Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ADHD அலட்சியப்படுத்தினால் ஆபத்து!
4 posters
Page 1 of 1
ADHD அலட்சியப்படுத்தினால் ஆபத்து!
குழந்தை சொன்ன பேச்சையே கேட்பதில்லை... ஓர் இடத்தில் நிற்பதில்லை... இது பல அம்மாக்களின் புலம்பலாக இருக்கும். ‘குழந்தைன்னா அப்படித்தான் இருக்கும்’ என்று ஆறுதல் சொல்லி தேற்றுவார்கள். துறுதுறுப்பும் குறும்புத்தனங்களும் நிறைந்ததுதான் மழலைப் பருவம். இருந்தாலும் அதற்கும் ஓர் எல்லை உண்டு.
உங்கள் குழந்தை சொன்ன பேச்சையே கேட்பதில்லையா? எந்த ஒரு விஷயத்திலும் முழுமையான கவனம் செலுத்துவதில்லையா? கால் ஓர் இடத்தில் தங்காமல் எந்நேரமும் துறு துறுவென அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறதா? ‘குழந்தைதானே’ என அலட்சியமாக விட்டு விடாதீர்கள். அது ADHD பிரச்னையாக கூட இருக்கலாம். மரபியல் ரீதியாகவும் ரசாயன மாற்றங்களாலும் குழந்தைகளுக்கு ஏற்படும் மன நலப் பிரச்னைகளில் இதுவும் ஒன்று. இந்தப் பிரச்னையின் தன்மை குறித்து விளக்குகிறார் மன நல மருத்துவர் கவிதா.
“Attention Deficit Hyperactivity Disorder என்பதே ADHD யின் விரிவாக்கம். இதன் பெயரிலேயே இந்தப் பிரச்னைக்கான தன்மை அடங்கியிருக்கிறது. Attention Deficit என்றால் கவனித்தல் திறன் குறைபாடு. Hyperactivity என்றால் எந்நேரமும் துறுதுறுவென இயங்கிக் கொண்டிருப்பது. இதில் மூன்று வகைகள் உள்ளன. முதலாவது கவனித்தல் திறன் குறைபாடு மட்டும் இருத்தல். இரண்டாவது ஒரு நிலையில் இல்லாமல் இயங்கிக் கொண்டிருத்தல், இவை இரண்டும் ஒருசேர இருப்பது மூன்றாவது வகை.
3 முதல் 6 வயதுக்குள் இதற்கான அறிகுறிகள் தெரிய வரும். குழந்தை நாம் சொல்வதையே உள்வாங்கிக் கொள்ளாமல் தன்னிச்சையாக ஏதேனும் ஒரு செயலில் ஈடுபடும். ஒரு செயலை முழுமையாக செய்யாமலேயே, வேறு ஏதேனும் செயலை செய்ய ஆரம்பித்து விடும். இப்படியாக நிலையில்லாத மனநிலையில் குழந்தைகள் இருந்தால், அதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி உள்ள குழந்தைகள் எல்லோருக்கும் கிஞிபிஞி குறைபாடு என்று பொருள் கொள்ளக்கூடாது. ஆலோசனைக்கு அழைத்துச் சென்று குழந்தையிடம் பேசும்போது மட்டுமே அதை உறுதிப்படுத்த முடியும். இக்குறைபாடுள்ள குழந்தைகள் நிலையில்லாத மனநிலையோடு இருப்பதால் அவர்களின் எதிர்காலம் மிகப்பெரும் கேள்விக்கு உள்ளாகும்.
கரு உருவாகும்போது மூளை உருவாக்கத்தில் ஏற்படும் கோளாறுதான் இப்பிரச்னைக்கு அடிப்படை காரணம். கருவுற்ற பிறகு ஆல்கஹால், சிகரெட் பயன்படுத்தினாலும் இப்பிரச்னை ஏற்படும். மரபியல் ரீதியாகவும் இப்பிரச்னை வரலாம். உடற்கூறு மட்டுமல்ல... சுற்றுப்புறச் சூழ்நிலைகளும் கூட காரணமாகலாம். குழந்தை கருவில் இருக்கும்போதும் பிறந்து தாயின் அரவணைப்பில் இருக்கும்போதும் தாய் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான சூழலை குழந்தைக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். பெற்றோருக்கு இடையிலான சண்டை, போதுமான கவனிப்பின்மை ஆகியவை குழந்தையை மன ரீதியாக பாதிக்கும்.
இந்தப் பிரச்னைக்கு முழுமையான தீர்வு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் சைக்கோ தெரபி மூலம் இதனை கட்டுப்படுத்த முடியும். பெற்றோர் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை புரிந்துகொண்டு நடந்து கொள்வது அவசியம். பள்ளி ஆசிரியர்களிடம் குழந்தைக்கு இருக்கும் பிரச்னை குறித்து தெளிவாக விளக்க வேண்டும். இல்லையென்றால், எல்லா மாணவர்களைப் போலவும் குழந்தைகளை நடத்த நேரிடும். விளக்கிச் சொல்கிற போது இக்குழந்தை மீது தனி கவனம் செலுத்தப்படும். குழந்தை எப்படி நடந்து கொள்ள வேண்டும், குடும்பத்தார் குழந்தையை எப்படி வழிநடத்த வேண்டும் என்பன சைக்கோ தெரபி மூலம் கற்றுத்தரப்படும்.
அமெரிக்கன் சைக்காலஜி அசோசியேஷன் கணக்கெடுப்பின்படி உலக அளவில் 2003ம் ஆண்டு 7.8%, 2007ம் ஆண்டு 9.5%, 2011ம் ஆண்டு 11% குழந்தைகள் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 6% குழந்தைகள் மட்டுமே மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளே இப்பிரச்னையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைப் பருவத்திலேயே இப்பிரச்னையைக் கண்டறிந்து அதனைக் களைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் பெரியவர்களானாலும் இந்நிலை தொடரும் அபாயம் இருக்கிறது.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3294

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ADHD அலட்சியப்படுத்தினால் ஆபத்து!
அகமதை வென்ற முஹைதீன் பதிவுகள் பெரிய எழுத்தில் பதிவாகும் காரணம் ஏன் எனும் வழக்கு இன்று நிஷாவினால் தாக்கல் செய்யபடுகின்றது.
வழக்கை விசாரித்து சரியான நீதியும் நிஷாவே வழங்குவார்.
அதனால் அகமது எனும் முஹைதீன் எங்கிருந்தாலும் சேனைக்குள் இழுத்து ச்ச்ச்ச்ச்ச்சசே வரவும்.
முஹைதீன்.. முஹைதீன்... முஹைதீன்...
ஆர்டர்.. ஆர்டர்... ஆர்டர்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ADHD அலட்சியப்படுத்தினால் ஆபத்து!
Nisha wrote:அகமதை வென்ற முஹைதீன் பதிவுகள் பெரிய எழுத்தில் பதிவாகும் காரணம் ஏன் எனும் வழக்கு இன்று நிஷாவினால் தாக்கல் செய்யபடுகின்றது.
வழக்கை விசாரித்து சரியான நீதியும் நிஷாவே வழங்குவார்.
அதனால் அகமது எனும் முஹைதீன் எங்கிருந்தாலும் சேனைக்குள் இழுத்து ச்ச்ச்ச்ச்ச்சசே வரவும்.
முஹைதீன்.. முஹைதீன்... முஹைதீன்...
ஆர்டர்.. ஆர்டர்... ஆர்டர்.
அவர் பதிவை காப்பி செய்து அப்படியே பதிவிடுகிறார் சேனையில் அதனால் எழுத்துக்கள் பெரிதாக தெரிகிறது நிஷா அதை சரியான முறையில் பதிவிட்டால் சேனைக்கு பொறுத்தமான அளவில் எழுத்துக்கள் சரியாகிவிடும்.நான் அதை திருத்தி உள்ளேன் நன்றி.
பதிவை காப்பி செய்து (insert unformatted text) இதில் past செய்தால் சரியான அளவு பதிவாக அமையும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ADHD அலட்சியப்படுத்தினால் ஆபத்து!
நல்ல பகிர்வு...
வாழ்த்துக்கள் அகமது.
எழுத்துப் பிரச்சினை வேறு ஓடிக்கிட்டு இருக்கா அக்கா...

சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: ADHD அலட்சியப்படுத்தினால் ஆபத்து!
சே.குமார் wrote:நல்ல பகிர்வு...
வாழ்த்துக்கள் அகமது.
எழுத்துப் பிரச்சினை வேறு ஓடிக்கிட்டு இருக்கா அக்கா...
அதெல்லாம் ஓடும், நடக்கும், பாயும், துள்ளும்
அகம்து மட்டும் இப்ப நேரில் இருந்தால் அகமது தலையில் கொட்டவும் செய்யும்.
சேனையில் அ அ அ அ அ ஐந்து அளவுகளில் பதிவிடலாம் எனினும் பக்கங்கள் அழகாகவும் படிக்கும் படியும் இருக்க நடுவில் இருக்கும் 16 அளவு தான் நல்லது.
சம்ஸ் சொன்னதை விட இன்னொரு வழியும் இருக்கு. இன்னொரு தளத்தில் இருக்கும் பதிவை காப்பி செய்து இங்கே பேஸ்ட் செய்த பின் அதை மார்க் பண்ணி விட்டு Remove test formating கிளிக் செய்தாலும் சேனை செட்டிங்க் அளவில் மாறி விடும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ADHD அலட்சியப்படுத்தினால் ஆபத்து!
Nisha wrote:சே.குமார் wrote:நல்ல பகிர்வு...
வாழ்த்துக்கள் அகமது.
எழுத்துப் பிரச்சினை வேறு ஓடிக்கிட்டு இருக்கா அக்கா...
அதெல்லாம் ஓடும், நடக்கும், பாயும், துள்ளும்
அகம்து மட்டும் இப்ப நேரில் இருந்தால் அகமது தலையில் கொட்டவும் செய்யும்.
சேனையில் அ அ அ அ அ ஐந்து அளவுகளில் பதிவிடலாம் எனினும் பக்கங்கள் அழகாகவும் படிக்கும் படியும் இருக்க நடுவில் இருக்கும் 16 அளவு தான் நல்லது.
சம்ஸ் சொன்னதை விட இன்னொரு வழியும் இருக்கு. இன்னொரு தளத்தில் இருக்கும் பதிவை காப்பி செய்து இங்கே பேஸ்ட் செய்த பின் அதை மார்க் பண்ணி விட்டு Remove test formating கிளிக் செய்தாலும் சேனை செட்டிங்க் அளவில் மாறி விடும்.
ம் நன்றி மேடம் நான் அந்த வழியை இங்கு சொல்ல மறந்து விட்டேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum