Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஸ்ருதி... வாழ்வின் வசந்தம்
3 posters
Page 1 of 1
ஸ்ருதி... வாழ்வின் வசந்தம்
2004 ஆம் ஆண்டு மார்ச்-26... எங்கள் வாழ்வில் மிகச் சிறந்த நாள்.
மதுரையில் தல்லாகுளத்தில் இருக்கும் ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் மனைவியை பிரசவத்திற்காக சேர்த்திருந்தோம். ஆரம்பத்தில் மருத்துவமனைக்கு செக்கப்புக்கு சென்றதில் இருந்து பத்தாவது மாதம் வரை சுகப்பிரசவம் ஆகும் என்று சொன்னவர்கள்... ஏன் வலி வந்து சேர்த்த அந்த இரவு இட்லி சாப்பிடச் சொன்னவரை அதையேதான் சொன்னார்கள். அதன்பிறகு திடீரென மீண்டும் ஸ்கேன் எடுத்தார்கள்... உடனே ஆபரேசன் பண்ணனும் என்று சொல்லிவிட்டார்கள்.
நாங்களும் அவர்களுடன் சண்டையிட்டு முடியாமல் தோற்று ஒத்துக்கொள்ள, அப்பா, அம்மா, அத்தை என எல்லாரும் பதட்டத்துடன் காத்திருக்க... மாமாவுக்கு விவரம் சொல்லி அவர் ஹோட்டலில் இருந்து வரும் முன்னரே ஆபரேசன் அறைக்குள் கொண்டு சென்றுவிட்டார்கள். நமக்கு ஒரு குழந்தை என்ற சந்தோஷம் நீங்கி... மனைவிக்கு ஆபரேசன் என்ற பயம் கவ்விக்கொள்ள என்னையறியாமல் கண்ணீர் ஓட, மாடிப்படியில் சென்று அமர்ந்துவிட்டேன்.
குழந்தை அழுகும் சத்தமும் எல்லோரும் சந்தோஷமாக பேசும் சத்தமும் கேட்க, என் மகள்... என் செல்லம் பிறந்ததை அறிந்து சந்தோஷித்தாலும் மனசு மனைவியை நாடியது. வெளியில் கொண்டு வந்து பின்னர் குளிரும் காய்ச்சலும் வர, மருத்துவர்கள் ஒன்றுமில்லை என்று சொல்லியபடி மீண்டும் ஐசியூவுக்குள் கொண்டு செல்ல, குழந்தையைக் கூட பார்க்க மனமின்றி மனைவிக்காக வேண்டுதலோடு காத்திருந்த அந்த நிமிடங்கள் இன்னும் மனசுக்குள் தடக்.. தடக்கென்று கடக்காமல் நின்று கொண்டேயிருக்கிறது.
மனைவி நினைவு திரும்பி, கொஞ்சம் பேச ஆரம்பித்ததும் மகளைக் கொஞ்சுவதே வேலையானது. அப்போது தேவகோட்டை கல்லூரியில் பணி, வார வெள்ளி மாலை கிளம்பிப் போய் மகளுடன் இருந்து திங்கள் காலை கிளம்பி வருவேன். நமக்குன்னு ஒரு வாரிசு என்ற சந்தோஷம் துள்ளலாட்டம் போட்டது. சின்ன பிள்ளையாக இருக்கும் போது கைலிக்குள் போட்டு விளையாடியது பசுமையாய்...
பின்னர் அவரும் வளர வளர... சேட்டைகளும் வளர ஆரம்பித்தது. நான் கல்லூரிக்குச் செல்லும் போது எனது பைக்கில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு விட்டுச் செல்ல வேண்டும். அதேபோல் மதியம் சாப்பிட வரும்போது கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டாலே சிமெண்ட் தரையின் சூட்டைப் பற்றி அறியாமல் தத்தக்கா... பித்தக்கான்னு நடந்து வரும் அழகே தனிதான்... கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னம் வாய் என எச்சில் வடிய முத்தம் கொடுக்கும் செல்லத்துக்கு எப்பவும் அப்பா வேணும்... ஆம்... அப்பா செல்லமாக வளர்ந்தது. விஷால் வரும் வரை தனிக்காட்டு ராணிதான்.
சென்னையில் இருக்கும் போது என்னோடுதான் படுக்கை... பெரும்பாலும் வயிற்றில் ஏறித்தான் படுத்துக் கொள்ளும். இறக்கிப் போட்டாலும் மீண்டும் ஏறிப்படுத்து விடும். இல்லையேல் கழுத்தைக் கட்டிக் கொண்டு தூங்கும்... முகப்பேர் வேலம்மாளுக்கு எல்.கே.ஜி. போகும் போது இரவு வேலை பார்த்துவிட்டு வந்து படுத்தாலும் குளிக்கவும்... சாப்பாடு ஊட்டவும்... பள்ளியில் கொண்டு சென்று விடவும் அப்பா வேணும்... அப்பா இப்பத்தான் வந்தாக... தூங்கட்டும் பாப்பா என்று அம்மா சொன்னாலும் பக்கத்தில் உக்காந்து அப்பா... அப்பான்னு கிளப்பிக் கொண்டு செல்லும்.
காரைக்குடி வந்து பள்ளிக்குச் சென்ற நேரத்தில் நான் அபுதாபி வந்தாச்சு... பின்னர் வருடம் ஒருமுறைதான் என்றாலும் அந்த ஒரு மாதமும் அப்பாதான் எல்லாம்... அப்பா... அப்பா.... எப்பவும் அப்பா பிள்ளை.... விஷாலும் அப்பாவுக்கு போட்டி போட ஒரே களபரம்தான். இந்த சண்டை இன்று வரை தொடருது. அதுவும் ஒரு சந்தோஷம்தானே,
எல்லாருக்கும் பாப்பா ஆகிப்போன எங்கள் செல்லத்துக்கு வயது பதினொன்று ஆச்சு.... டேய் பாப்பான்னு சொல்லாம அக்கான்னு சொல்லுடா என்று விஷாலிடம் அம்மா மிரட்ட, அப்பா பாப்பான்னு சொல்லாம அக்க்க்க்க்க்கான்னு சொல்லணுமாம் என்று சொல்லிச் சிரிக்கிறான். இப்பவும் பாப்பாதான் போடுறான்.
படிப்பு விஷயத்தில் திட்டும் போது என்னையவே திட்டுங்க என்று அழுதாலும் கத்தினாலும் அடுத்த நிமிடமே அப்பா என்று ஒட்டிக் கொள்ளும் அந்த அன்பு பெண்பிள்ளைகளுக்கே உரியது. அது இன்னும் கூடுதலாய்....
ஸ்ருதி...
இதுதான் எங்கள் செல்லத்தின் பெயர்... ஆனா எல்லாருமே பாப்பான்னுதான் கூப்பிடுறோமா... ஸ்ருதிங்கிறது பள்ளியில் மட்டுமே கூப்பிடும் பெயராகிவிட்டது. வீட்டில் பெரிசு முதல் சிறுசு வரை எல்லாருக்கும் பாப்பாதான்... பாப்பா ஐயாவின் (மனைவியின் அப்பா) செல்லம். அவருக்கு காலையில் பேத்தியிடம் பேசவில்லை என்றால் வேலையே ஓடாது... அதே போல் அவர் பேசவில்லை என்றால் இவங்க போன் பண்ணி பேசிட்டுத்தான் பள்ளிக்குப் போவாங்க...
மார்ச் -07 என்னோட பிறந்தநாள்... மார்ச் - 15 தங்கை (நண்பனின் மனைவி) பிறந்தநாள்... மார்ச் - 21 பேராசான். மு.பழனி இரகுலதாசன் (எங்க ஐயா) பிறந்தநாள்... அந்த வரிசையில் மார்ச் - 26 எங்க செல்லத்தோட பிறந்தநாள்...
நாளைக்கு எங்க செல்லத்துக்கு பிறந்தநாள்... கைகளில் தவழ்ந்த எங்க செல்லம் பதினோறாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்... உங்கள் ஆசிகளையும் அன்பையும் வழங்குங்கள்.
நன்றி.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: ஸ்ருதி... வாழ்வின் வசந்தம்
ஸ்ருதிப்பாப்பாவுக்கு எங்கள் அன்பான பிறந்த தின நல்வாழ்த்துகள்.
ஸ்ருதிசெல்லம் வளரும் நாளில் நல்ல பிள்ளையாக நற்பழக்கவழக்கங்களோடு பெற்றோரும் உற்றாரும் போற்றிடும் நல் மங்கையாய் பல் கலைகளையும் கற்று ஆரோக்கிரத்தோடு நீடுடி வாழ நல்லாசிகள் செல்லம்!
ஸ்ருதிசெல்லம் வளரும் நாளில் நல்ல பிள்ளையாக நற்பழக்கவழக்கங்களோடு பெற்றோரும் உற்றாரும் போற்றிடும் நல் மங்கையாய் பல் கலைகளையும் கற்று ஆரோக்கிரத்தோடு நீடுடி வாழ நல்லாசிகள் செல்லம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஸ்ருதி... வாழ்வின் வசந்தம்
குமார்!
மூத்த மகள் பிறந்த தினத்தின் எதிர்பார்ப்புக்கள் ஏக்கங்கள் பயங்கள், பதட்டங்கள் அனைத்தையும் அழகாக நினைவில் வைத்திருந்து எழுதி இருக்கிங்கப்பா! வாழ்வில் வசந்தம் அருமை.
பெண் குழந்தை எப்போதும் தந்தையுடன் அதிகமாய் ஒட்டுதலோடு இருப்பார்கள். அதிலும் மூத்த மகள் உங்களுக்கு இன்னொரு தாய் என நினைவில் வைத்திருங்கள்.
முதல் பிரசவம், மனைவிக்குரிய ஆப்ரேசன் அதனுடனான பயம்,,, மனைவி மீதான அன்பு பாசம் என அனைத்தும் இங்கே பகிர்ந்தாகி விட்டது. சபாஷ்.
அன்பான் அப்பாவுக்கும் பாசமான அம்மாவுக்கும் செல்ல மகளாயும் அருமையான தம்பிக்கு அக்காவாகவும் பிறந்த மகள் அதிஷ்ட சாலிதான்.
எங்கள் வீட்டிலும் சின்ன வயதில் என் தங்கைங்க என்னை அக்கா என அழைப்பதில்லை. இப்ப வளர்ந்த பின் மற்றவர்கள் கேலி செய்து தான் அக்கா என்பார்கள். பல நேரம் இம்மாதிரி பெயர் அழைப்பு சங்கடங்கள் வரும் போது பலரால் மாஸ்டர் என அழைக்கப்படுபவர் வயதின் அடிப்படையின் மாஸ்டர் அங்கிள். ஐயா என அழைத்தால் அவர் ஐயா தாத்தா.. சுவிஸ் வந்த பொழுதில் யாரை எப்படி அழைப்பது என தெரியாமல் குழம்பிய நேரம் நான் கண்டு பிடித்த வழிகள் இவை. இப்போதும்அதே அழைப்பு தொடர்கிறது.
விஷாலையும் பாப்பா அக்கா என அழைக்க சொல்லிப்பாருங்கள். என்ன சொல்கின்றார் என கேட்டு இங்கே பகிருங்கள்.

நண்பர் குமார் அவர்களே,
குழந்தைச் செல்வங்கள் இறைவன் மனிதனுக்கு அளிக்கும் அருட்கொடைகளில் மிகவும் மேலானது. அந்த அருட்கொடையை அடைந்த தினத்தையும், அதில் பெற்ற ஆனந்தத்தையும் மிக அற்புதமாக நினைவுகூர்ந்து எழுதியுள்ளீர்கள்.
இன்று பிறந்த நாள் காணும் உங்கள் செல்வமகள் ஸ்ருதி பாப்பாவிற்கு என் இனிய வாழ்த்துகள்.

கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: ஸ்ருதி... வாழ்வின் வசந்தம்
வாழ்த்துக்கு நன்றி அக்கா...Nisha wrote:ஸ்ருதிப்பாப்பாவுக்கு எங்கள் அன்பான பிறந்த தின நல்வாழ்த்துகள்.
ஸ்ருதிசெல்லம் வளரும் நாளில் நல்ல பிள்ளையாக நற்பழக்கவழக்கங்களோடு பெற்றோரும் உற்றாரும் போற்றிடும் நல் மங்கையாய் பல் கலைகளையும் கற்று ஆரோக்கிரத்தோடு நீடுடி வாழ நல்லாசிகள் செல்லம்!
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» வசந்தம்
» வசந்தம் ஓ வசந்தம்
» வசந்தம்...!!!!!!!!!!!!!!!
» வசந்தம் வீசும்
» வறுமையின் வாசலில் வசந்தம்!!!
» வசந்தம் ஓ வசந்தம்
» வசந்தம்...!!!!!!!!!!!!!!!
» வசந்தம் வீசும்
» வறுமையின் வாசலில் வசந்தம்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum