Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்
5 posters
Page 1 of 1
மனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்
சகோதரி கவிதாயினி வி.கிரேஸ் பிரதிபா அவர்களின் துளிர் விடும் விதைகள்கவிதைத் தொகுப்பைப் படிக்கும் வாய்ப்பு அண்ணன் கில்லர்ஜி அவர்களின் மூலமாகக் கிடைத்தது. வாசித்தபோது இது துளிர் விடும் விதைகள் அல்ல துளிர் விடும் (க)விதைகள் என்றுதான் தோன்றியது.
அறிவியல் கலந்து தமிழ்க் கவிதைகள் புனைவது என்பது எல்லாருக்கும் வாய்க்கப் பெற்ற கலை அல்ல. அதை மிக நேர்த்தியாகச் செய்திருக்கிறார். கவிதைகள் வாசிக்கும் போது அறிவியலையும் தெரிந்து கொள்ள முடிவது சிறப்புத்தானே.
முன்னுரையில் பட்டிமன்றப் பேச்சாளரும் எழுத்தாளரும் வலைப்பதிவருமான திருமிகு. முத்து நிலவன் ஐயா அவர்கள், "இவரது தமிழ்ப்பற்று ஆங்காங்கே சில புதிய தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்து நான் வேறெந்த தமிழ்க் கவிதைத் தொகுப்பிலும் காணாத புதுமை" என்று சிலாகிக்கிறார். உண்மைதான் நிறைய இடங்களில் புதிய வார்த்தைகளைத் தேடிப்பிடித்து பயன்படுத்தி அதற்கான பொருளையும் சொல்லி நமக்கு புரிய வைத்திருக்கிறார்.
முகவுரையில் கவிஞரும் திரைப்பட உதவி வசனகர்த்தாவுமான திரு. லவ் குரு (ரேடியோ ஜாக்கி) அவர்கள், "தமிழை நேசிக்கிறார், பெற்றோரைப் பூஜிக்கிறார், நாட்டைக் கொண்டாடுகிறார், இயற்கையைச் சிதைக்காதே என சமூக அக்கறையோடு யாசிக்கிறார். புலரும் பொழுதைப் பாடுகிறார், மலரும் மலரைப் பாடுகிறார், நெடிதுயர்ந்த மரத்தைக் கட்டிக்கொண்டு காதலிக்கிறார், கூடவே கனவுக் கணவனுக்காக கட்டளைகள் இடுகிறார். என்னளவில் நான் உணர்வது இந்தக் கவிதைகள்தான் கிரேஸ் பிரதிபா... கிரேஸ் பிரதியா தான் இந்தக் கவிதைகள்" என வியந்திருக்கிறார். உண்மையில் அப்படித்தான் தொகுத்திருக்கிறார்.
அணிந்துரையில் பிரபல எழுத்தாளரும் மதுரை பாத்திமாக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியையுமான திருமதி. எம்.ஏ. சுசீலா அவர்கள், " எல்லாருக்கும் பரவலாக அறிமுகமான பொதுவான செய்திகளை மொழி ஆர்வத்தோடு கவிதை வடிவில் வெளிப்படையாக நேரிடையாகத் தரும் வகை சார்ந்தவை கிரேஸின் கவிதைகள்" என்று சொல்லியிருக்கிறார். அவர் சொல்வது போல் பெரும்பாலான கவிதைகள் நமக்குத் தெரிந்த விஷயங்களை கவிதையாக்கிப் பேசுகின்றன.
முற்றிலும் வித்தியாசமாய் தமிழ், வாழ்த்துக்கள், இயற்கைச் சூழல், காதல், இயற்கை, சமூகம், தாய்மை, படைப்பு, வாழ்க்கை எனப் பகுத்து கவிதைகளைத் தொகுத்திருக்கிறார். தலைப்புக்கேற்ப கவிதைகள் அழகாய்த் துளிர் விடுகின்றன.
தமிழ் என்னும் விதையில் சில கவிதைகளை துளிர்க்க விட்டிருக்கிறார். அதில் 'இன்னுயிர்த் தமிழ் அன்றோ?' என்னும் கவிதையில்,
"பல மொழி கேட்பினும்
அயல் மொழி பயன்படுத்தினும்
இன்னுயிராய் குருதியோடு கலந்தது தமிழன்றோ?"
எனக் கேட்கிறார்.
அவர் கேள்வியில் இருக்கும் நியாயம் சரிதானே... இப்படித்தான் 'தமிழ்கொண்டே சென்றிடுவாய்', 'அரிய இலக்கியம் படித்து' என்ற கவிதைகளிலும் தமிழுக்கு கவி பாடியிருக்கிறார்.
வாழ்த்துக்களில் அப்பாவுக்காக, அம்மாவுக்கா, நட்புக்காக, தமிழ் புத்தாண்டுக்காக கவிதை எழுதியிருக்கிறார். அதில்,
"என்னைச் செதுக்கிய சிற்பியே
நீ இல்லாமல் நான் வெறும் கல்லே...
என்னை உருவாக்கிய குயவனே
நீ இல்லாமல் நான் வெறும் மண்ணே...!"
என அப்பாவை பற்றியும்
"அவள் செய்வதெல்லாம் கணக்கு இல்லாதவை
அவள் செய்வதெல்லாம் ஈடு இல்லாதவை"
என அம்மா பற்றியும் கவி பாடியிருக்கிறார்.
இயற்கைச் சூழலில் காகம் பாட்டிலில் கூழாங்கல்லைப் போட்டு குடித்த கதையை வைத்து எழுதிய கவிதையில் இப்படிக் கேட்கிறார்.
"கூழாங்கல் எங்கே?
பானையும் எங்கே?
தண்ணீரும் எங்கே? எங்கே?"
என நம்மைப் பார்த்து கேள்வி கேட்கிறார்.
"ஒரு கரண்டி கழுவ
ஒரு சட்டி தண்ணியா?
என்றேன் நான்
அடப்போம்மா
நீதான் பூமியைக் காப்பாற்றப் போறியா?
என்றாள் அவள்
நான்தான் இல்லை
நானும்தான்
என்றேன் நான்"
என நானும்தான் என்னும் கவிதையில் தண்ணீர் சிக்கனத்தால் பூமியைக் காக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்.
காதல் என்னும் கூட்டுக்குள் நிறைய கவிப் பறவைகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் ரசிக்க வைக்கின்றன. 'கனவுக் கணவனே' என்னும் கவிதையில்
"முதிர்ந்து நடுங்கும் பொழுது கை கோர்க்க வேண்டும்
கண்கள் சுருங்கும் பார்வையிலும் காவியம் பேச வேண்டும்"
என்றும்
'உன்னிடம் வந்ததை' என்னும் கவிதையில் இதயம் உன்னிடம் வந்ததை அறிவாயா என்று கேட்கும் அவர்
"என் புன்னகையும்
என் விழிகளும்
பிடிக்கும் என்றாய்
கண்ணாடி முன் சிரித்துப் பார்க்கிறேன்
எண்ணிக்கையில்லாமல்
கண்களைச் சுழற்றிச் சுழற்றியே பார்க்கிறேன்
என்னை அறியாமல்"
என்று காதல் வயப்பட்டதை கவிதை ஆக்கியிருக்கிறார்.
இயற்கை என்னும் இன்பத்துக்குள் 'உனைக்கண்டு உவக்கும் உயிரிவள்' என்னும் கவிதையில்
"பயணங்களில் சில நாள்
பலகணியில் சில நாள்
தோட்டத்தில் சில நாள்
சாளரத்தில் சில நாள்
உப்பரிகையில் சில நாள்
உனைக் கண்டு உவக்கும் உயிரிவள்"
என்று பல பெயர் கொண்ட நிலாவை எனக்குப் பிடிக்கும் என்பதை அழகாய் காட்சிப்படுத்துகிறார்.
சமூகத்தில் ஓநாய்கள் உலவும் சமூகமடி தோழி எனவே நீ விழிப்பாய் இருடி தோழி எனச் சொல்கிறார். அதில்.
"வலை விரிப்பார் வஞ்சகர் என அறிந்தும்
கலை மானாய்ச் சென்று மாட்டுவது ஏன் தோழி?
என்கிறார்.
"தலைக்குப் பூ வாங்கினாயே அம்மா
தலைக்கவசம் ஏன் வாங்கவில்லை?"
என்று 'தலைக்கவசம் குடும்பக்கவசம்' என்னும் கவிதையில் விபத்தில் இறந்த அம்மாவைப் பார்த்து குழந்தை கேட்பதாய் கேட்கிறார்.
தாய்மையில் மழலை உண்ணும் அழகை மகிழ்வான கவிதை ஆக்கியிருக்கிறார். அதில்,
"மூக்கின் மேலிரண்டு கன்னத்தில் நான்கு
வாயில் ஒன்று என்றுண்ணும் மழலைக் கண்டு உவந்து
சிலையாய் நின்றால் தாய் இடையிடாமல்"
என கிண்ணத்துச் சோற்றை தரையில் கொட்டி அள்ளிச் சாப்பிடும் அழகைச் சொல்கிறார்.
படைப்பில் 'கவிதை - கணிதம்' எனும் தலைப்பில் ஒரு கவிதை, அதில்,
"படைப்பு
மெய்யோ பொய்யோ - சொல்லலாம்
கணிதம்
மெய்பிக்க வேண்டும் - சொன்னதை"
என்கிறார்.
எவ்வளவு அழகான சிந்தனை, யோசித்துப் பாருங்கள் கவிதையில் ஆழம் புரியும்.
'வாழ்க்கையில் வானவில்லாய்' என்னும் தலைப்பில்
"துன்பம் தள்ளும் வேளையிலே
தன் நிலை குலையாமல் மிளிர்ந்திட்டால்
பின் வருமே ஓளிவீசும் வெற்றி"
என்கிறார்.
இப்படி அழகான கவிதைகளைத் தொகுத்து தனது முதல் தொகுப்பைக் கொண்டு வந்திருக்கும் சகோதரி கிரேஸ் பிரதிபா அவர்களை வாழ்த்துவோம் நண்பர்களே...அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
அப்புறம் இது மனசு அல்லவா... மனதில் பட்டதை சொல்ல வேண்டாமா... திருமதி சுசிலா அம்மா தனது அணிந்துரையில் கவிதையில் அழகியலிலும் வடிவ நேர்த்தியிலும் கூடுதல் கவனம் செலுத்தினால் கவிதைகள் தரத்தில் இன்னும் மேம்படக்கூடும் என்று சொல்லியிருக்கிறார். கவிதைகளைப் படித்தபோது என் மனதிலும் தோன்றியது இதுதான். பல கவிதைகள் நீளமான வரிகளாய் கவிதைக்கான நேர்த்தி இன்றி வசனம் போல் இருக்கின்றன.
என்னைக் கவிதை எழுதச் சொன்னால் வசனமாகத்தான் எழுதுவேன்... அதை நீட்டி மடக்கி கவிதை என ஆக்கி வைப்பேன். அப்படியெல்லாம் இவர் செய்யவில்லை என்றாலும் புத்தகத்திற்கான கவிதைத் தொகுப்பில் எதற்காக கவிதை போல் மடக்கி மடக்கி எழுதாமல் நீளநீள வரிகளாய் போட்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அது மட்டுமே சற்று குறையாய் தெரிகிறது. மற்றபடி துளிர் விடும் விதைகள் மூலம் ஒரு அருமையான கவிஞரை பதிவுலகம் எழுத்துத்துறைக்கு அளித்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அடுத்த தொகுப்பில் இந்தக் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக கொண்டு வருவார் என்று நம்பிக்கையுடன் சொல்லலாம்.
எனக்கு ஹைக்கூ வகைக் கவிதைகள் ரொம்பப் பிடிக்கும் என்பதை கீதா அக்கா அவர்களின் கவிதைத் தொகுப்பான ஒரு கோப்பை மனிதம் பற்றிய பகிர்வில்
சொல்லியிருந்தேன். இவரது கவிதைகளில் கிடைத்த ஒரே முத்து...
"அஞ்சல் ஆவணம்
அனைத்தும் கணினியில்
தொலைத்து விட்டேனே
கையெழுத்தை..."
அஹா.... அருமை... அருமை... என்னைக் கவர்ந்த இந்தக் கவிதை தங்களையும் கவரும் என்று நினைக்கிறேன்..
அகரம் பதிப்பக வெளியீடான துளிர் விடும் விதைகள் கவிதைத் தொகுப்புரூ.100 மட்டுமே.
கவிதாயினி கிரேஸ் பிரதிபா அவர்களின் வலைத்தளம் தேன்மதுரத்தமிழ்
மனசு தொடர்ந்து பேசும்
'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்
துளிர் விடும் விதைகள் நூல் குறித்த அருமையான விமர்சனம், அங்கங்கே நூலில் படித்த கவிதைகளையும் உதாரணம் காட்டி எழுதி இருப்பது கவிதையானாலும் அதையும் முழுமையாக படித்து உணர்ந்து எழுதப்பட்ட விம்ர்சனம் இதுவென உணர வைக்கின்றது.
உதாரணம் காட்டிய கவிதைகளை படிக்கும் போதே முழு நூலையும் படிக்க வைக்கும்படியான சுவாரஷ்யம் தரும் விமர்சனம் எழுதி இருக்கின்றீர்கள் குமார் சார்!
மிக்க நன்றி. என்றும் தொடருங்கள்.
உதாரணம் காட்டிய கவிதைகளை படிக்கும் போதே முழு நூலையும் படிக்க வைக்கும்படியான சுவாரஷ்யம் தரும் விமர்சனம் எழுதி இருக்கின்றீர்கள் குமார் சார்!
மிக்க நன்றி. என்றும் தொடருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்
வணக்கம் நிஷா மேடம்,Nisha wrote:துளிர் விடும் விதைகள் நூல் குறித்த அருமையான விமர்சனம், அங்கங்கே நூலில் படித்த கவிதைகளையும் உதாரணம் காட்டி எழுதி இருப்பது கவிதையானாலும் அதையும் முழுமையாக படித்து உணர்ந்து எழுதப்பட்ட விம்ர்சனம் இதுவென உணர வைக்கின்றது.
உதாரணம் காட்டிய கவிதைகளை படிக்கும் போதே முழு நூலையும் படிக்க வைக்கும்படியான சுவாரஷ்யம் தரும் விமர்சனம் எழுதி இருக்கின்றீர்கள் குமார் சார்!
மிக்க நன்றி. என்றும் தொடருங்கள்.
தாங்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவித்து ஊக்கம் அளிப்பதற்கு நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்
உண்மையில் உங்கள் மனசுபேசியிருப்பது வியக்கச்செய்தது அத்தனை எழுத்தாளர்களையும் வாழவைப்பது இவ்வாறான அழகிய விமர்சனங்களே மிகவும் அருமையான வெளிப்படுத்தல் பார்க்கும் போது புத்தகம் முழுவதும் பார்க்கத்தோன்றுகிறது நன்றி அண்ணா தொடருங்கள்
Re: மனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்
நானும் அவ்வப்போது இதுபோன்று பூமியின் காவலனாக என்னை நினைப்பதுண்டு.
அருமையான கவிதைகளும் விமர்சனமும். அருமை குமார்
அருமையான கவிதைகளும் விமர்சனமும். அருமை குமார்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஹாசிம்...நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையில் உங்கள் மனசுபேசியிருப்பது வியக்கச்செய்தது அத்தனை எழுத்தாளர்களையும் வாழவைப்பது இவ்வாறான அழகிய விமர்சனங்களே மிகவும் அருமையான வெளிப்படுத்தல் பார்க்கும் போது புத்தகம் முழுவதும் பார்க்கத்தோன்றுகிறது நன்றி அண்ணா தொடருங்கள்
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்
சுறா wrote:நானும் அவ்வப்போது இதுபோன்று பூமியின் காவலனாக என்னை நினைப்பதுண்டு.
அருமையான கவிதைகளும் விமர்சனமும். அருமை குமார்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்
சே.குமார் wrote:வணக்கம் நிஷா மேடம்,Nisha wrote:துளிர் விடும் விதைகள் நூல் குறித்த அருமையான விமர்சனம், அங்கங்கே நூலில் படித்த கவிதைகளையும் உதாரணம் காட்டி எழுதி இருப்பது கவிதையானாலும் அதையும் முழுமையாக படித்து உணர்ந்து எழுதப்பட்ட விம்ர்சனம் இதுவென உணர வைக்கின்றது.
உதாரணம் காட்டிய கவிதைகளை படிக்கும் போதே முழு நூலையும் படிக்க வைக்கும்படியான சுவாரஷ்யம் தரும் விமர்சனம் எழுதி இருக்கின்றீர்கள் குமார் சார்!
மிக்க நன்றி. என்றும் தொடருங்கள்.
தாங்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவித்து ஊக்கம் அளிப்பதற்கு நன்றி.
என் கடன் பணி செய்து கிடப்பதே தான் சார்!
உங்கள் பதிவுகளை நான் கடந்து இரு வருடங்களுக்கு மேலாகவே ரசித்து படிப்பேன் குமார் சார்! கிராமிய மண் கமழும் எழுத்துக்களும், நண்பர்கள் குறித்த பகிர்வும், சரியென படுவதை தயங்காது எடுத்துரைக்கும் பாங்கும் எனக்கு பிடிக்கும்.
நீங்கள் சேனையில் கொஞ்சம் தயங்கி நிற்பது போல் தோன்றுகின்றது. தயக்கம் வேண்டாம் சார். இன்னும் எழுதுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்
நிச்சயமாக இது உங்கள் தேசம் இருப்பவர்கள் உண்மையான பாசமுடையவர்கள் சொற்பமானாலும் அருமையான குணமுடையவர்கள் தொடருங்கள் மகிழ்வீர்கள்Nisha wrote:சே.குமார் wrote:வணக்கம் நிஷா மேடம்,Nisha wrote:துளிர் விடும் விதைகள் நூல் குறித்த அருமையான விமர்சனம், அங்கங்கே நூலில் படித்த கவிதைகளையும் உதாரணம் காட்டி எழுதி இருப்பது கவிதையானாலும் அதையும் முழுமையாக படித்து உணர்ந்து எழுதப்பட்ட விம்ர்சனம் இதுவென உணர வைக்கின்றது.
உதாரணம் காட்டிய கவிதைகளை படிக்கும் போதே முழு நூலையும் படிக்க வைக்கும்படியான சுவாரஷ்யம் தரும் விமர்சனம் எழுதி இருக்கின்றீர்கள் குமார் சார்!
மிக்க நன்றி. என்றும் தொடருங்கள்.
தாங்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவித்து ஊக்கம் அளிப்பதற்கு நன்றி.
என் கடன் பணி செய்து கிடப்பதே தான் சார்!
உங்கள் பதிவுகளை நான் கடந்து இரு வருடங்களுக்கு மேலாகவே ரசித்து படிப்பேன் குமார் சார்! கிராமிய மண் கமழும் எழுத்துக்களும், நண்பர்கள் குறித்த பகிர்வும், சரியென படுவதை தயங்காது எடுத்துரைக்கும் பாங்கும் எனக்கு பிடிக்கும்.
நீங்கள் சேனையில் கொஞ்சம் தயங்கி நிற்பது போல் தோன்றுகின்றது. தயக்கம் வேண்டாம் சார். இன்னும் எழுதுங்கள்.
எங்கள் நண்பன் விடுமுறையில் இருக்கிறார் அதனால் சற்று இடைவெளிபோல் தெரிகிறது.
எனது இருப்பும் அப்பப்ப குறைகிறது காரணம் எனது காரியாலய நிலமை வீடு சென்றால் நீங்களெல்லாம் நடுநிசி நேரக்காரர்களாகிவிடுகின்றீர்கள் ஆதலால் உரையாடமுடிவதில்லை தொடருங்கள்
Re: மனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்
ஆமாம்! எங்க தும்பி வந்தால் சேனை கலகலகலகலகல என நடக்கும், ஓடும், பறக்குமில்லை.
எனக்கும் தும்பி இல்லாமல் ஒரு கை உடைந்தது போல் இருக்கு ஹாசிம். எல்லோரையும் இழுத்து அடிச்சு கொண்டு ஓடும் துடுப்பு தும்பி சார் தான்.
அவர் ஊரில் சூப்பராக இருக்கார்.
எனக்கும் தும்பி இல்லாமல் ஒரு கை உடைந்தது போல் இருக்கு ஹாசிம். எல்லோரையும் இழுத்து அடிச்சு கொண்டு ஓடும் துடுப்பு தும்பி சார் தான்.
அவர் ஊரில் சூப்பராக இருக்கார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்
ஆமாம் அக்கா நண்பன்போல் வராது அக்கா அவரை அனைவரும் மிஸ் பண்றோம் விரைவில் வருவார் என எதிர்பார்க்கிறேன்Nisha wrote:ஆமாம்! எங்க தும்பி வந்தால் சேனை கலகலகலகலகல என நடக்கும், ஓடும், பறக்குமில்லை.
எனக்கும் தும்பி இல்லாமல் ஒரு கை உடைந்தது போல் இருக்கு ஹாசிம். எல்லோரையும் இழுத்து அடிச்சு கொண்டு ஓடும் துடுப்பு தும்பி சார் தான்.
அவர் ஊரில் சூப்பராக இருக்கார்.
Re: மனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்
வணக்கம்.நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையில் உங்கள் மனசுபேசியிருப்பது வியக்கச்செய்தது அத்தனை எழுத்தாளர்களையும் வாழவைப்பது இவ்வாறான அழகிய விமர்சனங்களே மிகவும் அருமையான வெளிப்படுத்தல் பார்க்கும் போது புத்தகம் முழுவதும் பார்க்கத்தோன்றுகிறது நன்றி அண்ணா தொடருங்கள்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஹாசிம்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்
வணக்கம் நிஷா மேடம்...Nisha wrote:சே.குமார் wrote:வணக்கம் நிஷா மேடம்,Nisha wrote:துளிர் விடும் விதைகள் நூல் குறித்த அருமையான விமர்சனம், அங்கங்கே நூலில் படித்த கவிதைகளையும் உதாரணம் காட்டி எழுதி இருப்பது கவிதையானாலும் அதையும் முழுமையாக படித்து உணர்ந்து எழுதப்பட்ட விம்ர்சனம் இதுவென உணர வைக்கின்றது.
உதாரணம் காட்டிய கவிதைகளை படிக்கும் போதே முழு நூலையும் படிக்க வைக்கும்படியான சுவாரஷ்யம் தரும் விமர்சனம் எழுதி இருக்கின்றீர்கள் குமார் சார்!
மிக்க நன்றி. என்றும் தொடருங்கள்.
தாங்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவித்து ஊக்கம் அளிப்பதற்கு நன்றி.
என் கடன் பணி செய்து கிடப்பதே தான் சார்!
உங்கள் பதிவுகளை நான் கடந்து இரு வருடங்களுக்கு மேலாகவே ரசித்து படிப்பேன் குமார் சார்! கிராமிய மண் கமழும் எழுத்துக்களும், நண்பர்கள் குறித்த பகிர்வும், சரியென படுவதை தயங்காது எடுத்துரைக்கும் பாங்கும் எனக்கு பிடிக்கும்.
நீங்கள் சேனையில் கொஞ்சம் தயங்கி நிற்பது போல் தோன்றுகின்றது. தயக்கம் வேண்டாம் சார். இன்னும் எழுதுங்கள்.
ரொம்பச் சந்தோஷம்... என்னைத் தொடர்ந்து வாசிப்பதற்கும் உற்சாகப்படுத்துவதற்கும்....
தயக்கம் எல்லாம் இல்லைங்க... அபுதாபியில் இருந்து அலைனில் வந்து தங்கியிருக்கிறேன்...
சில பல வேலைகள்... எல்லாருடைய பகிர்வையும் வாசிக்க நேரம் இருப்பதில்லை...
மாலையில் ஊருக்கு ஸ்கைப்பி குழந்தைகளுடன் நீண்ட நேரம் கழிக்க வேண்டி இருக்கிறதல்லவா...
வெளிநாட்டு வாழ்க்கையின் சந்தோஷமே அந்தச் சில மணி நேரங்கள்தானே...
நேரம் கிடைக்கும் போது எல்லா பகிர்வுகளையும் வாசிப்பேன்.
தொடர்கதை முதல் பகுதியில் இருந்து விரைவில் பகிர்கிறேன்..
நட்பிற்கு நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்
தங்கள் கருத்துக்கும் நன்றி ஹாசிம்நேசமுடன் ஹாசிம் wrote:நிச்சயமாக இது உங்கள் தேசம் இருப்பவர்கள் உண்மையான பாசமுடையவர்கள் சொற்பமானாலும் அருமையான குணமுடையவர்கள் தொடருங்கள் மகிழ்வீர்கள்Nisha wrote:சே.குமார் wrote:வணக்கம் நிஷா மேடம்,Nisha wrote:துளிர் விடும் விதைகள் நூல் குறித்த அருமையான விமர்சனம், அங்கங்கே நூலில் படித்த கவிதைகளையும் உதாரணம் காட்டி எழுதி இருப்பது கவிதையானாலும் அதையும் முழுமையாக படித்து உணர்ந்து எழுதப்பட்ட விம்ர்சனம் இதுவென உணர வைக்கின்றது.
உதாரணம் காட்டிய கவிதைகளை படிக்கும் போதே முழு நூலையும் படிக்க வைக்கும்படியான சுவாரஷ்யம் தரும் விமர்சனம் எழுதி இருக்கின்றீர்கள் குமார் சார்!
மிக்க நன்றி. என்றும் தொடருங்கள்.
தாங்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவித்து ஊக்கம் அளிப்பதற்கு நன்றி.
என் கடன் பணி செய்து கிடப்பதே தான் சார்!
உங்கள் பதிவுகளை நான் கடந்து இரு வருடங்களுக்கு மேலாகவே ரசித்து படிப்பேன் குமார் சார்! கிராமிய மண் கமழும் எழுத்துக்களும், நண்பர்கள் குறித்த பகிர்வும், சரியென படுவதை தயங்காது எடுத்துரைக்கும் பாங்கும் எனக்கு பிடிக்கும்.
நீங்கள் சேனையில் கொஞ்சம் தயங்கி நிற்பது போல் தோன்றுகின்றது. தயக்கம் வேண்டாம் சார். இன்னும் எழுதுங்கள்.
எங்கள் நண்பன் விடுமுறையில் இருக்கிறார் அதனால் சற்று இடைவெளிபோல் தெரிகிறது.
எனது இருப்பும் அப்பப்ப குறைகிறது காரணம் எனது காரியாலய நிலமை வீடு சென்றால் நீங்களெல்லாம் நடுநிசி நேரக்காரர்களாகிவிடுகின்றீர்கள் ஆதலால் உரையாடமுடிவதில்லை தொடருங்கள்
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்
ஓ நீங்க அலைனில் இருக்கீங்களா. மாஷா அல்லா
நான் ப்ஜைராவில் இருந்தேன்.
நான் ப்ஜைராவில் இருந்தேன்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்
சுறா wrote:ஓ நீங்க அலைனில் இருக்கீங்களா. மாஷா அல்லா
நான் ப்ஜைராவில் இருந்தேன்.
அவர் பதிவினை ஒழுங்காக படித்து தானே பின்னூட்டம் இட்டீர்கள்? ஆரம்ப பதிவிலேயே அலைன் எனுமிடத்திலும் அபுதாபியிலும் மாறி மாறி இருப்பதால் அலைன் தற்காலிக மாற்றம் எனினும் இரு இடத்திற்கும் வாடகை செலுத்துவதாக பதிந்திருந்தாரே?
ஜானி தாத்தாவுக்கு வயசாகி போனதால் எல்லாம் மறந்து போனதோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்
சே.குமார் wrote:வணக்கம் நிஷா மேடம்...Nisha wrote:சே.குமார் wrote:வணக்கம் நிஷா மேடம்,Nisha wrote:துளிர் விடும் விதைகள் நூல் குறித்த அருமையான விமர்சனம், அங்கங்கே நூலில் படித்த கவிதைகளையும் உதாரணம் காட்டி எழுதி இருப்பது கவிதையானாலும் அதையும் முழுமையாக படித்து உணர்ந்து எழுதப்பட்ட விம்ர்சனம் இதுவென உணர வைக்கின்றது.
உதாரணம் காட்டிய கவிதைகளை படிக்கும் போதே முழு நூலையும் படிக்க வைக்கும்படியான சுவாரஷ்யம் தரும் விமர்சனம் எழுதி இருக்கின்றீர்கள் குமார் சார்!
மிக்க நன்றி. என்றும் தொடருங்கள்.
தாங்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவித்து ஊக்கம் அளிப்பதற்கு நன்றி.
என் கடன் பணி செய்து கிடப்பதே தான் சார்!
உங்கள் பதிவுகளை நான் கடந்து இரு வருடங்களுக்கு மேலாகவே ரசித்து படிப்பேன் குமார் சார்! கிராமிய மண் கமழும் எழுத்துக்களும், நண்பர்கள் குறித்த பகிர்வும், சரியென படுவதை தயங்காது எடுத்துரைக்கும் பாங்கும் எனக்கு பிடிக்கும்.
நீங்கள் சேனையில் கொஞ்சம் தயங்கி நிற்பது போல் தோன்றுகின்றது. தயக்கம் வேண்டாம் சார். இன்னும் எழுதுங்கள்.
ரொம்பச் சந்தோஷம்... என்னைத் தொடர்ந்து வாசிப்பதற்கும் உற்சாகப்படுத்துவதற்கும்....
தயக்கம் எல்லாம் இல்லைங்க... அபுதாபியில் இருந்து அலைனில் வந்து தங்கியிருக்கிறேன்...
சில பல வேலைகள்... எல்லாருடைய பகிர்வையும் வாசிக்க நேரம் இருப்பதில்லை...
மாலையில் ஊருக்கு ஸ்கைப்பி குழந்தைகளுடன் நீண்ட நேரம் கழிக்க வேண்டி இருக்கிறதல்லவா...
வெளிநாட்டு வாழ்க்கையின் சந்தோஷமே அந்தச் சில மணி நேரங்கள்தானே...
நேரம் கிடைக்கும் போது எல்லா பகிர்வுகளையும் வாசிப்பேன்.
தொடர்கதை முதல் பகுதியில் இருந்து விரைவில் பகிர்கிறேன்..
நட்பிற்கு நன்றி.
ஆமாம்! நேரம் கிடைக்கும் போது பதியுங்கள், பகிருங்கள். ஸ்கைப் என்பது வரப்பிரசாதம் தான். தினம் தினம் பேச முடிகின்றதல்லவா?
நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அனைவர் பதிவினையும் படித்து பின்னூட்டம் இட முயற்சிப்பதால் சொந்தமாய் அதிகம் எழுத முடிவதில்லை. எப்போதாவது தான் சொந்தப்பதிவுகள் வரும்.
உங்களால் தினம் தினம் ஒரு பதிவானாலும் சொந்த பதிவு எழுத முடிவதே மகிழ்ச்சியான விடயம் தானே! இதுவே தொடரட்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்
வணக்கம்.சுறா wrote:ஓ நீங்க அலைனில் இருக்கீங்களா. மாஷா அல்லா
நான் ப்ஜைராவில் இருந்தேன்.
ஆம் நண்பரே...
தற்போது பணி நிமித்தம் அலைனில் இருக்கிறேன்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்
Nisha wrote:சுறா wrote:ஓ நீங்க அலைனில் இருக்கீங்களா. மாஷா அல்லா
நான் ப்ஜைராவில் இருந்தேன்.
அவர் பதிவினை ஒழுங்காக படித்து தானே பின்னூட்டம் இட்டீர்கள்? ஆரம்ப பதிவிலேயே அலைன் எனுமிடத்திலும் அபுதாபியிலும் மாறி மாறி இருப்பதால் அலைன் தற்காலிக மாற்றம் எனினும் இரு இடத்திற்கும் வாடகை செலுத்துவதாக பதிந்திருந்தாரே?
ஜானி தாத்தாவுக்கு வயசாகி போனதால் எல்லாம் மறந்து போனதோ?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்
நிசமாவே நான் சிரிக்கலீங்க..நிஷா தாத்தானு உங்கள சொன்னதும்... எதுக்கு வம்பு..எப்ப பார்த்தாலும் உருட்டுக்கட்டைய கைல வச்சிக்கிட்டு இப்படி மிரட்டுனா பயந்து பயந்து வருதுல்ல...:) நானே நெம்ப பயப்படுவேன்..சுறா wrote:Nisha wrote:சுறா wrote:ஓ நீங்க அலைனில் இருக்கீங்களா. மாஷா அல்லா
நான் ப்ஜைராவில் இருந்தேன்.
அவர் பதிவினை ஒழுங்காக படித்து தானே பின்னூட்டம் இட்டீர்கள்? ஆரம்ப பதிவிலேயே அலைன் எனுமிடத்திலும் அபுதாபியிலும் மாறி மாறி இருப்பதால் அலைன் தற்காலிக மாற்றம் எனினும் இரு இடத்திற்கும் வாடகை செலுத்துவதாக பதிந்திருந்தாரே?
ஜானி தாத்தாவுக்கு வயசாகி போனதால் எல்லாம் மறந்து போனதோ?
Re: மனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்
காயத்ரி! ஜானி எனும் சுறா சார் எனக்கு நிஜமாகவே தாத்தாவாகணும், அதுபெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பழைய கதையாச்சே!
உங்களுக்குத்தெரியாதோ?
உங்களுக்குத்தெரியாதோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum