Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
மனசு பேசுகிறது : தெய்வமான குடி
3 posters
Page 1 of 1
மனசு பேசுகிறது : தெய்வமான குடி
இன்றைய நிலையில் நூத்துக்கு தொன்னூறு பேரு குடிக்கிறாங்க... ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் குடிக்கிறாங்கன்னு செய்திகள்லயும் இணைய வீடியோக்களிலும் பார்க்கிறோம். சமீபத்தில் கூட நயன்தாரா பாட்டில் வாங்கினார் என அவருக்கு எதிராக பொங்கி எழுந்தது ஒரு கூட்டம். அது சினிமா சூட்டிங் என்ற செய்தி வந்தபோதும் தேவையில்லாத ஒரு பிரச்சினையை தேவையான பிரச்சினையாகப் பார்த்தது அந்தக் கூட்டம். கடந்த வாரம் பள்ளி மாணவர்கள் குடித்து விட்டு ரோட்டில் விழுந்து கிடந்த காட்சிகளை முகநூலில் பார்க்க முடிந்தது. சமுதாய சீரழிவுக்கு முக்கிய காரணம் சினிமாதான். அதில்தான் சின்னப்பையன் சரக்கு வாங்கிக் கொடுப்பது போலவும், அடியாளுக்கு கத்தி எடுத்துக் கொடுப்பது போலவும் காட்டுகிறார்கள். சினிமா பற்றி இங்கு பேசப்போவதில்லை... குடி பற்றி மட்டுமே பேசுவோம்.
குடி குறித்து முன்னரே ஒரு பதிவு போட்டிருக்கிறேன். அதே போன்றதொரு பகிர்வை மீண்டும் பகிரக் காரணம், சென்ற மனசின் பக்கத்தில் மலையாளி நண்பர் தண்ணி அடிக்கிறார் என்று எழுதியிருந்ததற்கு அண்ணன் கில்லர்ஜியும் காயத்ரிஅக்காவும் அவர்களுக்கு மலையாளம் தெரியாததால் எல்லாவற்றையும் எழுதுகிறீர்கள் இப்படியெல்லாம் எழுதணுமா யோசிங்க என்று சொல்லியிருந்தார்கள். அடுத்தவரைப் பற்றி அவர் அறியாமல் பேசுவது தவறுதான். ஆனால் இங்கே அந்த மனிதரைப் பற்றிப் பேசவில்லை... இப்படிக் குடிக்கிறாரே என்ற ஆதங்கத்தில் எழுதியதுதான் அது.
கடந்த சனி அன்று நானும் கில்லர்ஜி அண்ணாவும் நம்ம முத்து நிலவன்ஐயாவின் மகனைச் சந்திக்கச் சென்றுவிட்டு வரும்போது இது குறித்துப் பேசினோம். அப்போ அண்ணனும் இந்தக் குடி குறித்து வருந்தினார். இன்னைக்கு பெரும்பாலான வீடுகளில் மனைவி ஆம்லெட் போட்டுக் கொடுக்க, கணவன் நண்பர்களுடன் அரட்டை அடித்தபடி வீட்டிலேயே சரக்கு அடிக்கிறார். எனக்குத் தெரிந்த ஒரு தண்ணி வண்டியைத் திருத்துகிறேன் என்று சபதமிட்ட மனைவி இன்று சிக்கன் வறுத்துக் கொடுப்பதுடன் வீட்டில் மட்டும் அடியுங்கள்... வெளியில் எல்லாம் வேண்டாம் எனச் சொல்லி வீட்டில் கடை திறக்க வைத்திருக்கிறார். திருத்துகிறேன் என்று வந்தவர் ரொம்பத் திருந்திவிட்டார்.
ஊரில் எந்த விசேசம் என்றாலும் இப்போ தண்ணிப் பார்ட்டி இல்லாமல் நடப்பதில்லை... எங்கள் மாவட்டத்தில் சில பணக்கார்களின் இல்ல திருமணங்களில் தண்ணி அடிப்பதற்கென்றே தனியாக பந்தல் அமைத்து அங்கு என்ன வேண்டுமோ அதை ஹோட்டல் பார்கள் போல் ஆட்களை வைத்துக் கொடுத்து சாப்பிட வைக்கிறார்கள். இது எங்கள் மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் எங்கும் நடைமுறைக்கு வந்துள்ளது என்பதே உண்மை. ஒரு முறை கோவில் திருவிழாவுக்காக உறவினர் வீடு சென்றபோது, மொட்டைமாடியில் டேபிள் சேர் போட்டு சிக்கன், மட்டன், மீன் என எல்லாம் வைத்து ஊத்திக் கொடுக்க ஆள்களும் நிறுத்தி, வருவோரிடமெல்லாம் தண்ணி சாப்பிடுவீங்களா... அப்படியே மாடிக்கு பொயிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பிக் குடிக்க வைத்தார்கள். அங்கு குடித்து சாப்பிட்டவர்கள் எல்லாம் 'ப்பா... என்ன கவனிப்பு... மனுசன் திருவிழாவுக்கு வந்தவங்களை எல்லாம் குளிப்பாட்டிட்டான்.. இவன மாதிரி எவனும் விருந்து போட முடியாது' என்று நாகுழற புகழ்ந்து பேசினர்.
இங்கு எப்படா வியாழக்கிழமை வரும் என்று பெருங்கூட்டமே காத்திருக்கும். வியாழன் மாலை அலுவலகம் முடிந்து வரும்போதே கையில் கருப்பு பிளாஸ்டிக் பைக்குள் பாட்டில்கள் சிரிக்கும். என்ன பாட்டிலோ வந்தாச்சா என்றால் வீக் எண்டுல்ல... பின்னே குடிக்காம என ஆரம்பித்தால் வெள்ளியும் தொடரும்... சிலருக்கு சனிக்கிழமை வேறு விடுமுறை கேட்கவா வேண்டும்... சனி இரவு வரை குடிக்க... சாப்பிட... தூங்க... என ரொம்ப சந்தோஷமாகவும் சின்சியராகவும் ஏதோ கண்டிப்பாகச் செய்ய வேண்டிய வேலை என்பது போலவும் செய்வார்கள். இதில் கூட்டணிகள் வேறு... பெரும்பாலான கூட்டணிகள் ஆரம்பிக்கும் போது சந்தோஷமாகவும் முடியும் போது அவர்களுக்கு என்னென்ன வெளியே தெரியாத பிரச்சினைகள் இருக்கோ எல்லாத்தையும் கடை விரித்து அடிதடியுடனும் முடியும். ஆனால் மறுநாள் காலையில் மாப்ள, மச்சான்னு மறுபடியும் குலதெய்வத்தைக் கும்பிட ஆரம்பிச்சிருவானுங்க.
மலையாளிகள் எல்லாருமே மொடாக் குடிகாரர்கள்தான். ஆனால் எத்தனை பாட்டில்களை முழுங்கினாலும் ஆட்டம் போட மாட்டார்கள். நம்மவர்களுக்கு ஒரு பெக் பொயிட்டாலே இல்லாத இங்கிலீசும் அடுத்தவனோட அந்தரங்கமும் பொதுக்குன்னு குதிச்சிரும். அந்த இடத்துல நாந்தான்டா ஹீரோன்னு வளவளன்னு பேசிக்கிட்டு, ஆட்டம் போட்டுக்கிட்டு சண்டைக்கு குதிச்சிக்கிட்டு... ஸ்... அப்பா... இடத்தையே ரணகளமாக்கிடுவானுங்க... இப்படி ஆளுகளை நான் இருந்த அறைகளில் சந்திச்சிருக்கேன். ஆங்கிலமே பேச வராத ஒருவர் தண்ணி அடித்தால் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார். இன்னொருத்தரோ நான் ஸ்டெடியா இருக்கேன்னு எந்திரிச்சி நடக்கும் போது ரொம்ப ஸ்டெடியாவே புதுசா கார் பழகுறவன் வண்டி ஓட்டுறமாதிரி நடப்பார். ஒருத்தருக்கு குடிச்சிக்கிட்டே இருக்கணும். இப்படி நிறைய கதாபாத்திரங்களைச் சந்தித்து இருக்கிறேன்.
இங்கே நான் சொல்லியிருந்த மலையாளியைப் பற்றிச் சொல்ல வேண்டும்.... காலையில் வேலைக்குச் செல்பவர் மதியம் மூணு மணிக்கு அறைக்குத் திரும்புகிறார். ஏதோ அவசரமான வேலை என்பது போல அறக்கப்பறக்க வருபவர், வந்ததும் வராததுமாக பாட்டிலை எடுத்து இரண்டு மூன்று பெக் அடித்து டிவி பார்த்து முடிக்கும்போது நாலரைக்கு மேலாகும். அதன் பின் மதியச் சாப்பாடு சாப்பிடப் போகிறார். வந்து ஒரு உறக்கம்... ஏழு மணிக்கு எழுந்து முகம் கழுவி தலை சீவி மீண்டும் பாட்டிலுடன் பந்தம் பத்தாததுக்கு வெளியில் இருந்து ஒருத்தர் வேறு வந்துவிடுகிறார். அப்புறம் என்ன குடிமகனே... மொடாக் குடிமகனேதான்.. இரவு பத்துமணிக்குச் சாப்பிடச் செல்கிறார். வந்ததும் டிவியில் படம்... இரவு பனிரெண்டு மணி வரைக்கும் யாரையும் தூங்க விடுவதில்லை.
இதில் என்ன உனக்குப் பிரச்சினை என்று நீங்க கேட்கலாம்... பிரச்சினை எனக்கில்லை... மற்றொரு அண்ணனுக்கு... அவருக்கு பகலெல்லாம் அலையும் பணி, மாலை 7 மணிக்குத்தான் வருவார். வந்ததும் குளித்து சாப்பிட்டு கொஞ்ச நேரம் டிவி பார்த்துவிட்டு 10 மணிக்குள்ளாக படுத்துவிடுவார். தண்ணிப் பார்ட்டி ஊருக்குப் போயிருந்த போது 10 மணிக்கு முன்ன லைட்டெல்லாம் அணைத்துவிட்டு உறங்கியவர், நேற்றிரவெல்லாம் எதுவும் சொல்ல முடியாமல் கிச்சனில் போட்டிருக்கும் சேரில் போய் படுத்துவிட்டார்.
இன்று காலை என்னிடம் நீ எப்ப அபுதாபி போவேன்னு கேட்டார். ஏண்ணா... என்னாச்சு... இந்த மாசம் இங்க வேலை முடியும் என்றதும் நானும் அடுத்த மாசத்துல இருந்து வேற ரூம் போறேன். இந்தாளு கூட இருக்கமுடியாது. உறங்க விடாம வெள்ளம் (தண்ணி) அடிச்சிட்டு குறைய (அதிக) நேரம் டிவியும் பின்ன லைட்டும் இட்டுட்டு நமக்கு நிம்மதி வேணாமா..? அதை யோசிக்கிது இல்லை... அவரு உச்சிக்கு (மதியம்) வந்துட்டு கிடக்கும் (உறங்கும்) நாம பகலெல்லாம் அலைஞ்சிட்டு கொஞ்ச நேரமாச்சும் கிடக்க வேண்டாமா என்று புலம்பினார். உண்மைதானே... இவர் தண்ணி அடித்து ஆட்டம் போடுவதால் பகலெல்லாம் வெளியில் வெயிலில் அலைந்து வரும் மனிதனுக்கு கோபம் வரத்தானே செய்யும். எத்தனை முறைதான் சொல்லுவார்.
வீட்டுக்கு ஒரே பையன் கல்யாணமாகி ஆறே மாதத்தில் குடியால் இறந்தான். அதுவும் நாங்கள் தங்கியிருந்த பிளாட்டில் பக்கத்து அறையில் இருந்த சென்னைப் பையன் அவன், இது குறித்து ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். நைட் கிளப்புகளில் போய் குடித்து அங்கு டான்ஸ் ஆடும் பெண்களுக்கு காசு மாலை அணிவித்து ஆட்டம் போட கிரிடிட் கார்டுகளில் அளவுக்கு அதிகமாக பணம் வாங்கி கட்ட முடியாமல் சிறைக்குப் போய், பார்த்த நல்ல வேலையும் போயி.. இப்போ ஊரில் கிடைத்த வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான் செத்தவனின் நண்பனான மற்றொரு தமிழன். தண்ணியே தெய்வம் என்றிருந்த திருமணம் ஆகாத ஒருவன், சொந்தக்காரி என ஒருத்தியை குழந்தையுடன் கூட்டி வந்து வேலை வாங்கிக் கொடுத்து இப்போ அவளுடன் குடியும் குடித்தனமுமாக இருக்கிறான். குடித்துவிட்டு நடந்த தகராறில் மேலே இருந்து தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்ட எங்க மாவட்டக்காரரின் உடலை ஊருக்கு அனுப்ப எத்தனைநாள் சிரமப்பட்டிருக்கிறார்கள் எனது உறவுகள் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன்... அப்பா சம்பாதிக்கிறார் நாம் படித்து பெரியாளாவோம் என கல்லூரியில் படிக்கும் மகன் இப்போ குடும்பப்பாரம் சுமக்கிறான். இப்படி நிறையப் பேரைச் சந்திச்சாச்சு.
எதுக்கு இப்படி விழுந்து விழுந்து குடிக்கிறீங்க எனச் சத்தம் போட்டால் வாரமெல்லாமா குடிக்கிறேன் விடுமுறை நாளில்தானே என்று சப்பைக் கட்டுகிறார்கள். வாரமெல்லாம் குடிப்பவன் ஒன்றிரண்டு பெக்கோடு நிறுத்திக் கொள்கிறான். ஆனால் வார இறுதியில் குடிப்பவர்கள் விடுமுறை என்பது குடிக்க மட்டுமே என்பது போல் லிட்டர் கணக்கில் அல்லவா ஊற்றுகிறார்கள். இது வாரத்துக் குடியை விட அதிகமில்லையா? வெளிநாட்டு வாழ்க்கையில் பெரும்பாலும் குடியே பிரதானமாகிவிட்டது. இங்கே பிரிவுத் துயரில் வாழ்பவர்கள்... வாடுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். குடும்பம் அருகில் இல்லாதது குடிக்கக் கிடைத்த சந்தோஷமான வாழ்க்கை என்றே வாழ்பவர்கள் அதிகம். குடி குடியைக் கெடுக்கும் என்பதை அறியாதவர்கள் இல்லை இவர்கள் இருந்தும் சந்தோஷமாக அனுபவிக்கிறார்களாம். இது போன்ற குடிமகன்கள் நிலை அறிந்து அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு. அதுவரை இப்படிப் புலம்பிக் கட்டுரை போட வேண்டியதுதான் வேறென்ன செய்ய முடியும் பாட்டில்களுக்கு மத்தியில் படுத்திருக்கும் இவர்களை...
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசு பேசுகிறது : தெய்வமான குடி
எத்தனை எழுதினாலும் முடித்துவிடமுடியாத ஒரு தலைப்பண்ணா இந்த குடி என்னோடு பணிபுரியும் ஒரு UPகாரர் நாள்தோறும் குடியாகத்தான் இருக்கிறார் கம்பனியில் 25 வருடம்தாண்டி பணிபுரிகிறார் அவரது வாழ்நாள் குடியினால் அழிகிறது நானும் என்னால் முடியுமானவரை சொல்லிப்பார்த்துவிட்டேன் கேட்பதாகத் தெரியவில்லை
இந்த குடியினால் யாரும் சாதித்ததாக தெரியவில்லை இருந்தாலும் குடியுடன் வாழ்வை அழிக்கிறார்களே என்பதுதான் கவலையான விடயம்
இந்த குடியினால் யாரும் சாதித்ததாக தெரியவில்லை இருந்தாலும் குடியுடன் வாழ்வை அழிக்கிறார்களே என்பதுதான் கவலையான விடயம்
Re: மனசு பேசுகிறது : தெய்வமான குடி
குடி குடியை கெடுக்கும் என சும்மாவா சொன்னார்கள்!
இந்த குடியால் நாங்களும் ரெம்ப ரெம்ப பாதிக்கப்பட்டிருக்கின்றோம், இப்பவும் பாதிக்கப்படுகின்றோம்!
எத்தனை தான் படித்துமதிப்பையும் மரியாதையையும் சம்பாதித்தாலும் அப்பா குடித்து விட்டு செய்யும் அட்டகாசங்களால் இப்பல்லாம் அப்பா என்றாலே சே என்றிருக்கின்றது.
சின்ன வயதில் வாங்கும் சம்பளத்தில் முக்கால் பங்கு குடிக்கும் கால் பங்கு வீட்டுக்கும் என தருவார். அதை பார்த்தே வளர்ந்ததால் நான் வளர்ந்ததும்குடும்பத்தை என் பொறுப்பில் எடுத்து எல்லா கடமையும் முடிச்சாச்சு என நினைச்சாலும் குடியும் அதனால் வரும் பிரச்சனைகளும் மனசுக்கு வலி தருவதாகவே இருக்கின்றது.
அதென்னமோ குடியாதவர்களுக்கு கிடைக்காத உயிர் நட்பெல்லாம் குடிகாரர்களுக்கு மட்டும் எப்படித்தான் கிடைக்குமோ... ஒன்றை பத்தாக்கி குடும்ப மானம்மரியாதையை சந்தி சிரிக்க வைக்கும் ஜால்ரா பார்ட்டிகளாய் வரும் தொல்லை இருக்கே..
நிஜம் பேசிய பகிர்வு குமார். எத்தனை எழுதினாலும் குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு கதை தானே!
இந்த குடியால் நாங்களும் ரெம்ப ரெம்ப பாதிக்கப்பட்டிருக்கின்றோம், இப்பவும் பாதிக்கப்படுகின்றோம்!
எத்தனை தான் படித்துமதிப்பையும் மரியாதையையும் சம்பாதித்தாலும் அப்பா குடித்து விட்டு செய்யும் அட்டகாசங்களால் இப்பல்லாம் அப்பா என்றாலே சே என்றிருக்கின்றது.
சின்ன வயதில் வாங்கும் சம்பளத்தில் முக்கால் பங்கு குடிக்கும் கால் பங்கு வீட்டுக்கும் என தருவார். அதை பார்த்தே வளர்ந்ததால் நான் வளர்ந்ததும்குடும்பத்தை என் பொறுப்பில் எடுத்து எல்லா கடமையும் முடிச்சாச்சு என நினைச்சாலும் குடியும் அதனால் வரும் பிரச்சனைகளும் மனசுக்கு வலி தருவதாகவே இருக்கின்றது.
அதென்னமோ குடியாதவர்களுக்கு கிடைக்காத உயிர் நட்பெல்லாம் குடிகாரர்களுக்கு மட்டும் எப்படித்தான் கிடைக்குமோ... ஒன்றை பத்தாக்கி குடும்ப மானம்மரியாதையை சந்தி சிரிக்க வைக்கும் ஜால்ரா பார்ட்டிகளாய் வரும் தொல்லை இருக்கே..
நிஜம் பேசிய பகிர்வு குமார். எத்தனை எழுதினாலும் குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு கதை தானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசு பேசுகிறது : தெய்வமான குடி
நேசமுடன் ஹாசிம் wrote:சரியாகச் சொன்னிங்க அக்கா
நன்றிப்பா!
ஊருக்கு போக ரெடியாகிட்டிங்க போல.. மனைவி மக்கள் நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» மனசு பேசுகிறது : அ...ம்...மா..!
» மனசு பேசுகிறது : கூத்து
» மனசு பேசுகிறது : முகிலினி
» மனசு பேசுகிறது : பஞ்சாயத்து
» மனசு பேசுகிறது : கரும்புனல்
» மனசு பேசுகிறது : கூத்து
» மனசு பேசுகிறது : முகிலினி
» மனசு பேசுகிறது : பஞ்சாயத்து
» மனசு பேசுகிறது : கரும்புனல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|