சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா? Khan11

இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா?

3 posters

Go down

இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா? Empty இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா?

Post by ahmad78 Thu 29 Jan 2015 - 14:08

இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா? Ht3226
உடலியல் பற்றி கொஞ்சம் நுட்பமாக ஆராய ஆரம்பித்தால் பல ஆச்சரியங்கள் நமக்குக் காத்திருக்கும். ஒவ்வொரு உடல் உறுப்பும் எத்தனை புத்திசாலித்தனமாக செயல்படுகிறது என்பதும், தன்னைத் தற்காத்துக் கொள்கிறது என்பதும் முடிவில்லாத மகா மெகா ஆச்சரியம். சளித்தொல்லை என்று நாம் சாதாரணமாக நினைத்தாலும் உடலியலில் அதன் பங்கு எத்தனை முக்கியமானது என்பது நுரையீரல் மருத்துவர் திருப்பதியிடம் பேசியபோது இன்னும் தெளிவாகப் புரிந்தது. 

‘‘நம் உடலில் சுவாசத்துக்கு என்று காற்றுக்குழாய்களும் உணவு செல்வதற்கு என்று உணவுக்குழாய்களும் இருக்கின்றன. காற்று, உணவு இரண்டும் சுலபமாக சென்று வருவதற்கு ஒரு ஈரத்தன்மை இந்தக் குழாய்களுக்குத் தேவை. அந்த ஈரத் தன்மையை அளிக்கும் வேலையையே சளி (Sputum) செய்கிறது. நாம் நினைப்பது போல் அது உடலுக்குத் தேவையில்லாதது அல்ல. இது மட்டும் அல்ல; காற்றில் இருக்கும் வைரஸ், பாக்டீரியா, தூசிகள் ஆகியவை சுவாசத்தின் மூலமோ, உணவின் மூலமோ உடலுக்குள் சென்று விடாமல் தடுக்கும் வடிகட்டியாகவும் சளி செயல்படுகிறது’’ என்று சளியின் முக்கியத்துவத்தை விளக்க ஆரம்பிக்கிறார் திருப்பதி.

பருவகாலத்தில்தான் சளி உண்டாகிறதா?

‘‘பொதுவாக மழை காலத்திலோ, பனிகாலத்திலோதான் சளி ஏற்படும் என்றும் நினைப்பார்கள். ஆனால், காற்றுக் குழாயிலும் உணவுக்குழாயிலும் இருக்கும் மியூகஸ் க்ளாண்ட்ஸ் (Mucus glands) வருடம் முழுவதும் சளியை உடலில் சுரந்து கொண்டேதான் இருக்கும். இல்லாவிட்டால் உணவு, சுவாசம் இயல்பாக நடைபெறாது. சளியின் அளவு அதிகமாகும் போதுதான் நமக்குத் தெரிகிறது.’’ 

சளி எப்போது பிரச்னைக்குரியதாகிறது?


‘‘நாளொன்றுக்கு 150   மி.லி. சளி வெளியேறுவது இயல்பானது. காலையில் எழுந்தவுடன் தொண்டை கட்டினாற்போல் இருப்பதும் சாதாரணமானதுதான். பருவகால மாற்றங்களால் ஒருநாள், இரண்டு நாள் சளி இருப்பதிலும் பயப்பட வேண்டியது ஒன்றும் இல்லை. ஆனால், வெளியேறும் சளியின் அளவு 150 மி.லி.க்கும் அதிகமாக இருந்தால் அது பிரச்னைக்குரியது. இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல் இருந்தாலும் அதை உடனடியாக கவனிக்க வேண்டும். இது காசநோயின் அடையாளமாக இருக்கும். அதேபோல் சளியின் நிறம் மாறுவதை வைத்தும் சில நோய்களைக் கண்டறிய முடியும். வெள்ளை, சாம்பல் நிறம், தண்ணீர் போன்ற நிறங்களில் இருந்தால் அது வழக்கமானது. ஆனால், அடர் பச்சை, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருந்தால் அது நோயின் அடையாளமாக இருக்கும். உடலில் தொற்றுகள் ஏற்பட்டிருந்தால்தான் பச்சை நிறத்திலோ மஞ்சள் நிறத்திலோ மாறும். இதுபோல் நிறம் மாறும் போது காய்ச்சலுடன் கூடிய சளி உண்டாவதை வைத்து உஷாராகிவிடலாம்.’’


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா? Empty Re: இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா?

Post by ahmad78 Thu 29 Jan 2015 - 14:08

என்னென்ன நோய்களைக் கண்டுபிடிக்க முடியும்?

‘‘பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகள் உடலில் ஏற்பட்டிருந்தால் சளி பரிசோதனையின் மூலம் பார்க்க முடியும். முக்கியமாக, காசநோயை எளிதாகக் கண்டு பிடிக்க உதவுவது சளி பரிசோதனைதான். முற்றிய காசநோய் என்பதைக் கண்டுபிடிக்க நிறைய பரிசோதனைகள் இருந்தாலும், அவைகளில் எளிதானது சளி பரிசோதனை. குறிப்பாக, ‘டி.பி. கல்ச்சர்’ என்ற செல் வளர்ப்பு மூலம் காசநோயைக் கண்டுபிடிக்க மூன்று மாதங்களாவது ஆகும். ஆனால், நான்கு மணி நேரங்களில் சளி பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்துவிடலாம். சளியில் ரத்தம் கலந்து வருவது காசநோய், புற்றுநோய் போன்ற பெரிய பிரச்னைகளின் அடையாளமாக இருக்கும். சளியில் துர்நாற்றம் இருந்தாலும் உடலில் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விடலாம். நுரையீரலில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்கவும் சளி பரிசோதனை உதவுகிறது. இதை ‘ஸ்பூடம் சைட்டாலஜி’ என்பார்கள். அதிகபட்சமாக 300 ரூபாயில் சளி பரிசோதனையை செய்துவிடுவார்கள்.’’

இருமல் மருந்தைப் பயன்படுத்தலாமா?


‘‘சிலருக்கு சளி வெளியேற வேண்டியிருக்கும். சிலருக்கு அடங்க வேண்டியிருக்கும், சிலருக்கு வறட்டு இருமலாக இருக்கும். அதனால், சளி இருக்கிறது என்று உடனடியாக ஒரு இருமல் மருந்தை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. என்ன வகையான இருமல் என்பதைத் தீர்மானிக்க மருத்துவரின் ஆலோசனை முக்கியம்.’’

சளி பரிசோதனையின் முக்கியத்துவம் என்ன?


‘‘உடனடியாக இதயம் செயலிழந்து போகிறவர்களுக்கு சோப் நுரை போல வாயிலிருந்து சளி வெளிவரும். இதை ‘பல்மனரி எடிமா’ என்று சொல்வோம். இது ஆபத்தானது என்பதால் உடனடியாக கவனிக்க வேண்டும். சளியில் ரத்தம் வருவதும் ஆபத்தானது என்பதால் உடனடியாக கவனிக்க வேண்டும். இதுதவிர நாள்பட்ட இருமல் உள்ளவர்கள், புகைப்பழக்கம் இருப்பவர்கள், காசநோயாளிகள், காசநோய் என்பது எளிதில் மற்றவருக்குத் தொற்றக் கூடியது என்பதால் காசநோயாளிகளுக்கு அருகில் இருப்பவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், வயதானவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது!’’

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3236


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா? Empty Re: இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா?

Post by Nisha Thu 29 Jan 2015 - 16:09

இருமல் வந்தாலும்  கவனமா இருக்கணும் தான். 

எனக்கும் முன்னாடி  மாதக்கணக்கில் இருமல்  இருக்கும். ஹோட்டல் திறந்த புதிதில் இரண்டு மாதம் வரை இருமி இருமி  நெஞ்சுக்கு கீழே  ஒருவகை பிடிப்பு உருவாகி குனியவும் நிமிரவும் முடியாமல் ஆண்டியாபிட்டிக் மாத்திரைகள்  மாதக்கணக்கில் எடுத்து தான் சுகமாச்சு. 

 இருமல் வந்தால் தூக்கமும் போயிரும்.  நெஞ்சும் வலிக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா? Empty Re: இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா?

Post by நேசமுடன் ஹாசிம் Thu 29 Jan 2015 - 16:12

அவசியமான பகிர்வு நன்றி 

அக்காவிடமும் சொல்லியிருந்தேன் எனது வீட்டில் இருமல் பிரச்சினையினால் அவதிப்பபடுகிறார்கள்


இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா? Empty Re: இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா?

Post by Nisha Thu 29 Jan 2015 - 16:14

ஆமாம்! சொன்னீர்கள்! இப்போது எப்படி இருக்கின்றார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா? Empty Re: இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா?

Post by நேசமுடன் ஹாசிம் Thu 29 Jan 2015 - 16:19

Nisha wrote:ஆமாம்! சொன்னீர்கள்! இப்போது எப்படி இருக்கின்றார்?
இப்போது கொஞ்சம் பறவாயில்லை


இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா? Empty Re: இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum