சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34

» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

கண்கலங்கிய சம்பவமொன்று....... Khan11

கண்கலங்கிய சம்பவமொன்று.......

4 posters

Go down

கண்கலங்கிய சம்பவமொன்று....... Empty கண்கலங்கிய சம்பவமொன்று.......

Post by நேசமுடன் ஹாசிம் Thu 22 Jan 2015 - 7:17

பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளிற்கு ஒரு கண் இல்லை. தன் மற்றைய கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய நிலை. கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால வாழ்வு பற்றியதாகவே இருந்தது. தன்னிடம் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள். மீகுதி சொத்தை தனது மகனின் கல்வி தொடர்பான செலவுகளிற்கு தயார் செய்திருந்தாள்.

நல்ல ஒழுக்கமிக்க மகன். இரக்கமானவன். புத்திசாலி. ஊரில் எல்லோரும் புகழும் வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன. பாடசாலையில் முதல் தரத்தில் சித்தி எய்துபவன் அவன். காலங்கள் உருண்டன. ஒரு முறை அவன் மிகச்சிறந்த பெறுபேற்றினை ஈட்டி அந்த பிரதேசத்திற்கும், அவனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்தான்.
இந்த செய்தியை அறிந்த உடனேயே அந்த தாய் ஆவலுடன் பாடசாலை நோக்கி ஓடினாள். மகனின் வகுப்பறை எது என அறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள். இறைவனை புகழ்ந்தாள். சந்தோஷத்துடன் வீடு வந்து அவனிற்கு பிடித்தமான உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.
மகனின் வரவை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து காத்திருந்த தாய் மகன் வந்தவுடன் வாஞ்ஞையுடன் அருகில் சென்றாள். ஆனால் மகன் முகத்தை திருப்பி கொண்டான். தாயுடன் பேசவில்லை. நேராக அறைக்குள் சென்று படுத்து விட்டான். அவளிற்கு ஒன்றும் புரியவில்லை. பதற்றத்துடன் ஓடிச்சென்று என்னவென்றாள் கவலையுடன். மகன் சொன்னான், " நீ ஏன் என் பாடசாலைக்கு வந்தாய்?. அங்கு அழகான பணக்காரர்கள் மட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என் நண்பர்கள் என்னை குருடியின் மகன் என கூப்பிடுகின்றனர். இது பெரிய அவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ என் பாடசாலை பக்கமே வராதே" என கத்தினான் கோபமாக. அதிர்ந்து போனாள் தாய். ஆனாலும் மகனின் சந்தோஷம் கருதி இனி அவ்வாறு நடக்காது என சத்தியம் செய்தாள்.
இப்போது அவனது சுபாவம் மேலும் மாறுபட ஆரம்பித்தது. தன்னை தேடி வரும் நண்பர்கள் முன் வர வேண்டாம் என தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற பின், தனக்கு குருடியுடன் இருப்பது வெட்கம் என்றும், தான் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான். ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான். அவள் கதறி துடித்தாள், தினமும் தன் மகனை நினைத்து.
இறுதி பரீட்சையில் பாஸாகி, மருத்துவ கல்லூரிக்கு மகன் தெரிவானது அவளிற்கு தெரியவந்தது. தலை நகர் சென்று படிக்க வேண்டும். நிறைய செலவாகும். தனது மிகுதமிருந்த அனைத்து சொத்துக்களையும் விற்று மகனிற்கு அனுப்பி வைத்தாள். 5 ஆண்டுகள் பறந்து சென்றன. இப்போது அவளது மகன் ஒரு மருத்துவன்.
அவனை பார்க்க அவள் பல முயற்ச்சிகளை மேற்கொண்டும் எதுவும் பயனற்று போயின. ஒரு கடிதம் மகனிடம் இருந்து வந்தது. அதில், " உம்மா, நான் இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த வைததியர்களில் ஒருவன். குருடியின் மகன் வைத்தியன் என்பது தெரிந்தால் எனது கொளரவம் பாதிப்படையும். ஆதலால் நான் இந்த நாட்டை விட்டும் உன் பார்வையை விட்டும் கண்காணாத தேசம் செல்கிறேன்". இது தான் அந்த கடிதத்தின் வரிகள். துடித்து போனாள் தாய்.
சில வருடங்கள் கடந்தன. முதுமையும், வறுமையும், அவளது ஒற்றை கண்ணுமே அவளிடம் எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி காரணமாக ஒரு பணக்கார வீட்டில் ஆயாவாக தினமும் வேலை செய்து வந்தாள் அந்த தாய். அந்த வீட்டின் எஜமான இளவயதினள். நல்ல இளகிய குணம் படைத்தவள். இறையட்சமிக்கவள். அவளும் ஒரு வைத்தியராகவே இருந்தாள். இந்த தாயை தனது தாயக நேசித்து போஷித்து வந்தாள். எல்லாம் நன்றாகவே நடந்தன.
அவளது கணவன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தான். தனது எஜமானியின் கணவர் வருகிறார் என்பதனால் வாய்க்கு ருஷியாக நல்ல உணவுகளை தயார்படுத்தி வைத்திருந்தாள் அந்த குருட்டு தாய்.
வீடு வந்த அவளது கணவன், சில நாளிகைகளின் பின்னர் சாப்பிட அமர்ந்தான். உணவை ஆசையாக வாயில் அள்ளி திணித்தான். திடீரென அவன் முகம் மாறியது. கருமை அவன் முகத்தில் அப்பி கொண்டது. சடாரென தனது மனைவியின் முகத்தை பார்த்து கேட்டான், "இதனை நீ தான் சமைத்தாயா?" என்று. மனைவி குழப்பத்துடன் இல்லையே என்றாள். " அப்படியானால் யார் சமைத்தது" இது அவனது இரண்டாம் கேள்வி. வீட்டு வேலைக்காரி சமைத்தாள் என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன் அடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான். உள்ளே அவனது குருட்டு தாய்.
அதிர்ந்து போனார்கள் இருவரும். இவள் இன்னும் இங்கேயா எனும் ஆத்திரமும், வெறுப்பும் அவன் மூளையை ஆட்டுவித்தது. என் மருமகளா என் எஜமானி என்ற சந்தோஷமும், மகிழ்ச்சியும் அந்த தாயின் இதயத்தை நிரப்பின. உணற்ச்சிகளால் இருவருமே பேசவில்லை.
மீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த வைத்தியன் சொன்னான் தன் மனைவியை பார்த்து, "இந்த குருடியை உடனடியாக கொண்டு சென்று வேறு எங்காவது விட்டு விடு. கண்காணாத இடத்தில்". கத்தினான். அவன் சத்தம் அடுப்படியில் நின்ற அந்த அபலை தாயின் இதயத்தில் முட்டி மோதி நின்றது.
துவண்டு போனாள். வாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ வேண்டுமா என எண்ணி அழுதாள்.
தனது கணவனின் பிடிவாதமும், கோபமும், ஆவேசமும் எல்லை மீறி செல்லவே, அவனது மனைவியான அந்த பெண் வைத்தியர் வேறு வழியின்றி அவளிற்கு போதுமான பணத்தினை வழங்கி பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் முன்பு அவள் வாழ்ந்து வந்த இடத்திற்கே மீண்டும் அனுப்பி வைத்தாள் அழுகையுடன்.
காலம் மீண்டும் வேகமாக அசைந்தது. இப்போது அந்த வைத்தியனின் தலை மயிர்கள் பழுக்க ஆரம்பித்து விட்டன. உடல் பலம் சற்று சோர்ந்தும் போய்விட்டது. கணவனின் தொடரான சுயநலன், நன்ற மறத்தல் போன்ற காரணங்களினால் கருத்து மோதல் ஏற்பட்டு அந்த வைத்தயரான மனைவியும் இவரை விவாகரத்து செய்து விட்டு இன்னாரு மறுமணம் புரிந்து கொண்டாள். இப்போது வைத்தியரிடம் பணத்தை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. தனி மரமாக, எதிர்காலங்கள் சூனியமான நிலையில், ஆறுதலிற்கு கூட தலை வருட யாரும் இன்றி தனி மரமாக நின்றான். மெல்ல மெல்ல தான் தன் தாயிற்கு செய்த துரோகங்கள், அநியாயங்கள், நோகடிப்புக்கள் அவன் உள்ளத்ததை வந்து உசுப்ப ஆரம்பித்தன. ஒரு முறை நடுநிசியில் எழும்பி உம்மா என கத்தி அழும் அளவிற்கு அவனிற்கு தனது பாவங்களின் பாரம் புரிந்து போனது.
ஒரு நாள் காலை அவன் தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது. அவனது தூரத்து உறவினர் ஒருவர் பேசினார். "உன் தாய் தள்ளாத வயதில் மரணிக்கும் தறுவாயில் ஸகராத் எனும் நிலையில் இருக்கிறாள்" என்பதே அந்த செய்தி. உடனடியாகவே அவன் தனது காரில் கிளம்பி தாயிருக்கம் இடத்திற்கு சென்றான். அவன் சென்ற போது, அவளது உயிர் பிரிந்து விட்டது. ரூகூ போன நிலையில் அவளை கட்டிலில் கிடத்தி வைத்திருந்தனர். இப்போது "உம்மா" என கதறினான். கண்ணீர் விட்டான். ஜனாஸாவை நல்ல முறையில் அடக்கம் செய்ய உதவினான்.
இப்போது ஒரு கடிதத்தை அவனது உறவுக்காரர் கொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன் வருவானாக இருந்தால் மட்டும் கொடுக்குமாறும், இல்லையெனில் எரித்து விடுமாறும் தயார் கடைசி தருவாயில் வேண்க்கொண்டதாகவும் அவர் சொன்னார். பிரித்து வாசித்தான். அவன் கண்களில் இருந்த வழிந்த கண்ணீர் அந்த பாலைவெளியையே சகதியாக மாற்றியது.
அதில் இருந்த வரிகள் இதுதான்....
"அன்பின் மகனே!.. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.
எனக்கு தெரியும், என் உருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும் பிடிக்காது என்று. அதனாலேயே, எனது மரணத்திற்கு பின்னர் நீ வந்தால் மட்டும் இதனை கொடுக்கும்படி சொன்னேன்.
மற்றபடி எனது அன்பு என்றும் மாறாதது. அது இறைவனிற்கு மட்டுமே தெரிந்த விஷயம். மகனே நான் குருடிதான். உனக்கு குருடி தாய் இருந்திருக்க கூடாது தான். எனக்கு உன் உள்ளம் புரிகிறது.
உனது உள்ளத்து உண்ர்வுகளை நான் பெரிதுமே மதிக்கின்றேன். நான் உன்னை சபித்தது கிடையாது. ஏன் கோபப்பட்டது கூட கிடையாது. எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும் என்றிருந்தால் நான் இன்னொரு திருமணம் முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன். உனக்காகவே நான் வாழ்ந்தேன். அதை நீ புரிந்து கொள்ளாமல் போய் விட்டாய்!
மகனே உனக்கு தெரியுமா? நான் ஏன் குருடியானேன் என்று! அப்போது உனக்கு சின்ன வயது. பாதையில் நின்று நீ விளையாடிக்கொண்டிருந்தாய். ஏதோ ஒரு பொருள் உன் கண்களில் பட்டு உன் ஒரு கண் குருடாகி விட்டது. வைத்தியர்கள் இன்னொரு வெண்படலம் இருந்தால் மட்டுமே உன் பார்வையை மீண்டும் கிடைக்க வைக்கலாம் என்றனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. நேரமும் போதாது.
அதனால்....
என் ஒரு கண்ணை உடனடியகாவே தானம் செய்து உனக்கு பார்வை கிடைக்க செய்தேன். எனது கண்மணியே இன்று உன் கண்களாக இருக்கிறது. நீ இந்த உலகத்தை, வாழ்க்கையை பார்ப்பதும் அந்த கண்களாளேயே!...
உனக்கு இதுவும் அவமானம் என்றால் உனது வலது கண்ணை பிடுங்கி எறிந்து விடு. ஏனென்றால் அது ஓர் குருடியின் கண்ணல்லாவா? இல்லை மனமிருந்தால் அப்படியே விட்டு விடு. அந்த கண்களால் நான் உன்னை பார்த்துகொண்டிருப்பேன்."
இப்படிக்கு, என்றுமே அன்புள்ள,
உன் குருட்டு உம்மா.

கண்கலங்கிய சம்பவமொன்று....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கண்கலங்கிய சம்பவமொன்று....... Empty Re: கண்கலங்கிய சம்பவமொன்று.......

Post by நேசமுடன் ஹாசிம் Thu 22 Jan 2015 - 7:18

இது இணையத்தில் காலையில் படிக்கக் கிடைத்தது பார்த்தபோது என் கண்கள் கலங்கிவிட்டது பழைய பதிவாக இருந்தாலும் இதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மனம் நாடியது நன்றிகள்

கண்கலங்கிய சம்பவமொன்று....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கண்கலங்கிய சம்பவமொன்று....... Empty Re: கண்கலங்கிய சம்பவமொன்று.......

Post by பானுஷபானா Thu 22 Jan 2015 - 13:10

நானும் படித்திருக்கிறேன் ஹாசிம் மனம் கலங்கும் சம்பவம்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கண்கலங்கிய சம்பவமொன்று....... Empty Re: கண்கலங்கிய சம்பவமொன்று.......

Post by நேசமுடன் ஹாசிம் Thu 22 Jan 2015 - 13:11

பானுஷபானா wrote:நானும் படித்திருக்கிறேன் ஹாசிம் மனம் கலங்கும் சம்பவம்.
இப்படியும் நடக்குமா என்றிருக்கிறது ஆனால் இது தொகுக்கப்பட்ட ஒரு வரலாறாகத்தெரிகிறது எழுதியவரின் சாமர்த்தியம் தெரிகிறது

கண்கலங்கிய சம்பவமொன்று....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கண்கலங்கிய சம்பவமொன்று....... Empty Re: கண்கலங்கிய சம்பவமொன்று.......

Post by பானுஷபானா Thu 22 Jan 2015 - 13:16

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:நானும் படித்திருக்கிறேன் ஹாசிம் மனம் கலங்கும் சம்பவம்.
இப்படியும் நடக்குமா என்றிருக்கிறது ஆனால் இது தொகுக்கப்பட்ட ஒரு வரலாறாகத்தெரிகிறது எழுதியவரின் சாமர்த்தியம் தெரிகிறது

எனக்கு இது நிஜமில்லை என்று தோனுகிறது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கண்கலங்கிய சம்பவமொன்று....... Empty Re: கண்கலங்கிய சம்பவமொன்று.......

Post by நேசமுடன் ஹாசிம் Thu 22 Jan 2015 - 16:50

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:நானும் படித்திருக்கிறேன் ஹாசிம் மனம் கலங்கும் சம்பவம்.
இப்படியும் நடக்குமா என்றிருக்கிறது ஆனால் இது தொகுக்கப்பட்ட ஒரு வரலாறாகத்தெரிகிறது எழுதியவரின் சாமர்த்தியம் தெரிகிறது

எனக்கு இது நிஜமில்லை என்று தோனுகிறது
நிஜமாக இல்லை என்று எடுத்துக்கொண்டாலும் நிதர்சனமாகத் தந்த கரு மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விடயம்

கண்கலங்கிய சம்பவமொன்று....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கண்கலங்கிய சம்பவமொன்று....... Empty Re: கண்கலங்கிய சம்பவமொன்று.......

Post by சுறா Sat 24 Jan 2015 - 6:30

தன்னையே வருத்தி மகனை வளர்த்த தாயின் கதை நெகிழவைக்கிறது

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கண்கலங்கிய சம்பவமொன்று....... Empty Re: கண்கலங்கிய சம்பவமொன்று.......

Post by Nisha Sat 24 Jan 2015 - 16:56

நிஜமாக இல்லை என  முற்றாக ஒதுக்க முடியாது!

 எனக்கு தெரிந்து ஊரில் ஒருவர் இப்படி செய்திருக்கின்றார். கஷ்டப்பட்டு படிக்க வைத்த தாயை தான் வங்கியில் வேலை செய்தவர்களுக்கு அறிமுகம் செய்தால்  மதிப்பு குறையும் என யாரோ தெரிந்தவங்க என சொன்னதும் உடன் பிறப்புக்களை வேலைக்காரர்கள் போல் பாவித்ததும் நான்  நேரில் கண்டிருக்கேன். 

அதிலும் அவர் வீடு கட்டி புது வீடு குடி போனதுக்கு   ஊரையே அழைத்தவர் தன் தாய் சகோதரங்களை அழைக்கவில்லை. 
 
இப்படியும் மனிதர்கள் உண்டு என்பதை உண்ரத்தான் வேண்டும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கண்கலங்கிய சம்பவமொன்று....... Empty Re: கண்கலங்கிய சம்பவமொன்று.......

Post by நேசமுடன் ஹாசிம் Sat 24 Jan 2015 - 17:02

Nisha wrote:நிஜமாக இல்லை என  முற்றாக ஒதுக்க முடியாது!

 எனக்கு தெரிந்து ஊரில் ஒருவர் இப்படி செய்திருக்கின்றார். கஷ்டப்பட்டு படிக்க வைத்த தாயை தான் வங்கியில் வேலை செய்தவர்களுக்கு அறிமுகம் செய்தால்  மதிப்பு குறையும் என யாரோ தெரிந்தவங்க என சொன்னதும் உடன் பிறப்புக்களை வேலைக்காரர்கள் போல் பாவித்ததும் நான்  நேரில் கண்டிருக்கேன். 

அதிலும் அவர் வீடு கட்டி புது வீடு குடி போனதுக்கு   ஊரையே அழைத்தவர் தன் தாய் சகோதரங்களை அழைக்கவில்லை. 
 
இப்படியும் மனிதர்கள் உண்டு என்பதை உண்ரத்தான் வேண்டும்.
உண்மைதான் அக்கா அதிகமானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களுக்கு அவர்கள் இவ்வாறான வேதனை அடையும் போது உணர்வார்கள்

கண்கலங்கிய சம்பவமொன்று....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கண்கலங்கிய சம்பவமொன்று....... Empty Re: கண்கலங்கிய சம்பவமொன்று.......

Post by சுறா Mon 26 Jan 2015 - 7:31

Nisha wrote:நிஜமாக இல்லை என  முற்றாக ஒதுக்க முடியாது!

 எனக்கு தெரிந்து ஊரில் ஒருவர் இப்படி செய்திருக்கின்றார். கஷ்டப்பட்டு படிக்க வைத்த தாயை தான் வங்கியில் வேலை செய்தவர்களுக்கு அறிமுகம் செய்தால்  மதிப்பு குறையும் என யாரோ தெரிந்தவங்க என சொன்னதும் உடன் பிறப்புக்களை வேலைக்காரர்கள் போல் பாவித்ததும் நான்  நேரில் கண்டிருக்கேன். 

அதிலும் அவர் வீடு கட்டி புது வீடு குடி போனதுக்கு   ஊரையே அழைத்தவர் தன் தாய் சகோதரங்களை அழைக்கவில்லை. 
 
இப்படியும் மனிதர்கள் உண்டு என்பதை உண்ரத்தான் வேண்டும்.

அடப்பாவி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கண்கலங்கிய சம்பவமொன்று....... Empty Re: கண்கலங்கிய சம்பவமொன்று.......

Post by Nisha Mon 26 Jan 2015 - 8:37

எதுக்கு அடப்பாவி! அப்பாவி!

தான் நல்லா படிச்சி பட்டம் பெற்று நல்ல மனைவியும் வாய்த்து விட்டால் படியாதவளாய் தன்னை அழகு படுத்திக்க தெரியாமல்  ஓடி ஓடி வேலை செய்யும் அம்மாவை வேலை காரியாக்கி சோறு போட்டோரையும் தெரியும். கண்டுக்காமல் விட்டோரையும் தெரியும். 

அவர்களை பார்த்து அவர்களை போல் நான் இருக்க கூடாது என நினைத்து தான் நான் நிரம்ப சுமைகள்  சுமந்தேன். 

வீட்டுக்குமூத்தவனாய் அண்ணன் ஊரில் பெரிய பதவியில்  மதிக்கும் படி இருக்க அவனுடன் பிரந்த தங்கை நாறபதுக்கும் மேல் வயதாகியும் திருமணமாகாமல் தனித்திருக்கும் நிலை இன்றும் தொடர்கின்றது. 

  பெற்ற பிள்ளை ஊர் போற்ற வாழ ஒரு வாய்ச்சோறுக்காக பிச்சை எடுத்து உண்ணும் தாய் தகப்பன் உங்கள் ஊரில் இலலியோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கண்கலங்கிய சம்பவமொன்று....... Empty Re: கண்கலங்கிய சம்பவமொன்று.......

Post by சுறா Mon 26 Jan 2015 - 8:39

இந்த காலத்தில் பெண் பிள்ளைகள் மேல். நல்லவேளை நான் தப்பிச்சேன். சாப்பிட ஒருவேளை உணவாவது கிடைக்கும் :)

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கண்கலங்கிய சம்பவமொன்று....... Empty Re: கண்கலங்கிய சம்பவமொன்று.......

Post by Nisha Mon 26 Jan 2015 - 9:22

சுறா wrote:இந்த காலத்தில் பெண் பிள்ளைகள் மேல். நல்லவேளை நான் தப்பிச்சேன். சாப்பிட ஒருவேளை உணவாவது கிடைக்கும் :)

நிஜம் தான்  ஜானி!

எங்க வீடே அதுக்கு நல்ல உதாரணம் தான். 

 ஆனாலும் இன்னொரு வழி இருக்குப்பா.. பிள்ளைகளை பெற்றோமா, வளர்த்தோமா,, அவங்களுக்கானதை செய்தோமா.. கடமை முடிந்தது.  அவங்க நம்மை பார்க்கணும் எதிர்பார்க்காமல் எங்கிருந்தாலும் சந்தோஷமா இருக்கணும் என  நினைச்சு நம் பிற்காலத்துக்கு என முன் கூட்டியே திட்ட மிட்டு செயல் படுவது.. !

மகன் பார்ப்பான், மகள் பார்ப்பாள் என  நம்பி அடுத்தடுத்து பிள்ளைகளை பெற்றெடுக்காமல்  நம் சந்தோஷத்துக்காக பெற்று விட்டு அவர்கள் மேல் சுமை  சுமத்தாமல்   இருப்பது என நிரம்பசெய்யலாம்பா.. 

நான் அப்படியான மன நிலையில் தான் இருக்கின்றேன். மகனோ, மகளோ அவர்கள்  தங்கள் வாழ்க்கையை செம்மையாககி நல்லா இருந்தால் போதும்.  அவங்க பார்க்கணும், கூட இருக்கணும் எனும் எதிர்பார்ப்பு இல்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கண்கலங்கிய சம்பவமொன்று....... Empty Re: கண்கலங்கிய சம்பவமொன்று.......

Post by சுறா Mon 26 Jan 2015 - 9:33

மகன் பார்ப்பான், மகள் பார்ப்பாள் என  நம்பி அடுத்தடுத்து பிள்ளைகளை பெற்றெடுக்காமல்  நம் சந்தோஷத்துக்காக பெற்று விட்டு அவர்கள் மேல் சுமை  சுமத்தாமல்   இருப்பது என நிரம்பசெய்யலாம்பா..

சரியாக சொன்னீங்க. இது தான் நம்ம பாலிசியும்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கண்கலங்கிய சம்பவமொன்று....... Empty Re: கண்கலங்கிய சம்பவமொன்று.......

Post by Nisha Mon 26 Jan 2015 - 10:18

மூத்தது மூத்தது என மூத்ததின் மேல் எல்லா பாரத்தையும் தூக்கி போட்டு விட்டு மூத்ததாயிருந்தாரும் அதுக்கு ஒரு மனசு இருக்கும் என புரிந்துக்காத மனிதர்களை பார்த்து பார்த்து எனக்கு மனசு வெறுத்து போச்சிப்பா!

நான் அப்படி இருக்க கூடாது என்பதில் மிக தெளிவாய் இருக்கேன். மகனோ மகளோ ஒருவர் சுமையை ஒருவரை சுமக்கணும் என சொல்லி வளர்க்கல்லை. பழக்க வழக்கங்களை அண்ணாவை பார்த்து தங்கை செய்வாஎன சொல்லி திருத்துவேன். ஆனால் வேற மாதிரி திணிக்க மாட்டேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கண்கலங்கிய சம்பவமொன்று....... Empty Re: கண்கலங்கிய சம்பவமொன்று.......

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum