சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எரிசக்தி தட்டுப்பாடு: இந்த நூற்றாண்டில் உலகை அழிக்கும்  Khan11

எரிசக்தி தட்டுப்பாடு: இந்த நூற்றாண்டில் உலகை அழிக்கும்

Go down

எரிசக்தி தட்டுப்பாடு: இந்த நூற்றாண்டில் உலகை அழிக்கும்  Empty எரிசக்தி தட்டுப்பாடு: இந்த நூற்றாண்டில் உலகை அழிக்கும்

Post by நண்பன் Tue 22 Feb 2011 - 14:33

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிறந்த ஆளுமையின் கீழ் இந்நாட்டில் மின்சார உற்பத்தி மற்றும் மின்சார விநியோக துறையில் புரட்சிகரமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பத்தாண்டு கால இடைவெளிக்கு பின்னர் 2010 இல், முதல் தடவையாக இலங்கை மின்சார சபை இலாபத்தில் இயங்கி சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

தெற்காசிய நாடுகளில் இலங்கையில் மாத்திரமே 24 மணி நேரமும் தங்குதடையற்ற முறையில் மின்சார விநியோகம் இடம்பெறுகிறது. இதுவும் ஒரு சாதனையாகும்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் நாளாந்தம் 12 முதல் 16 மணித்தியாலங்க ளுக்கு மாத்திரமே மின்சார விநியோகம் கிடைக்கின்றது.

மின்சக்தி, எரிசக்தி த்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சமீபத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கையில் இப்போது, 90 சதவீதமான பகுதிகளுக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும், பின்தங்கிய கிராமப்புறங்களுக்கு மின்சார விநியோகத்தை கொடுப்பதற்கான உட்கட்டமைப்பை நடைமுறைப்படுத்த அரசாங்கம் பலகோடி ரூபாக்களை செலவிட வேண்டியிருக்கின்ற போதிலும், அக்கிராமங்களிலிருந்து மின்சார கட்டணமாக ஒரு சிறிய தொகையே அறவிடப்படுகிறது என்றும், இவ்விதமே இன்றைய அர சாங்கம் மக்களுக்கு தன்னிகரற்ற சேவையை பெற்றுக் கொடுத்து வருகின்றது என்றும் கூறினார்.

இலங்கை பல நீர்த்தேக்கங்களை கொண்டிருப்பதனால் ஜலமின்சாரம் அதிக செலவின்றி உற்பத்தி செய்யப்படுகிறது என்ற மாயை மக்களிடையே இருக்கின்றது. ஆனால் நாட்டின் மின்சார தேவையில் 47 சதவீதமே ஜலமின்சாரத்தின் மூலம் ஈடுசெய்யப்படுகிறது. எஞ்சிய 53 சதவீத மின்சாரம் அனல் மின்சார நிலையகங்களின் மூலமும், நிலக்கரி மின்சார நிலையத்தின் மூலமும் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்கான செலவு அதிகமாக இருப்பதனால் தான் மின்சார கட்டணம் சற்று அதிகரித்து இருக்கிறது.

நாடெங்கிலும் சுமார் 70 இலட்சம் வீதி மின் விளக்குகள் உள்ளன. இவற்றிற்கான மின்சார கட்டணத்தை அந்தந்த பிரதேசங்களில் உள்ளூராட்சி மன்றங்கள் செலுத்த மறுக் கின்றன. எனவே மஹிந்த சிந்தனை எண்ணக்கருவின் கீழ், இதற்கான செலவை யும் அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது.

வன்னிப் பிரதேசத்தில் யுத்தத்தை அடுத்து, தங்கள் சொந்த இருப்பிடங்களில் மீள்குடியேறும் மக்களுக்கு இலங்கை மின்சார சபை இலவசமாக மின்விநி யோகத்தை வழங்கும் ஒரு திட்டத்தை இப்போது ஆரம்பித்திருக்கிறது என்ற நற்செய்தியையும் அமைச்சர் இந்த சந்திப்பின்போது வெளியிட்டார்.

அரபு நாடொன்றின் அரசர் தன்னுடைய முப்பாட்டனார், அதற்கு பின்னர் பாட்ட னார் ஒட்டகத்தில் சவாரி செய்ததாகவும், தான் வளர்ச்சி அடையும் இன்றைய உலகில் பென்ஸ் காரில் செல்வதாகவும், தனது மகன் மற்றும் பேரப்பிள்ளைகள் அதைவிட விலையுயர்ந்த ஆடம்பர காரில் செல்கிறார்கள் என்றும் கூறுனார்.

இன்று, உலகில் எண்ணெய் மற்றும் நிலக்கரியின் உற்பத்தி குறைந்துகொண்டு செல்வதனால், இந்த நூற்றாண்டு முடிவடைவதற்கு முதல் மத்திய கிழக்கிலும், உலக நாடுகளிலும் மீண்டும் மக்கள் ஒட்டகத்தில் சவாரி செய்ய வேண்டிய யுகம் திரும்பும் என்ற அபாய அறிவித்தலை வெளியிட்டிருக்கிறார்.

இந்த கூற்றை ஊர்ஜிதம் செய்யும் விஞ்ஞான ஆய்வாளர்கள் 2050 ஆம் ஆண்டளவில் உலகம் மிகப் பயங்கரமான எரிசக்தி தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் என்றும், மாற்று எரிசக்தியை நாம் கண்டுபிடிக்கத் தவறினால், அழிவை எதிர்நோக்கியிருக்கின்ற மிருகங்கள் மட்டு மன்றி, மனித குலமே அழிந்துவிடும் ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார்கள்.

2050 ஆம் ஆண்டளவில் உலகில் கடும் வரட்சியும், உஷ்ண நிலையும் அதி கரிக்கும் என்றும், இதனால் பூமியதிர்ச்சிகள், எரிமலை வெடிப்புகள், பெருவெள்ளம், சூறாவளி தாக்கங்கள், பனிப்படலங்கள் உருகுதல் போன்ற இயற்கை அனர்த்தங்களும் உலகின் வட துருவத்திலும், தென் துரு வத்திலும் உள்ள இரண்டு பாரிய இராட் சத ஐஸ்கட்டிகள் உருகி கடலின் நீர்மட்டம் 10 மீற்றருக்கும் கூடுதலாக உயர்ந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்துள்ளார்கள். இதனால் மாலைதீவு குடியரசை சார்ந்த நூற்றுக்கணக் கான தீவுகளையும், சீசெல்ஸ் நாட்டையும் கடல் விழுங்கிவிடும் என்றும் எச்சரிக்கை செய்யப்படுகிறது.

2050 ஆம் ஆண்டளவில் கொழும்பு நகரத்திற்கு தென்பகுதியில் கடல் அரிப்பு அதிகரித்து வருவதனால் மேற்கு கரையிலு ள்ள கடல் மஹரகமை நகரம் வரை ஊடு ருவி விடும் என்றும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அபாய அறிவித்தல் ஒன்றை விடுத்தார். இத்தகைய பிரச்சினை களிலிருந்து மனிதன் மீண்டும் எங்கள் எதிர்கால சமூகத்தின் நல்வாழ்வுக்கு வழியமைக்க வேண்டுமாயின், மரங்களை வெட்டுதல், கடற்கரையிலுள்ள பளிங்கு பாறைகளை வெட்டுதல் போன்ற சுற்றாடலுக்கு தீங்கிழைக்கும் செயற்பாடு களை தவிர்த்துக் கொள்வது அவசியமாகும்.

தங்கள் எதிர்கால சந்ததியினருக்காக சொத்துக்களை சேர்த்து வைப்பதைவிட சுற்றாடலை பாதுகாத்து வைப்பதே இன்றைய மனிதர்களின் கடமையாக இருக்க வேண்டும். இல்லையானால் எமது எதிர்கால சந்ததியினர் இந்த நூற்றாண்டு முடிவடைவதற்கு முன்னர் பேரழிவை எதிர்நோக்குவார்கள் என்ற கவலைக்குரிய செய்தியை இன்றைய நிகழ்ச்சியில் நாம் முன்வைக்க விரும்புகிறோம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum