Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சர்க்கரை கசக்குற சர்க்கரை!
Page 1 of 1
சர்க்கரை கசக்குற சர்க்கரை!
வெள்ளையில் இருக்குது வில்லங்கம்!
‘உங்கள் சட்டை காலரில் இருக்கும் அழுக்கு எந்த சோப் கொண்டு துவைத்தாலும் போகவில்லையா? கவலையே படாதீர்கள். கொஞ்சம் சர்க்கரையை அதன்மீது தேய்த்து துவைத்தால் கறையைத் தேடினாலும் கிடைக்காது’ என்று வாட்ஸ் அப்பில் நண்பர் மெசேஜ் அனுப்பியிருந்தார். ‘நல்ல டிப்ஸ்... தேங்க்ஸ்’ என்று ரிப்ளை அனுப்பினால், ‘ஹலோ... நாம சாப்பிடற சர்க்கரைல அவ்ளோ கெமிக்கல் கலந்திருக்காங்க’ என்று எதிர்தரப்பிலிருந்து வந்தது டென்ஷன் பதில்!
கரும்புச்சாறிலிருந்து பரிசுத்தமாகத் தயாராகிற சர்க்கரையைத்தான் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தால், உலகத்திலேயே நாம்தான் நம்பர் 1 அப்பாவி. ‘வெளுத்ததெல்லாம் பால் அல்ல’ என்ற பழைய பழமொழியைப் போலவே, வெள்ளையாக நம் மனதைக் கொள்ளை கொள்ளும் சர்க்கரையில் இருக்கிறது அத்தனை வில்லங்கம். சர்க்கரைப்பாகை வெண்மை யாக்க ப்ளீச்சிங் பவுடர், அழுக்கு நீக்குவதற்கு பாஸ்பாரிக் அமிலம் என்று தொடங்கும் வேதியியல் பொருட்களின் பட்டியல் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா, சுண்ணாம்பு என்று ஆஞ்சநேயர் வால் கணக்காக நீள்கிறது. இத்தனை கட்டத்துக்குப் பிறகு தயாராகும் சர்க்கரையில் மிச்சம் இருப்பது கார்பன் எனும் கரிதான்.
உணவியல் நிபுணரான தாரிணி கிருஷ்ணனிடம் இதுபற்றிக் கேட்டோம்... ‘‘முதலில் ஒரு விஷயம். நல்ல சர்க்கரையாக இருந்தாலும் சரி... கெட்ட சர்க்கரையாக இருந்தாலும் சரி... நாள் ஒன்றுக்கு 15 கிராமுக்கு மேல் - அதாவது, மூன்று டீஸ்பூனுக்கு மேல் சர்க்கரையைப் பயன்படுத்தக் கூடாது. ஆனால், இந்த அளவை நாம் டீ, காபி சாப்பிடுவதிலேயே தாண்டி விடுகிறோம். அதிலும் ஒரு நாளைக்கு 3-4 காபிக்கு மேல் சாப்பிடுகிற பழக்கமெல்லாம் இப்போது பலரிடம் வந்துவிட்டது.
இதோடு, ஐஸ்க்ரீம், கேக், சாக்லெட், ஸ்வீட்ஸ் வழியாக நாம் சாப்பிடும் சர்க்கரையின் அளவும் அதிகம். ஹோட்டல், பேக்கரி போன்ற வெளியிடங்களில் சாம்பார், சிப்ஸ் என கார உணவுகளில் கூட சுவைக்காக சர்க்கரையை சேர்க்கிறார்கள். இதுபோன்ற கட்டுப்பாடற்ற சர்க்கரை நுகர்வால், அமெரிக்கா போன்ற நாடுகளில் 100 கிராம் வரைகூட ஒரே நாளில் சாப்பிடுகிறார்கள். அதனால்தான் அமெரிக்காவில் நோய்களும் நிறைய ஏற்படுகின்றன. வெளிநாட்டு வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதால், நம்முடைய வாழ்க்கையிலும், அதேபோன்ற நோய்கள் வர ஆரம்பித்துவிட்டன. 50 வருடங்களுக்கு முன்பெல்லாம் நாம் இத்தனை நோய்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கவே மாட்டோம்.
ஆனால், நம் கலாசாரத்துக்கும் உணவுப்பழக்கத்துக்கும் எதிரான வாழ்க்கைமுறையால் புதிய மாத்திரை, மருந்துகளின் பெயர்கள் கூட இப்போது நமக்குத் தெரிந்திருக்கிறது. இதற்கெல்லாம் சர்க்கரை மட்டும்தான் காரணம் என்று சொல்வதாக அர்த்தம் கிடையாது. சர்க்கரை முக்கிய காரணமாக இருக்கிறது என்பதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதிலும், வேதிப்பொருட்களின் கலப்படம் நிறைந்த வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பதே நல்லது. அதற்கு மாற்றாக வெல்லம், கருப்பட்டி, Unrefined Sugar போன்ற சர்க்கரை வகைகளைப் பயன்படுத்தலாம்’’ என்கிறார் தாரிணி கிருஷ்ணன்.
பொது மருத்துவரான சுப்புலட்சுமி இந்தப் பிரச்னையை இன்னும் ஆழமாக விளக்குகிறார்... ‘‘உணவில் உள்ள கார்போ ஹைட்ரேட், புரதம் போன்றவற்றின் மூலம்தான் நாம் செயல்படுவதற்குத் தேவையான சக்தி கிடைக்கிறது. ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதைப் போல அளவுக்கு அதிகமாக நம் உடலுக்குக் கிடைக்கும் சக்தியும் உடலுக்குக் கேடாகத்தான் மாறுகிறது. அதிலும் வெள்ளை சர்க்கரையின் அதிக பயன்பாடும், அதனால் ஏற்படும் தீமைகளையும் பற்றி சொல்ல வேண்டியதேயில்லை. அதில் முக்கியமான தாக நான் சொல்ல விரும்புவது நீரிழிவு. உலக அளவில் 10 நீரிழிவு நோயாளிகளில் ஒருவர் இந்தியராக இருக்கிறார். முன்பு 40 வயதுக்கு மேல்தான் நீரிழிவு பிரச்னை வந்தது.
ஆனால், இன்று 20 வயதிலேயே சர்க்கரை நோய் வந்துவிடுவதைப் பார்க்கிறோம். சர்க்கரைக்கும் சர்க்கரை நோய்க்கும் என்ன சம்பந்தம் என்று நன்கு படித்த சிலரே கேட்கிறார்கள். தேவைக்கு அதிகமான சர்க்கரை உடலில் சென்று கெட்ட கொழுப்பாக மாறி, பருமனை உண்டாக்கிவிடுகிறது. இதனால் கணையத்தில் இருந்து இன்சுலின் ஹார்மோன் சுரப்பு குறைய ஆரம்பிக்கும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் குறைந்து விட்டால் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகமாக உயரும். இப்படித்தான் சர்க்கரை நோய் உருவாகிறது.
இன்சுலின் சுரப்புக்காக டாக்டர்கள் மாத்திரைகள் கொடுத்தாலும் சில வருடங்களுக்குத்தான் அந்த மாத்திரைகள் உதவி செய்யும். அதன்பிறகு, இன்சுலின் ஊசிதான் போட்டுக் கொள்ள வேண்டியிருக்கும். சர்க்கரை நோயைத் தொடர்ந்து இதய நோய்கள், ரத்த அழுத்தம், பார்வை இழப்பு என்று வரிசையாக நோய்கள் நம்மைத் தாக்கும் அபாயமும் உண்டு. இதனால் நேரம், பொருளாதாரம் என்று பலவகையிலும் நம் வாழ்க்கை பாதிக்கிறது. இதிலிருந்து தப்பிக்க வாழ்க்கைமுறையை மாற்றுவதோடு, சர்க்கரைப் பயன்பாட்டைக் குறைத்துப் பழக வேண்டும். இந்தப் பழக்கத்தைக் குழந்தைப் பருவத்திலிருந்தே கொண்டு வர வேண்டும். குழந்தைகள் சர்க்கரை அதிகமுள்ள உணவுகளையே விரும்புவார்கள்.
குழந்தைகள் அடம்பிடிக்கிறார்கள் என்பதற்காக பெற்றோர் தவறான உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கக் கூடாது. அப்படி கட்டுப்படுத்தாத காரணத்தால்தான் சிறு வயதிலேயே பருமனாகி பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார்கள். ஜூஸ் வகைகளில் சர்க்கரை சேர்ப்பதும் தவறான பழக்கம். இயற்கையான சர்க்கரை பழங்களில் நிறைய இருக்கிறது. அதில் இன்னும் சர்க்கரையை சேர்ப்பது ஆரோக்கியக் கேட்டையே உருவாக்கும். இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் சர்க்கரைப் பயன்பாட்டைத் தவிர்ப்பதன் மூலம் சர்க்கரையின் பெரிய தீமைகள் நம்மை அண்டாமல் பாதுகாக்க முடியும்.
அப்பா, அம்மா இரண்டு பேருக்கும் சர்க்கரை நோய் இருந்தால் குழந்தைக்கு கண்டிப்பாக நீரிழிவு வரும்தான். ஆனால், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என வாழ்க்கைமுறையை சீர்படுத்திக் கொண்டால் 40 வயதில் வரும் சர்க்கரை நோயை இன்னும் 10 வருடங்களுக்கு தள்ளிப் போட முடியும். போட்டி மிகுந்த இன்றைய வாழ்க்கையால் மன அழுத்தத்தாலும் பலருக்கு சிறு வயதிலேயே நீரிழிவு வந்துவிடுகிறது. அதனால், 25 வயதுக்குப் பிறகு, வருடம் ஒருமுறை நீரிழிவு பரிசோதனை செய்து கொள்வதும் அவசியம்!’’
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சர்க்கரை கசக்குற சர்க்கரை!
எப்படித் தயார் செய்கிறார்கள்?
1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் ப்ளீச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை ஃப்ளூயிடு பாக்டீரியா கன்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மி.லி. வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர் டை ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல வைட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்புச் சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்து விடுகிறது.
5. அடுத்து, பாலி எலெக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருட்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜூஸ் தயாரிக்கப்படுகிறது.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிக நிலைக்கு சர்க்கரையாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சர்க்கரையில் கலந்துவிடுகிறது.
8. இப்படித் தயாரான சர்க்கரையில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே. தயாரான நாளிலிருந்து 6 மாத காலத்துக்கும் அதிகமான சர்க்கரையை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர் டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.
குடலில் மட்டுமல்ல... பல் வலி, பல் சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, பருமன், இதய நோய் மற்றும் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பெரிய நோய்கள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணி.
சுகர் ஃப்ரீ பயன்படுத்தலாமா?
சுகர் ஃப்ரீ என்றால் ஆபத்து இல்லாத சர்க்கரை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், சுகர் ஃப்ரீயை கண்டுபிடித்த அமெரிக்கர்களே இப்போது சுகர் ஃப்ரீயைப் பயன்படுத்தாதீர்கள் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது, நிறைய வேதிப் பொருட்களின் மூலம் தயாராகும் சுகர் ஃப்ரீயைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உண்டு என்கிறார்கள். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சுகர் ஃப்ரீயைப் பயன்படுத்துவதைப் பார்த்து ஆரோக்கியமானவர்களும் ஹெல்த் கான்சியஸ் என்ற பெயரில் பயன்படுத்தி வருகிறார்கள். இதுவும் தவறானது. சாக்கரின், அஸ்பார்ட்டேம் வகை செயற்கைச் சர்க்கரை வகைகளை பயன்படுத்துவதும் நல்லதல்ல.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3401

Permissions in this forum:
You cannot reply to topics in this forum