty Re: ஆரம்ப நிலை நீரிழிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum