Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நண்பேன்டா : V.J. (எ) V.J. விஸ்வநாதன்.
4 posters
Page 1 of 1
நண்பேன்டா : V.J. (எ) V.J. விஸ்வநாதன்.
இன்றைய நண்பேன்டாவில் எனது அருமை நண்பர் திரு. V.J. விஸ்வநாதன்அவர்களுடனான நட்பைப் பற்றி பகிர்ந்து கொள்ளப் போகிறேன். வெங்கி குறித்த பகிர்வைப் படித்தவர்கள் இவரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டிருக்கலாம். ஏனென்றால் நாங்கள் மூவரும்தான் ஒன்றாக சென்னையில் சுற்றியவர்கள்.
தினமணியில் வேலைக்குச் சேர்ந்த போது வெங்கி என்னிடம் 'இங்க விஜே(V.J.)ன்னு ஒருத்தர் இருக்கார். எந்த நேரமும் வேலைதான். ரொம்பப் பேசமாட்டார். எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்வார். பெரும்பாலும் இரவுப் பணிக்குத்தான் வருவார்' என்று சொல்ல, 'அது யாருய்யா அப்படிப்பட்ட ஆளு' என்றேன். 'நீ இரவுப் பணிக்கு வரும்போது அவரோடதான் வேலை செய்யிற மாதிரி இருக்கும். அப்போ பார்த்துப்பே' என்றான். அந்த நாளும் வந்தது.
ரொம்ப உயரமும் குள்ளமுமாக இல்லாமல் ஒரு சிவப்பு உருவம் வந்து அமர்ந்தது. என்னைப் பார்த்து லேசான ஒரு புன்னகை. வேறெதுவும் கேட்கவுமில்லை... பேசவுமில்லை... வேலையில் எதாவது கேட்டால் சொல்வதுடன் சரி... முதல் நாள் இப்படியே போச்சு... இரண்டாம் நாள் 'சாப்பிட வாரீங்களா?' என்றார். நாம விடுவோமா... ஆளைக் கபக்கென்று பிடிக்க, பின்னான நாட்களில் அவரை நம் பக்க இழுத்தோம்... கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் மூத்த பையன். திருமணமாகி ஒரு பெண் குழந்தை. அப்பா, அம்மா, தம்பியுடன் முகப்பேரில் சொந்த வீட்டில் வாழ்க்கை. எம்.எஸ்.சி. எம்.எட்., படித்தவர் பத்திரிக்கையில் நீயூஸ் எடிட்டராக ஏழெட்டு வருடமாக பணியாற்றுகிறார் என அறிந்தோம். வெங்கியும் அவரு வீட்டுக்கு ஒரு தடவை போயிருக்கேன்ய்யா... அப்புறம் போனதில்லை என்றான்.
அவருடன் ஜாலியாய் பேச ஆரம்பித்ததும் நான் அவரிடம் கேட்ட கேள்வி, 'ஏங்க இவ்வளவு தூரம் படிச்சிட்டு இங்க குப்பை கொட்டுறீங்களே?' என்பதுதான். அதற்கு அவர் சொன்ன பதில், 'வேற எங்கயும் வேலை கிடைக்கலை... இதுல முன்ன நல்ல சம்பளம்... நல்ல பெயர் இருந்தது... ஆனா இப்ப சம்பளம் எல்லாம் கூட்ட மாட்டேங்கிறாங்க... பாலிடிக்ஸ் வந்துருச்சு... நீங்க இங்க எதுக்கு வந்தீங்க... சீக்கிரம் எதாவது வேலை தேடி கிளம்பிருங்க' என்பதுதான். நான் சிரித்துக் கொண்டே 'பத்திரிக்கையில் வேலை பார்க்கணுங்கிறது எனக்கு ஆசை.... கொஞ்ச நாள் அப்புறம் ஆசை தீர்ந்திரும்... பொட்டியைக் கட்ட வேண்டியதுதான்..' என்றேன்.
பின்னான நாட்களில் எங்கள் மூவரின் நட்பும் இறுக்கமானது. மூவரின் அரட்டையும் வேலை செய்யுமிடத்தில் தொடர ஆரம்பித்தது. நான் தி.நகரில் இருந்து வருவேன். வெங்கி அம்பத்தூரில் இருந்து வருவான். இவரோ முகப்பேர். வேலை முடிந்ததும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்போம். சில நாட்கள் இவரின் டிவிஎஸ் எக்செல்லை தள்ளிக் கொண்டே பேசிக்கிட்டு வருவார். பலநாள் அதில் பெட்ரோல் தீர்ந்து தள்ளிக் கொண்டே வருவார். எங்களின் நட்பு இறுக்கமான போதுதான் குடும்பத்தை சென்னை அழைத்துச் செல்ல நாங்கள் வீடு தேடினோம். இந்தக் கதை வெங்கி குறித்த பகிர்வில் சொல்லி விட்டதால் இங்கு வேண்டாம்.
வீடு அமைந்தது அவர் வசித்த முகப்பேர் கிழக்கில்... அதுவும் இரண்டு தெருக்கள் தள்ளி... என்ன உதவி என்றாலும் ஓடோடி வருவார். நாங்களும் அவர் வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தோம். அங்கு அவரின் மனைவி ஏதாவது சாப்பிடக் கொடுப்பார். இவரும் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக நிற்பார். அவர்கள் வீட்டில் எங்களை அவர்களில் ஒருவராக நினைக்க ஆரம்பித்தனர். என் மனைவி, ஸ்ருதியுடன் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி போய் வர ஆரம்பித்தோம். என் மனைவிக்கு விஜே என்றால் ரொம்பப் பிடிக்கும்.
மனைவி ஊருக்குச் சென்ற வேளைகளில் இங்கு வந்து சாப்பிடுங்க... கடையில சாப்பிடாதீங்க என்று சொல்லி வற்புறுத்துவார். நமக்கு சொந்தச் சமையல் தெரியும் என்பதால் சமைத்து விடுவேன். நானே செஞ்சு சாப்பிட்டிருவேன் விஜே... எதுக்கு உங்களுக்கு சிரமம் என்றாலும் விடமாட்டார். வாங்க... வாங்க என வீட்டு வாசலில் வண்டியை வைத்துக் கொண்டு நிற்பார்.
இருவருக்கும் ஒரே நேரத்தில் பணி என்றால் ஒரு வண்டியில் போய்விட்டு இரவு வரும்போது அவர் வீதியின் ஆரம்பத்தில் இறக்கிவிட்டு வருவேன். பக்கத்தில் இருக்கும் கோவில்களுக்கு எல்லாம் அழைத்துச் செல்வார். 'இந்தாளோட நடந்தா நாம பாட்டுக்கு பேசிக்கிட்டு போக வேண்டியதுதான்ய்யா... மனுசன் டக்குன்னு நின்னுகுவார் என்று வெங்கி அடிக்கடி சொல்வான்...' அப்படித்தான் நடக்கும்... நடந்து போய்க்கிட்டு இருக்கும் போதே நின்னுடுவாரு... நாம பாட்டுக்கு நடந்து போய்க்கிட்டே இருப்போம்... அப்புறம் என்ன விஜே என்றால் மறுபடியும் வேகமாக வருவார். அப்புறம் நின்றுவிடுவார். அது மட்டும்தான் எங்களுக்கு புரியாத புதிர்.
ஒரு முறை நாங்கள் மூவரும் வண்டியில் போக, மூணு பேர் போறீங்கன்னு போலீஸ்காரர் மறிக்க, வண்டியின் வேகத்தைக் குறைத்தேன்... அதற்குள் பின்னால் இருந்த இவர், வேகமாக ஓட்டுங்க குமார், புடிச்சா காசு பறிச்சிருவான் என்றதுதான் தாமதம்... கிராமத்து ஒற்றையடிப் பாதையில் வண்டி ஓட்டிய அனுபவம் இருந்ததால அவருக்கிட்ட மெதுவாப் போயி சட்டென வேகம் பிடித்து சந்து பொந்துக்குள் எல்லாம் நுழைந்து மெயின் ரோட்டை அடைய பின்னால் எம்.80யில் விரட்டுறேன் என வந்தவரைக் காணோம். 'ஆத்தாடி... என்னய்யா நீ, நான் சொன்னதும் இப்படி ஓட்டிட்டே... எனக்கு பயமாப்போச்சு... விரட்டி வந்த அந்த ஆள் பிடிச்சிருந்தா நமக்கு டின் கட்டியிருப்பான்' அப்படின்னு சொன்னார். 'நாமதான் பிரஸ் அட்டை வைத்திருக்கோமுல்ல... அதைக் காட்டியிருப்போமே...' என்றதும் 'அப்புறம் ஏன் வேகமாக ஓட்டியாந்தே... காட்டியிருக்கலாமே' என்றார். 'ம்... மூணு பேர் போறதுக்கெல்லாம் பிரஸ்ன்னு காட்டுன்னா நீயே இப்படிப் பண்ணுவியான்னு மேல நூறு போட்டுக் கொடுக்கச் சொல்வாரு' என்றதும் சிரித்துக் கொண்டார்.
குடும்பச் சூழல்... அவரின் நிலமை... வேற எங்கயாச்சும் வேலைக்குப் போகணும்... மரியாதை இல்லை குமார் என அவர் வாழ்க்கையை மறைக்காது நிறையப் பேசுவார். தினமும் சினிமா எக்ஸ்பிரஸில் ஏதாவது ஒரு படத்தோட கேலரி அல்லது நடிகையோட கேலரி போடுற பணி அவருக்கு இருக்கும். 'என்னய்யா வேலை... எப்ப வந்தாலும் எதாவது ஒரு கேலரி போடச் சொல்லி கொல்லுறானுங்க... நீங்க எல்லாம் நீயூஸ் எடிட் பண்றதோட போயிருறீங்க...' என்று புலம்புவார். 'நீங்க போடுற போட்டாதான் நல்லாயிருக்காம் விஜே' எனச் சொன்னதும் 'ஆமா... நடிகைகளோட கவர்ச்சி போட்டோவை தேடித்தேடி போடுற இது ஒரு பொழப்பு' எனப் புலம்புவார்.
சென்னையில் இருக்கும் வரை எனக்கு உதவிய மனிதர்களில் இவரும் ஒருவர். எந்த உதவி என்றாலும் யோசிக்காமல் செய்வார். வேலையை விட்டுப் போகணும்... போகணும்... என்று இன்னும் அதே அலுவலகத்தில்தான் இருக்கிறார். இரண்டு பெண் குழந்தைகள்... அன்பான மனிதர்... நல்ல திறமை... ஆங்கில அறிவு இருந்தும் இதுவே போதும்... இனி வேறு வேலை எதற்கு என்று நினைத்து விட்டார் போல... மரியாதை இல்லை... கேவலமாப் பேசுறானுங்க என்றாலும் அந்த வேலை அவருக்குப் பிடித்து விட்டது. வாழ்க்கைச் சக்கரமும் நன்றாகத்தான் பயணிக்கிறது. எப்போதாவது பேசுவேன்... ஆனால் இன்னும் என்னுள் இருக்கிறார்... எங்கள் அன்பு எப்போதும் தொடரும். சென்ற முறை சென்னை சென்ற போது போய் பார்த்துப் பேசி வந்தேன். மனிதர் இன்னும் மாறவில்லை... அவரின் குணங்களும் மாறவில்லை...
நண்பா என்பதைவிட எனக்கு ஒரு சகோதரனாய் இருந்தவர், வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
நண்பேன்டா தொடரும்.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: நண்பேன்டா : V.J. (எ) V.J. விஸ்வநாதன்.
நினைவுகளின் அசைபோடல் அருமை அண்ணா
உண்மையான நட்பு என்றும் எம் வாழ்வில் மரணமின்றி தொடரும் மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்
உண்மையான நட்பு என்றும் எம் வாழ்வில் மரணமின்றி தொடரும் மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்
Re: நண்பேன்டா : V.J. (எ) V.J. விஸ்வநாதன்.
விஜேவின் அறிமுகத்தை பார்த்ததும் அவரு மூடியாய் இருப்பாருன்னு நினைச்சேன். பிறகு பழகியபிறகு தான் அவருக்கும் சோகம் உண்டு என்பதை அறிந்தேன். அருமையான நட்பு.
நான் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் காலத்தில் என் நண்பன் ஒருவன் வீட்டு மொட்டை மாடியில் தான் நான்கு ஐந்து நண்பர்கள் ஒன்றாக இனைந்து படிப்போம். அந்த நண்பனின் அம்மா இரவானது எங்களுக்கு ஒரு பெரிய சட்டியில் சாப்பாடு குழம்பு பொறியல் என அனைத்தையும் கலந்து ஒரு ஒரு கவளமாக கொடுப்பார் எல்லாரும் பசியாறி நன்றாக இரவு முழுவதும் படிப்போம்.
சரியாக 4.00 மணிக்கு ஹார்லிக்ஸ் கலந்து ஒரு பெரிய சொம்பில் தருவார்கள் நாங்கள் அதிலேயே எல்லாரும் குடிப்போம். நாங்கள் நால்வரும் அவங்களை அம்மா என்றே அழைப்போம். படித்து முடித்து நால்வரும் டிகிரி முடித்தவுடன் அவங்க காலில் விழுந்து ஆசீர் பெற்றோம்.
அவங்க என்னை நீ ஆசிரியனாக தான் வருவாய் என்றார்கள். ஏனென்றால் நீ படிக்கும் போதே மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறாயே என்றார். அவர் ஆசிப்படி நான் இன்று ஒரு ஆசிரியராக பணிசெய்கிறேன்.
இன்றும் அந்த தாயை மறக்கமுடியாத நினைவுகள். ஒரு பிள்ளையை போல தனது மகன்களின் நண்பர்களை நடத்திய விதம் மெய்சிலிர்க்க வைத்தது.
உங்கள் இந்த அனுபவத்தை படித்ததும் எனக்கு இவையனைத்தும் மீண்டும் நினைவுகளில் முழுமையாக வந்துவிட்டது. நன்றி நண்பரே

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நண்பேன்டா : V.J. (எ) V.J. விஸ்வநாதன்.
நேசமுடன் ஹாசிம் wrote:நினைவுகளின் அசைபோடல் அருமை அண்ணா
உண்மையான நட்பு என்றும் எம் வாழ்வில் மரணமின்றி தொடரும் மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்.
வணக்கம் ஹாசிம்...
தங்கள் கருத்துக்கு நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: நண்பேன்டா : V.J. (எ) V.J. விஸ்வநாதன்.
சுறா wrote:விஜேவின் அறிமுகத்தை பார்த்ததும் அவரு மூடியாய் இருப்பாருன்னு நினைச்சேன். பிறகு பழகியபிறகு தான் அவருக்கும் சோகம் உண்டு என்பதை அறிந்தேன். அருமையான நட்பு.
நான் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் காலத்தில் என் நண்பன் ஒருவன் வீட்டு மொட்டை மாடியில் தான் நான்கு ஐந்து நண்பர்கள் ஒன்றாக இனைந்து படிப்போம். அந்த நண்பனின் அம்மா இரவானது எங்களுக்கு ஒரு பெரிய சட்டியில் சாப்பாடு குழம்பு பொறியல் என அனைத்தையும் கலந்து ஒரு ஒரு கவளமாக கொடுப்பார் எல்லாரும் பசியாறி நன்றாக இரவு முழுவதும் படிப்போம்.
சரியாக 4.00 மணிக்கு ஹார்லிக்ஸ் கலந்து ஒரு பெரிய சொம்பில் தருவார்கள் நாங்கள் அதிலேயே எல்லாரும் குடிப்போம். நாங்கள் நால்வரும் அவங்களை அம்மா என்றே அழைப்போம். படித்து முடித்து நால்வரும் டிகிரி முடித்தவுடன் அவங்க காலில் விழுந்து ஆசீர் பெற்றோம்.
அவங்க என்னை நீ ஆசிரியனாக தான் வருவாய் என்றார்கள். ஏனென்றால் நீ படிக்கும் போதே மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறாயே என்றார். அவர் ஆசிப்படி நான் இன்று ஒரு ஆசிரியராக பணிசெய்கிறேன்.
இன்றும் அந்த தாயை மறக்கமுடியாத நினைவுகள். ஒரு பிள்ளையை போல தனது மகன்களின் நண்பர்களை நடத்திய விதம் மெய்சிலிர்க்க வைத்தது.
உங்கள் இந்த அனுபவத்தை படித்ததும் எனக்கு இவையனைத்தும் மீண்டும் நினைவுகளில் முழுமையாக வந்துவிட்டது. நன்றி நண்பரே
உண்மை நண்பரே...
எனக்கும் இப்படி நான் நல்லாவருவேன்னு நினைக்கிற அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தோழன், தோழியின்னு நிறையப் பேர் உண்டு.
உங்கள் கருத்து மகிழ்ச்சியைத் தருகிறது.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: நண்பேன்டா : V.J. (எ) V.J. விஸ்வநாதன்.
விஜே எனும் நண்பருடனான நட்பு குறித்த பகிர்தல் தங்களுக்கு அந்த நட்புக்குமிடையிலான அன்பின் ஆழத்தையும் புரிதலையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.
நீங்கள் எழுதும் இப்பதிவுகளை சம்பந்தப்பட்ட நட்புக்கள் படிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தால் அவர்கள் உங்களை குறித்து என்ன சொல்வார்கள் என்றறிய ஆவல் வருகின்றது குமார்.
எப்படித்தான் அத்தனையையும் நினைவில் வைத்து ஊர் பெயர் தெருப்பெயர் என எழுத முடிகின்றதோ தெரியவில்லை. ஆச்சரியமான நினைவாற்றல் உங்களுக்குண்டு குமார். நன்று. இன்னும் இன்னும் உங்கள் பதிவுகள் தொடரட்டும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பேன்டா : V.J. (எ) V.J. விஸ்வநாதன்.
Nisha wrote:விஜே எனும் நண்பருடனான நட்பு குறித்த பகிர்தல் தங்களுக்கு அந்த நட்புக்குமிடையிலான அன்பின் ஆழத்தையும் புரிதலையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.
நீங்கள் எழுதும் இப்பதிவுகளை சம்பந்தப்பட்ட நட்புக்கள் படிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தால் அவர்கள் உங்களை குறித்து என்ன சொல்வார்கள் என்றறிய ஆவல் வருகின்றது குமார்.
எப்படித்தான் அத்தனையையும் நினைவில் வைத்து ஊர் பெயர் தெருப்பெயர் என எழுத முடிகின்றதோ தெரியவில்லை. ஆச்சரியமான நினைவாற்றல் உங்களுக்குண்டு குமார். நன்று. இன்னும் இன்னும் உங்கள் பதிவுகள் தொடரட்டும்.
வணக்கம் அக்கா...
//ஆச்சரியமான நினைவாற்றல் உங்களுக்குண்டு குமார்.//
அது மட்டுந்தானே நம்ம சொத்தா இருக்கு.... அதுவே சில நேரங்களில் சில பல விஷயங்களைக் கிளறும்போது கஷ்டமாவும் இருக்கு..
சில நண்பர்களோடு தொடர்பில் இல்லை... சில நண்பர்கள் வாசித்து நீங்க கேட்ட மாதிரியே எப்புடிடா இந்த மாதிரி ஞாபகம் வச்சி எழுதுறேன்னு கேப்பாங்க... ஒருத்தன் போன் பண்ணி அது ஒரு கனாக்காலம் அப்படின்னு மட்டும் சொன்னான்.
இன்னும் சில நண்பர்கள் மனசுக்குள்... அவர்களையும் நண்பேன்டாவில் தர வேண்டும்...
வெள்ளந்தி மனிதர்கள்
கிராமத்து நினைவுகள்
நண்பேன்டா...
இது மூன்றுமே என் வாழ்க்கையை பதியும் முயற்சிதான்...
இதில் எதாவது ஒன்றை முடிக்கும் போது... அம்மா என ஒரு தொடர் ஆரம்பிக்க எண்ணம். என் தாயைப் பற்றி பதிய வேண்டும் என்பதான எண்ணம்... பார்க்கலாம்.
அதேபோல் நாட்டுப்புற பாடல்கள் குறித்தும் எழுத ஆசை... தேடல் அதிகம் தேவைப்படுவதால் தள்ளிப் போகிறது.
உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றிக்கா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: நண்பேன்டா : V.J. (எ) V.J. விஸ்வநாதன்.
அட! நாட்டுப்புற பாடல்கள் என நான் எங்கோ பதிந்த நினைவு. தேடி கிடைத்தால் தருகின்றேன் குமார்.
வயலில் , கடலில் என என பாடும் பாடல்கள் அவை.
வயலில் , கடலில் என என பாடும் பாடல்கள் அவை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பேன்டா : V.J. (எ) V.J. விஸ்வநாதன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பேன்டா : V.J. (எ) V.J. விஸ்வநாதன்.
தேடிப் பாருங்கள் அக்கா.Nisha wrote:அட! நாட்டுப்புற பாடல்கள் என நான் எங்கோ பதிந்த நினைவு. தேடி கிடைத்தால் தருகின்றேன் குமார்.
வயலில் , கடலில் என என பாடும் பாடல்கள் அவை.
கொடுத்தால் மகிழ்வேன்..
தாலாட்டுப்பாட்டு
நடவுப் பாடல்
குலவைப் பாடல்
ஒப்பாரிப் பாட்டு
ஏற்றம் இறைக்கும் போது பாடும் பாட்டு...
இப்படி தரம் பிரித்து எழுத ஆசை....
பார்க்கலாம்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: நண்பேன்டா : V.J. (எ) V.J. விஸ்வநாதன்.
கொடுத்து விட்டேன். இன்னும் சில தேடணும். கிடைத்தால் பகிர்கின்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» நண்பேன்டா…!!
» எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி ............
» இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பம்-எஸ். விஸ்வநாதன்
» தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது: அமைச்சர் விஸ்வநாதன்.
» திரைப்படமாக உருவாகும் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்தின் வாழ்க்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum