Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிறுகதை எண்.4 - காதலால் வந்த வினை
+5
கவிப்புயல் இனியவன்
சே.குமார்
நண்பன்
கமாலுதீன்
சுறா
9 posters
Page 1 of 1
சிறுகதை எண்.4 - காதலால் வந்த வினை
காதலால் வந்த வினை
அவசர அவசரமாக வேலைக்கு கிளம்புகிறேன் காலையில். தாமதமாக எழும்பியதால் “என்னங்க......... என்னங்க” என்று ஒரே சத்தம். காதில் வாங்காமல் வேக வேகமாக வண்டியை எடுத்தேன். ஐந்து நிமிடம் தாமதமானதால் வழமையாக செல்லும் சாலை நெரிசல். அதனால் அடுத்த பாதையில் செல்லலாம் என்று எண்ணி திருப்பினேன் வண்டியை.
சாலை அமைதியாக இருந்தது. நானும் மகிழ்வுடன் சென்று கொண்டு இருந்தேன். அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்து.இன்றைய மீட்டிக்கு தேவையான பைலை விட்டு விட்டது! என் தொலைபேசியை பதற்றத்துடன் சட்டைப் பையிலிருந்து எடுக்க மதியின் கால் வருகிறது! எடுத்தேன் “ஹலோ என்னா?” என்றேன். “ஏங்க... நான் அத்தனை தடவை உங்களை அழைத்தேன். ஒரு பதிலும் சொல்லாமல் போனீர்களே.... ஏன்?” என்றாள். “அதுதான் இப்ப முக்கியமா? இப்ப போன் செய்த மேட்டரை சொல்.....” என்றேன்!
பயந்த குரலில்...... “இல்லங்க..... நீங்க நேற்று இரவு விழித்திருந்து செய்த பைல் இங்கு இருக்கு. அதைச் சொல்லத்தான்” என்றாள் மதி. அப்பதான் எனக்கு ஞாபகம் வந்தது. இன்று கம்பனியில் இருக்கும் முக்கியமான கூட்டதிற்கு அவசியமான பைல் அதுவென்று. நேரம் எனக்கு அவகாசம் கொடுக்கவில்லை. கம்பனிக்கு செல்லலாம் என்று முடிவை எடுத்தேன். அங்கு கூட்டதிற்கு வேண்டிய அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கூட்டமும் நடந்தது. எதிர்பார்த்தது போல் பிரச்சினை நடக்கவில்லை. எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
நடந்தது என்னவென்று புரியாமல் என்றும் போல் இன்றும் என்னைப் பார்த்து சிரிக்கிறாள் “தாரா”! நானும் சிரித்தேன். எனக்கு என்ன ட்ரீட் கொடுக்கப் போறீங்க என்றாள்! நான் எதற்கு? ஏன்? என்று மனசுக்குள் குழம்ப “ஏய் சுதன்.....” என்ன இப்படி யோசிக்கிறீங்க. நான் கேட்டது ட்ரீட்தான் என்னமோ... உங்களிடம் வாழ்க்கையை கேட்டது போல் யோசிக்கிறீங்க......” என்றாள். மனசுக்குள் ஆயிரம் குழப்பம் விடை காண முடியவில்லை. அவளிடம் எதற்கு ட்ரீட் என்று நான் கேட்க இன்று உங்களை பிரச்சினையில் இருந்து காப்பாத்தியதற்கு என்றாள். வியந்தேன் என்ன நடந்தது என்று அவளிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். மாலை வேலையும் முடிந்தது. “சுதன் எங்கே போகலாம்..... என்ன ட்ரீட்?” என்று மீண்டும் கேட்க நீயே சொல் என்று நானும் ஒத்துக் கொண்டேன். அவளுக்கு பிடித்த ஒரு ஹோட்டலுக்கு கூட்டிச் சென்றாள். இருவரும் பிடித்த உணவை ஓர்டர் செய்து இன்பமாக சிரித்து மகிழ்ந்து உண்டோம். விடைபெறும் நேரம் அவள் கண்களின் ஒரு ஏக்கம் தெரிந்தது. என்ன ”தாரா” என்று கேட்க ஒன்றும் இல்லை என்று சொல்லி மனதில் உள்ளதை மறைக்க முயற்சித்தாள். நானும் விடாது வினவ வேறு வழியின்றி, சொன்னால் ஐ லவ் யு என்று உனக்கு என்ன பைத்தியமா? என்று சொல்லி நானும் வந்து விட்டேன். நேரம் பத்தை தாண்ட மதியும் எனக்காக காத்திருந்தால் பசியுடன் சாப்பிடாது!
வந்ததும் மதி “என்னங்க இவ்வளவு லேட்....” என்று சொல்ல அவள் மேல் எரிந்து விழுந்தேன். அதட்டிப் பேச அவளும் அமைதியாக ம் சரி குளித்து வாருங்கள்......... சாப்பாடு ரெடி...” என்று சொன்னாள். எனக்கு வேண்டாம். நீ சாப்பிட்டு விட்டு தூங்கு என்று சொல்லி உரத்த குரலில் மீண்டும் சொல்ல மதி அமைதியாகி விட்டாள். மதி என்ன நடந்திருக்கும் பைலை “தாரா” கொடுக்க வில்லையா? இல்லை வேறு ஏதும் பிரச்சினையா? குழப்பத்தில் திண்டாடினாள். இப்போது மதிக்கு பயம் என்னங்க உங்க பைல் கிடைத்தா? என்று கணவனிடம் கேட்கவும் இல்லை. கணவனும் இவளிடம் எங்கே அந்த பைல் என்று கேட்கவும் இல்லை. கணவன் தூங்கும் வரை காத்திருந்தாள். தூங்கியதும் மெதுவாக ஆபீஸ் பையை எடுத்துப் பார்க்க பையினுள் பைலைக் கண்டாள். இவளுக்கே அளவுகடந்த மகிழ்ச்சியில் அப்படியே தூங்கிவிட்டாள். ஆழ்ந்த தூக்கம் காலையில் எழும்பி பார்க்கிறாள். “சுதனைக் காணோம்.... வீடு முழுக்க தேடியாச்சு” சற்று அமைதியாகி கால் எடுக்கிறாள் மதி. சுதன் போனைப் பார்த்து விட்டு அப்படியே விட்டான். மீண்டும் கால் செய்ய அதே போன்று செய்ய பதற்றம் கொண்ட மதி தாராவை அழைக்கிறாள். “ஹலோ …. சொல்லுங்க....... ஏங்க... சுதனின் போன் வேலை செய்ய வில்லை. கொஞ்சம் பார்த்து சொல்லுங்க” என்று சொன்னாள் மதி. “ம்ம்....சரி” என்று சொல்லி சுதன் வேலையில் இருக்கிறார் என்று சொன்னாள். மதியும் சரி என்று முடித்து விட்டாள். தாரா சுதனை அணுகினாள். கொஞ்சலும் குலாவலுமாக பேசினாள்.
எனக்கும் அது பிடித்திருந்தது....... தொடர்ந்தேன்......... மதி எனக்கு தூரமாகி விட்டாள். காதல் விருட்சமாக விடுமுறைகள் எனக்கு தாராவுடன் கழிந்தது. எதிர்பாராத நேரம் இரவு 11.30 மணியிருக்கும். கால் ஒன்று வந்தது. பார்த்தால் அது தாராவின் கால் என்னால் பேச முடியவில்லை. காரணம் மதிக்கு தெரியாமல் மறைந்திருந்த என் காதல் தெரிந்து விடும் என்ற அச்சத்தில் அந்த காலை பேசவில்லை. அதன் பின் எனக்கு சரியான தூக்கமும் கிடைக்க வில்லை. காரணம் எதற்காக என்று தெரியாததால்.
விடிந்தது அன்று விடுமுறை வழமைபோன்று கடற்கரைக்கு செல்வது வழக்கம் ரெடியாகி சென்றேன். தாராவுக்காக காத்திருந்தேன், அவள் வரவே இல்லை அவளின் போனுக்கு ட்ரை பண்ணினேன். அடைய முடியவில்லை. எனக்கு இன்னும் பதற்றம் அதிகமானது. என் உடல்கள் வெறுக்க ஆரம்பித்தது. தாராவின் வீட்டுக்குள் சென்று பார்க்கவும் முடியாது.
யாரிடமும் கேட்கவும் முடியாத நிலை. பத்து நிமிடம் கழிந்தது என் போனுக்கு ஒரு கால் வந்தது. அது ஹலோ சார்..... சுதன் ஹலோ... சுதன் சொல்லுங்க..... என்றேன். கொஞ்சம் hospital வரை... வரமுடியுமா? என்றதும் ஒன்னும் புரியவில்லை எந்த hospital. என்று கேட்டு தெரிந்து கொண்டேன். அங்கு சென்று பார்க்கும் போது அவள் உயிருக்கா போராடிவளாக மருத்துவர்களின் கண்கனிப்பில் இருப்பதை கண்டதும் அச்சத்தில் நடுங்கி போனேன். Hospital தாதியிடம் என்ன நடந்தது என்று விசாரித்தேன். அவளை யாரோ கொல்ல முயன்றதாகவும் அதில் இருந்து தப்ப முயன்றபோது ஒரு விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். பொலிஸ் விசாரணையில் கடைசியாக உங்களுடன் இருந்ததாகவும் இருவரும் சைக்கிளில் வந்ததை கண்டதாகவும் அறியப்பட்டது. அதனால் இங்கு உங்களை அழைத்தது பொலீஸ் என்றாள் தாதி. பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன்.
செய்யாத குற்றத்திற்கு ஆளானேன். தாராவின் போனில் இருந்த அழைப்பை ஏற்படுத்தி இருந்ததும் நான் முன்னாடியே திருமணம் ஆனவர் என்பதனாலும் அவளை கொலை செய்ய முயற்சித்தது நான் என்று உறுதி செய்தார்கள். விளக்கமறியலுக்காக பத்து நாள் உள்ளே வைக்கப்பட்டேன். அதற்கிடையில் அவளுக்கும் சுயநினைவு திரும்பியது. நான் பொலீஸில் இருபது என் மனைவி மதிக்கு தெரியவந்தது. அவளே பதறியடித்துக் கொண்டு பொலீஸிற்கு வந்தாள். என்ன நடந்தது என்று கேட்டாள். நானும் உண்மையை மறைக்காது சொன்னேன். அவளின் பெரிய மனசு என்மேல் கொஞ்சமும் கோபப்படவில்லை. அவளின் முகத்தில் கூட மாற்றம் ஏற்படவில்லை. தாராவும் வந்தாள். அவளை கொலை செய்ய முயற்சித்தது நான் இல்லை என்று பொலீஸாரிடம் வாக்கு மூலம் கொடுத்து விட்டு மதியைப் பார்த்து “ஸாரி...... பருவத்தால் ஏற்பட்ட கோளாறு என்னை மன்னித்து விடுங்கள்....” என்று கட்டியணைத்து அழுது மன்னிப்பு கேட்டாள் தாரா. மதி இவர்கள் இருவரை பார்த்து சொன்னாள். “தப்பு பண்ணும் போது............ ஒன்றுக்கு இரண்டு தடவை யோசிங்கள்...... செய்த பின் யோசித்து பயன் இல்லை. நீங்கள் செய்ய தப்பு உங்களுக்கு செய்யப்பட்டு இருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு முறை சிந்தியுங்கள்....” என்று கடினமாக சொன்னாள்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு...... நல்ல பிள்ளைக்கு ஒரு அடி....... திருந்துங்க.......... அப்பாவியான மனைவி என்றாள். கணவன் மிரட்டுவதும் உழைக்கிறோம் என்ற நினைப்பில் எப்படியும் இருக்கலாம் என்று நினைக்கும் பெண்களாலும் இருக்கும் வரை நல்லவர்களுக்கும் கெட்ட பெயர். சொல்லிக் கொண்டே வேகமாக நடந்தாள். மதி... மதி.... மதி....... என்று சத்தமிட்டபடியே பின் தொடர்ந்தேன். நான்...........! வீட்டுக்கு சென்று பார்த்தேன். எனக்காக ஒரு கடிதம் எழுதப்பட்டு இருந்தது.
அன்பில்லா என் கணவனுக்கு! இனியும் நான் உங்களுடன் வாழவிரும்பவில்லை......... அதனால் நான் பாதையில் செல்கிறேன். இனி என்னை தேடவேண்டாம்....... உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை மகிழ்வுடன் வாழுங்க.... அவளுக்காவது நம்பிக்கையாக இருங்கள்.என்று எழுதி இருந்தாள்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை எண்.4 - காதலால் வந்த வினை
"காதலால் வந்த வினை" சிறுகதை காதலால் வந்த வினையல்ல. திருமணமான ஒருவன் கட்டிய மனைவியை உதாசினப்படுத்திவிட்டு இன்னொருத்தி பின்னால் அலைவதை "காதல்" என்று சொன்னால் அது காதலுக்கே அவமானம். கதை ஆசிரியர் சொல்ல வந்த கருத்து என்னவெனில், அன்பு, அரவணைப்பு, பாசம் ஆகியவை மனைவியின் உருவில் அருகில் இருந்தும் அதன் அருமை பெருமைத் தெரியாமல் மனஇச்சைக்கு ஆளாகி மாற்றாள் பின் செல்லும் "சுதன்" போன்ற ஆண்கள் கண்ணியத்தையும் மரியாதையையும் இழந்து கேவலப்படுவார்கள் என்பதே.
சுதன் தன் கதையை சொல்வது போல் ஆரம்பித்து இடையில் காதாசிரியர் கதை சொல்வது போல் மாறுகிறது. நல்ல கருத்துக்கள் இறுதியில் சொல்லப்படுகிறது. அதை இன்னும் கதையோடு இணைத்து சொல்லியிருக்கலாம்.
நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.
சுதன் தன் கதையை சொல்வது போல் ஆரம்பித்து இடையில் காதாசிரியர் கதை சொல்வது போல் மாறுகிறது. நல்ல கருத்துக்கள் இறுதியில் சொல்லப்படுகிறது. அதை இன்னும் கதையோடு இணைத்து சொல்லியிருக்கலாம்.
நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சிறுகதை எண்.4 - காதலால் வந்த வினை
கதை அருமையாக உள்ளது இது காதலால் வந்த வினையா அறிவின்மையால் வந்த வினையா நம்பிக்கை துரோகத்தால் வந்த வினையா என்ன சொல்ல
மொத்தத்தில் கதை ஒரு படிப்பினையாக இருந்தது பாராட்டுக்கள்
மொத்தத்தில் கதை ஒரு படிப்பினையாக இருந்தது பாராட்டுக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதை எண்.4 - காதலால் வந்த வினை
மிகச் சிறப்பான கதை...
கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சிறுகதை எண்.4 - காதலால் வந்த வினை
ஆம் காதலால் வந்த நிலையில்லை ...
காதலை புரியாதவன் காதலை இழந்து கவர்ச்சியை விரும்பிவிட்டான் ...
காதலிக்க வேண்டியவள் காதலில்லாத இடத்தில் காதலை விரும்புகிறாள் ...
தண்டவாலம்போல் வாழ்வதை காட்டிலும் ...
பிரிவதே மேல்
மிகச் சிறப்பான கதை...
கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
காதலை புரியாதவன் காதலை இழந்து கவர்ச்சியை விரும்பிவிட்டான் ...
காதலிக்க வேண்டியவள் காதலில்லாத இடத்தில் காதலை விரும்புகிறாள் ...
தண்டவாலம்போல் வாழ்வதை காட்டிலும் ...
பிரிவதே மேல்
மிகச் சிறப்பான கதை...
கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
Re: சிறுகதை எண்.4 - காதலால் வந்த வினை
முற்றத்து மல்லிகை மணப்பதில்லை என்பது போல.
இன்றைய காலத்தில் அதிகமானவர்கள் இப்படியான தப்பை செய்கிறார்கள்! ஏன் செய்றார்கள் எதற்கு செய்றாார்கள் என்று அவர்களுக்கு தெரியாதா என்ன?
மனைவியுடன் பேசும் போது என்னா சொல்லு அப்படி என்பதும் ஏனைய உறவுவுடன் பேசும் போது ம் செல்லம் ஏன் கால் செய்தேன் எடுக்கல என்னா பிசியா என்று அமைதியாக அடங்கி போகும் அதிகமான உறவுகளை நானும் பார்க்கிறேன். அதே போன்று சொந்த மனைவியுடன் அன்பாக பேசுனால் என்ன குறைந்து விடும் என்று தெரியவில்லை உண்மை நிகழ்வை நிதர்சனமாக சொல்ல முயற்சித்துள்ளார் கதை ஆசிரியர் என்று நினைக்கிறேன். அருமையான கதை கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
இன்றைய காலத்தில் அதிகமானவர்கள் இப்படியான தப்பை செய்கிறார்கள்! ஏன் செய்றார்கள் எதற்கு செய்றாார்கள் என்று அவர்களுக்கு தெரியாதா என்ன?
மனைவியுடன் பேசும் போது என்னா சொல்லு அப்படி என்பதும் ஏனைய உறவுவுடன் பேசும் போது ம் செல்லம் ஏன் கால் செய்தேன் எடுக்கல என்னா பிசியா என்று அமைதியாக அடங்கி போகும் அதிகமான உறவுகளை நானும் பார்க்கிறேன். அதே போன்று சொந்த மனைவியுடன் அன்பாக பேசுனால் என்ன குறைந்து விடும் என்று தெரியவில்லை உண்மை நிகழ்வை நிதர்சனமாக சொல்ல முயற்சித்துள்ளார் கதை ஆசிரியர் என்று நினைக்கிறேன். அருமையான கதை கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறுகதை எண்.4 - காதலால் வந்த வினை
கள்ளக் காதல்கள் ரசனை மிக்கதுதான் அவற்றால் பாதிக்கப்படுகின்ற குடும்பங்கள் அதிகமதிகமே உண்மைக் காதலை உணராமல் வாழ்வைபத் தொலைக்கும் காதலர்களின் கதை
அருமையான கரு எழுத்துப்பிழைகள் கவனிக்கப்பட வேண்டும்
பாராட்டுகள்
அருமையான கரு எழுத்துப்பிழைகள் கவனிக்கப்பட வேண்டும்
பாராட்டுகள்
Re: சிறுகதை எண்.4 - காதலால் வந்த வினை
இன்றைக்கு பல இடங்களில் நடைபெறும் நிஜங்கள் கதையாக வடிவு பெற்றிருக்கின்றது. கதையின் தலைப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம். தாராவுக்கு சுதன் மேல் வந்தது காதலா? கவர்ச்சியா என்பதை இறுதியில் தெளிவாக்கிய விதமும் நன்று!
கதை எழுத முயற்சித்தமைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். நல்ல கதைக்கரு. எனினும் எழுத்து நடையில் இன்னும் மெருகேறணும். முன் பின் வசனங்களை மாற்றிப்போடடு எழுதினால் படிக்கும் போது சுவாரஷ்யமாக இருக்கும்.
சுதன் எனும் நாயகன் சொல்வது போல் தொடர்ந்த கதை ஒரே ஒரு இடத்தில் மிஸ்ஸாகி கதை ஆசிரியர் சொல்வது போல் வந்திருக்கின்றது.
பேசும் முறையில் எழுதி இருப்பதால் எழுத்தின் இருக்கும் பிழைகள் பெரிதாய் தெரியவில்லை. எனினும் அடுத்த கதை இன்னும் மெருகேற்றலுடன் இருக்கட்டும்.
கதை எழுதியதுக்கும் போட்டியில் கலந்து கொண்டதுக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுகளும் என்றும் உண்டு. நன்று!
கதை எழுத முயற்சித்தமைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். நல்ல கதைக்கரு. எனினும் எழுத்து நடையில் இன்னும் மெருகேறணும். முன் பின் வசனங்களை மாற்றிப்போடடு எழுதினால் படிக்கும் போது சுவாரஷ்யமாக இருக்கும்.
சுதன் எனும் நாயகன் சொல்வது போல் தொடர்ந்த கதை ஒரே ஒரு இடத்தில் மிஸ்ஸாகி கதை ஆசிரியர் சொல்வது போல் வந்திருக்கின்றது.
மதி இவர்கள் இருவரை பார்த்து சொன்னாள். “தப்பு பண்ணும் போது............ ஒன்றுக்கு இரண்டு தடவை யோசிங்கள்...... செய்த பின் யோசித்து பயன் இல்லை. நீங்கள் செய்ய தப்பு உங்களுக்கு செய்யப்பட்டு இருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு முறை சிந்தியுங்கள்....” என்று கடினமாக சொன்னாள்.
பேசும் முறையில் எழுதி இருப்பதால் எழுத்தின் இருக்கும் பிழைகள் பெரிதாய் தெரியவில்லை. எனினும் அடுத்த கதை இன்னும் மெருகேற்றலுடன் இருக்கட்டும்.
கதை எழுதியதுக்கும் போட்டியில் கலந்து கொண்டதுக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுகளும் என்றும் உண்டு. நன்று!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுகதை எண்.4 - காதலால் வந்த வினை
இந்த கதையை பற்றி அணைவரும் அதிகமாகவே அலசிவிட்டதால் நான் அதிகம் அலச விரும்பவில்லை.
கள்ளக்காதல் தவறு. அதற்கு உண்டான தண்டனையை சுதன் அடைந்துவிட்டான். அருமை
கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
கள்ளக்காதல் தவறு. அதற்கு உண்டான தண்டனையை சுதன் அடைந்துவிட்டான். அருமை
கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுகதை எண்.4 - காதலால் வந்த வினை
தவறு என்றைக்கும் நிலைப்பதில்லை
அருமையான கதை
அருமையான கதை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» உழவுக்கு வந்த ஊழ் வினை...........
» கரை வந்த பிறகே பிடிக்குது கடலை, நரை வந்த பிறகே புரியுது உலகை!
» தன் வினை தன்னைச்சுடும்.
» வினை வலியது!!!
» வினை விதைத்தவன்
» கரை வந்த பிறகே பிடிக்குது கடலை, நரை வந்த பிறகே புரியுது உலகை!
» தன் வினை தன்னைச்சுடும்.
» வினை வலியது!!!
» வினை விதைத்தவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum