Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வாந்தி பேதி மருந்துகள்
3 posters
Page 1 of 1
வாந்தி பேதி மருந்துகள்
வாந்தி, பேதி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களை நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்காமல் இருக்க முடியாது. வாந்தி என்றாலே, அது
90 சதவிகிதம் உணவுக்குழாய் பிரச்னை என்று அர்த்தம். 10 சதவிகித அளவுக்கு காய்ச்சல் நோயாளிகளுக்கும் மூளை சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் வாந்தி வரலாம்.
வாந்தி என்பது என்ன?
உடலுக்கு ஒப்புக் கொள்ளாத, தேவையில்லாத விஷமான ஒன்றை இரைப்பைக்குள் உறிஞ்ச விடாமல், உணவுக்குழாய்க்குள் மேலும் கீழும் செல்லவிடாமல் தடுக்கும் ஓர் அற்புதமான தற்காப்பு செயலே! இது எத்தனை பேருக்குத் தெரியும்? அதனால்தான் சில வேளைகளில் வாந்தி எடுத்த பின், உபாதைகள் நீங்கி நலமாக ஆகிவிட்டது போல தோன்றும். வாந்தி நின்றுவிட்டாலே மருத்துவத்தையோ, மருத்துவரையோ தேட மாட்டார்கள். இதனால் வாந்தியை மீறி உணவுக்குழாய்க்குள் செல்லும் கிருமிகளோ, வேண்டாத உணவோ உணவுக்குழாயின் மற்றொரு நோயாக வயிற்றுப்போக்குப் பேதியை உருவாக்கும்.
இந்தியா போன்ற கோடை நாடுகளில் பயணத்தின் போது ஏற்படும் வைரஸ் கிருமிகளாலான Travaler’s Diarrhea சில வேளைகளில் தானாகவே நின்று விடும். பெரும்பாலான நேரங்களில் கையை சுத்தமாக கழுவாதவர்கள், சரியாகக் கழுவி பராமரிக்கப்படாத பாத்திரங்கள், சுகாதாரமற்ற உணவுத் தயாரிப்பு, காய்கறிகள், இறைச்சி, முறையாக தேக்கி வைத்து சுத்தமாக சமைக்கப் படாதது, சமைக்கப்பட்ட உணவு சுத்தமாக பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு பரிமாறப் படாதது, பரிமாறுபவர்களின் சுத்தம், சுகாதாரம் இல்லாமை என அனைத்து நிலைகளிலும் உணவில் கிருமிகள் கலக்கலாம்.
வாந்தியுடன் கூடிய பேதிக்கு வாந்தியை நிறுத்த Ondansetron மருந்துகள் வாந்தியின் போது தண்ணீர் இல்லாமலே வாயிலேயே கரையும் மருந்துகளாக, சொட்டு மருந்துகளாக, மாத்திரையாகக் கிடைக்கிறது. இந்த மருந்துகளை எடுத்து ஒரு மணி நேரம் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் வாந்தி நின்று விடும். வாந்தி மட்டுமே இருந்தாலும் இம் மருந்தால் குணமானாலும் அடுத்து சில மணி நேரங்களில் வரப்போகும் பேதிக்காக மருத்துவரை அணுகி தேவையான மருந்துகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். வாந்தியுடன் திரவ உணவுகளை முழுங்க முடிந்து திட உணவுகளை முழுங்க முடியாமல் இருந்தால் உணவுக்குழாய் கேன்சராக இருக்கலாம்.
இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் நீராக ரத்தமின்றி, ரத்தமுடன் முழுமையாக ஜீரணமாகாத உணவுடன், வயிற்று வலியுடனோ வலி இல்லாமலோ பேதியானால் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது. காரணமே இல்லாது, ஒப்புக் கொள்ளாத உணவு அல்லது அதிகப்படியான உணவு காரணமாக ஏற்படும் வயிற்றுப்போக்கு இரு முறைக்கு மேல் இருந்தால் - வயிற்றுப்போக்கை நிறுத்தும் மருந்தை எடுத்து நன்றாக ஆகிவிட்டதுபோல ஓர் உணர்வு இருந்தால்கூட மருத்துவரிடம் சென்று நோய்க்கான காரணத்துக்கு மருந்துகள் வாங்குவது நல்லது.
காரணம்... பேதியாவதற்கு முக்கிய காரணிகளான வைரஸ், பாக்டீரியா, புரோட்டோசோவா, காளான் (Fungus), புழு (Worms) போன்ற கிருமிகள். குடல் அசைவைத் தடுக்கும் மருந்துகளை உட்கொண்டு பேதியாவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தாலும் கூட, நோய் முற்றிய உடலில் நீர் இழந்த நிலையில் மருத்துவரை நாட வேண்டியது வரும். பேதியாவதற்கு மேலே கூறிய காரணங்களைத் தவிர பாலுக்கு ஒவ்வாமை (Lactose Intolerance) இருந்தாலும், அதிகமாக கிருமி மருந்துகளை உட்கொள்ளுவதாலும், மருந்துகளை அடிக்கடி உட்கொள்வ தாலும், குடலில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் கொல்லப்படுவதாலும், ஹைப்பர் தைராய்டிஸம் என்ற பிரச்னையாலும் குடல் கேன்சரினாலும் கூட பேதியாவது சகஜம். முதியவர்களுக்கு மலச்சிக்கலும் பேதியும் மாறி மாறி வருவதாக இருந்தால் குடல் கேன்சராக இருக்கலாம்.
பேதியாகும் போது கிருமிகள் தாக்கத்தால் குடலிலிருந்து நீர் வெளியேறுவதும், கிருமிகள் இருக்கும் இடங்களில் அப்போது குடல் சுருங்குவதால்
அதனால் ஏற்படும் வலியும், சிலவேளைகளில் ரத்தப்போக்கும், வயிற்றுப்போக்கின் நோய் அறிகுறிகளை விளக்குவதால் வெறும் பேதியை நிறுத்தும் மருந்தால் நோயிலிருந்து முழு நிவாரணம் அடைய முடியாது.
பேதி என்பது முழுக்க முழுக்க குடலிலிருந்து கிருமிகளின் தாக்கத்தால் நீர் வெளியேறுவது. அதனால் உடலிலிருந்து நீருடன் சில உப்புகளும் வெளியேறுவதுதான் உடலைப் பாதிக்கும் ஒரு முக்கியமான நோயின் தாக்கமாகும். அதனால், உடலுக்கு நீர் தருவது, தேவையான அளவு உப்புக்கரைசலுடன் தருவது (ORS Oral Rehydration Salts) மிக முக்கியமான சிகிச்சை. நம் மக்கள் பேதியோ, ஜுரமோ, பச்சைத் தண்ணீர் கூட பல்லிலே படாமல் இருந்தால் சரியாகி விடும் என்ற தவறான எண்ணத்தில் இருக்கின்றனர். பேதியாகும் போது எவ்வளவு நீர் வெளியேறுகிறதோ, அந்த அளவுக்கு வீட்டில் தயாரிக்கும் அளவான உப்புடன் தாராளமான அரிசி நொய் கஞ்சி எடுப்பது மிகச் சிறந்த மருந்தாகும். அதற்கு அடுத்தது புளிக்காத மோர், இளநீர், ளிஸிஷி பவுடர் கரைசல்கள், பழச்சாறு போன்றவையும் கொடுக்கலாம்.
இதற்குப் பிறகு மருத்துவரை அணுகும் முன், அவசரத்துக்கு பிரயாணத்தின் போது, மருத்துவர் பரிந்துரைக்கும் பேதியை நிறுத்தும் குடல் அசைவைத் தடுக்கும் மருந்துகளை (Anti Motlity Drugs) எடுத்துக் கொள்ளலாம். அது வேலை செய்யும் 6 - 8 மணி நேரத்துக்குள் மருத்துவரைச் சந்தித்து கிருமிகளுக்கான நீர் வெளியேற்றத்தைத் தடுக்கும் மருந்து எடுத்துக் கொள்வது அவசியம். பேதியை நிறுத்தும் மருந்துகளை அடுத்த வேளை பேதி இல்லாத போது எடுத்துக் கொண்டால் மலச்சிக்கலை உருவாக்கும். அடிக்கடி பேதியானால் மட்டுமே, மருத்துவர் பரிந்துரைக்கும் போது எடுத்துக் கொள்ளவும்.
15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இதை கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது குடல் விரிந்துவிட (Paralytic Ileus) வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, இந்த மருந்துகளை கொடுக்க வேண்டாம். Loperamide, Codeine (Paralytic Ileus போன்ற மருந்துகளை குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. மூத்த குடிமக்கள் 12 மணி நேரத்துக்கு ஒரு முறை தேவைப்பட்டால் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். பேதி நின்றாலும் நோய் காரணிக்கான மருந்துகளை உட்கொள்வது, சில நேரங்களில் ஈரலில் ஏற்படும் சீழ் கட்டிகள் மற்றும் அப்பென்டிசைடிஸ் போன்ற அறுவை சிகிச்சை நோய்களுக்குக் கூட ஆரம்ப கட்ட வைத்தியத்தினால், மருந்தினால், அறுவை சிகிச்சை இல்லாமல் பூரண குணமாக வாய்ப்பு இருக்கிறது.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3278

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum