சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

மூலிகை: கரந்தை Khan11

மூலிகை: கரந்தை

Go down

Sticky மூலிகை: கரந்தை

Post by ahmad78 on Thu 9 Apr 2015 - 10:22

மூலிகை: கரந்தை Ht3425

தமிழகத்தின் வளமான நிலங்களின் வரப்புகளிலும், நெற்பயிர் அறுவடைக்கு பிறகு வயல்களிலும் முளைத்து கிடக்கும். நல்ல மணம் கொண்ட சிறு செடியினம்.  செடியின் உச்சியில் பந்து போன்ற இதன் பூக்கள் மொட்டை தலைபோன்று காட்சியளிக்கும். இதனால் மொட்டை கரந்தை என்ற பெயர் இதற்கு உண்டு. பச்சை நிறத்தில் தோன்றும் இந்த பூக்கள் நாளடைவில் ஊதா நிறத்தில் காட்சியளிக்கும். குத்துக்கரந்தை, கொட்டைகரந்தை, சிறுகரந்தை, சிவகரந்தை, சுனைக்கரந்தை, சுரைக்கரந்தை, சூரியக்கரந்தை, விஷ்ணுகரந்தை, நாறும் கரந்தை என பல்வேறு பெயர்களால் வழங்கப்படும் கரந்தை பல்வேறு மருத்துவ பயன்களை தன்னுள் கொண்ட கற்பக மூலிகையாகும்.

இதில் கரந்தையும், சிவகரந்தையும் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகிறது. கொட்டை கரந்தை சற்றேறக்குறைய சிவகரந்தைக்கு ஒப்பாக இருந்தாலும். மணத்தில் சிவகரந்தை சிறப்புடையது. கரந்தையில் வெண்மை, செம்மை என இரண்டு வகையுண்டு, மலமிளக்கியாகவும், தாது வெப்பம் தணிக்கவும் பயன்படும். நுரையீரல்நோய், யானைக்கால் நோய், ரத்தசோகை, பெண்களின் கர்ப்பபை வலிகள், மூலம்  மூச்சிரைப்பு, வெண்புள்ளி, வயிற்றுக்கடுப்பு, வாந்தி இருமல், விரைவீக்கம், பெருங்குடல்வலி, தளர்ந்து தொங்கும் மார்பகம், மனக்கோளறுகள் ஆகியவற்றை நீக்க வல்லது. ரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயநோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது.

கொட்டை கரந்தையின் பூக்காத செடிகளை எடுத்து வந்து நிழலில் காயவைத்து சூரணம் செய்து கொள்ளவேண்டும். இதில் 5 கிராம் அளவில் எடுத்து  அதில் பாதியளவிற்கு கற்கண்டை தூள்செய்து சாப்பிட வெள்ளை, உள்ரணம், கிராணி, கரப்பான் ஆகியவை தீரும். தொடர்ந்து சாப்பிட்டு வர மூளை,  இதயம், நரம்பு ஆகியவற்றை பலப்படுத்தும்.


கொட்டை கரந்தையின் பட்டையை அரைத்து மோரில் கலந்து குடித்தால் மூலம் குணமாகும். இதன் முழுச்செடியை கசாயம் வைத்து சாப்பிட தொடக்க  நிலையில் உள்ள பைத்தியம் குணமாகும். சூரணம் செய்து உண்பதால் தலை, மூளை, இதயம் வலிமை அடையும்.இதன் கசாயத்துடன் சீரகத்தை பொடித்து போட்டு காலை, மாலை 100மிலி வீதம் குடித்து வந்தால் வயிறு தொடர்பான அனைத்து நோய்கள் நீங்கும்.கொட்டை கரந்தையின் சமூலத்தை இடித்து சூரணம் செய்து அதில் 4 கிராம் அளவில் காலை மாலை சாப்பிட பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை மற்றும் கரப்பான் நோய்கள் தீரும்.

இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வேளைக்கு ஒரு கிராம் எடை வீதம் நாள்தோறும் காலை மாலை சாப்பிட தோல்நோய்கள்  அனைத்தும் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை பெருகும்.கொட்டை கரந்தையின் பூக்காத செடிகளை எடுத்து வந்து நிழலில் காயவைத்து சூரணம் செய்து கொள்ளவேண்டும். இதில் 5 கிராம் அளவில் எடுத்து அதில் பாதியளவிற்கு கற்கண்டை தூள்செய்து சாப்பிட வெள்ளை, உள்ரணம், கிராணி, கரப்பான் ஆகியவை தீரும். தொடர்ந்து சாப்பிட்டு வர மூளை, இதயம், நரம்பு ஆகியவற்றை பலப்படுத்தும்.இந்த பொடியுடன் கரிசிலாங்கண்ணி பொடியை சம அளவில் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட இளநரை நீங்கும். உடல் பலம் பெறும்.

இந்த பொடியுடன் கரிசிலாங்கண்ணி பொடியை சம அளவில் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட இளநரை நீங்கும். உடல் பலம் பெறும். கொட்டை கரந்தையின் பூக்களை பொடிசெய்து சாப்பிட உடல் சூடு குறைந்து குளிர்ச்சிபெறும்.கொட்டை கரந்தையின் விதைகளை சேகரித்து பொடி செய்து ஒரு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட செரியாமை, இருமல் நீங்கும். இலைப்பொடியை 2 கிராம் அளவில் சாப்பிட வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கும்.


சிவகரந்தை:

இதே போல் சிவகரந்தையும் பல்வேறு நோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது. வாந்தி, சுவையின்மை, ஆண்மைக்குறைவு கரப்பான், காசம்,  அக்கினிமாந்தம் நீங்கும். துவர்ப்பும் சிறுஅளவில் கார்ப்பு சுவையும் கொண்ட இதன் இலையை பொடித்து 4 கிராம் முதல் 8 கிராம் வரையில் வெண்ணெய் சேர்த்து சாப்பிட மூல நோய் நீங்கும்.

சிவகரந்தையின் இலைச்சாறு பாதரசத்தை சுத்தி செய்து அதை நீராய் மாற்றவும் செய்யும் தன்மை கொண்டதால் ரசமணி செய்பவர்களுக்கும், ரசவாத வித்தை புரிபவர்களும் இதை அதிகம் நாடுவார்கள். கிராமங்களில் கைகளில் சிறு குச்சியை வைத்த கொண்டு சிறுவர்கள் விளையாடும் போது இந்த செடியை தட்டுவார்கள் அப்பொழுது இதிலிருந்து வரும் மணத்தை விரும்பி மீண்டும் மீண்டும் தட்டிச்செல்வார்கள். இந்த மணமிக்க செடிதான் கொடிய மூலத்தையும் காசத்தையும் நீக்கி மனித குலத்தை வாழ்விக்கிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. இதை தேவையறிந்து முன்னோர் சொல்லிய வழியில் பயன்படுத்தி வளமோடு வாழ்வோம்.

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3435


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: மூலிகை: கரந்தை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 16 Apr 2015 - 12:41

நல்ல பதிவு 
பகிர்வுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum