சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ரத்தத்தில் கொழுப்பு அதிகமாதல்(Dyslipidemia) Khan11

ரத்தத்தில் கொழுப்பு அதிகமாதல்(Dyslipidemia)

Go down

ரத்தத்தில் கொழுப்பு அதிகமாதல்(Dyslipidemia) Empty ரத்தத்தில் கொழுப்பு அதிகமாதல்(Dyslipidemia)

Post by ahmad78 Sun 12 Apr 2015 - 8:03

ரத்தத்தில் கொழுப்பு அதிகமாதல்(Dyslipidemia) Ht3433

கொழுப்பு என்பது உடலுக்கு மிகவும் அவசியமான, உணவிலிருக்கும் ஒரு முக்கியமான மூலக்கூறு. ஒரு கிராம் கொழுப்பு 9 கலோரி சக்தி தரும் (கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தானது 4½  கலோரியை மட்டுமே தரும்). கொழுப்புச் சத்தானது கொழுப்பு அமிலங்களாக (Fatty acids)  கிளிசரால் ஆகவும் கிளைகோஜென் ஆகவும் சேமித்து வைக்கப்படுகிறது.

இப்படியாக கொழுப்பு, உடலில் சேமித்து வைக்கும் தன்மை உடையதாகவே உள்ளது. உடனடி எனர்ஜி தேவைக்கு அவசியமான மாவுச்சத்தைவிட அதிகப்படியான மாவுச்சத்தும் (அரிசிப் பதார்த்தங்கள்) கொழுப்பாகவே சேமிக்கப்படுகிறது. அதனால், உணவில் கொழுப்பு அதிகமாக இருப்பது மட்டுமே பிரச்னை அல்ல. தமிழக மக்களின் உணவில் அரிசிப் பதார்த்தங்கள், பெரிய வாழைப்பழம், மாம்பழம், இனிப்பு போன்ற  மாவுச்சத்து அதிகமாக இருப்பதும் இதற்குக் காரணமாகலாம். கொழுப்பு உடலுக்கு சக்தியையும் சூட்டையும் தருவது மட்டுமல்ல... சிறு உறுப்புகளையும் நரம்புகளையும் பாதுகாக்கும் உறைகளுக்கும் அவசியம்.

வைட்டமின்கள் A, D, E - K போன்ற முக்கிய மான வைட்டமின்கள் கொழுப்பில் கரையக்கூடியவை. இதனாலும், கொழுப்பு மிக முக்கியமானது. அட்ரீனல் மற்றும் இனப்பெருக்க ஹார்மோன்களுக்கும் கொழுப்பு அமிலங்கள் மிக முக்கியமானவை. கொழுப்பில் கரையும் வைட்டமின்களை வைட்டமின் தி என்று கூறுவார்கள். இவை குறைந்தால் பலவித சரும நோய்கள், பித்தப்பை கல், தலைமுடி உதிர்தல், வளர்ச்சி குறைவு, மலட்டுத்தன்மை, சிறுநீரக ப்ராஸ்டேட் மற்றும் மாதவிடாய் பிரச்னைகள் உருவாகும். குடலில் வைட்டமின் ஙி உருவாவதற்கும் கொழுப்புச்சத்து அவசியம். மூளையின் நினைவாற்றலுக்கும் கொழுப்பு மூலக்கூறுகள் முக்கியம்.

பழங்கள் மற்றும் வறுத்த, பொரித்த மாமிச மற்றும் பருப்புகளிலிருந்து கிடைக்கும் இந்தக் கொழுப்பு, அளவுக்கு அதிகமாகும்போது ஏற்படும் பிரச்னைகளே டிஸ்லிபிடேமியா.  ஒருவரது உணவில் 65% மாவுச்சத்தும் 25% புரதச்சத்தும் 5-10% கொழுப்புச்சத்தும் இருந்தாலே போதுமானது. இவற்றோடு, காய்கறிகள், பழம், பருப்பு (Nuts) என இருப்பதையே சமச்சீர் உணவு என்கிறோம். திடீர் உணவு (Fast Food), வாரக்கணக்கில் குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போகாமல் இருக்கும்படி தயாரிக்கப்படும் உணவு (Frozen Food), ஹோட்டல் உணவுபோலவே வீட்டுச் சமையலில் எண்ணெய் அதிகமாக்கி வறுத்தவை (Fried food), அதிகம் பொரித்த உணவுகள் (Deep Fried Food), நெய்யும் இனிப்பும் அதிகமுள்ள உணவுகள் ஆகியவையும் கூட, இப்போது பாரம்பரிய உணவுமுறையிலும் ஊடுருவி விட்டது. இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்கச் செய்யும் வீட்டு உபகரணங்கள் மற்றும் வாகனப் பயன்பாடு போன்றவை யும் சேர்ந்து, கொழுப்பை அதிகரித்து, எமனாகிறது.

மாரடைப்பு என்றவுடன் ரத்தம் கட்டியாகி இதய ரத்தக்குழாய்களில் ரத்தப்போக்கை அடைப்பது, கொழுப்புப் படிந்த குறுகலான ரத்தக் குழாய்களில் ரத்தக்கட்டி (Clot) அடைப்பதும் தோன்றும். இன்றைய இதய வல்லுனர்கள் ஒவ்வொரு நோயாளியின்  உயிரைக் காப்பாற்றும்போதும், ரத்தக்குழாய்களை ‘டை’ அடித்தும், எக்ஸ்ரே, கதிர்வீச்சின் மூலம் அடைப்பையோ, குறுகலான இடங்களையோ ஆஞ்சியோகிராம் ( Angiogram ) மூலம் பார்த்து, அதிக கொழுப்பினால் ஏற்படும் அபாயங்களை கண்கூடாக உறுதி செய்துள்ளார்கள். Coronary Angiography, OCT Infrared Light, Optical Coherence Tomography போன்ற பரிசோதனைகளில் கொழுப்பினால் ரத்தக் குழாய்கள் எவ்வாறு குறுகுகின்றன என்பது தெளிவாகிறது.

கொழுப்பு உடலில், ரத்தத்தில் அதிகமாக இருப்பதையே டிஸ்லிபிடேமியா என்கிறோம். கொழுப்பு, ரத்தத்தில் Lipoproteins எனப்படும் பல்வேறு கொழுப்பு மூலக்கூறுகளால் ஆன கொழுப்பு வகைகளாக பிரிக்கப்படுகிறது. லைப்போபுரோட்டீன்கள் நீரில் கரைவதற்கும், உடலின் எல்லா பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதற்கும் எளிதானவை. மூப்பு, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு, டிஸ்லிபிடேமியா போன்ற பிரச்னைகளாலும் ரத்தக் குழாய்களின் பரப்புகளில் ஏற்படும் விரிதல்கள், உடைதல்களால் பல்வேறு லைப்போபுரோட்டீன்கள், நீர்நிலைகளில் நிற்கும் பாசி போல, Atherosclerosis எனும் கொழுப்புக் கட்டிகளாகப் படர்வதால், ரத்தக் குழாய்களில் சுருக்கம் ஏற்படுகிறது.லைப்போபுரோட்டீன்களை நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு எனப் பிரிக்க முடியும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ரத்தத்தில் கொழுப்பு அதிகமாதல்(Dyslipidemia) Empty Re: ரத்தத்தில் கொழுப்பு அதிகமாதல்(Dyslipidemia)

Post by ahmad78 Sun 12 Apr 2015 - 8:04

1. TriglyceridesN < 150

ஈரலிலோ, கொழுப்பு நிறைந்த உணவிலிருந்தோ, உடலுக்குக் கிடைக்கும் டிரைகிளிசைரைடு, VLDL, லைப்போபுரோட்டீனுடன் இணைந்து உடலின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ரத்தக் குழாய்களில் மாற்றத்தை ஏற்படுத்தும்... முக்கியமாக இதய ரத்தக்குழாய்களில்!

2 . LDL (Low Density Lipid)


லைப்போபுரோட்டீன் மூலக்கூறுகளின் எடையைப் பொறுத்து, LDL (Low Density Lipoprotein), VLDL (Very Low Density Lipoprotein), HDL (High Density Lipoprotein) எனப் பிரிக்கிறோம். LDL எனப்படுபவை, பல்வேறு புரதங் களாலும் (லைப்போபுரோட்டீன்) ஆன கொழுப்பு மூலக்கூறுகளை தண்ணீரில் கரையும் வண்ணம், ரத்தத்தில் எடுத்துச் செல்லும் கொழுப்பு மூலக்கூறாகும். ரத்தக்குழாய்களில் கொழுப்பு மிக அதிகமாக பரவ வழி ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதால் இதை கெட்ட கொழுப்பு என்பர்.

3 . VLDL (Very Low Density Lipid)

VLDL எளிதாக LDLலாக மாறிவிடும். VLDL, டிரைகிளிசரைடு போன்ற லைப்போபுரோட்டீன்களை மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லும்.

4 . HDL (High Density Lipid)> 40

HDL மூலக்கூறுகள் கொழுப்பை செல்களிலிருந்தும், ரத்தக்குழாய் சுவர் திசுக்களிலிருந்தும், ரத்த ஓட்டத்தின் மூலம் வெளியே எடுத்துச் செல்லுவதால், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படராமல் பார்த்துக் கொள்கிறது. அதனால்தான், இது நல்ல கொலஸ்ட்ரால் எனப்படுகிறது. இந்தியர்களுக்கு இது குறைவான அளவில் இருப்பதுதான் பிரச்னையே. இதைக் கூட்டும் ஒரே வழி - உடற்பயிற்சி மட்டுமே. வேறு எதனாலும் முறையாகக் குறைக்க முடியாது.

Total Cholesterol முன்பெல்லாம் 220க்குக் குறைவாக ‘டோட்டல் கொலஸ்ட்ரால்’ என்பதை மட்டுமே அளவீடாகக் கொண்டு, ‘கொழுப்பு அதிகமா’ என்பதைச் சொல்லி வந்தோம். இப்போதோ, LDL , VDL, HDL ஆகிய 3 அளவுகளையும் உள்ளடக்கியதே கொலஸ்ட்ரால் என்பதால், இதில் எது அதிகம் என்பதைப் பொறுத்து, அதற்கு என்ன மருந்து தரவேண்டும், அது அதிகமாக இருந்தால் என்ன தீங்கு செய்யும் என்பதை அறியத் தருகிறோம். அதனால், Lipid ProfileTest மூலம் மட்டுமே உடலில் கொழுப்புச்சத்து அறிந்து மருத்துவம் தரப்படுகிறது.மொத்தத்தில், HDL 40க்கு அதிகமாக இருக்க வேண்டும். இது உடற்பயிற்சியினால் மட்டுமே சாத்தியம். உணவினாலோ, மருந்தின் மூலம் மட்டுமோ சாத்தியமில்லை. Total Cholesterol,Triglyceride, LDL , VLDL ஆகியவை கட்டுபாட்டுக்குள் வர உணவுடன் உடற்பயிற்சி மிக மிக அவசியம். 

இவை அதிகமாவதற்கு பாரம்பரியம் ஒரு காரணம். இருந்தாலும், ஒவ்வொரு நாள் உணவிலும் 5 சதவிகிதம் கொழுப்பு, நிறைய காய்கறிகள், குறைவான அளவில் பழம் ஆகியவை அவசியம். மிகக்குறைவான ஆல்ஹகால் மற்றும் தவிர்க்கப்பட்ட புகைப்பழக்கம் ஆகியவை நல்லது. எடை குறைப்பு மற்றும் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்,சரியான கட்டுப்பாடு என்பது மிக அவசியம். LLA  Lipid Lowering  Agents  Statins எனப்படுபவை கொழுப்பையும் அதன் மூலக்கூறுகளையும் குறைக்கும் மருந்துகள். 

ஸ்டாடின்ஸ் காளான்களிலிருந்து எடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட மருந்து. இப்போது வேதியியல் பொருட்களாக உற்பத்தி செய்யப்படுகிறது. Atorvastatin Rosuvastatin மருந்துகள் கொலஸ்ட்ரால்களைக் குறைக்கும். இவை கொலஸ்ட்ரால் உற்பத்தியைக் குறைப்பதுடன், VLDLயைக் குறைத்து, அதன்மூலம் LDL  உற்பத்தியையும் குறைக்கும். ஸ்டாடின்கள் ரத்தக் குழாய்களில் ஏற்படும் விரிவுகள், பிளவுகளையும் சரி செய்து, கொழுப்பு படர்வதையும் தடுக்கின்றன.

ஸ்டாடின்களின் பக்கவிளைவாக கண் பாதிப்புகளோ, நரம்பு மண்டல பாதிப்புகளோ, ஈரல் பாதிப்போ, தசைகளில் பாதிப்போ வரக்கூடும். அதனால், ஸ்டாடின் மருந்துகள் உட்கொள்ள ஆரம்பித்தவுடன் பாதிப்புகளைக் கண்காணித்து, மருத்துவரிடம் கூறி, தேவையான பரிசோதனைகளை செய்துகொள்வது அவசியம்.ஃபிப்ரேட்ஸ் ( Fibrates) மருந்துகளால் டிரைகிளிசரைடு குறைக்கப்படுகிறது. டிரைகிள சரைடு உற்பத்தியையும் குறைத்து, டிரைகிளி சரைடு, லைப்போபுரோட்டினையும் உடைத்து, அளவைக் குறைக்கும் சக்தி வாய்ந்தது இது. டிரைகிளிசரைடு குறையும்போது பிஞிலி கூடுவதற்கான வாய்ப்பு உண்டு. மிக அதிகமான அளவில் டிரைகிளிசரைடு கூடி இருப்பதை Hypertriglyceridemia என்கிறோம். இதற்கு  ஸ்டாடின் மற்றும் ஃபிப்ரேட்ஸ் சேர்த்து தரப்படுகிறது. ஃபிப்ரேட்ஸில் மிகக்குறைவான பக்க விளைவுகளே உண்டு. VLDL, LDL இரண்டையும் குறைப்பதற்கு Nicodin Acid தரப்படுகிறது. இவற்றுக்குப் பக்க விளைவுகள் அதிகம். 

40 வயதுக்கு மேலே வரும் பருமன் (Obesity), நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, கொழுப்பு ரத்தத்தில் அதிகமாவது ஆகியவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்தாலே போதும்... மருந்துகளுடன், மருத்துவர் ஆலோசனையுடன் ஒவ்வொருவருக்குமான பரிசோதனை விவரங்களுடன் அந்தந்த நோய்க்கான நம்பர்களை கட்டுப்பாட்டுக்குள் (GOAL) வைத்திருப்பதே இதற்கு வழி. 80 வயது வரை மற்ற நோய்கள் வராத, வந்த நோய்கள் நம்மை முடக்கிப் போடாத வாழ்க்கை நடைமுறை மாற்றங்களே (Life Style Modification) நம்மை வாழ வைக்கும். நோய் என்று வருமுன்பே பூமியிலே கால் பதியுங்கள்... சுத்தமான காற்றைச் சுவாசித்து, மற்ற மனிதர்களையும் நேரில் கண்டு, உடற்பயிற்சி செய்யுங்கள்... ....

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3443


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum