சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு Khan11

சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு

+4
கமாலுதீன்
Nisha
நண்பன்
சுறா
8 posters

Go down

சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு Empty சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு

Post by சுறா Sun 29 Mar 2015 - 19:11

பரபரப்பான நகர வாழ்க்கை (நரக வாழ்க்கை )  ஆதவன்  அதிகாலையில் எல்லோரையும் உட்சாகபடுத்தும் வண்ணம் எழுகிறான் அவனுக்கென தன் கடமையை தவறாமல் செய்கிறான் என்று முணுமுணுத்தபடி 
என்   கடமைக்கு ஆயத்தம் ஆகினேன் நான் . என் பெயரும் ஆதவன் ......!

என்  குடும்பம் ஒரு அழகான அளவான குடும்பம். எல்லோருக்கும்   காலை நேரம் என்றால் நகர புறத்தில் வீடு ஒரு போர்களம் தான் எல்லாவற்றையும் கவனித்து விட்டு வேலைக்கு போகும் முன் மேல் மாடியில் இருக்கும் என் அம்மாவிடம் முகத்தை காட்டிவிட்டு வேலைக்கு செல்வதுதான் ஆதவனின் வழமையான செயல். அம்மா " பூரணம் " எண்பது வயதை தாண்டி  வாழ்க்கையின் இறுதியோடு போராடும் ஆத்மா ஜீவன். அப்பாவை இழந்து மூன்று வருடங்களாக அவரின் நினைவுகளோடு புலம்பிக்கு கொண்டு  வாழும் அன்பு ஜீவன் ஆதவனின் அம்மா பூரணம் .

ஒரு நாள்  அம்மா " மகன் ஆதவா உன்னிடம் ஒரு விடயம் கேட்பேன் " நீ கோபிக்கவும் கூடாது 
இல்லை என்று மறுக்கவும் கூடாது நான் ஒன்றை கேட்கவா ஆதாவா என்று தயக்கத்தோடு என்னிடம் கேட்டார் . சொல்லுங்கம்மா என்ன விடயம் என்று நான் கேட்க . நான் கொஞ்ச நாள் என் சொந்த ஊரில் 
போய் வாழனும் என்று ஆசையாய் இருக்கடா என்னை கொண்டுபோய் ஊரில் விடுவாயா ...?
அப்பாதான் சொந்த ஊரில் கண்ண மூடல்ல நானென்றாலும் அங்கே .....என்று இழுத்தபடி கேட்டார் 
அம்மா .....!!!

சும்மா இருங்க அம்மா அங்கு யார் இருக்கினும் உங்களை பார்க்க..? பராமரிக்க..? இங்கே எண்டாலும் என் 
மனைவி என் பிள்ளைகள் கவனிக்கினும் அங்கே யாரம்மா இருக்கினம் உங்களை பார்க்க ..? இருந்த 
சொந்தங்கள் எல்லாம் யுத்தத்தால் புலம்பெயர்ந்து எங்க இருக்குதல் எண்டே தெரியல்ல . எனக்கு தொழிலை விட்டுட்டு வரவும் முடியாது .எப்படியம்மா சாத்தியமாகும் ..? நீங்க அங்கே போய் இருக்க ...?
என்று சொல்லியபடி அம்மாவின் ஆசைக்கு முற்றுபுள்ளி வைத்து விடை பெற்றேன் .

இரவு தூக்கதுக்கு போய் துங்க முடியல்ல .....அம்மாவின் ஆசையில் ஒரு ஆத்மா திருப்தி இருப்பதை உணர்ந்தேன் . அம்மாவை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்தேன் . அடுத்த நாள் அம்மாவிடம் 
சென்று உங்கள் ஆசையை நிறைவேற்றுகிறேன் ஒருமாதம் பொறுங்கள் பாடசாலை லீவு விடட்டும் 
சின்னம்மாவிடம் கேட்டு ஒரு சில நாட்கள் ஊரில் இருந்துவிட்டு வாருங்கள் . நானும் உங்களை அடிக்கடி 
வந்து பார்கிறேன். உங்கள் சந்தோசம் தானே அம்மா என் சந்தோசம் என்றேன் . அம்மாவின் முகத்தில் 
அப்படி ஒரு சந்தோசம் . அதை பார்த்ததில் எனக்கோ அளவற்ற சந்தோசம் .

அம்மாவின் சந்தோசமும் எனது சந்தோசமும் அந்த ஒரு மாதம் கூட நிலைக்க வில்லை .

ஆம் அம்மாவுக்கு திடீரென பாரிசவாதம் ஏற்பட்டது .ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியாத நிலைக்கு 
போய் விட்டார் . தூக்கி நிறுத்தி அவரை சுத்தம் செய்வதெலாம் நான் பெற்ற பாக்கியம் என்று கருதி 
அம்மாவின் அன்போடு வாழ்ந்து வந்தேன் . அவர் பேசுவதும் புரியாது .நாம் பேசுவதும் அவருக்கு 
புரியாது அந்த நிலைக்கு வந்து விட்டார் என் அம்மா .

சில நாட்களில் அவர் கேட்கும் திறனையும் பார்க்கும் திறனையும் இழந்து விட்டார் . வைத்திய சாலையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படவே . நாட்கள் பல வைத்திய சாலையில் கழிந்து 
கொண்டே போயின . உற்றார் உறவினர் அயலவர் என்று பலர் வைத்திய சாலையில் அம்மாவை 
பார்ப்பதற்கு வந்து சென்றனர் . யார் வந்து செல்கிறார்கள் என்ன சொல்கிறார்கள் என்று எதுவுமே 
தெரியாத அந்த உச்ச கட்டத்தில் அம்மா வந்து விட்டார் . கண்கள் மூடிய நிலை தொடர்ந்தது .
யார் அருகில் சென்று தொட்டாலும் ஒரு உணர்வும் இல்லாத நிலையில் அம்மா .

வைத்தியர்கள் கைவிட்ட நிலை . ஒரு பேச்சு கூட பேசாத நிலை . அன்று நான் அம்மாவின் அருகில் சென்று அம்மாவின் கையை பிடிந்தேன் . அதுவரையும் மூடியிருந்த கண் .மெல்ல விலகியது .
அதுவரை பேசாமல் இருந்த உதடு அசைந்தது . அசையாமல் இருந்த கைகள் மெல்ல அசைந்தன .
நான் மெல்ல மேலும் அழுத்தினேன் . 

யாரது ..? ஆதவனா ...? என்று கேட்டுவிட்டு என் கையை இறுக்க அழுத்தியபடி கண்ணின் ஓரத்தில் 
சிறு துளி வர மீண்டும் கண்ணை மூடினார் அம்மா . அதன் பின் மீண்டும் திறக்கவே இல்லை .
எத்தனை உறவுகள் எத்தனை சொந்தங்கள் வந்தெல்லாம் என் அம்மாவை தொட்டபோது கண் திறக்காத 
அம்மா .ஒரு சொல் கூட பேசாத அம்மா . நான்  அம்மாவின் கையை பற்றிய போது எப்படி நான் ஆதவன் 
என்று கண்டு பிடித்தார் ...? அதுதான் தாய் . அதுதான் தொப்புள் கொடி உறவு  . ஒரு குழந்தை பிறந்தபோதும்  தாய் தூக்கும் போதும்  ஒரு கணச்சூடு ஏற்படும் .அந்த கணச்சூடுதான் தாயின் இறுதி காலம் வரை பிள்ளையோடு பிண்ணி பிணைந்திருக்கும் .அந்த கணச்சூடுதான் என்னை அம்மாவுக்கு உணரவைத்தது என்றுதான் சொல்வேன் .

அம்மாவின்   எல்லா ஆசையையும் நிறைவேற்றினாலும் அம்மாவின் இறுதி ஆசை தன் ஊரில் இறுதி 
மூச்சு போகவேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போனதை இட்டு வேதனை பட்டு கொண்டிருக்கிறேன் இந்த நிமிடம் வரை ...எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நிறைவேறாத ஆசை 
இருந்தே ஆகும் என்பது உண்மைதான் ....!!!

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு Empty Re: சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு

Post by நண்பன் Mon 30 Mar 2015 - 20:52

கதை படித்தேன் மிகவும் அருமையாக இருந்தது அந்தத்தாயின் ஆசை நிறைவேற வில்லை.

கதையை சிறப்பாக நகர்த்திச்சென்றுள்ளீர்கள்.

கடைசியில் சின்ன வித்தியாசம்!   

 நீண்ட நாட்களின் பின் பெரிய இடைவெளியின் பின் மகன் வந்தது போன்று கதை முடிந்துள்ளது.

மகனின் கை அம்மாவின் கையைப் பிடித்ததும் அம்மாவுக்கு உணர்வு வந்து கண்ணைத்திறந்து மகனைப் பார்த்தும் மகனின் பெயர் சொன்னதும் கொஞ்சம் திசை திருப்பி விட்டது கதை.

கூட இருந்துதானே மகன் அம்மாவைக் கவனித்து வந்தார் பிறகு எப்படி இப்போதுதான் மகன் அம்மாவின் கையைப் பிடித்தாரா? வைத்திய சாலையில் இருந்த போது மகன் அம்மாவைத் தொடவே இல்லையா ?

இன்னும் தெளிவாக புரிந்தவர்கள் கருத்திடுங்கள்

எனது கருத்துக்காக சொன்னேன் தவிர குறை கண்டு பிடிக்க வில்லை  தவறாக எண்ண வேண்டாம் கதைக்கு சொந்தக்காரர் என்னை மன்னிக்கவும்
கதை மிகவும் அருமையாக உள்ளது பாராட்டுக்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு Empty Re: சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு

Post by Nisha Mon 30 Mar 2015 - 22:22

கதையினை படித்தேன். 

உணர்ச்சி பூர்வமான கதை.  புலம் பெயர்ந்து வாழும் பல வயோதிபர்களின் இறுதி ஆசையை  ஆதவனின் தாயின் ஆசையில் கண்டேன்.உணர்வு பூர்வமான் கதை..  மனதை தொட்டது. இறுதி வரை தாயின் ஆசை நிறைவேற வில்லை என்பது வலியை தந்தது. 

நல்ல எழுத்து நடை. கதையை எழுதியவருக்கு எங்கள் பாராட்டுகள்!

 எனினும் ஆதவன் கூடவே இருந்து தன் தாயை கவனிக்கும்  நிலையில் எத்தனையோ உறவுகள்  வந்தும் உணராத தாய்  வைத்திய சாலையில்  மகன் தாயை தொட்டபின் மட்டுமே உணர்வு வந்து ஆதவா என்றழைத்ததுடன் கண்களை மூடினார் என  இருப்பது  நண்பன் சுட்டிகாட்டியது போல் சிறு நெருடல் தான். 

கதையாசிரியர்  வாக்கெடுப்பு முடிவில் பரிசு அறிவித்த பின் தன் விளக்கத்தினை தரலாம். 

அவசரப்பட்டு விளக்கம் சொல்லி  வெளிப்படுத்திட வேண்டாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு Empty Re: சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு

Post by சுறா Tue 31 Mar 2015 - 5:50

மிக மிக அழகாக கதையை சொல்லியிருக்கிறார் கதை ஆசிரியர்.  இந்த கதையில் எந்த தவறும் எனக்கு படவில்லை.  சரியாக தான் இருக்கிறது.

ஒருசிலர் தான் இறக்கும் தருவாயில் தனக்கு பிடித்தமான அல்லது ரத்த சொந்த உறவுகளை பார்த்தோ அல்லது பேசியோ தான் தங்கள் உயிரை விடுவார்கள். அதுவரை அந்த உயிர் அந்த தருணத்திற்காக காத்திருக்கும் என்பது நான் அனுபவப்பூர்வமாக கண்ட ஒன்று.

ஆம் எனது மனைவியின் பாட்டியை நான் 4 ஆண்டுகள் படுத்த படுக்கையாக இந்த நிலையில் பார்த்து எல்லாவித உதவிகளும் செய்து வந்தேன். சிறு பிள்ளை போல அவர்கள் மாறி நான் வந்தால் தான் எல்லாம் செய்யவேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். 

பலமுறை நான் அவர்களை தொட்டு சேவை செய்தாலும் தான் இறக்கும் தருவாயில் தன் கண்கள் முடிய நிலையிலும் உயிருக்கு இழுத்துக்கொண்டு இருந்த நேரத்தில் நான் வரும்வரை காத்திருந்து என்னை பார்த்து இருகரங்களை கூப்பி நன்றி என சொல்லியே இன்னுயிரை விட்டார்கள்.

இது இன்னமும் எனது மனதில் இருக்கிறது. அழியவே அழியாது.

கதை ஆசிரியருக்கு எனது பாராட்டுக்கள்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு Empty Re: சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு

Post by கமாலுதீன் Tue 31 Mar 2015 - 6:39

தாய்க்கு தாய் மண்ணின் மீது உள்ள பற்றையும், மகனுக்கு தாய்மீது உள்ள பாசத்தையும் அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வம் அது நிறைவேறாத சோகம் என மிகவும் அருமையான வெளிப்பாடாக அமைந்துள்ளது இக்கதை. கதை ஆசிரியருக்கு வாழ்த்துகளும் பாரட்டுக்களும்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு Empty Re: சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு

Post by *சம்ஸ் Tue 31 Mar 2015 - 15:15

ஆரம்பம் முதல் இறுதிவரை கதை அருமையாக சென்றுள்ளது அனைவருக்கும் இருக்கும் ஆசை அந்த ஆசை நிறைவேறாவிட்டால் ஏற்படும் கவலைகள் என்று சிறப்பாக நகர்த்தி உள்ளீர்கள் கதையை அதனுள் அம்மா பிள்ளை பாசத்தையும் அன்பையும் பிரதிபளிக்க செய்துள்ளீர்கள். கதை ஆசிரியருக்கு வாழ்த்துகளும் பாரட்டுக்களும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு Empty Re: சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு

Post by நண்பன் Tue 31 Mar 2015 - 15:17

சுறா wrote:மிக மிக அழகாக கதையை சொல்லியிருக்கிறார் கதை ஆசிரியர்.  இந்த கதையில் எந்த தவறும் எனக்கு படவில்லை.  சரியாக தான் இருக்கிறது.

ஒருசிலர் தான் இறக்கும் தருவாயில் தனக்கு பிடித்தமான அல்லது ரத்த சொந்த உறவுகளை பார்த்தோ அல்லது பேசியோ தான் தங்கள் உயிரை விடுவார்கள். அதுவரை அந்த உயிர் அந்த தருணத்திற்காக காத்திருக்கும் என்பது நான் அனுபவப்பூர்வமாக கண்ட ஒன்று.

ஆம் எனது மனைவியின் பாட்டியை நான் 4 ஆண்டுகள் படுத்த படுக்கையாக இந்த நிலையில் பார்த்து எல்லாவித உதவிகளும் செய்து வந்தேன். சிறு பிள்ளை போல அவர்கள் மாறி நான் வந்தால் தான் எல்லாம் செய்யவேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். 

பலமுறை நான் அவர்களை தொட்டு சேவை செய்தாலும் தான் இறக்கும் தருவாயில் தன் கண்கள் முடிய நிலையிலும் உயிருக்கு இழுத்துக்கொண்டு இருந்த நேரத்தில் நான் வரும்வரை காத்திருந்து என்னை பார்த்து இருகரங்களை கூப்பி நன்றி என சொல்லியே இன்னுயிரை விட்டார்கள்.

இது இன்னமும் எனது மனதில் இருக்கிறது. அழியவே அழியாது.

கதை ஆசிரியருக்கு எனது பாராட்டுக்கள்

உங்கள் கருத்தையும் ஏற்றுக்கொள்கிறேன் அண்ணா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு Empty Re: சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு

Post by Nisha Tue 31 Mar 2015 - 16:17

மகன்  அவருடனே இருக்கின்றார் எனும் போது அந்த உணர்வு என்றும் இருக்கத்தானே செய்யும்.  உணர்வுடனும் உணர்வில்லாமலும்  மகன் தான் தன் தாய்க்கு தேவையான் பணிவிடைகளை செய்வதாக .
ஆம் அம்மாவுக்கு திடீரென பாரிசவாதம் ஏற்பட்டது .ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியாத நிலைக்கு 
போய் விட்டார் . தூக்கி நிறுத்தி அவரை சுத்தம் செய்வதெலாம் நான் பெற்ற பாக்கியம் என்று கருதி 
அம்மாவின் அன்போடு வாழ்ந்து வந்தேன் . அவர் பேசுவதும் புரியாது .நாம் பேசுவதும் அவருக்கு 
புரியாது அந்த நிலைக்கு வந்து விட்டார் என் அம்மா .

தாயுடன் இருந்து பணி செய்யும் மகன்.. அன்று நீண்ட நாளின் பின் வந்து அவரை தொட்டதும் உணர்வு வந்தது  என்பது போலவும்   இருக்கின்றது. 

 அன்று நான் அம்மாவின் அருகில் சென்று அம்மாவின் கையை பிடிந்தேன் . அதுவரையும் மூடியிருந்த கண் .மெல்ல விலகியது .
அதுவரை பேசாமல் இருந்த உதடு அசைந்தது . அசையாமல் இருந்த கைகள் மெல்ல அசைந்தன .
நான் மெல்ல மேலும் அழுத்தினேன் . 

யாரது ..? ஆதவனா ...? என்று கேட்டுவிட்டு என் கையை இறுக்க அழுத்தியபடி கண்ணின் ஓரத்தில் 
சிறு துளி வர மீண்டும் கண்ணை மூடினார் அம்மா . அதன் பின் மீண்டும் திறக்கவே இல்லை .

இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லையா?

அம்மா மகனை தினம் தினம் உணராமலா இருந்தார். தினம் தொட்டு பணிவிடை செய்யும் போது உண்ரவே இல்லையா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு Empty Re: சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு

Post by நண்பன் Tue 31 Mar 2015 - 16:19

Nisha wrote:மகன்  அவருடனே இருக்கின்றார் எனும் போது அந்த உணர்வு என்றும் இருக்கத்தானே செய்யும்.  உணர்வுடனும் உணர்வில்லாமலும்  மகன் தான் தன் தாய்க்கு தேவையான் பணிவிடைகளை செய்வதாக .
ஆம் அம்மாவுக்கு திடீரென பாரிசவாதம் ஏற்பட்டது .ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியாத நிலைக்கு 
போய் விட்டார் . தூக்கி நிறுத்தி அவரை சுத்தம் செய்வதெலாம் நான் பெற்ற பாக்கியம் என்று கருதி 
அம்மாவின் அன்போடு வாழ்ந்து வந்தேன் . அவர் பேசுவதும் புரியாது .நாம் பேசுவதும் அவருக்கு 
புரியாது அந்த நிலைக்கு வந்து விட்டார் என் அம்மா .

தாயுடன் இருந்து பணி செய்யும் மகன்.. அன்று நீண்ட நாளின் பின் வந்து அவரை தொட்டதும் உணர்வு வந்தது  என்பது போலவும்   இருக்கின்றது. 

 அன்று நான் அம்மாவின் அருகில் சென்று அம்மாவின் கையை பிடிந்தேன் . அதுவரையும் மூடியிருந்த கண் .மெல்ல விலகியது .
அதுவரை பேசாமல் இருந்த உதடு அசைந்தது . அசையாமல் இருந்த கைகள் மெல்ல அசைந்தன .
நான் மெல்ல மேலும் அழுத்தினேன் . 

யாரது ..? ஆதவனா ...? என்று கேட்டுவிட்டு என் கையை இறுக்க அழுத்தியபடி கண்ணின் ஓரத்தில் 
சிறு துளி வர மீண்டும் கண்ணை மூடினார் அம்மா . அதன் பின் மீண்டும் திறக்கவே இல்லை .

இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லையா?

அம்மா மகனை தினம் தினம் உணராமலா இருந்தார். தினம் தொட்டு பணிவிடை செய்யும் போது உண்ரவே இல்லையா?

நான் விளங்கியதும் இப்படித்தான் அக்கா நன்றி சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு Empty Re: சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு

Post by Nisha Tue 31 Mar 2015 - 16:20

ஏய்  டம் டம் டம் டமாரம்!  அந்தப்பக்கமும் பாடி இந்தபக்கமும் பாடாமல் கம்முன்னு இருங்க!என்ன கொடுமை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு Empty Re: சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு

Post by நண்பன் Tue 31 Mar 2015 - 16:26

Nisha wrote:ஏய்  டம் டம் டம் டமாரம்!  அந்தப்பக்கமும் பாடி இந்தபக்கமும் பாடாமல் கம்முன்னு இருங்க!என்ன கொடுமை

ஹா ஹா நான் எதிர் பார்த்த பதில்தான்
இருந்தும் எனது கருத்தில் 50% நானே குளம்பிப்போய் உள்ளேன் அநியாயம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு Empty Re: சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு

Post by சுறா Tue 31 Mar 2015 - 19:16

Nisha wrote:ஏய்  டம் டம் டம் டமாரம்!  அந்தப்பக்கமும் பாடி இந்தபக்கமும் பாடாமல் கம்முன்னு இருங்க!என்ன கொடுமை
குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு Empty Re: சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு

Post by சுறா Tue 31 Mar 2015 - 19:37

பல நாட்கள் உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் இறக்கும் தருவாயில் ஒருவருக்கு இதுபோன்ற செயல்பாடுகள் வரும் என்பது மட்டும் என் கருத்து.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு Empty Re: சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு

Post by சே.குமார் Tue 31 Mar 2015 - 21:17

மிகச் சிறப்பான கதை...
கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு Empty Re: சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு

Post by கவிப்புயல் இனியவன் Thu 2 Apr 2015 - 10:43

தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னல் பாயுதே ...

என்பதுபோல் தாயன்புக்கு நிகர் ஏதுமில்லை ...
ஞானிகள் கூட இறைவனை தாயாகத்தான் பார்கிறார்கள் 
அதில் தான் அவர்கள் நிறைவும் பெற்றார்கள்

.மிகச் சிறப்பான கதை...
கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு Empty Re: சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 6 Apr 2015 - 8:24

அருமையான கரு தற்காலத்தில் ஆங்காங்கு இடம்பெறுகின்ற விடயமாகவே இருக்கிறது கதையாசிரியருக்கு பாராட்டுகள் 
குறை என்று சொல்ல முனைந்தால் இன்னும் மெருகேற்றியிருக்கலாம் ஒரு சில இடத்தில் பேச்சு வழக்கம் திறம்பட அமைத்திருக்கலாம் தொடருங்கள் நன்றி

சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு Empty Re: சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு

Post by Nisha Tue 7 Apr 2015 - 11:17

சுறா wrote:பல நாட்கள் உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் இறக்கும் தருவாயில் ஒருவருக்கு இதுபோன்ற செயல்பாடுகள் வரும் என்பது மட்டும் என் கருத்து.

 நிஜம் தான். சலூட் அணையப்போகும் விளக்கு சுடர் விடும் என இதை சொல்வார்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு Empty Re: சிறுகதை எண்.1 - தாயின் கணக்சூடு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum