சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை) Khan11

அனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை)

3 posters

Go down

அனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை) Empty அனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை)

Post by சே.குமார் Sat 14 Feb 2015 - 7:04

(காதலர் தின வாழ்த்துக்கள்)

அனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை) S36



வள்... அனுராகா. நான்... ராகவன்

எங்கள் காதல் பிறந்தது ஒரு காதலர் தினத்தில்தான் என்றால் நம்புவீர்களா... ஆம் இருபது வருடங்களுக்கு முன்னர் பிப்ரவரி 14 அன்றுதான் எங்கள் காதல் பிறந்தது. ஆனால் இப்போதுபோல் அப்போது காதலர் தினக் கொண்டாட்டங்களும் இல்லை... போராட்டங்களும் இல்லை. இன்று காதலர் தினம் என்று கடந்து செல்லும் சாதாரண நாளாகத்தான் இருந்தது.

நாங்கள் இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பு. நண்பர்கள் மத்தியில் அவள் அனுவாகிப் போனாள், நானோ ராகவ் ஆனேன். எங்களுக்கும் காதல் மலர்ந்ததும் அனு எனக்கு அம்முவானாள்... நான் அவளுக்கு ராக் ஆனேன். இருபது வருடங்களுக்கு முன் காதலில் விழுந்த அனுராக்கின் வாழ்க்கை இப்போ எப்படி இருக்குன்னுதானே கேக்குறீங்க... இருங்க அதை அப்புறம் சொல்றேன். இப்ப எங்க காதல் கதைக்குள்ள போயிட்டு வருவோம்.

அனு... பேரழகியும் இல்லை பேருக்கு அழகியும் இல்லை ஆனால் அழகி. கல்லூரி மாணவர்கள் பலரின் தூக்கத்தைக் கெடுத்து கனவில் காதலித்த அழகி. கருப்பும் இல்லாமல் சிவப்பும் இல்லாமல் புது நிறம்ன்னு சொல்லுவாங்களே அப்படி ஒரு நிறம்... நீளமான கூந்தல்... அவள் தாவணியில் வரும்போது சொக்கிப் போகும் அழகு. ம்... அது ஒரு கனாக்காலம் அல்லவா... தேர்ப்பாக்க வரும் எல்லாரும் தேவதைகளாகத்தானே தெரிவார்கள் என்றாலும் அவள் தேவதைகளின் தேவதை. தோழியருடன் பவனி வரும் போது அவள் உற்சவமூர்த்தி. அவளிடம் பேச எல்லோரும் அலைந்த பருவம் அது.

எனக்கு அவளுடன் அதிகம் பேசப்பிடிப்பதில்லை... என்னடா அழகி, பேரழகி, தேவதை, உற்சவமூர்த்தியின்னு வர்ணிச்சிட்டு பேசப்பிடிக்காதுன்னு கதை விடுறானேன்னுதானே பாக்குறீங்க... உண்மை... நம்புங்க... அவளோட அழகை ரசிச்சிருக்கேன்... ஆனா அவகிட்ட பேசணுமின்னு நினைச்சதில்லை. ஏதாவது கேட்டா பதில்... அவ்வளவுதான்... அடிக்கடி அவளுடன் பேச வேண்டும் என்று ஏதாவது காரணங்களை எனக்குள் ஏற்படுத்திக் கொண்டு காத்திருக்க நினைப்பதுமில்லை... பிடிப்பதும் இல்லை... அதுக்கு இன்னொரு காரணமும் இருந்தது... அது ஹேமா.

என்னடா அனுன்னு ஆரம்பிச்சி ஹேமாவுக்குப் பொயிட்டானே இந்த ராகவன்... என்று நினைத்து என்னைத் திட்டினாலும் பரவாயில்லை... நான் மற்ற பெண்களுடன் அதிகம் பேசாததற்கு காரணம் ஹேமாதான்... அவளும் அதே கல்லூரியில்தான் படிச்சா. என்னோட அத்தை பொண்ணு... என்னை அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்... அவளை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். வீட்டிலும் இருவருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என எப்போதோ பேசி வைத்திருக்கிறார்கள். சரி வாங்க அனு, ஹேமா, ராகவனோட கல்லூரி வாழ்க்கைக்குள்ள பொயிட்டு வருவோம்.

"ஏய் ராகவ்... என்ன என்னையப் பாத்துட்டு பாக்காமப் போறே...?" பின்னாலிருந்து கூப்பிட்டாள் ஹேமா.

"ஹே... உண்மையிலேயே பாக்கலைடி... பாத்தா பேசாமப் போவேனா?"

"இப்பல்லாம் உண்மையிலேயே பாக்காமத்தானே போறே...?"

"அடி நீ வேற... பாத்தா உங்கிட்ட பேசாம எவகிட்ட பேசப்போறேன்..."

"அதான் உங்க கிளாஸ்ல ஒரு அலப்பி இருக்காளே... எல்லாரும் போட்டிபோட்டு பேசுறானுங்களாமே... ஓருவேளை நீயும்..."

"யாரு... அந்த அனுவைச் சொல்றியா?"

"அட அனுவாமே... செல்லமாக் கூப்பிடுறியோ?"

"லூசு... காலேசே அவளை அனுன்னுதானே சொல்லுது... தெரியாத மாதிரி நடிப்பு வேற... விட்டேன்னா" கையை ஓங்கினேன்.

"ஏய்... மேத்ஸ் புரபஸர் வர்றாரு.. இங்க பாருங்க சார்... இவன் அடிக்க வர்றான்னு சொன்னேனா... அப்புறம் நீ பிரின்சிபால் ரூம்ல..." மெதுவாகச் சொல்லிச் சிரித்தாள்.

"செஞ்சாலும் செய்வேடி.. நான் கிளம்புறேன்..."

"இரு எங்க ஓடுறே... நீ அனுவை லவ் பண்ணுறியா?" நிறுத்தி நிதானமாகக் கேட்டாள்.

"ஏய் கிறுக்கு... அதான் வீட்டுல உனக்கும் எனக்கும் மேரேஜ்ன்னு முடிவு பண்ணி வச்சிருக்கானுங்க... நீயே வந்து அவளை விரும்புறியா இவளை விரும்புறியான்னு கேட்டுக்கிட்டு... சும்மா போடி..."

"டேய் அவ காலேசு பிகருடா...உன்னோட கிளாஸ்மெட் வேற... படிப்புல உங்க ரெண்டு பேருக்குந்தான் போட்டியாமே... வாழ்க்கையில நாங்க ரெண்டு பேரும் போட்டி போடுற மாதிரி வச்சிடாதே..." சொல்லிச் சிரித்தாள்.

"எதுக்கோ என்னை ஏத்திவிடுறே..? ஆத்தா... தாயி ஆளைவிடு.... காதல், கத்திரிக்காயெல்லாம் நமக்கு வேணாம்..."

"அப்ப என்னைய காதலிக்கலையா?"

"அது..."

"அப்ப வீட்டுக்காகத்தான் என்னைய கட்டிக்கப்போறே.. அப்படித்தானே..."

"ஆத்தா உன்னைய ரொம்பக் காதலிக்கிறேன்... நீதான் எம்பொண்டாட்டி... போதுமா?"

"அப்ப அவ..?"

"அய்யோ இப்படிக் கொல்றாளே... இவளைக் கட்டிக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேனோ தெரியலையே..."

"அப்புறம் பேசிக் கொல்லமாட்டேன்... வேற மாதிரிக் கொல்லுவேன்...." என்று சிரித்தவள் "சும்மா வம்பு இழுத்துப் பார்த்தேன்... ஐ லவ் யூ டா ராகவா..." என்று ராகவாவை அழுத்திச் சொன்னவள் "வாறேன்டா என் வருங்காலப் புருஷா..." அப்படின்னு சொல்லிட்டு அங்கிருந்து அகல, 'லூசு..' என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே எனது வகுப்பறை நோக்கிச் சென்றேன்.

அன்று என்னவோ ஹேமா சொன்னதற்குப் பிறகு எனது கண் அடிக்கடி அனுவை நோட்டமிட்டது. 'டேய் என்னடா... அத்தமக இருக்கும் போது இங்கிட்டு பிராக்கெட் போடப்பாக்குறே... வேணாம் மாப்ள இவளுக்கு நிக்கிறா க்யூவுல எங்களுக்குப் பின்னால ஏறாத... விட்டுடு" என்றான் மணி. 'அடப்போடா' எனச்சொல்லிச் சிரித்தாளும் முதல்முறையாக அனு இம்சித்தாள்.

"ராகவ்.. ராகவ்... அலோ ராகவ்..." பின்னால் பெயரைச் சொல்லி அழைக்கும் குரல் கேட்டு திரும்பினேன்,

அங்கே.... சிவப்புத் தாவணியில் தேவதையாய் அனு, "என்னங்க.. சொல்லுங்க..." என்றேன்.

"எம்புட்டு நேரமாக் கூப்பிடுறேன்.. திரும்பாமப் போறீங்க... உங்களைக் கூப்பிட்டதைக் கேட்டு எல்லாரும் திரும்பிட்டாங்க..." இடுப்பில் கை வைத்தபடி சொல்லிச் சிரித்தாள்.

"சாரிங்க... ஏதோ ஞாபகம்..."

"ம்.... எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?"

"உங்களுக்கா... என்னன்னு சொல்லுங்க முடிஞ்சாச் செய்யிறேன்..."

"முடியும்... எங்க அக்கா பொண்ணு ஸ்கூல்ல ஒரு காம்படிசன்... அதுல அவ கலந்துக்கிறா... ஒரு கட்டுரை ஒண்ணு வேணும்.."

நான் சிரிக்கவும் 'என்ன சிரிப்பு' என்றாள்.

"இல்லை... படிப்பாளி நீங்க... நீங்களே எழுதலாமுல்ல..." என்றேன்.

"நான் படைப்பாளி இல்லையே... நீங்க படைப்பாளியில்ல... அதான் உங்ககிட்ட கேட்டேன்."

"சரி விடுங்க...தலைப்பைச் சொல்லுங்க.... எழுதித்தாறேன்..."

அதன் பிறகு நாங்க அடிக்கடி பேச ஆரம்பிச்சோம். என்னுடன் பேசுவதற்கான காரணத்தை அவள் தேடிப்பிடிப்பது போல் தெரிந்தாலும் எனக்கு அது பிடிக்க ஆரம்பித்தது என்பதே உண்மை. 

"இந்தாங்க சாக்லெட்..." என் முன்னே பைவ் ஸ்டார் சாக்லெட்டை நீட்டினாள் அனு.

"என்ன விஷேசம்?" வாங்கியபடி கேட்டேன்.

"அக்கா பொண்ணுக்கு முதல் பரிசு... தாங்கஸ்" என்றாள்.

"வாவ்... குட்டீசுக்கு வாழ்த்துச் சொல்லிருங்க..."

"அந்த அங்கிளுக்கு வாழ்த்தைச் சொல்லிரு சித்தின்னு அவங்க சொன்னாங்க... நீங்க அவங்களுக்கு வாழ்த்துச் சொல்லுறீங்க." என்று சிரித்து விட்டு நகர்ந்தாள்.. தேவதைகள் தேவை இல்லாமல் சிரிப்பதில்லை... தேவையாய் சிரிக்கும் போது தேவதைகள் இன்னும் அழகாகிறார்கள் என மனசுக்குள் எழுதி ரசித்தேன். 'மாப்ள வேண்டாம்... ரெட்டை மாட்டு வண்டி சரிவராது' என்றான் மணி. 'டேய் போடா..' என்றேன். ஏனோ இன்னும் ஏதாவது அவளைப் பற்றி பேசுடா' என்று நினைத்தது மனசு.

"என்ன அவகிட்ட ரொம்ப வழியிறியாமே?" கோபமாய் கேட்டாள் ஹேமா.

"ஏய் ஜஸ்ட் பிரண்ட்... அவ்வளவுதான்..."

"சாக்லெட் கொடுக்குறாளாம்... எங்க வீட்ல செஞ்ச சுவீட்டுன்னு கொண்டாந்து கொடுக்குறாளாம்... அப்படி என்ன உனக்கு மட்டும் ஸ்பெஷல்..."

வயித்தெரிச்சக்காரனுக வாந்தி எடுத்துட்டானுங்களா, அப்பா போட்டுக் கொடுத்து வாழ்றதுல கிடைக்கிற சந்தோஷம் இவனுகளுக்கு வேற எதுலயும் கிடைக்காது போல. "ம்... ஏய்... எல்லாருக்குந்தான் கொடுத்தா.. இப்ப உன்னோட கிளாஸ் பசங்க கொடுத்தா சாப்பிடமாட்டியா... நான் என்ன அவன் அது கொடுத்தானாமே... இவன் இது கொடுத்தானாமேன்னா கேட்டுக்கிட்டு இருக்கேன். நீதான் என்னோட அம்மு போதுமா.... லவ் யூ டி ஏமா..." என்றேன் அன்பாக. 'ஏமா' என்று சொன்னால் எல்லாக் கோபத்தையும் விட்டுச் சிரிப்பாள் என்ற சூட்சமம் அறிந்தவன் என்பதால் 'ஏமா'வை இறக்கி அழுத்தினேன்.

"ஏமா.. ஏமான்னு ஏமாத்திட்டுப் போனே மவனே... கொன்னேபுடுவேன்..." சொல்லிச் சிரித்தவள், "டேய் நாளைக்கி எங்கயாச்சும் போலாமா?" என்றாள்.

"ம்... போலாம்... எங்கயின்னு டிசைட் பண்ணிட்டு காலையில கூப்பிடு... வாறேன்... ஓகேயா...?"

"ராகவ்... நாளைக்கு எங்கூட ஒரு இடத்துக்கு வரமுடியுமா?" கேட்டது அனு.

(கதையின் நீளம் கருதி மீதிக்கதை இன்று மாலை பகிரப்படும்)


(நன்றி : படம் - இணையத்திலிருந்து)
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

அனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை) Empty அனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை - நிறைவுப் பகுதி)

Post by சே.குமார் Sat 14 Feb 2015 - 18:10

அனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை) Images?q=tbn:ANd9GcSEx-gbNQR4YqPTU71e4pTQfcL8uhlFuGUoZHb57XDF3mDLV4ncMQ


"ராகவ்... நாளைக்கு எங்கூட ஒரு இடத்துக்கு வரமுடியுமா?" கேட்டது அனு.
"எ... எங்கே?"

"எதுக்கு பயப்படுறீங்க.... எங்க கிராமத்துக் கோவில்ல அக்கா வீடு சாமி கும்பிடப் போறாங்க... நீங்களும் வரணும்... அக்கா கூட்டிக்கிட்டு வரச்சொன்னா.... குறிப்பா குட்டிப்பொண்ணு உங்களைப் பாக்கணுமின்னா..."
".........." பேசாமல் நின்றேன்.


"ஏன்.... என்னாச்சு... சரி... வரப்பிடிக்கலைன்னா வேணாம்.." சொன்னவளின் முகம் சந்தோஷம் இழந்திருந்தது. அதைப் பார்க்க கஷ்டமா இருந்தது.


"இல்ல அனு.... இன்னொரு பிரண்ட்கூட வெளியே வர்றேன்னு சொல்லியிருந்தேன். இப்ப நீங்க வேற..." இழுத்தேன். ஆனா 'ங்க' போடுறவன் முதல்முறை அனுன்னு பேரைச் சொல்லியிருக்கேன்.
"சரி... உங்களுக்கு அந்த பிரண்ட் முக்கியம்ன்னா அவங்க கூடப் போங்க... நான் கிளாஸ்மெட்டுத்தானே... டியரஸ்ட் பிரண்ட் இல்லையில்ல... என்ன நான் ரொம்ப எதிர்பார்த்தேன்... அங்க போனா லோன்லியா பீல் பண்ணுவேன்..." என்றபடி நகர்ந்தவளை "அனு" என நிறுத்தினேன். திரும்பி என்னைப் பார்த்தாள்.
"எத்தனை மணிக்குப் போகணும்... நானும் வாறேன்..." என்றேன்.
பிப்ரவரி -14.

"என்னடா எங்க வேணுமின்னாலும் போகலாம்ன்னு சொல்லிட்டு அர்ஜெண்டா ஒரு பிரண்ட் கூட போறேன்... ஈவினிங் போகலாங்கிறே... என்னைவிட அவன் முக்கியமா?" போனில் கத்தினாள் ஹேமா.
"என்னடி பண்ணச் சொல்றே... திடீர்ன்னு கூப்பிடுறான்... முக்கியமான விஷயமா? நாம ஈவினிங் போவோம்...ப்ளீஸ்... புரிஞ்சிக்கடா ஏமா..." மெதுவாக அஸ்திரத்தை வீசினேன். ஆனால் முதல்முறை அது வேலை செய்யலை.
"என்னை ஏமாத்துறே?" என்றபடி போனை வைத்தாள். அவளை ஏமாத்துறது வருத்தமாகத்தான் இருந்தது. இருந்தாலும் நான் வருவேன்னு ரொம்ப நம்பிக்கையோட வந்தவளை ஏமாத்த வேண்டான்னு இவளை ஒரு நாள் ஏமாத்துறது தப்பில்லைன்னு தோணுச்சி.


"இது எங்க குலதெய்வம்..." எனக்கருகில் அமர்ந்தவள் காஞ்சிப்பட்டில் அம்மனாய்த் தெரிந்தாள்.
"ம்..."
"வருஷா வருஷம் இங்க திருவிழா சிறப்பா நடக்கும். அக்கா வீடு பூஜை போடணுமின்னு சொன்னதால இப்ப வந்தோம்... இல்லேன்னா மே மாசம் திருவிழாவுகுத்தான் வருவோம்... இப்படி உக்காந்து கோவிலோட அழகை ரசிக்கெல்லாம் முடியாம எல்லாப் பக்கமும் ஒரே கூட்டமா இருக்கும்..." சொல்லிக் கொண்டிருந்தாள். காற்றில் பறந்த அவளின் முடி என் முகத்தில் தாலாட்ட என்னை இழந்து கொண்டிருந்தேன்.
"புடிச்சிருக்கா?" என்றாள்.

"எது...?" இடமா இல்லை முடியின் தாலாட்டா எதைக் கேட்கிறாள் என்பது தெரியாமல் பொதுவாய்க் கேட்டு வைத்தேன்.
"எதுவா... இந்த ஊர்... இந்தக் கோவில்..."
"ம்... ரொம்ப..." என்று சிரித்தேன்.

"ஹேமாவுக்கும் உங்களுக்கும்தான் கல்யாணமாமே?" 
இப்ப எதுக்கு தேவையில்லாமல் இந்தக் கேள்வி என்று குழம்பியபடி, "வீட்ல முடிவு... அத்தை பொண்ணு அவ..." என்றேன்.
"உங்க முடிவு?"
அனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை) S36


"என்னோட முடிவுன்னு இதுல என்ன இருக்கு... ரெண்டு பேரோட பேரண்ட்ஸூம் முடிவு பண்ணியாச்சு..."
"உங்களுக்குன்னு ஒரு முடிவு இல்லையா?"
"இல்லை..."
"..........." அவள் பேசாமல் நிலத்தில் கிறுக்கிக் கொண்டிருந்தாள். அவள் கூந்தலைச் சரி செய்தாள். எங்களுக்குள் மௌனம் விளையாண்டது.
"என்னாச்சு?" நான்தான் நேரத்தைத் தின்ற மௌனத்தைக் கொன்றேன்.
"ஒண்ணுமில்ல... " என்று எழுந்தவள் பின்புறம் ஒட்டியிருந்த மணலைத் தட்டினாள். என்னைத் தட்டுவதாய் உணர்ந்தேன்.  நீருக்குள் நீந்தும் அவளின் கண்களின் தவிப்பைப் பார்த்தேன். ஏனோ வலித்தது.

"ஏய்... என்னன்னு சொல்லு... என்ன ஒரு மாதிரி ஆயிட்டே?" ஒருமைக்கு மாறினேன்.

"ஏய்... அதெல்லாம் இல்ல... எப்பவும் போலத்தான் இருக்கேன்..." சிரிக்க முற்பட்டாள்.

"அனு ப்ளீஸ்...எனக்குத் தெரியும்... என்னாச்சு?" கேட்டபடி முதல் முறையாக அவள் கையைப் பற்றி இழுக்க மறுபடியும் அமர்ந்தாள். இப்போது சற்றே இடைவெளி விட்டு அமர்ந்தாள். ஹேமாவின் கரம் பற்றியிருந்தாலும் அதில் இல்லாத ஏதோ ஒன்று இந்த முதல் ஸ்பரிசத்தில்.

"என்ன சொல்லு?" 
"அதான் ஒண்ணுமில்லேன்னு சொன்னேனே?"
"சரி... அப்ப நான் கிளம்புறேன்..." என எழுந்தேன்.
"ஏய்ய்ய்ய்..." என்றபடி என்னை அருகே அமர்த்தினாள்.
"சொன்னா தப்பா நினைக்கமாட்டியே... இவதான்னு முடிவு ஆகியிருந்தாலும் எனக்காக முடிவை மாத்திக்குவியா?" அவளின் கேள்வியின் பின்னே இருப்பது புரிந்தது. ஹேமா.... இதை ஏற்பாளா? இதை நான் ஏற்றால் ஹேமா மரணத்து வரைக்கும் கூட போவாள். ஆனாலும் மனசு அனு எனக்கு வேண்டுமென்று சொன்னதால் "உனக்காக... என்ன செய்யணுமின்னாலும் செய்கிறேன்" என்றேன்.

"ஐ லவ் யூ ராக்" என்றவள் எதிர்பாராத தருணத்தில் என் கன்னத்தில் முத்தமிட்டாள். ஹேமாவுக்கு நானோ எனக்கு அவளோ முத்தமெல்லாம் கொடுத்ததில்லை. முதல் முத்தம்... அதுவும் தேவதையின் முத்தம்... எச்சில்படாத ஆனால் மனசுக்குள் பூப்பூக்க வைத்த முத்தம்... காதலை அழகாய்ச் சொன்ன முத்தம்.. என்னை வானில் பறக்க வைத்த முத்தம், முத்தச் சூடு ஆறும் முன் அவள் என் தோள் சாய்ந்தாள். யாரேனும் வரக்கூடும் என்ற அச்சம் வர, அவசரமாய் அவளை விலக்கினேன்... உதடுகள் அவள் நெற்றியில் பதிந்தன சம்மதமாய்...

"என்னங்க... இன்னைக்கி பிப்ரவரி-14, அனு போன் பண்ணினா... உங்களைக் கேட்டா... இன்னும் தூங்குறீங்கன்னு சொன்னேன்... லவ்வர்ஸ்டே ஸ்பெஷல் எதுவும் இல்லையான்னு கேட்டா..." என்னை எழுப்பி காபி கொடுத்தபடியே சொன்னாள் ஹேமா, என் மனைவி.


என்னடா அனுவைக் காதலிச்சிட்டு ஹேமாவை கட்டியிருக்கானேன்னு பாக்குறீங்களா? எங்க காதல் வீட்டுக்குத் தெரிந்து... ஹேமா விஷம் குடிச்சி... இத்யாயி... இத்யாயி... எல்லாம் முடிஞ்சி போச்சு... காதல் காத்திருப்புக்கள் எல்லாமே சாதியிலும் பெரியவர்களின் பிடிப்பிலும் அழிந்து போச்சு....

சரி... அப்ப அனு எங்கேன்னு கேக்குறீங்களா? என்னைய ரொம்ப நம்பினா... ஓடிப்போயிடலாம்ன்னு அவகிட்ட சொன்னப்போ மறுத்துட்டா... வேண்டாம்... அவ உயிரை எடுத்துட்டு நாம வாழ்ந்தா அது வாழ்க்கையில்லன்னு சொல்லிட்டா... ஹேமாவுக்காக என்னை விட்டுப் பொயிட்டா... ம்... காதல் அவளைக் கோழை ஆக்கிருச்சு... சொல்லாமக் கொன்னுட்டுப் பொயிட்டா.... 

அப்ப போன்ல பேசின அனு யாருன்னுதானே யோசிக்கிறீங்க... இவ என்னோட மகள்... எனக்கு அம்மு... ஹேமாவுக்கும் மற்றவர்களுக்கும் அனு... அனுபமா.. அனுபமா ராகவன்... அனுராக்... ம்... இந்தப் பேரை வச்சவளே ஹேமாதான்.... நினைவுகளோடு கிளம்பி வெளியே வந்தேன்... ஹாலில் மாலை சூடிய போட்டோவுக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள் என்னோட அனு... 
-:முற்றும்:-

-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

அனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை) Empty Re: அனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை)

Post by *சம்ஸ் Sat 14 Feb 2015 - 18:22

ஒவ்வெறு வரிகளும் படிக்கும் போது உடல் சிலிர்த்து ரசித்து ருசித்து படித்தேன்.அனைத்து வரிகளும் ரசனையுடன்   நகர்த்தி உள்ளீர்கள் கதையை படிக்கும் போது என்னை அறியாமல் சிரித்து சிரித்து  படி படித்திருந்தேன் மேல படியென்று என் உள்மனம்  சொல்லியது சுவரசியமாக படித்து முடித்தேன் எதிர்பாரத முடிவு உண்மையில் அருமை.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை) Empty Re: அனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை)

Post by சே.குமார் Sat 14 Feb 2015 - 21:15

*சம்ஸ் wrote:ஒவ்வெறு வரிகளும் படிக்கும் போது உடல் சிலிர்த்து ரசித்து ருசித்து படித்தேன்.அனைத்து வரிகளும் ரசனையுடன்   நகர்த்தி உள்ளீர்கள் கதையை படிக்கும் போது என்னை அறியாமல் சிரித்து சிரித்து  படி படித்திருந்தேன் மேல படியென்று என் உள்மனம்  சொல்லியது சுவரசியமாக படித்து முடித்தேன் எதிர்பாரத முடிவு உண்மையில் அருமை.
வணக்கம்.

தங்கள் ரசனையான கருத்துக்கு நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

அனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை) Empty Re: அனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை)

Post by Nisha Sun 15 Feb 2015 - 17:47

காதல் தெய்வமாகி போனதா?   வீட்டினர்  முன் கூட்டியே அத்தைபெண்ணை பேசி முடிவாக்கி விட்டனர் என தெரிந்த பின்னும் இன்னொரு பெண்ணிடமும் மனதை கொடுத்ததும்  தப்புத்தானே!

அனுவுக்குள் இருந்த காதலை விட ஹேமாவுக்குள் இருந்த  உறவெனும் காதல் ஜெயித்ததையும் அக்காதலில் உயிர்ப்பும் உணர்வும் இருந்ததையும் அவளே மகளுக்கு அனுவென பெயரை வைத்ததில் நிருபித்து விட்டாள். 

கதையின் நடையும்  கருத்தும் அருமை குமார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை) Empty Re: அனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை)

Post by சே.குமார் Sun 15 Feb 2015 - 20:09

Nisha wrote:காதல் தெய்வமாகி போனதா?   வீட்டினர்  முன் கூட்டியே அத்தைபெண்ணை பேசி முடிவாக்கி விட்டனர் என தெரிந்த பின்னும் இன்னொரு பெண்ணிடமும் மனதை கொடுத்ததும்  தப்புத்தானே!

அனுவுக்குள் இருந்த காதலை விட ஹேமாவுக்குள் இருந்த  உறவெனும் காதல் ஜெயித்ததையும் அக்காதலில் உயிர்ப்பும் உணர்வும் இருந்ததையும் அவளே மகளுக்கு அனுவென பெயரை வைத்ததில் நிருபித்து விட்டாள். 

கதையின் நடையும்  கருத்தும் அருமை குமார்!
வணக்கம் அக்கா...
தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.
எல்லாருமே அனுவை ஏன் கொன்றாய்ன்னு மனசுல கேக்கிறாங்க... நீங்கதான் சரியாச் சொல்லியிருக்கீங்க...
ஹேமாவைக் கொன்றிருந்த கதை நார்மல் கதை ஆகியிருக்கும்
தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

அனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை) Empty Re: அனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum