சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர் Khan11

சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர்

+5
கவிப்புயல் இனியவன்
நண்பன்
சே.குமார்
கமாலுதீன்
சுறா
9 posters

Go down

சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர் Empty சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர்

Post by சுறா Sun 29 Mar 2015 - 19:13

விழலுக்கு இறைத்த நீர்

தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார் நாகராஜ். அவருக்கு இப்பல்லாம் இரவில் தூக்கம் வருவதில்லை. படுத்ததும் அயர்ந்து தூங்க ஆரம்பிப்பவர் திடீரென விழித்துக் கொள்வார். அப்புறம் தூக்கம் அவ்வளவுதான். எப்பவும் கொஞ்ச நேரமாச்சும் தூங்குவார். இன்று தூக்கம் வரவேயில்லை... அதுக்கும் காரணம் இருந்தது... இரவு வாசலில் உக்கார்ந்து சாமிநாதனுடன் வெற்றிலை போட்டபடி பேசிக்கொண்டிருப்பது அவரது வாடிக்கை. இன்றும் பல விஷயங்களைப் பேசினார்கள்... சிரித்தார்கள்...
 
பேச்சு சந்தோஷமாய்ப் போய்க்கொண்டிருந்த வேளையில் சாமிநாதன், 'உன்னைய மாதிரி பிள்ளைகளை நாங்க யாரும் பாத்துப்பாத்து வளக்கலை... அப்படி வளர்த்தே.... நல்லா படிக்க வச்சே... ஆனா இன்னைக்கு என்னாச்சு... ஒருத்தன் வெளிநாட்டுல குடும்பத்தோட போயி செட்டிலாயிட்டான். இன்னொருத்தன் சென்னையில இருக்கான். ரெண்டு பேருமே வயசான காலத்துல உங்களுக்குத் துணையா இருக்கலை... என்ன வளத்து என்ன பண்ணப்பா... இந்த வயசுல துணையில்லாம நீயும் கமலமும் படுற கஷ்டம் பாக்கும்போது எங்களுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு' அப்படின்னு ஆரம்பிச்சாரு. உடனே இவரு மகன்களை விட்டுக் கொடுக்காம 'நீ வேறப்பா அவனுக வரச்சொல்லித்தான் நிக்கிறானுங்க... நாங்கதான் இந்த வாழ்க்கையை இழக்க விரும்பாம வரலைன்னு சொல்லிட்டோம்... இப்பவும் மாசாமாசம் எங்க செலவுக்கு கூடுதலாகவே பணம் அனுப்புறானுங்கன்னா பாத்துக்கோயேன்' அப்படின்னு பெருமையாச் சொன்னாரு.
 
'பணம் கெடக்குப்பா பணம்... எம்புட்டுப் பணம் அனுப்பி என்ன பலன். இந்த கமலம் இந்த வயசுல வெறகடுப்புல மாங்கு மாங்குன்னு ஊதிக்கிட்டு கிடக்குறதை என்ன சொல்றது. உம்பசங்களுக்கு வசதியா இல்லை... ஒரு கேஸ் அடுப்பு வாங்கிக் கொடுக்குறது. அது கூடவா முடியாது. சும்மா சப்பைக் கட்டு கட்டாதேப்பா....' என நறுக்கெனச் சொல்ல, 'எங்களுக்கு எதுக்குப்பா கேஸ் அடுப்பெல்லாம்... அவதான் அதெல்லாம் சரி வராதுன்னு சொல்லிட்டா... அவளுக்கு வெறகடுப்புல சமைக்கிறதுதான் பிடிச்சிருக்கு... இதுக்கு அவனுகளைக் குத்தம் சொல்லி என்ன பண்ணச் சொல்றே... சும்மா குத்தம் கண்டுபிடிச்சா நிறையக் கண்டுபிடிக்கலாம்ப்பா... நம்மமேல குத்தத்தத்தை வச்சிக்கிட்டு அவனுகளைச் சொல்றது நியாயமில்லையில்ல...' என சப்பைக்கட்டுக் கட்டினார்.
 
ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்து விட்டு வந்து கட்டிலில் சமுக்காளத்தை உதறிப் போட்டவரிடம், 'வெறகடுப்புல சமைச்சிக்கிறேன்னு நான் சொன்னேனா.. இன்னமும் அந்த களவாணிப் பயலுகளுக்கு சப்பைக்கட்டு கட்டுறதை நீங்க விடவே இல்லையில்ல..' என்ற கமலாவின் கேள்வி தாக்கியதில் நிலை குலைந்துதான் போனார். ஆனாலும் 'நீ ஒரு இவ... அவன் வந்து நம்ம பிள்ளைகளைச் சொல்லுறான்... விட்டா கொடுக்க முடியும்... அவம்பிள்ளைக பாக்குறானுகளாக்கும்.... உனக்கு உடனே பொத்துக்கிட்டு வந்திரும்...' என்று அவளை அதட்டினார்.
 
'ஆமா பொத்துக்கிட்டு வருது...சாமிநாதண்ணனுக்கு என்ன கொறச்சல்... மூணு பெத்தாரு... மூத்தது ரெண்டு வெளியூர்ல இருந்தாலும் நல்லது கெட்டதுக்கு வருதுக.. செலவுக்கு மாசாமாசம் பணம் அனுப்புதுக... இங்க இருக்க சின்னவனும் அவம் பொண்டாட்டியும் தாங்குதாங்குன்னு தாங்குறாக... பொண்டாட்டியில்லைன்னாலும் புள்ளைக அவருக்கு ஆதரவாத்தான் இருக்குக... நமக்கு என்ன நாதியிருக்கு... ஒரு நல்லது கெட்டது இருக்கா... ரெண்டு மாசத்துக்கு ஒருக்கா பணம் அனுப்புனா போதுமா...? பாசத்துக்கு எங்கங்க போறது...?' என்றாளே பார்க்கலாம்.... அவருக்கு என்ன சொல்றதுண்ணே தெரியலை... சொம்பிலிருந்த தண்ணியை மடக்மடக்கென்று குடித்து விட்டு பேசாமல் படுத்தார்.
 
புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தார்… இரண்டு முறை எழுந்து போயி ஒண்ணுக்குப் பொயிட்டு வந்தார். அவள் கேட்ட கேள்வி சரிதானே... பாத்துப் பாத்துல்ல வளத்தேன்... சாமிநாதன்  பிள்ளைகளை ரொம்பல்லாம் படிக்க வைக்கலை... ஆனா நா... விவசாயம் பண்ணி வந்த வெளச்சலை வச்சி மூத்தவனை எம்.ஏ. எம்.எட் படிக்க வச்சேன். இன்னைக்கி சென்னையில ஒரு தனியார் கல்லூரியில புரபஸராக இருக்கான். மருமகளும் படிச்சிட்டு பேங்குல வேலை பாக்குற... கை நிறைய சம்பாரிக்கிறாங்க... ஆணென்னு பொண்ணொன்னு அளவான குடும்பம்... ஏன் சின்னவனைக்கூட இஞ்சினியருக்குப் படிக்க வச்சேன். இன்னைக்கு அவன் துபாயில கை நிறைய சம்பாதிக்கிறான். அவன் கூட வேலைபாத்த மலையாளியை அங்கிட்டே கலியாணமும் பண்ணிக்கிட்டான். ஒரு பய இருக்கான்... இதுவரைக்கும் பேரன் முகத்தைக் கூட பாத்ததில்லை.
 
நல்லது கெட்டதுக்கு கூட வர்றதில்லை... இங்க வாங்கன்னு ரெண்டு பேரும் ஒரு வார்த்தைக்கு கூட சொன்னதில்லை.... ரெண்டு மாசம் மூணு மாசத்துக்கு ஒருக்கா பணம் அனுப்புவானுங்க... அவ கேக்குறது நியாயந்தானே... பணம் அனுப்புனா மட்டும் போதுமா... பாசத்தை எந்தத் தபால்ல அனுப்புவானுங்க... நமக்கும் பெத்தபுள்ளைக பேரம்பேத்திகன்னு பாக்க ஆசையிருக்காதா... கோவில் வாசல்ல விளையாடுற நண்டு சிண்டையெல்லாம் பாக்கும் போது எம்புட்டுச் சந்தோஷமா இருக்கு... பாத்துப் பாத்து வளத்து நம்மளைப் பாக்க ஒரு புள்ளை இல்லையே... இப்ப கைகாலு நல்லாயிருக்கு ரெண்டு பேருமா ஓட்டுறோம். அவ விழுந்தா நா பாத்துருவேன்... நா விழுந்துட்டா... அவ... அவ.... நினைத்தவருக்கு திடுக்கென்றிருந்தது. தூக்கம் இல்லாமல் எழுந்து வாசலுக்கு வந்தவர் வேப்பமரக் காற்றை அனுபவித்தபடி பதினெட்டாம் படிக்கருப்பா எனக்கு முன்னால அவ கைகால் சுகத்தோட போயிறணும்.. நா போயி அவ கெடந்தா பாக்க நாதியிருக்காது....' என்று கருப்பர் கோவில் இருந்த மேற்குப் பக்கம் பார்த்து கையை உயர்த்திக் கும்பிட்டார்.
 
எங்கோ ஆந்தை அலறியது... தெருநாய்கள் எல்லாம் எதையோ பார்த்தது போல் வீதியில் ஓடி ஓடிக் குலைத்தன. 'ம்... என்ன போகுதோ யாருக்குத் தெரியும்... நாய்க்கு மட்டுமே தெரியும்...' என்று நினைத்தபடி வைக்கோலை இழுத்துப் போட்டு அதன் மேல் படுத்துக்கிடந்த கருத்தைப்பசுவை அதட்டி எழுப்பி வைக்கோலை எல்லாம் அரித்து ஒரிடத்தில் குவித்து வைத்துவிட்டு கன்றைச் சுமக்கும் அதன் வயிறைத் தடவிக் கொடுத்தார். இது அதுக்கு அஞ்சாவது கன்று... இதுக்கு முன்னாடி போட்டதுல மூத்தது மட்டுமே பொட்ட... மத்ததுக காளையாப் போக பால் வற்றியதும் அதுகளை வந்த விலைக்குத் தள்ளிவிட்டுட்டார். மூத்தது இப்ப கிடேரியா நிக்கிது... போன வாரந்தான் காளைக்கு கத்துச்சுன்னு மாட்டாஸ்பத்திரிக்கு கொண்டு போய் சினை ஊசி போட்டுக்கிட்டு வந்தாரு. ‘ம்... நீயும் பிள்ளைகளைச் சுமக்குறே... அதுக உதவியா இருக்கும்ன்னு நினைக்கிறியா இல்லையே... பால் கொடுக்குற வரைக்கும் பாதுகாப்பா பாத்துக்கிறே... அப்புறம் அதுகளுக்கும் உனக்கும் எதாச்சும் உறவு இருக்கா என்ன...? ஏன் இந்த மனுசனுங்க மட்டும் உறவுகளைத் தொங்கிக்கிட்டு கிடக்கானுங்க…’ என்று அதனிடம் வேதாந்தம் பேசினார்.
 
காலையில் கமலம் தட்டி எழுப்பவும்தான் எழுந்தார். எப்பப்படுத்தார்.... எப்படித் தூங்கினார் என்று தெரியவில்லை. 'இப்புடியா மனுசன் தூங்குறது... நல்லாத்தான்... மொகத்தைக் கழுவுங்க.. காபி குடிக்க' என்று சொல்லியபடி காபி டம்ளரை சன்னலில் வைத்தாள். 'ம்... ராத்திரியெல்லாம் தூக்கம் வரலை... விடிகாலையில கண்ணசந்துட்டேன் போல...' என்றபடி முகம் கழுவிவிட்டு  காபியை உறிஞ்சியவர், 'ஏய்... நம்ம புள்ளைக நம்மளைப் பாக்கலைன்னு கவலைப்படுறியா?' என்றார். 'நீங்க இருக்கும் போது எனக்கென்ன கவலை... பூவோட பொட்டோட போயிச் சேந்தாப் போதும்... ஆனா அதுக்கு அப்புறம் உங்கள நினைச்சாத்தான் வேதனையா இருக்கு... பாக்க நாதியில்லாமா....' கண்ணைக் கசக்கினாள். 'அட விடு... ஆண்டவன் கஷ்டப்பட விடாம பொசுக்குன்னு கூட்டிப்பான்... பாரேன்... ரெண்டு பேரையும் ஒண்ணாக் கூட்டிக்கிட்டாலும் கூட்டிப்பான்' என்று சிரித்தார்.
 
'எங்க இருந்தாலும் நாம பெத்ததுக நல்லாயிருந்தாப் போதும்... நம்மளைப் பாக்கலைன்னு நாம அதுகளை திட்டி அதுகளுக்கு ஒண்ணுன்னா என்ன பண்றது.. விடு... அவனுக நல்லாயிருக்கட்டும்... நம்மளை கருப்பன் பாத்துப்பான்... பாசத்தை கொரியர்லயா அனுப்பச் சொல்ல முடியும்... அவனுகளுக்காத் தெரிஞ்சி ஒருநா பாசத்தை மூட்டை கட்டிக்கிட்டு வருவானுங்க...' என்று மனைவியின் தலையை ஆறுதலாய்த் தடவினார். 'பயலுக மேல உங்களுக்கு உண்மையாவே வருத்தமில்லையாங்க' என்ற கேள்விக்கு சிரிப்பை பதிலாக்கிவிட்டு எழுந்தவர் அவளுக்குத் தெரியாமல் கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டு படியிறங்க, அவரைப் பார்த்த கருத்தப்பசு 'ம்ம்மா' என்று பாசமாய் அழைக்க, வாசலில் நின்ற நாய் வாலாட்டிபடி அவருக்கு முன்னே 'வ்வ்...வ்...வீ...வ்' எனக் குழைந்து நின்றது.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர் Empty Re: சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர்

Post by கமாலுதீன் Tue 31 Mar 2015 - 7:16

ஒவ்வொரு பெற்றோருக்கும் "தன் பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும். வாழ்க்கையில் நன்கு முன்னேற்றம் அடைந்து, நல்ல துணையை மணந்து பிள்ளைச் செல்வங்களை அடைந்து சீரும் சிறப்புமாக வாழ வேண்டும்" என்ற எண்ணம் எப்போதும் இருக்கும். இவை அனைத்தையும் தங்கள் பிள்ளைகள் அடையும்வரை பெற்றவர்கள் எதையும் பிள்ளைகளிடம் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால் அதன் பிறகு அவர்களிடம் வரும் எதிர்பார்ப்பு தான் "பாசம்". வாழ்வில் நல்ல நிலையை அடைந்து சிறப்பான வாழ்க்கை வாழும் தன் பிள்ளையிடம் பெற்றோர் எதிர்பார்ப்பது பணமோ, பொருளோ இல்லை. "கனிவான பேச்சு" "அன்பான பார்வை" "பிள்ளைகளின் அருகாமை". இந்த எதிர்பார்ப்புகள் எல்லா பெற்றோரிடமும் இருக்கும். ஆனால் அது ஒரு ஏக்கமாகவே இருக்கும். வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். பெரும்பான்மையான பிள்ளைகள் அதை புரிந்துக் கொள்வதில்லை.

மேற்படி இந்த கருத்தை தாங்கிய "விழழுக்கு இறைத்த நீர்" சிறுகதை, இதயத்தை தொட்டு கண்களை சிறிதே கலங்கவைத்ததோடு மட்டுமல்லாமல்... சூழ்நிலைக் காரணமாக பெற்றோரை விட்டு தூரமாக வாழும் என்னை மிகவும் பாதித்தது. தினமும் தொலைபேசி மற்றும் ஸ்கைப் மூலம் பேசினாலும், மாதாமாதம் பணம் அனுப்பினாலும், வருடத்திற்கு ஒருமுறை "ஒருமாதம்" விடுப்பில் சென்று அவர்களோடு கழித்தாலும்... அவர்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்துள்ளோமா என்ற கவலையை ஏற்படுத்தியது.

வயதான பெற்றோரின் ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும் அவர்களுக்கு பிள்ளைகளின் மீதுள்ள பாசத்தையும் மிக அற்புதமாக வெளிப்படுத்திய கதை ஆசிரியருக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர் Empty Re: சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர்

Post by சே.குமார் Tue 31 Mar 2015 - 21:13

மிகச் சிறப்பான கதை...
கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர் Empty Re: சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர்

Post by நண்பன் Wed 1 Apr 2015 - 11:45

மிகவும் அருமையான கதை என்னையும் இந்தக் கதை இழுத்து உலுக்கி நீயும் வெளியுர்ல தொழில் செய்கிறாய் உன் தாயை நல்ல முறையில் பார்த்துக்கொள்கிறாயா ?

அல்லது அவர்கள் பாசத்திற்கு ஏங்கும் அளவிற்கு தொடர்பில்லாமல் இருக்கிறாயா என்ற சிந்தனை வந்தது இறைவன் பொருந்திக்கொள்ளட்டும் இது வரை அந்த ஏக்கத்திற்கு நான் இடம் கொடுக்க வில்லை சிறப்பாக என் தாயை நான் கவனித்து வருகிறேன் இன்னும் என் மூச்சி உள்ள வரை கவனிப்பேன் அவர்கள் மனம் குளிர நடந்து வருகிறேன் மீண்டும் இறைவனுக்கு நன்றி

இன்றய சூழல் நிறையப்பேருடய வாழ்க்கை இந்தத் தாய் தகப்பனின் நிலையில்தான் உள்ளது கதை நிதர்சனம்

கதாசிரியருக்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும் சலூட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர் Empty Re: சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர்

Post by கவிப்புயல் இனியவன் Thu 2 Apr 2015 - 10:42

இன்றைய நவீன உலகை இயக்கம் ---- """கருவி பணம் """...
அது எல்லோரையும் கூறு போட்டு விற்கிறது ...
பாசங்களை அடமானமாக எடுத்துக்கொண்டு பணத்தை தருகிறது ..

பணம் வேண்டுமா ...?

உறவை பிரிந்து 
உணர்வை பிரிந்து ... 
சிலவேளை மனதை இழந்து ...
பணத்தை பெறவேண்டியுள்ளது ...

இந்த உண்மையை கதையின் " தந்தை" உணர்வார் ....
பாவம் " தாய்" அன்பையே  உலகமாக  இணைப்பார் ...

உலகை புரிந்தால் உணர்வுகளை இழக்க வேண்டும் என்று உணர்ந்தார் ;தந்தை :



மிகச் சிறப்பான கதை...
கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர் Empty Re: சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர்

Post by *சம்ஸ் Sat 4 Apr 2015 - 8:47

உண்மையில் இன்று அனேகமானவர்கள் செய்யும் தப்பு தாயின் பாசத்தை புரிவதில்லை அவர்களின் தேவை என்னவென்று உணவர்வதில்லை அதை எப்படி நிபர்த்தி செய்லாம் என்று முயற்சி செய்யாமலே பல பிரச்சினைகள் நடக்கிறது அப்படியான பிரச்சினைகள் வராமல் இருக்க அல்லாஹ் அனைவருக்கும் உதவி புரியட்டும்.

கதை இன்றைய காலத்திக்கேற்ப அமைந்திருக்கிறது சிறப்பான எடுத்துக் காட்டும் நல்ல கருத்தையும் உள்ளடக்கி இருக்கிறது.

மிகச் சிறப்பான கதை...
கதை ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர் Empty Re: சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 6 Apr 2015 - 9:43

நெகுழ வைத்த கதை குழந்தைகளைப் பெற்றெடுத்து படிக்கவைத்து உயரிய அந்தஷ்த்துவரை உயர்த்திப்பார்த்தவர்கள் கடைசிக் காலத்தில் அவர்கள் தாங்கமாட்டார்களா என்று ஏங்கும் ஒவ்வொரு தாய்தந்தையின் ஏக்கம் எங்கிருந்தாலும் நல்லாயிருக்கட்டும் என்று நினைக்கும் இயல்பான பெற்ற பாசம் முழுமையானதாய் உணர்ந்தேன் அருமையான கதை பாராட்டுகள்


சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர் Empty Re: சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர்

Post by Nisha Tue 7 Apr 2015 - 10:05

பாசத்தை கொரியர்லயா அனுப்பச் சொல்ல முடியும்... அவனுகளுக்காத் தெரிஞ்சி ஒருநா பாசத்தை மூட்டை கட்டிக்கிட்டு வருவானுங்க...' என்று மனைவியின் தலையை ஆறுதலாய்த் தடவினார். 'பயலுக மேல உங்களுக்கு உண்மையாவே வருத்தமில்லையாங்க' என்ற கேள்விக்கு சிரிப்பை பதிலாக்கிவிட்டு எழுந்தவர் அவளுக்குத் தெரியாமல் கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டு படியிறங்க, அவரைப் பார்த்த கருத்தப்பசு 'ம்ம்மா' என்று பாசமாய் அழைக்க, வாசலில் நின்ற நாய் வாலாட்டிபடி அவருக்கு முன்னே 'வ்வ்...வ்...வீ...வ்' எனக் குழைந்து நின்றது.

ஓடி ஓடி உழைத்து பத்திரமாய் பொத்தி பொத்தி வளர்த்து கடைசியில் மிஞ்சுவது  இவ்வளவும் தான். 

 மனசுக்குள் மனசோடு பேசும் கதை. கதையின்  போக்கு எழுத்தின் வீரியம் வைத்து இக்கதையின் கதாசிரியரை  இவர் தான் என உகிக்க முடிகின்றது. 

பெரும்பாலான  வயோதிப பெற்றோர்களின் ஏக்கம், எதிர்பார்ப்பு, தனிமை, எள்ளல், கிண்டல் அத்தனையையும் கதைக்குள் கொண்டு வந்து நாம் அந்த பொற்றோராய் ஆகிடகூடாதே எனும் முன் அந்த பிள்ளைகளாயும்  வாழக்கூடாது என  யோசிக்க வைக்கும் கதை! அருமை. 

கதைப்போட்டியில் கலந்து கொண்டதுக்கும் கதையை பகிர்ந்தமைக்கும் மனமார்ந்த நன்றிகள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர் Empty Re: சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர்

Post by சுறா Wed 8 Apr 2015 - 14:17

தலைப்பை "பசுவுக்கு பால் கொடுக்க மட்டும் தான் தெரியும்" என்று வைத்திருந்தால் சரியாய் பொருந்தியிருக்கும்.

தலைப்பு கதையில் இயல்பான அழகிய கருவை தின்றுவிடுகிறது. மற்றபடி கதை மிக மிக அருமை. கதையின் அமைப்பும் வரிகளின் வார்த்தைகளின் ஜாலமும் நம் கண்முன் படம் ஓடுவதை போன்றே கதையாசிரியர் எழுதியுள்ளார்.

பாராட்டுக்கள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர் Empty Re: சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர்

Post by ahmad78 Wed 15 Apr 2015 - 11:28

மிக அருமையான கதை


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர் Empty Re: சிறுகதை எண்.2 - விழலுக்கு இறைத்த நீர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum